Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
லேசர் சிகிச்சையில் பக்க விளைவு குறைவு
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Dermatologist

`வயிறு காய்ந்தாலும் முகம் காயக்கூடாது' என்ற பழமொழி நெடுங்காலமாக  நம் மக்களிடையே நிலவிவருகிறது. இந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முகம்,  மற்றவர்களால் விரும்பப்படாமல் இருந்தால்....... அதன் வலி அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். இதற்கு தீர்வாக மருத்துவம் தந்துள்ள சிகிச்சை தான் லேசர் சிகிச்சை. இந்நிலையில்  இத்துறையில் பல வருட அனுபவம் பெற்றுள்ள நிபுணரும், சென்னையில் இயங்கி வரும் `சாட்டின் ஸ்கின்' என்ற நிறுவனத்தின் இயக்கு நருமான திருமதி லலிதா அவர்களை www.medicalonline.in க்காகச் சந்தித்தோம்.

மற்ற சிகிச்சை முறைகளிலிருந்து லேசர் சிகிச்சை எப்படி வேறுபடுகிறது? அதன் தனிச்சிறப்பம்சம் என்ன?

லேசர் சிகிச்சை பாது காப்பானது.  சுலபமானது, குறை வான நேரத்தை செலவிட்டால் போதுமானது. குறிப்பாக பக்க விளைவுகள்  இல்லை. பெண்களும், ஆண்களும் தங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற ரோமங் களை முற்றிலுமாக அகற்ற லேசர் கிசிக்சைதான் சரியானது என்று எண்ணுகிறார்கள்.

லேசர் சிகிச்சை எப்போது அவசியம் என்று பரிந்துரை செய்வீர்கள்?

தேவையற்ற ரோமங்கள், முக சுருக்கம், இளமையான தோற்றப் பொலிவு, அறுவை சிகிச்சை, தீக்காயம் மற்றும் விபத்துகள்  மூலம் ஏற்படும் தழும்புகள்,   பெண்களின் வயிற்றுப்பகுதியில் பிரசவத்தால் உண்டாகும்  சுருக்கங்கள், சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தோல்கள் என பலவற்றால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு சரியான தீர்வு லேசர் சிகிச்சைதான் வலியுறுத்து வோம். ஆனால் பதினான்கு வயதிற்குட்பட்டவர்கள், கருத்தரித் தவர்கள் மற்றும் தலைமுடி நரைத்திருப்பவர்கள் ஆகியவர் களுக்கு நாங்கள் இந்த சிகிச்சையை பரிந்துரை செய்வதில்லை.

சில பெண்களுக்கு மட்டும் முகத்தில் ரோமம் வளர்வதற்கு காரணம் என்ன?

பெண்களின் உடலில் சில ஹார்மோன்கள் சுரப்பதில் முரண் பாடுகள் ஏற்பட்டால் அதன் விளைவாகத்தான் பெண்களுக்கு முகத்தில் விரும்பத்தகாத முறையில் ரோமங்கள் வளர்கின்றன. இதற்கு மருத்துவ துறை "ஹார்மோன் இம்பேலன்ஸ்" என்று குறிப் பிடுகிறது. இன்றும் சிலருக்கு தைராய்டு குறைவாலும் இது நிகழும். வேறு சில பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன்  பிரச்சினை யாலும் ரோம வளர்ச்சி ஏற்படுகிறது.

இந்த சிகிச்சை முறையில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டா?

முதலில் எங்களிடம் வருபவர் களின் தோலை பரிசோதனை செய்து விட்டு, அவர்களிடம் லேசர் சிகிச்சையைப் பற்றி விளக்கிவிட்டு, அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், சிகிச்சைக்கான  லேசர் கதிரின் அளவை முடிவு செய்வோம். மிக குறைவான சக்தி கொண்டது முதல், ஆறுவிதமான அளவில் லேசரை செலுத்தி சிகிச்சையளிக்க முடியும். ஒவ்வொருவரின் ரோம அடர்த்தி, தோலின் தன்மை ஆகியவற்றிற் கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது தெற்காசியா பகுதி மக்களின் தோலிற்கேற்ப லேசர் சிகிச்சை இயந்திரங்கள் விசேடமாக தயாரிக்கப்படுகிறது. அதனால் லேசர் சிகிச்சை செய்து கொள்வதற்கு பயப்படப் தேவையில்லை. 1064 நானோமீட்டர்கள் அளவுள்ள லேசரால் சிகிச்சை அளிக்கப் பட்டால்தான்  பக்க விளைவுகள் ஏற்படாது என்பது குறிப்பபிடத்தக்கது.

