Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சிறுநீர் அடைப்பை உருவாக்கும் சதைவளர்ச்சி (ப்ராஸ்டேட்)
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Urology & Nephrology

நம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சிறுநீர் கழிக்கும் போது மிகவும் துன்பப்படுவதை நாம் பார்த்திருப்போம். இது முதுமையால் வருகிறது என்று சொல்லி  அவர்கள் அதற்கு சிகிச்சை செய்துக்கொள்ள மறுக்க, நாமும் அதனை ஏற்றுக்கொண்டு விடுகிறோம். ஆனால் தற்போது நாற்பது வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கும் இது வருவதால் இது குறித்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது கட்டாயமாகி விடுகிறது. இது தொடர்பாக இந்த துறையில் வல்லுநரான டொக்டர் நா. ஆனந்தன் www.medicalonline.in க்கு அளித்த விளக்கம் இதோ...


இது போன்ற பாதிப்புக்கு ஆளாவது ஆண்கள் மட்டும் தான். காரணம் அவர்களுக்கு மட்டும் தான் இந்த ப்ராஸ்டேட் என்ற உறுப்பு இருக்கிறது. இவை, சிறுநீர் பையும், சிறு நீர் பாதையும் இணையும் இடத்தில் இருக்கிறது. ஆண் விதையில் சுரக்கும் டெஸ்டேர்ஸ்டீரன் என்ற ஹார்மோன் சுரப்பிதான் இந்த சதை வளர்ச்சிக்கு காரணமாகிறது. வயது ஆக ஆக இந்த ஹார்மோன் தன்னுடைய சுரக்கும் தன்மையை குறைத்துக் கொள்வதால், டெஸ்டோஸ்பீரன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றின் விகிதாச்சரத்தில் மாறுதல் ஏற்பட்டு,  ப்ராஸ்டேட்  என்ற சதை வளர்ச்சியடைய தொடங்குகிறது. இது வளர்ச்சியடைந்து சிறுநீர் பாதையை பாதிக்கிறது. இதனால் சிறுநீர் பையின் சதை அளவு அதிகரித்து, அதிக விசையுடன் சிறுநீர்பை சுருங்கி சிறுநீரை வெளியேற் றும் நிலைக்குத் தள்ளப் படுகிறது.  இந்த நிலை கூட  சிலகாலம் மட்டுமே தொடரும். இந்த  அடைப்பு தொடர்ந்தால்,  சிறுநீர்பையின் உள்ளேயுள்ள சதைகளுக்கு நடுவில் ஏற்படும் இடைவெளியில், உள் தசை வெளியே சென்று பையைப் போல் நின்று (Diverticulum) விடுகிறது. இது சதையற்ற பையாக இருப்பதால், இதில் தங்கும் சிறுநீர் வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அந்த சிறுநீரில் கிருமி, கல், புற்று நோய் ஆகியவை தோன்றுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.  மேலும் சிறுநீர் பையில் தங்கும் நீரின்அளவும்  அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்திலிருந்து வரும் குழாயில் அடைப்போ அல்லது தேக்கமோ ஏற்படும் சூழல் உருவாகிறது. இது நாளடையில் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்து விடுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிறுநீர் பாதை அடைபடுவதால்,  நீர் செல்ல கடினமாக இருப்பதோடு, வெளியேறும் சிறுநீரும் மெதுவாகவும், நின்று நின்றும் செல்லும். சிறுநீர் வெளியேற அதிக நேரம் ஆகும். முதலில் இரவில் ஆரம்பித்து பின் படிப்படியாக பகலிலும் அதிக முறை செல்ல நேரிடும். வலி, எரிச்சலுடன் சில நேரங்களில் இரத்தத்துடன் கூட போக வாய்ப்புண்டு.

ஒரு எல்லைக்கு மீறி சென்றால் பிளாஸ்டிக் குழாய் மூலமாகத்தான் சிறுநீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். சிலர் இதனால் அதிகமான தண்ணீரை அருந்துவார்கள். இதனால் தன்னையுமறியாமல் சிறுநீர் வெளியேத் தொடங்கும். சோர்வு, ரத்தக் குறைவு, அதிக ரத்த அழுத்தம், மூச்சு வாங்குதல் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். இதனால் சில அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக இந்த துறையின் நிபுணர்களை அணுகி, ஆலோசனை கேளுங்கள்.

அவர்கள் சிறுநீரக வீக்கம், சிறுநீர்ப் பையின் வீக்கம், சிறுநீர்ப் பாதையின் நுனியில் உள்ள  அடைப்பு, ஆணுறுப்பின் தோலின் அடைப்பு உள்ளதா என்றும், பின் மலம் வெளியேற்றப்படும் பாதையின் வழியாக ப்ராஸ்டேட்டின் அளவு மற்றும் புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்றும் சோதனை மூலம் கண்டறியப்பட்டப் பிறகே சிகிச்சையை தொடங்குவார்கள். மேலும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமும் ப்ராஸ்டேட்டின் அளவை கண்டறிவார்கள். இதனை மருந்துகளாலும், மாத்திரைகளாலும் முழுதாக குணமாக்க முடியாது. அவைகள் தற்காலிகமான நிவாரணத்தைத்தான் வழங்கும். மேலும் இதற்காக பரிந்துரை செய்யப்படும் பிரசோசின், டேரகோசின் மற்றும் டாம்லுலோசின் ஆகிய மாத்திரைகள் எல்லாம் ரத்த அழுத்ததை குறைக்கும் தன்மையையும் கொண்டது. அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். இதற்கான நிரந்தர தீர்வு எண்டோஸ்கோபிக் என்ற அறுவை சிகிச்சை தான். இவ்வித அறுவை சிகிச்சையில் ப்ராஸ்டேட் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு, அடைப்பு நீக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை வலியில்லாதது. வடுக்களையும் உண்டாக்காது.

தொடர்புக்கு: +91 9840226637

 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,825