Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தின் முக்கியத்துவம்
medicalonline-appointmenticon
medcialonline-ENT Care

காது, மூக்கு, தொண்டை துறையில் நீண்ட அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவரான Dr. M. பார்த்தீபன், காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் நோய்களைப் பற்றி, www.medicalonline.in ல் விளக்கமளிக்கிறார்.

காது கேளாமை, காதில் சீழ் வடிதல் இவற்றிற்கு காரணம் என்ன? அதன் பாதிப்பை எவ்வாறு குணப்படுத்துகிறீர்கள் ?

காது கேளாமை என்பது பிறவியிலும் வரலாம், பரம்பரையாகவும் இருக்கலாம். குறிப்பாக கர்ப்பக்காலத்தில் பெண்கள் அதிக மாத்திரைகள் உண்பதால் இந்நோய் குழந்தைகளை பாதிக்கிறது. தாய் ஏதேனும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட குழந்தைக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கிறது. காது கேளாமைக்கோ அல்லது காதில் சீழ் வடிதல் ஏற்பட்டாலோ அது நரம்பின் பாதிப்பா அல்லது காது சவ்வுகளின் குறைபாடா என்பதனை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நடு காதில் உள்ள மூன்று எலும்புகளில் `ஸ்கேட்டிஸிங்' என்று சொல்லக் கூடிய எலும்பானது எப்போதும் மென்மையான தன்மையில் இருக்கும். இவ்வாறான குறைபாடுகள் ஏற்படும் வேளையில் அவை இறுகிக் கொள்ளும். இதனால் வெளியி லிருந்து வரும் சப்தம் உள்ளுக்குள் செல்வது தடை படும். இதை (stapedotomy) என்ற முறையில் எலும்பை அகற்றி, "டேவ்வான்" என்ற ஒரு பொருளால் தயாரிக்கப்பட்ட வேதியியல் பொருளை பொருத்தி சிகிச்சைஅளிப்போம்.

பிறவியிலேயே காது கேளாதவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைபற்றி கூறுங் களேன்?

ஒரு சிலருக்கு ஒரு காது மட்டுமே கேட்காதிருக்கும். அது நரம்பு பாதிப்பு எனில், அடிப்படையான சிகிச்சைமூலம் குணப்படுத்தி விடலாம். இரண்டு காதுமே கேட்காதிருக்கும் பட்சத்தில் 'Cochlearimplant' என்ற அறுவை சிகிச்சையின் மூலம்  100% கேட்கும் திறனை திரும்பப் பெறலாம். மேலும் பேசமுடியாத நிலையில் நோயாளி இருப்பா ரெனில் பேச்சு திறனையும் மெல்ல மெல்ல வரவழைக்கலாம். இதற்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைமேற்கொள்வது நலம். ஆனால் இந்த சிகிச்சையை 5 வயது முதல் 7 வயதுக்குள் செய்துவிடுவது நலம்.

காது நோயால் பாதிக்கப்படாமலிருக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் ?

முதலில் அதிக சப்தம் கேட்பதும், காதிற்குள்  படிந்திருக்கும் தூசி எடுக்க கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்து வதும் கூடாது. இந்த கூர்மையான ஆயுதம், காது துளையில் உள்ள சவ்வுகளில், ஓட்டை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. இது காதுகேளாத நிலைக்குக் கூட கொண்டு சென்று விடும். மேலும் காதுகளில் ஏதேனும் வலி வந்தால் உடனே ஏதாவது ஒரு எண்ணெய்யை சூடு செய்து, காதில் ஊற்றுவது என்பது மிகவும் ஆபத்தானது. வலியோ, பாதிப்போ ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகுவது சிறப்பு.

சிலருக்கு சிறு தூசிப்பட்டாலே மூக்கிற்கு அலர்ஜியாகி சளி தொல்லை வரை கொண்டு செல்கிறதே?

ஆம், அலர்ஜி என்பது நம் உடல் தரும் மதிப்பு! அது எடுத்துக் கொள்ளும் சிரத்தை எனலாம். இந்தத் தூசி ஒவ்வாமை மூக்கில் உள்ள திசுக்களை பாதித்து, சளி தொந்தரவு, மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்படுத்தும். மூக்கின் பின்னால் உள்ள சதை, வளர்ச்சி அடைந்தால் இவ்வாறான பாதிப்பு வருவ துடன், தூங்கும் வேளையில் குறட்டையையும் ஏற்படுத்தும். இவர் களுக்கு சதை பாதித்து, மூக்கின் துவாரம் வழியே வந்து நிற்கும். இவ்வாறான வேளையில் Fungalsiansitis என்ற முறையில் சிகிச்சைஅளித்து குணமாக்கு வோம். இது மீண்டும் வளரும் தன்மை கொண்டதால் மருந்து கலந்த "ஸ்பிரே"யை பயன்படுத்தலாம். எனினும் தூசியின் அலர்ஜியை போக்க உடனே தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நலம்.

தூங்கும் வேளையில் சிலருக்கு "குறட்டை' விடும் பழக்கம் உள்ளதே இதை  எவ்வாறு சரி செய்யலாம் ?

