Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
காது, மூக்கு, தொண்டையை கவனமாக பேணுங்கள்
medicalonline-appointmenticon
medcialonline-ENT Care

வெறும் மூக்கடைப்புக்கு இன்ஹெலர், (Inhaler) ஐ பயன்படுத்தி தற்காலிக தீர்வு காண்போர் உண்டு. ஆனால் நிரந்தர தீர்வுக்கு என்ன செய்வது? காது குடையும்போது ஏற்பட்ட சிறு தவறை சரி செய்வது எப்படி? குரலில் ஏற்படும் மாற்றங் களை சீராக்கிக் கொள்வது எப்படி? இப்படி பல சந்தேகங்கள், நம்மில் பலருக்கு ஏற்பட்டு, அவை சந்தேகங்களாகவே இருக்கும். இம்மாதிரியான சந்தேகங்களுக்கும் இத்துறையில் மேற்கொள்ளப் பட்டு வரும் நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் www.medicalonline.in உடன் உரையாடினார், காது மூக்கு தொண்டை மருத்துவத்தில் சாதனைகள் பல நிகழ்த்திவரும் சென்னையைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் ரவி விஸ்வநாதன்.

சைனஸின் அறிகுறிகளும், அதற்கான நவீன சிகிச்சை முறைகளைப்பற்றியும் விரிவாக விளக்குங்களேன்?

முதலில் நம் மூக்கை சுற்றியுள்ள பாகங்களைத்தான் சைனஸ் அறை கள் என்கிறோம். Frontel சைனஸ் அறைகள், எத்மாய்டு சைனஸ் அறைகள், ஸ்பீனாய்டு சைனஸ் அறைகள், மேக்ஸிலரி சைனஸ் அறைகள் என சைனஸ் அறைகள் உள்ளன. இவை காற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இவைகள் கிருமி களின் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அது நோயாக மாறுகிறது. அதாவது மேற்கூறிய அறைகளில் ஏதேனும் ஓர் அறையில் நீர் அல்லது சளி போய் தங்கிவிட்டால், அந்த அறை வாசல்கள் அடைத்துக் கொண்டு தொல்லை தர ஆரம்பிக் கின்றன. இந்த அடைப்பிற்கு அறை வாசலில் உருவாக்கும் சதை வளர்ச்சியும் ஒரு காரணம். இதற்கு பாலிப் (Polyp) என்று பெயர். அதைவிட தூசுகள் வேதியியல் பொருட்கள் உள்ள இடங்களில் பணியாற்றுபவர்களும் இதனால் பாதிக்கப்படுவர். குழந்தைகளை பொறுத்தவரை அடினாய்டு சதை வளர்வதும் இதற்கு ஒரு காரணம்.

இந்த சைனஸை தோற்றுவிப் பதே ஜலதோஷம்தான். ஜலதோஷம் என்பது வைரஸ் கிருமிகளின் தாக்குதல். ஜலதோஷத்தால் உண் டாகும் தலைவலி, காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவற்றை கட்டுப் படுத்தி விட்டாலே ஜலதோஷம் கட்டுப்பட்டு விடும். பொதுவாக ஜலதோஷம் மூன்று நாட்களிலிருந்து இரண்டு வாரத்திற்குள் குணமடைந்து விடும். இதை கடந்தும் குணமாகவில்லை என்றால் அது சைனஸ் பிரச்சனை என்ற முடிவுக்கு வரலாம். இதனை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் கிருமிகள் கலந்த சளி சைனஸ் அறைகளில் தங்கி சீழாக மாறிவிடும். பின்னர் இதுவே சைனஸ் புற்றுநோயாகக் கூட மாறிவிட வாய்ப்புண்டு. எனவே இதற்கு உடனடியாக கிசிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை `பஞ்சர்' என்ற சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையில் தற்காலிகத் தீர்வே ஏற்பட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு "எண்டாஸ் கோப்பிக்" என்ற சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு காயமோ தழும்போ ஏற்படாது. இம்முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு சைனஸ் தொல்லை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்ற நிலை உருவானது. தற்போது அதைவிட நவீன சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

