Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Gynaec & Infertility

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் பிரபலமான டாக்டர் காயத்ரி www.medicalonline.in க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

திருமணமாகி மூன்றாவது மாதத் திலிருந்து தம்பதிகள், தங்களின் வாரிசுக்கான மருத்துவ அறி குறிகளை எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மூன்றாவது மாதத்தின் போது வழக்கமாக வரவேண்டிய மாத முறை தள்ளிச்சென்றால் மகிழ்ச்சியடைந்து, உடனே மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள். சிறுநீர் பரிசோதனை நடைபெறும். அதில் வாரிசினைப் பற்றி சாதகமான கருத்தினைத் தெரிவிப்பார்கள். தம்பதிகளும் சந்தோஷமடை வார்கள். ஆனால், சில காலம் கடந்த பின், அவர்களுக்கு கருச்சிதைவு நிகழ்ந்துவிடும். ஏனென்று தெரியாது. மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்பார்கள். அவரும் சில காரணங்களைக் கூறுவார். கருச்சிதைவு குறித்தும் அதற்குரிய முழுப் பின்னணி குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.


ஒரு பெண் குழந்தை, அன்னையின் கருவறையில் உருவாகும்போதே கரு முட்டைகளும் எண்ணப்பட்டுவிடும். அதற்குப் பெயர் Primordial follicles. ஆரம்பத்திலேயே சிறிது சிறிதாக இவை கருமுட்டைப் பையில் இருக்கும். பிறக்கும்போது பல இலட்சக்கணக்கில் இருக்கும் Primordial follicles, அதே பெண்ணிற்கு 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தும்போது பல ஆயிரங்களாகக் குறைந்துவிடும். மாதம் ஒரு முட்டை பெரிதாகி, வெளியே வரும் போது பல Primordial follicles, ஆரம்ப நிலையில் இருக்கும் போதே சிதைந்து வீணாகிவிடும். இதற்குப் பெயர் Atretic follicles.


ஒரு பெண்ணின் வயது கூடக்கூட கருச்சிதைவு, கருத்தரிக்க வாய்ப்புக் குறைவு ஆகியன ஏற்படும். எனவே பெண்ணின் வயது மிக முக்கியம். பல பெண்கள் சிகிச்சைக்காக வருவார்கள். பல மருத்துவர்களிடம் சென்று விட்டு வருவார்கள். தங்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்க வில்லையென்றும், கர்ப்பப்பை பலமிழந்து இருக்கிறது என்றும், கர்ப்பப்பை சிறிதாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். உண்மையில், இவர் களது இந்தப் பிரச்சினைக்குக் காரணம் கர்ப்பப்பை அல்ல. இவர்களின் குழப் பங்களுக்குக் கருமுட்டைப் பையிலிருந்து வெளி வரும் தரமற்ற முட்டைகளே காரணம்.


பெரும்பாலும் வயதான பெண்களின்  கருமுட்டைகள் தரக் குறைவாக, குறை பாடுகள் உள்ளதாக, கருப்பிடித்தாலும் கருவறையில் ஒட்டாத கருவாக மாறுகிறது. கருவறையில் ஒட்டுவதற்கு Implantation என்று பெயர். கருச் சிதைவு முதல் மூன்று மாதங்களுக்குள் நடைபெற்றுவிடும். 35 முதல் 40 வயதிற்குட்பட்ட அன்னை யருக்குக் கருச்சிதைவு ஏற்பட அதிகம் வாய்ப்பு உண்டு. இக்கருக்களில் பல பிறவிக் கோளாறுகள் உள்ளன.


40 வயதினைக் கடக்கும் நிலையில் கருமுட்டை (ovum) மரபணுக் கோளாறு களுக்கு உள்ளாகி 50 சதவிகிதம் தகுதியற்ற மோசமான கருக்களாக உள்ளன. கருச் சிதைவு முதல் 40 நாட்களில் அதிகமாகி விடுகிறது. அவர்களுக்குக் கருச்சிதைவு நடைபெறுவதை மாதமுறை வருவதாகவே அவர்கள் எண்ணுவார்கள். இக்கருச்சி தைவால் உதிரம் சிறிது அதிகமாகப் போகும். வலியோடும் போகும். இது கருச்சிதைவின் விளைவே தவிர மாதமுறை அல்ல.


சிறுநீர்ப் பரிசோதனையின்போது, `குழந்தை' என்று வந்துவிடும். ஆனால் சில நாட்களில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அதற்கு மேலும் அதை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், மாதமுறை வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் தள்ளிச் சென்றாலும் நீர்ப் பரிசோதனை, இரத்தத்தில் பீட்டா ஏஇஎ என்ற ஹார்மோன் பரிசோதனை ஆகியவற்றைச் செய்து பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இவையெல் லாம் கருச்சிதைவாகிவிடும். இதற்கு Pre implantation abortion என்று பெயர். இவையெல்லாம், 35 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் பெண்கள் கருத்தரிக்கும்போது அவர்களது தரமற்ற கருமுட்டைகளால் ஏற்படும் வினைகள்.