*லேசர் சிகிச்சையை ஒரு முறை எடுத்துக்கொண்டால் போது மானதா?

இது போன்ற உறுதியை யாராலும் தர இயலாது. மேலும் லேசர் கதிர்களை பயன்படுத்தி பகுதி பகுதியாகத்தான் ரோமங்களை நீக்க இயலும். ஒவ்வொரு ரோமங் களுக்கும் மூன்று விதமான நிலைகள் உண்டு. அனஜின் என்று சொல்லப்படும் வளர்ச்சி நிலை. டெலஜின் என்று குறிப்பிடப்படும் வளர்ச்சியற்ற தேக்க நிலை. கேடஜின் எனப்படும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை. ஒவ்வொரு ரோமத்திற்கும் இந்த மூன்று நிலைகளும் சுழற்சி முறையில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். இந்நிலையில் லேசர் சிகிச்சையில் அனஜின் எனப்படும் வளர்ச்சியில் இருக்கும் ரோமங்களை மட்டுமே அகற்ற முடியும். அதிலும் ஒரே முறையில் அகற்ற இயலாது. ஆறு முதல் எட்டு முறை செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு பெண் அழகாக தோற்றமளிக்கவேண்டும் என்றால் எத்தனை மாதம் சிகிச்சை எடுத்தால் போதுமானது?

பொதுமாக நம் ஊரில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் தான் அழகு பற்றிய எண்ணம் வரும். அதனால் நாங்கள் தரும் பயனுள்ள ஆலோசனை என்னவென்றால், திருமண திகதிக்கு முன் இரண்டு மாத அளவிற்குள் எங்களை நாடினால் அவர்களை அழகாக்க முடியும். அதற்கு குறைவான கால அளவுகளில் (திருமணத்திற்கு நான்கு தினங்கள் முன்) வந்தால் கூட இந்த சிகிச்சை அளிக்க இயலும். ஆனால் வாக்சிங், திரெட்டிங் போன்றவற்றை மேற்கொள்ளும் முன் நன்கு பரிசீலிக்க வேண்டும்.

தாங்கள்  இந்த துறையில் நிபுணத்துவம் பெறவேண்டும் என்று விரும்பியது ஏன்?

பன்னிரண்டு ஆண்டுகளாக தெற்காசியாவில் உள்ள பல பிரபல மருத்துவமனைகளுக்கு தேவை யான லேசர் கதிர் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்துக் கொண்டிருந்தோம். மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் நாம், ஏன் நமக் காக ஒரு சிகிச்சை நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது என்று எண்ணி னோம். அதன் விளைவுதான் இந்த நிறுவனம்.

தாங்கள் எதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கிறீர்கள்?

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட வடுக்களுக்கு., முடி உதிர்வதை தடை செய்வதற்கு., தோல் மினுமினுப்பாக இருப்பதற்கு., குறிப்பிட்ட அளவில்  இளமையாக தோற்றமளிப்பதற்கு., இப்படி சிலவற்றிற்கு விசேடமாகவும் சிகிச்சை அளிக்கிறோம்.

இதற்கான விழிப்புணர்வு போதுமான அளவில் இருக்கிறதா?

முதலில் இந்தவித சிகிச்சை என்றால் என்ன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முன்வரவேண்டும். இதனால் ரேடியேசன் இல்லை என்பதை உணரவேண்டும். இதில் லைட் எனர்ஜிதான் பயன்படுத்தப் படுகிறது. அதனால் பயப்பட தேவையில்லை. தற்போது தேவை யற்ற ரோமங்களை அகற்றுவதற்கு இந்த சிகிச்சைதான் நிரந்தர தீர்வு என்பதால் இது குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது.

தொடர்புக்கு: 0091 44 24466007

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,840