Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இன்றைய சூழலில் மனநல மருத்துவத்துறையின் முக்கியத்துவம்
medicalonline-appointmenticon
medcialonline-Psychiatry

இயந்திரத்தனமான வாழ்க்கையில் "மன அழுத்தம்" என்பது அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக இருக்கும் மனப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழி என்ன? என்ற வினாவிற்கு, மதுரையில் தாஜ் மருவத்துமனையின் நிறுவனரும், பிரபல மனநல மருவத்துவ நிபுணருமான டொக்டர். தீப் www.medicalonline.in ல் அளித்த செவ்வி இதோ...

நீங்கள் இந்தத் துறையினைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

மனநலத்துறை என்பது கலையும் அறிவி யலும் சேரும் ஒரு துறை, வித்தியாசமான மனிதர்களை வேறுபட்ட கோணங்களில் இத்துறையில் அணுகமுடியும். மனிதர்களுக்கு எழும் மனப்பிரச்சனைகளை தீர்ப்பதில் எனக்கு இருந்த அதீதமான ஆர்வமே இத்துறையை என்னைத் தேர்ந்தெடுக்க வைத்தது.

மனநலத்  துறையின் முக்கியத் துவம் தற்போது எந்த அளவுக்கு இருக்கின்றது?

அடிப்படையான மனநலவியல்  ஆலோசனை ஒவ்வொருவருக்கும் தேவை. கணவன் மனைவி வாழ்வு சிறக்க மனநலவியல் ஆலோசனை முக்கியம்.  ஒவ்வொரு மனிதனையும் நாம் வெவ்வேறு கண்ணோட்டத்தில், வேறுபட்ட முறையில் அணுகுகிறோம். அதுதான் மனநலவியல். குழந்தைகளின் நடத்தையைப் புரிந்து கொண்டு, மனநலவியல் தொடர்பான அறிவுரை வழங்குவதற்கும் மனநலவியல் ஆலோசனை முக்கியமாகிறது. ஆசியர்களிடமும், பெற்றோர்களிடமும் வளரும் குழந்தைகள், சரியானமுறையில் வடிவமைக்கப்படா விட்டால் நல்ல குடிமக்களாக குழந்தைகள் உருவாக முடியாதல்லவா?. வளர்ந்து வருகின்ற தொழில்யுகத்தில், இயந்திரத்தனமான வாழ்க்கையால் பணியாளர்களுக்கு மனஅழுத்தம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அந்த அழுத்தத்தைப் போக்கவும், தொழில் ரீதியான ஆலோசனைகளுக்கும் மனநல ஆலோசகர்களை மேலை நாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் நியமித்து உள்ளன. இந்தியாவிலும் பிரபலமான நிறுவனங்கள் மனநலவியல் ஆலோசகரை நியமித்து வருகின்றன. வளர்ந்து வரும் விழிப்புணர்வால் ஒவ்வொரு நிறுவனத்திலும் மனநலவியல் ஆலோசகர்கள் இருக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

குழந்தைகளின் கல்வி தொடர்பாக தங்களின் அறிவுரைகள் என்னென்ன?

உடல், மன, ஆன்மீக ரீதியான ஒட்டு மொத்த வளர்ச்சியையும், தெரிந்து கொள்வதையும் உள்ளடக்கியதே உண்மையான கல்வி. இன்று கல்வி என்பதன் வரையறை மாறி, வெறும் புத்தக அளவிலே இருக்கிறது. உலகத்தில் எப்படி வாழ வேண்டும், என்பதை இன்றைய கல்வி கற்றுக் கொடுப்பது கிடையாது. இது சின்ன வயதிலிருந்தே மாணவர்களுக்குப் பெரிய குறையாக அவர்களுடன் இணைந்தே வளர்ந்து வருகிறது. குழந்தைக்காகப் பணம் ஒதுக்க முடிந்த பெற்றோர்களால் அவர்களுக் காக நேரம் ஒதுக்க முடிவதில்லை; அயராமல் உழைத்து முன்னேற வேண்டும். என்று நினைப்பவர்கள்; யாருக்காக உழைக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்; குழந்தைகளுக்காகக் கட்டாயம் நேரம் ஒதுக்கி, அவர்களின் மீது கவனம் கொள்ள வேண்டும்; என்று எங்களிடம் வரும் ஒவ்வொரு பெற்றோர்களிடமும், இந்த ஆலோசனையைக் கூறுகின்றோம்.