"மைக்ரோ டிப்ரைடர்" என்ற கருவி மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் சைனஸை உருவாக்கும் பாலிப் (Polyp) சதை அகற்றப் படுகிறது. மூக்கு என்பது மிகவும் நுட்பமான சிக்கலான பகுதி என் பதால் மைக்ரோ டிப்ரைடர் கருவி மூலம் சிகிச்சை மேற்கொள்வது அவசியம் என்று கூறலாம்.

குறட்டை ஆரோக்கியக் கேட்டின் அறிகுறியா?

ஆம். குறட்டை என்பது நாம் சுவாசிக்கும் காற்று, பயன்படுத்தப் பட்டு வெளியேற்றப்படும்போது ஏற்படும் தடையே குறட்டையாகும். இது மூச்சுக்குழாயின் இயக்கம், சீராக இல்லை என்பதையும் அவை இயல்புடன் இயங்கவில்லை என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது. குறட்டையை சரி செய்ய தற்போது நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பாதிக்கப்படும் நோயாளி களை நாங்கள் எங்கள் மருத்துவ மனையில் வைத்து முழு அளவில் சோதனை செய்கிறோம். அதன் பிறகு குறட்டையின் தன்மையை அறிந்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். சாதாரண குறட்டை தானே என்று அலட்சியப் படுத்தினால் அது பின்னாளில் மாரடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. எனவே குறட்டைக்கு தவறாமல் சிகிச்சை பெற வேண்டும்.

திடீரென்று தொடர் தும்மல் எதனால் ஏற்படுகிறது?

ஒவ்வாமை, தூசு இவற்றால்தான் அதிகளவில் திடீரென்று தும்பல் ஏற்படுகிறது. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Centralized Air Conditionerஐ அடிக்கடி சுத்தப் படுத்தவிட்டாலும்கூட தும்மல் ஏற்படும். சுற்றுப்புற சூழல், சுகாதாரக் கேடு போன்றவற்றால் கூட இது ஏற்பட வாய்ப்புண்டு. தும்பல் என்பது நம் மூக்கின் அறைகளில் ஆக்கிரமிக்கும் சில தேவையற்றவைகளை வெளியேற்ற உடல் மேற்கொள்ளும் அனிச்சை யான செயல் என்றும்கூட சொல்லலாம்.

திடீரென்று சத்தமாக கேட்கும் ஒலியால், கேட்கும் தன்மையை இழந்தவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கிறீர்கள்?

அந்த உரத்த ஒலியால் காதில் எந்த பகுதி பாதிப்படைந்துள்ளது என்பதையும், அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்பதையும் பொறுத்து சிகிச்சை அளிக்கிறோம். காதின் எந்த பகுதி அதாவது உட்புற செவி, நடுப்புற செவி, வெளிச்செவி இவற்றில் எந்த பகுதி பாதிக்கப் பட்டிருக்கிறது என்பதையும் கண்டறிந்த பிறகே சிகிச்சை அளிக்கிறோம். செவிப்பறை கிழிந்து கேட்கும் சக்தியை இழந்தவர் களுக்கு அதன் தன்மையை பொறுத்து Earing Aid பொருத்தி கேட்கும் சக்தியை மீட்டெடுக் கிறோம். அதேபோல் வாய் பேச முடியாதவர்களுக்கும் Speech Therapy மற்றும் நவீன சிகிச்சை களை மேற்கொண்டு பேசுவதற்கு பயிற்சி அளிக்கிறோம்.

காது கேளாமை, வாய் பேச இயலாமை போன்ற குறைகளை கருவில் கண்டறிய இயலுமா?