உடல் எடை கூடாதிருந்தால் போது மானது. மேலும் மூக்கின் பின்புறம் உள்ள சதை வளர்வதினால் வாயை மூட முடியாது. இதனால் குறட்டை சத்தம் அதிகரிக்கும். இதற்குத் தகுந்த அறுவை சிகிச்சையி னாலும், மாத்திரைகளாலும் குணப்படுத் தலாம். இரத்த அழுத்தம் அதிகம் உள்ள நபருக்கு இது மாரடைப்பு வரை கொண்டு சென்றுவிடுவதால், தகுந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது மூளையில் ஏதாவதொரு கட்டி எனில் அதை சரி செய்ய மூக்கின் வழியாக சிகிச்சைஅளிக்கப்படுகிறதே அந்த மருத்துவத்தை பற்றி எடுத்துக் கூறுங்களேன்?

பொதுவாகவே காதிற்கும், மூக்கிற்கும், தொண்டைக்கும் ஒரு தொடர்பு உண்டு.  இவையனைத்துமே ஒரே "பிளாட்பாரத் தில்" இருப்பதால், ஏதேனும் ஒன்றில் குறை என்று வந்தாலும், அது தொடர்ந்து மற்றவைகளை பாதிக்கும். மூக்கின் பின்புறம் ஏதும் குறைபாடு என்றால், அதன் பாதிப்பு மூளைப் பகுதியையும் சேரும். காதுகளின் சவ்வுகளில் துளையாகி, அதிலுள்ள கிருமிகள் அனைத்தும் மூக்கில் போய் சேரும். தற்போது மூளையில் உள்ள கட்டிகள் (Endoscopic froms Sphenoida Pitvitary Surgery) என்ற முறையில் மூக்கின் வழியாக சரி செய்கிறோம். தற்போது இவ்வாறான சிகிச்சையினால் உடனடி நிவாரணம் பெறுவதுடன், மருத்துவத் துறையின் பெருவாரியான சிரமங்களையும் குறைத்தும் விடுகிறது.

காது மற்றும் நாசிகளில் உருவாகும் பாதிப்புகளினால் தொண்டைக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றிக் கூறுங்களேன் ?

காதிற்கும், மூக்கிற்கும் பெரும்பாலான பிரச்னைகளை தருவது "தொண்டை". இவை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பது தான் பிரச்சனைக்குக் காரணம். உதாரணமாக ஐஸ்கீரிம் சாப்பிட்டால் அது தொண்டையில் குளிர்ச்சியை ஏற்படுத்தி சளியை உண்டு பண்ணுகிறது. அதிலும் அலர்ஜி உள்ளவர்களெனில் அதிக சளியை ஏற்படுத்தி, நாசிக்கு தொந்தரவு தருகிறது. அதிக குளிர்ச்சி உண்பதால் காது பகுதியும் அதிக பாதிப்புக்கு ஆளாகிறது. நாம் உண்ணும் பொருட்களினாலேயே தொண்டைக்கு பாதிப்பு வருவதுடன், அது காது, மூக்கு இவைகள் இரண்டையும் பாதிக்கிறது.

தொண்டை சிலசமயம் வறட்டு தன்மையாகவும், எச்சில் முழுங்கும்போது வலியும் ஏற்படுகிறதே ? இதற்காக மேற்கொள்ளப்படும் நவீன சிகிச்சைமுறைகளைப் பற்றியும் கூறுங்களேன் ?

அதாவது தொண்டையில் "டான்சில்" என்ற உறுப்பு உண்டு. இது குறிப்பிட்ட வயது வரை வளர்ச்சி அடைந்து, பின் அதே நிலையில் இருக்கும். இந்த சதை வளர ஆரம்பித்தால் மூக்கின் பின்புறத்தில் உள்ள சதையும் வளரும். அதாவது 3 வயது முதல் `டான்சில்' என்ற உறுப்பு வளர ஆரம்பித்து, 16 வயதுக்குள் முழுமையான வளர்ச்சி அடைந்துவிடும். இந்த உறுப்பு மேற்கொண்டு வளருவது தவறு. அவ்வாறு வளர்ந்தால் மூக்கிற்கும், தொண்டைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதை மருத்துவத்தின் நவீன சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறோம்.

காது, மூக்கு, தொண்டை இவற்றிற்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறை எவ்வாறான வளர்ச்சி அடைந்துள்ளது என எண்ணுகிறீர்கள்?

காதில் ஏதேனும் நோய் என்றால் அது சிறியளவில் இருந்தாலும், பெரியளவில் இருந்தாலும் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைமேற்கொள்ள "லேசர்" சிகிச்சைஉள்ளது. காது கேளாமைக்கு "கேட்கும் திறன் பயிற்சியிலும், மைக்ரோ காது அறுவை சிகிச்சையளித்தும், நாசிகளில் வரும் நோய்களுக்கு மைக்ரோ சைனஸ் சர்ஜரி என்ற சிகிச்சையாலும் குணப்ப டுத்துகிறோம். மூளையில் உள்ள கட்டிகளை தலையில் எந்த விதமான அறுவை சிகிச்சைமுறையையும் மேற்கொள்ளாமல் அக்கட்டி களை மூக்கின் வழியாகக் குணப்படுத்துவது தான் இந்த மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சி எனலாம்.

தொடர்புக்கு: 0091 44 - 22365601

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,985