அண்மைக் காலமாக சோதனைக் குழாய் குழந்தை முறைகள் எல்லா மருத்துவமனைகளிலும் பிரபலமாகி வருகின்றன. இதைப் பற்றி பல விளம்பரங்களும் வெளி யிடப்படுகின்றன. உண்மையில் இது ஒரு முன்னேற்றமான முறைதான். இந்த சோதனைக் குழாய் குழந்தை முறையில் கரு ஒட்டுவதற்கு முன்பாகவே, அதிலுள்ள மரபணுக் கோளாறுகள் போன்றவற்றை (Pre implantation Genetic diagnosis) அறிந்து களைவதற்குப் பல சோதனைகள், ஆராய்ச்சி முறைகள் உள்ளன. இது ஒரு சாதகமான அம்சமாகும்.


சோதனைக் குழாய் குழந்தையில் 1, 2, 3, 4 என்று பல கருப்பிடித்த கருக்களை உருவாக்கி, அவற்றில் ஏதாவது குறைபாடுகள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து, கழிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய கருக்களைத் தவிர்த்து விட்டு, நல்ல, தரமான கருக்களை கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுகிறார்கள். இப்படியெல்லாம் தேர்ந்தெடுப்பதற்குப் பல வசதிகள் உள்ளன. இதற்கு அடிப்படையில் பல திசுப் பரிசோதனைகள் உண்டு. இதன்மூலம் உட்ஞணூதூணி என்ற ஆரம்ப நிலைக் கருவின் எல்லாத் தன்மையையும் அறிந்து கொள்ளமுடியும். ஆண் அணு, பெண் கருமுட்டை இரண்டும் இணைந்த ஞுட்ஞணூதூணி என்ற ஆரம்ப நிலைக் கருவினை திசுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் போது, குணீஞுணூட்ண் என்ற ஆண் அணுக்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் கண்டறிந்து விடலாம்.

உதாரணமாக Chromosome என்ற மரபணுக்களில் Mosaicism என்ற கோளாறுகள் மிக அதிகமாக உள்ளன. இவற்றால் 7.2 சதவிகிதம் கருச்சிதை வாகி விடுகின்றன. இவற்றையெல்லாம் கண்டுபிடித்து, இந்தக் கருவை உள்ளே செலுத்தாமல் தவிர்த்துவிடலாம். இதைப் போன்றது தான் Triosmic off spring. இதை Downsyndrome என்பார்கள். இதுவும் ஒரு குறைபாடு தான். இதைக் கண்டுபிடிப்பதற்கு Chorion villous biopsy, Chorion villous sampling ஆகியவை உள்ளன.


கரு உண்டான ஆரம்ப கட்டத்தில் ஆண் அணு, பெண் முட்டை இரண்டும் இணைந்து உண்டாகிய ஆரம்ப கால Zygote, இவற்றைச் சுற்றியிருக்கும் திசுக் கள், இவற்றிலிருந்து திசுப்பரிசோதனைக்கு எடுக்கலாம். Zygoteஐ சுற்றியிருக்கும் திசுக்கள் தான் பிற்காலத்தில் Placenta என்ற நஞ்சாக மாறுகின்றன. இதை Chorion villous என்பார்கள். இந்தத் திசுப் பரிசோதனையின் மூலம் வள மான, நலமான குழந்தைகள் நமக்குக் கிடைக்க, வருமுன்னர் காக்கின்றோம். எனவே, இவற்றை `வருமுன்னர் காக்கும் சோதனைகள்' என்றுகூடச் சொல்லலாம்.

பல குடும்ப கோளாறுகள், பிறவிக் கோளாறுகள் என்பவற்றை இவற்றின் மூலம் தவிர்த்துவிடலாம். சிலருக்கு, வயதான பிறகு, மருத்துவம் செய்து கருத்தரிக்கும்போது, கரு முட்டையாக இருப்பதால், இயல்பாகவே மூன்று மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட சேதமான கருக்களையும் நாம் Pre Implantation Genetic Diagnosis (PGD) மூலம் கருச்சிதைவு செய்துவிடலாம். இப்பொழுது இவையெல்லாம் சாத்தியமாக இருக்கின்றன. இந்த நவீன உலகில் நமக்குத் தேவையான சிகிச்சையை தாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் நமது மருத்துவ அறிவியல் வளர்ந்து நிற்கிறது.

தொடர்புக்கு: +91 4546 253770

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,836