இயலும். அதற்கான நவீன சிகிச்சைமுறைகள் தற்போது ஆராய்ச்சியில் உள்ளன. மேலும் குழந்தைகளின் காது கேளாமை, வாய் பேச இயலாமை போன்ற பிரச்சனைகளுக்கு தைராய்டு, பிட் யூட்டரி போன்ற சுரப்பிகளே காரணம். இதன் வளர்ச்சி விகித மாறுபாடுதான் இதனை நிர்ணயிப் பதால் அதனை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இளமை பருவத்தில் (Teen Age) குரலில் மாற்றம் ஏற்படுவது எதனால்?

இதற்கு ஹார்மோன்களே காரணம். ஆண்ட்ரோஜென், ஈஸ்ட் டோஜென் இவைகளின் பெரும் பான்மைக்கு ஏற்ப குரலில் ஆண் மற்றும் பெண் தன்மை இருக்கும். சில ஆண்களுக்கு பெண்மை கலந்த குரல் இருப்பதற்கும், சில பெண் களுக்கு ஆண் தன்மையான குரல் இருப்பதற்கும், இந்த ஹார்மோன் களின் எண்ணிக்கையே காரணம். இதனை மாற்றியமைப்பதற்கும் நவீன சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

காது, மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளை பாதகாத்துக் கொள்வது எப்படி?

காதை பொறுத்தவரை கையில் கிடைத்த பொருட்களை வைத்து குடையக்கூடாது. வாக்மேன் வைத்துக் கொண்டு தொடர்ந்து பாடல்களையோ இசையையோ கேட்கக் கூடாது. காதில் அழுக்கு சேர்ந்து விட்டதாகக் கூறி அடுத்த வரிடம் Buds  சை கொடுத்தசுத்தப் படுத்துங்கள் என்று கூறக்கூடாது. தொடர்ச்சியாக செல்ஃபோனை காதில் வைத்துக் கொண்டு பேசு வதை தவிர்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் (0  20) சத்தத்தை நம் காதுகளில் புக அனுமதிக்கக் கூடாது. மூக்கை பொறுத்தவரை தண்ணீரை மாற்றி அருந்தினாலோ, குளித்தாலோ ஏற்படும் மூக்கடைப்பை கவனித்துக் கொள்ள வேண்டும். மழையில் நனைந்தாலோ அல்லது பனியில் (Mist) நனைந்தாலோ முதலில் பாதிக்கப்படுவது மூக்கு தான். அதனால் பருவநிலைக்கு ஏற்ப மூக்கை கவனித்துக் கொள்ள வேண்டும். மூக்குப்பொடி போடு வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தொண்டையை பொறுத்தவரை சூடான உணவையோ பானங் களையோ பருகக்கூடாது. அதே போல் மிகவும் குளிர்ந்த திரவங் களையும் உட்கொள்ளக்கூடாது. காது, மூக்கு, தொண்டை போன்ற நுட்பமான பகுதியில் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.

திக்குவாய் சரியாகக் கூடியதா?

திக்குவாய் என்பது சிலருக்கு எண்ண வேகத்திற்கேற்ப வார்த்தை களின் உச்சரிப்பில் ஏற்படும் இடையூறே திக்குவாய். இன்னும் சில பேருக்கு திக்குவாய் என்பது நாக்கு, அடிநாக்குடன் ஒட்டி யிருக்கும். இதனால் பேச்சு வேகமாகவோ தெளிவாகவோ வராது. இதற்கு நாங்கள் Speech Therapy மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் குணப்படுத்துகிறோம்.

காது, மூக்கு, தொண்டை ஆகியவை உடலின் மற்ற பகுதியை விட நுட்பமானது, சிக்கலானது. அதை கவனமுடன் பேணுங்கள். இரண்டு வாரத்திற்கு மேலாக சளித் தொல்லைகள் நீடித்தால் தாமதிக் காமல் நிபுணர்களை நாடுங்கள். உங்களின் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்திருப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால் சளி தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு உண்டு என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

தொடர்புக்கு: 0091 44 24994957

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,963