ஒருவரோடு ஒருவர் போட்டி போடும் - போட்டிக் கல்வியாக மட்டும் இன்றைய கல்வி இருப்பது மாறவேண்டும். முன்பு போலக் கூட்டுக் குடும்பமாக வாழாததால் பெரியோர்களிடமிருந்து போதிய அறிவு ரைகள் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. குழந்தைகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்றால் பெற்றோரோ, ஆசிரியர்களோ, குடும்பத்தினரோ கட்டாயமாகத் தங்கள் அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். அதற் கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எங்கள் `டாப்கிட்ஸ் நிறுவனம்' மூலம் தற்போது நடத்தி வருகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகளிடம் இருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. பள்ளிகள் தரும் அளவுக்கு அதிகமான வேலையால் மாணவர்கள் அடையும் மனஅழுத்தத்திற்குஅளவே இல்லை. இந்த மனஅழுத்தத்தை போக்க பள்ளிகள், கல்லூரிகள் ஒவ்வொன் றிலும் மனநலவியல் ஆலோசகர்கள் நியமிக் கப்பட வேண்டும். ஆசிரியர்களிடம் குழந்தைகள் எல்லாப் பிரச்சனைகளையும் வெளிப்படையாகப் பேச முடியாது. குழந்தைகளுக்கென்று தனியாக ஆலோ சகரை அமர்த்த, ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் முன்வரவேண்டும். மாணவர்களை மனப்பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க இது ஒன்றே வழி.

மனநல மருத்துவத்தில் எந்தவகை யான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?

மனநலத்துறை என்றாலே `ஷாக்' வைத்து சிகிச்சை செய்வார்கள், என்ற பயம் நிலவு கிறது. இந்தக் கண்ணோட்டம் உண்மைக்குப் புறம்பான ஒன்றாகும். தற்போது, ஏதேனும் ஒருவகையில் மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்களே பெரும்பாலும் வருகிறார்கள். அவர்க ளிடம் பேசிப் பிரச்சனை யைப் புரிய வைத்தாலே போதும் அவர்கள் குணமாவது உறுதி. வேறு விதமான அழுத்தம் முதலான பல்வேறு பிரச்சனைகளுக்கு, மாத்தி ரைகளும் பல வகைகளில் வெளியாகி இருக்கின்றன. ஊசி மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. "ஷாக்" வைத்து அளிக்கப் படும் சிகிச்சையும், மிகக் குறைந்த அளவில் மயக்க மருந்து கொடுத்தே செய்யப் படுகின்றது.

இளைஞர்களின் தடம்மாறலுக்கு எந்த வகையான வழிகாட்டலும், அறிவுரை களும் அளிக்கப்படுகின்றன?


எந்த ஒன்றையும் எளிதாகப் பற்றிக் கொள்ளும் விடலைப் பருவத்தினருக்கு மனநலவியல் தொடர்பான ஆலோசனைகள் கட்டாயம் வேண்டும். விடலைப் பருவம் என்னும் (10-22 வயதுவரை) பருவத்தினர் களுக்குத் தக்க வழிகாட்டல் இல்லை யென்றால்,  அவர்களின் எல்லையற்ற ஆற்றல்களெல்லாம் தவறான வழிகளில் வீணாக்கும் வாய்ப்பு உண்டு. தொலைக் காட்சித் தொடர்களில் வரும் பண்பாட்டுப் பிறழ்வுகளைப் பார்த்து "எப்படியும் வாழலாம் போல" என்ற எண்ணம் உருப்பெற்று விடுகிறது. குழந்தைகள் நல்லவர்களாக வளர விரும்புபவர்கள். அதனால் அவர்களின் முன்னால் இத்தகைய தொடர்களைப் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

இன்றைய சினிமாக்களில் எதிர்மறை யான கதாநாயகர்களைப் (Nagative Hero) பார்த்து அவர்களைப் போலச் சீரழிந்தும் போகிறார்கள். இந்த வயதினருக்காக (Adult Couselling) `விடலைப் பருவத்தோருக்கான வழிகாட்டல்' என்ற அமைப்பை நடத்துகிறோம். அதில் பாலியல் தொடர் பான கல்வி முதல் சமுதாயத்தில் அவர்களுடைய பங்கு, குடும்பத்தில் அவர்களுக்குரிய பங்கு, இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம். "எட்டு வயதில் புகைப்பிடிக்கிறான்" என்று புகார் கூறுபவர்கள் குழந்தைகளின் முன்னால் நல்ல ஒழுங்குகளுடன் நடந்து கொள்ள வேண்டும். "அப்பா செய்யும் போது ஏன் நான் செய்யக் கூடாதா?" என்று கேட்க வைக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது.

