Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
நீரிழிவும் ரத்த அழுத்தமும் வியாதியல்ல
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Homeopathy

ஹோமியோபதி அறிவியல் பூர்வமானது என்கின்றனர் இந்தத் துறை மருத்துவர்கள். இது தொடர்பான மேலும் பல விபரங்களை அறிய, இந்தத் துறையின் நிபுணரும், சென்னையில் இயங்கிவரும் குமரன் மருத்துவமனையில் ஹோமி யோபதி முறையில் சிகிச்சைஅளித்துவரும் மருத்துவருமான டொக்டர் சிதரம்பரநாதனை www.medicalonline.in க்காகச் சந்தித்தோம்.

ஹோமியோபதி சிகிச்சைஎன்றால் என்ன?


நம்மூரில் ஒரு பழமொழி இருக்கிறது. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல் நோயை நோயால் தான் குணப்படுத்த முடியும். என்ன குழம்பி விட்டீர்களா! நோய் என்று கூறுவது நோயைத்தான். ஆனால் நோயால் என்று கூறுவது உடம்பால். அதாவது உடலை குணப்படுத்தி விட்டால் நோய் உள்ளே வராது.

எல்லா மருத்துவ முறையிலும் நோயை குணப்படுத்துவார்கள். ஆனால் ஹோமியோபதியில் நோயாளிக்கு சிகிச்சைஅளிப்பார்கள். அதாவது, ஒருவர் வயிற்று வலியால் துடிக்கிறார். அவர் அலோபதி அல்லது வேறு ஒரு மருத்துவ சிகிச்சைக்காக செல்கிறார். அங்கு அவருக்கு வலியை குறைக்கும் வலி நிவாரணிகள் வழங்கப்படும். அதை உண்டால் வயிற்றுவலி இருக்காது. ஆனால் வயிற்றுவலி முழுவதும் குணமாகாது. இதே வயிற்று வலியுடன் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவரிடம் பேசி வயிற்றுவலிக்கான காரணம், பின்னணி, வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஆகியவற்றை ஆராய்ந்து அதனை வலுவூட்டுவோம். அதனால் வயிற்றுவலி நீங்கும். மீண்டும் ஏற்படாது.

மற்ற சிகிச்சைமுறைகளிலிருந்து ஹோமியோபதி சிகிச்சைஎப்படி வேறுபடுகிறது? அல்லது இதன் தனி சிறப்பம்சம் என்ன?

மற்ற சிகிச்சைமுறைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் நோயின் தன்மையைப் பொறுத்தும், நோயாளியை பொறுத்தும் மாறுபடலாம். அதாவது ஒரு நோயாளிக்கு காய்ச்சல் என்று வந்தால் முதலில் ஒரு வித மருந்தும், அதில் குணமாகவில்லை என்றால் அதே நோயாளிக்கு வேறு ஒரு மருந்தும் வழங்கப் படும். ஆனால் ஹோமியோபதியில் இது நடைபெறுவதில்லை.

மற்ற சிகிச்சைமுறைகளில் உட்கொள்ளப்படும் மருந்துகளுக்கும் மாத்திரைகளுக்கும் சிறிது காலம் கழித்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஹோமியோபதியில் இது இல்லை.

மற்ற சிகிச்சைமுறைகளில் குறிப்பாக அலோபதியில் பாராசிட்டமால் மற்றும் பென்சிலின் என்ற இரண்டைத்தவிர மற்ற அனைத்து மருந்து வகைகளும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப் படுபவையாக இருக்கின்றன. இந்த நிலை ஹோமியோபதியில் இல்லை. ஹோமியோ பதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த மருந்து மாத்திரைகளும் தவிர்க்கப் படவில்லை.

ஹோமியோபதியில் மருந்துகள் மற்றும் மாத்திரைகளால் மட்டுமே சிகிச்சைஅளிக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில்லை.

மற்ற சிகிச்சைமுறைகளில் உருவாக்கப் படும் மருந்துகள் விலங்கினங்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு மனிதர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஹோமி யோபதியில் மனிதர்களிடமே பரிசோதனை செய்யப்பட்டு மனிதர்களுக்கே சிகிச்சைக் காக பயன்படுத்தப்படுகின்றன.

1790ஆம் ஆண்டில் யேர்மன் மருத்துவர் ஒருவரால் கண்டறியப்பட்ட மருத்துவமே இந்த ஹோமியோபதி மருத்துவம்.

ஹோமியோபதியில் நோயாளிக்கு எப்படி சிகிச்சைவழங்கப்படுகிறது?

