Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
குழந்தையின்மைக்கு செயற்கை கருத்தரிப்பு
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Gynaec & Infertility

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் பிரபலமான டாக்டர் சந்திரலேகா, www.medicalonline.in க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

குழந்தை இல்லாத தம்பதி களுக்கு வழங் கப்படும், உலக நாடுகளில் பிர பலமான செயற் கைக் கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த விந்து அணுக்கள் கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக் களை உறிஞ்சி செயற்கையாகச் செலுத்துவது, லேசர் முறையில் கருவைப் பொரிக்கச் செய் தல், கருமுட்டை தானம், வாட கைத் தாய் போன்ற பல் வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா முழுவதிலும், குறிப்பாக, தமிழ்நாடெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தையில்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களைப் போன்று தவிக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இந்த சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
பிந்திய வயதுகளில் திருமணம் செய்வது என்பது இப்போதுள்ள சூழ் நிலையில் சகஜமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் படிப்பு, தொழில் ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவறென்று சொல்ல முடியாது; தவிர்க்கவும் இயலாது. ஆனால் திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் கருத் தரிப்பு நிகழவோ அல்லது கருத்தரிப்புக்கான சாதாரண அறிகுறிகளோ தோன் றாத நிலையில், தகுந்த மருத்துவர்களை அணுகுவது அவசியம். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள், சில தகவல்களையும் அறிவுரைகளையும் பெற்றுக் கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடியனவாகவிருக்கும்.
IVF எனும் செயற்கைக் கருத்தரிப்பு முறையில், ஒரு பெண்ணின் கரு முட்டைப் பையில் பல கரு முட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சி, பின் அப்பெண்ணின் கணவரிடமிருந்து பெறப்படும் விந்துவைக் கலக்கச் செய்து, உருவாகும் கருவினை, செயற்கைக் கருப்பை எனப்படும் சாதனத்தில் வைத்து வளரவைத்து, பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து, பெண்ணின் கருப்பையினுள் செலுத்தும் முறையாகும். இதன்மூலம் குழந்தை கிடைக்க 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.
Blasto Cyst Culture எனப்படும் கருத்திசு வளர்ச்சி முறையில், வழக்கமாகச் செய்யப்படும் சோதனைக் குழாய் குழந்தை முறையில் போலல்லாது, கருவானது, ஐந்து நாட்கள் பெட்டியில் வளர்க்கப்பட்டு பின்னர் கருப்பையில் வைக்கப்படும். இயற்கையில் முட்டையானது வெளிவந்தவுடன் கருவறைக் குழாயினுள் ஆண் உயிரணுக்களுடன் சேர்ந்து கருவாக உருவாகும். அது பின்னர் பல மாற்றங்கள் அடைந்து, ஐந்தாம் நாள், `கருத்திசு'வாக உருமாறி, கர்ப்பப்பையினுள் வளர்ந்து பின்னர் சிசுவாக மாறும். ஆகவே, கருத்திசு வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிய ஒரு சிகிச்சை முறையாகும். எனவே, இதில் வெற்றி வாய்ப்பு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை இருக்கிறது. IVF, ICSI சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதியருக்கு இந்த சிகிச்சை முறை உகந்தது.
மிகக் குறைவான விந்தணுக்கள் கொண்ட அணுக்கள் தவிர, போதுமான உயிரணுக்கள் இருந்தும் விந்தணுக்களில் போதிய வேகத்தன்மை இல்லாதவர் களும் ICSI முறை மூலம் பயன்பெறலாம். ஆண் விந்தில் அணுக்கள் இல்லாதபோது விரைப்பையிலிருந்து உறிஞ்சி எடுத்தும், செய்யப்படுகிறது. TESA, PESA, Test biopry போன்ற முறைகளிலும் செயற்கைக் கருத்தரிப்பு அடையச் செய்யலாம். இதில் வெற்றி வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் வரை உள்ளது.
ஃச்த்ஞுணூ ஏச்ணாஞிடடிணஞ், கருவில் தோல் கெட்டியாக இருந்தாலோ, கருப்பையினுள் ஒட்டாமல் இருக்க கர்ப்பப்பை தோல் தாராளமாக இருந்தாலோ கருவின் வெளித்தோல் தன்மை அதிகரிக்கலாம். இயற்கையிலேயே கருமுட்டை குறைந்த அல்லது இல்லாத பெண்களுக்கும் மாதவிடாய் நின்று கருமுட்டை கள் உருவாகாத பெண்களுக்கும் `கரு முட்டை தானம்' என்ற முறையில் குழந் தையை உருவாக்க நவீன விஞ்ஞானத்தில் வாய்ப்புகள் உள்ளன.
பெண்களில் சிலருக்கு கருப்பை பலவீனம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் கருப்பை நோய்த் தாக்குதல் ஏற்பட்டால் குழந்தை பிறக்க வழி யில்லை. இதுபோன்ற பெண்களின் கருமுட்டையையும் அவரது கணவரின் விந்தணுவையும் செயற்கை முறையில் இணைத்து, கரு உருவாக்கி, பின்னர் இதை மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, கரு வளர்ந்து குழந்தை பெற வாய்ப்புகள் உள்ளன.
எனவே, குழந்தையில்லாத தம்பதியினர் மனம் சோர்ந்துவிடாமல், உடனடியாகத் தகுந்த கருத்தரிப்பு மருத்துவமனையை அணுகி, முறையான சிகிச்சையினை மேற்கொண்டு `இனி எங்களுக்கும் ஒரு குழந்தை' என்ற பூரிப்புடன் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்.

தொடர்புக்கு: +91 9842159009

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,151