மரபு ரீதியாக மனநலவியல் பிரச்ச னைகள், அடுத்த தலைமுறைக்குத் தொடர்ந் தாலும் அந்தக் குணங்கள் வெளிப்படுவதும், வெளிப்படாமல் போவதும் பெற்றோர் களின் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது.

மனஅழுத்தம் - குழந்தையின்மை முதலான பலபிரச்சினைகளுக்குக் காரணம் என்கின்றார்கள், அது குறித்து தங்கள் கருத்து என்ன?

மன அழுத்தம் என்பது உடலின் ஒவ்வொரு  உறுப்பையும் பாதிக்கின்ற ஒன்று. புற்றுநோயைத் தவிர எல்லா நோய்களுக்கும் மன அழுத்தமே காரணமாக அமைந்து விடுகின்றது.  புற்றுநோய் கூட, மனம் அமைதியாக இருந்தால் பரவுவது குறைவாக இருக்கும். மருத்துவரைப் பார்க்க வருபவர்களில் 65% பேர் "நோய் இருக்கமோ" என்ற எண்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களே, என்று புள்ளி விவரம் கூறுகிறது. முடிவாகச் சொன்னால் மன அழுத்தத்தைக் குறைப்பது ஒன்றே வாழ்க்கையைச் சுமூகமாகக் கொண்டு செல்ல ஒரே வழியாகும்.

இலங்கை போன்ற நாடுகளில், பிறந்தது முதற்கொண்டே குழந்தைகள் பிரச்சினையிலேயே வாழ்கிறார்கள். அதனால் மனநலவியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டா?

ஆரம்பத்திலிருந்து சுமூகமாக வாழ்ந்து விட்டு, திடீர் என்று பிரச்சனையைச் சந்திப் பவர்க்குத்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். பிறந்ததில் இருந்து பிரச்சினை களிலேயே வாழ்வது, அவர்களின் இயல் பான வாழ்க்கையாக இருப்பதால் பாதிப் புகள் ஏற்படாது. பிரச்சினைகள் தான் இயல்பான வாழ்க்கை என்ற கண்ணோட்டம், அவர்களிடம் இருக்கும். அந்தப் பிரச்சனை, தன்னை நெருங்கியவர்களைப் பாதிக்கும் போது, மனத்தளவில் பாதிப்பும் தொடங்கும்.

குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் களுக்கு  எந்தவகையிலான சிகிச்சைகளை அளிக்கிறீர்கள்?


2 வாரத்திலிருந்து 4 வாரம் வரை மருத்து வமனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டும், குடிப்பழக்கம் உடலில் ஏற்படுத்திய பிறகோளாறுகளைத் தீர்க்கவே இவ்வளவு காலம் ஆகிறது. இதன் பிறகு மருத்துவம் முடிய, 6 மாதம் முதல் 1 வருடம்  வரை ஆகும். இதில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ, மாதம் ஒரு முறையே ஊசி போடப்படுகிறது.

அதிகமாக உணர்ச்சி வசப்படுவது பலரிடம் காணப்படுகிறது. எந்தக் கட்டத் தில் அவர்கள் மனநல ஆலோசகரை அனுக வேண்டும்?

`டென்சன்' இல்லாத உலகம் வேண்டும் என்பவர்கள், தங்கள் நடவடிக்கைகளை, கண்ணோட்டத்தை முதலில் மாற்றியமைக்க வேண்டும். இதற்கான மனோவசியப் பயிற்சி, மனப்பயிற்சி, யோகா போன்ற பல் வேறு முறைகளைத் தற்போது எங்கள் "டாப்கிட்ஸ் நிறுவனத்தின்" மூலம் கையாண்டு வருகிறோம்.

உணர்ச்சிவசப்படுபவர்களின் செயல்கள் அடுத்தவரைப் பாதிக்காத வரை பிரச்சினை ஒன்றும் இல்லை. அப்படியே பாதிக்கும் படி யாக இருந்தாலும் தூங்கும் போது அவற் றைப் பேசி முடித்து விட்டு நிம்மதியாகத் தூங்க முடிந்தால் மனத்தளவில் எந்தப் பிரச்ச னையும் இல்லை. அப்படித் தூங்க முடிய வில்லையானால் மனநல ஆலோசகரை அணுக வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்று பொருள்.

தொடர்புக்கு: 0091 - 98940 52543

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,977