முதலில் ஹோமியோபதி மருத்து வருக்கு நோயாளிக்கு வந்திருக்கும் நோயை இனம் கண்டறியும் அறிவும், அதற்கான மருந்துகளை கையாளும் திறனும், அதனை எப்பொழுது எவ்வளவில் நோயாளிக்கு பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லாவிதமான நோய்களுக் கும் ஹோமியோபதி மூலம் சிகிச்சைஅளிக்க முடியும். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. ஏனெனில் இயற்கைக்கு புறம்பாக ஹோமியோபதி மருத்துவம் எதையும் செய்ய முடியாது.

இன்றைக்கு தெற்காசிய பிராந்தியம் முழுவதும் அதிகமானோர்களை பாதித்திருக்கும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்திற்கு ஹோமியோபதி மூலம் தீர்வு காண இயலுமா?

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீரிழிவும், ரத்த அழுத்தமும் வியாதி அல்ல. நாம் அடையும் முதுமையை போன்றது. ஆனால் அவைகளை வியாதியாக மாற்றுவதும் மாற்றாததும் நம் கைகளில் தான் உள்ளது. ஒரு எளிய உதாரணத்தின் மூலம் உங்களுக்கு விளக்குகிறேன். ஒரு பிச்சைக் காரனுக்கு நீங்கள் பிச்சைபோட ஆரம்பித்து விட்டால் அவன் வேலைக்கு செல்ல மாட்டான். சோம் பேறியாகி விடுவான். அதேபோல் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறி குறிகள் தோன்றி யவுடன் அதனை மேற்கொண்டு வளர விடாமல் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் அதனை கட்டுப்படுத்த வேண்டும்.

நீரிழிவு நோயை ஆரம்பக் கட்டத் திலேயே அதாவது இன்சுலின் போடு வதற்கு முன்னமையே கண்டறியப்பட்டு, இந்த முறையில் சிகிச்சைஎடுத்தால் இன்சுலின் போட வேண்டிய அவசியம் இராது.

உடற்பருமனை குறைக்க ஹோமியோபதி எதனை பரிந்துரை செய்கிறது?

மற்ற சிகிச்சைமுறைகளில் வலியுறுத்தப் படும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் இவை மூன்றும் முறையாக இருந்தால் உடற்பருமனை குறைக்கலாம். உடற்பருமனை குறைப்பதற்காக வேறு ஒரு மருத்துவ முறையில் சிகிச்சைஎடுத்துக் கொண்டிருந்தாலும், ஹோமியோபதியிலும் சிகிச்சைகளை எடுத்து மருந்துகளை உட்கொள்ளலாம். உடற்பருமனை குறைக்கலாம்.

சோரியாஸிசைமுழுமையாக குணப்படுத்த இயலுமா?


சோரியாஸிசைபொறுத்தவரை உடலில் புகுந்திருக்கும் எதிரி யார் என்று தெரியாது. மேலும் இந்த சிகிச்சைமுறையில் அந்த எதிரியைப் பற்றி கவலைப் படுவதுமில்லை. நோயாளி ஆரோக்கியமாக இருந்தால் நோய் அணுக இயலாது. இதனை கருத்தில் கொண்டுதான் அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. சோரியாஸிஸ் வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தால் அவர் களை ஓராண்டிற்குள் குணப்படுத்தலாம். பத்து ஆண்டுகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் ஓராண்டிற்குள் குணப்படுத்த இயலும். ஆனால் இவை மீண்டும் வராது என்று யாராலும் உறுதி கூற இயலாது.

வேறு எந்த வகையான நோய்களுக்கு ஹோமியோபதி மூலம் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது?


முதிர்ச்சி அடைந்துவிட்ட மூல நோய்களுக்கு ஹோமியோபதியில் சிகிச்சைவழங்குவதில்லை. அறுவை சிகிச்சைசெய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். கண்களில் ஏற்படும் காடராக்ட் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தொடர்ந்து இம்முறை மூலம் சிகிச்சைபெற்றால் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டியதில்லை. ஹோமியோபதியில் குழந்தை, முதியவர்கள், பெண்கள் என பாலின வேறுபாடு, வயது வேறுபாடின்றி ஒரே முறையில் தான் சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைமுறையில் நோய்களை விரைவாக குணப்படுத்த இயலாது. ஆனால் உறுதியாக நோய் வராமல் தடுக்க இயலும் என்பதே இதன் தனி சிறப்பு.

தொடர்புக்கு: 0091 452 2338833 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,136