Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
கண் மருத்துவத்தின் நவீன சிகிச்சை யை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
medicalonline-appointmenticon
medcialonline-

கோடை வந்துவிட்டால் எம்மில் பலருக்கு உதறலெடுக்கும். ஏனெனில் கோடை வெப்பத்தை தாங்குவதற்கு உடல் படும்பாடு, பலரை எரிச்சலை வரவழைக்கும். வியர்வை, சரும எரிச்சல், வேனல் கட்டிகள், பொடுகு, கண் நோய் என பலவும் வரிசை யாய் எம்மைத் தாக்கத் தொடங்கும். இதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள கூலிங்கிளாஸ், இளநீர், தர்ப்பூசணி, குளிர்பானம் என பலவற்றைக் கொண்டு சமாளிக்கிறோம். ஆனால் கண்ணிற்கோ அல்லது பார்வைக்கோ ஒரு சிறிய அளவிலான குறைபாடு வந்துவிட்டாலும் அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் பார்வை குறைபாடு, கண் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் சரியான தீர்வை வழங்கி, கண் மருத்துவ சிகிச்சையில் தமக்கென தனி முத்திரை பதித்து, தமிழக நகரான கோயம்புத்தூரில் இயங்கி வரும் த அய் பவுண்டேசன் என்ற கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், கண் மருத்துவத் துறையில் இந்தியாவின் தலை சிறந்த அறுவை சிகிச்சை  நிபுணருமான டொக்டர் டி ராமமூர்த்தியை அணுகி சந்தேகத்தை முன் வைத்தோம்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை ஆகிய பார்வை குறைபாடுகளுக்கு நவீன கண் மருத்துவம் அறிமுகப்படுத்தியிருக்கும் இண்ட்றேலேஸ் சிகிச்சையின் சாதக மற்றும் பாதகமான அம்சங்களை கூறுங்களேன்?

பார்வை குறைபாடுகளை விட்டமின் மாத்திரைகளாலோ, மருந்துகளாலோ முற்றிலும் குணப்படுத்த இயலாது. கண்ணாடி அணிவதையோ அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிவதையோ தான் கண் மருத்துவத் துறை பரிந்துரை செ ய்தது. ஆனால் கண்ணாடி அணிவதையும், லென்ஸ் பொருத்திக்கொள்வதையும் அசெ ளகரியமாகவும், தங்களுடைய பணித் திறனை பாதிக்கக்கூடிய அம்ச மாகவும் இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்தனர். இதனை கருத்தில் கொண்ட மருத்துவ துறை, 1990 ஆம் ஆண்டில் லேசிக் தொழில் நுட்பத்தை அறிமுகம் செ ய்தது. இதன் மூலம் ஒளி ஊடுருவும் கருவிழிப் படலம் சீராக்கப்பட்டு பார்வை மேம்படுத்தப்பட்டது. மைக்றோ கெறோடோம் மெக்கானிக்கல் பிளேட் மூலம் இந்த சிகிச்சை  மேற்கொள்ளப்படும்போது ஏறக்குறைய பதினைந்தாயிரம் பேர்களில் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனை மாற்றியமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இண்ட்றேலேஸ் என்னும நவீன சிகிச்சை . இந்த அறுவை சிகிச்சை யில் பிளேடுகள் எதுவும் பயன்படுத்தாததால் பக்க விளைவுகள் ஏற்படும் என்ற பேச்சிற்கு இடமில்லாமற்போனது. இந்த அறுவை சிகிச்சை  துல்லியமானது. பாதுகாப்பானதும் கூட. இந்த சிகிச்சை யை மேற்கொண்டவர்கள் அதன் பின் வாழ்நாள் முழுவதிற்கும் கண்ணாடி அணிய தேவையிருக்காது. இம்முறை மூலம் கார்னியாவில் சிறிய அளவில் லேச ர் ஒளி பாய்ச்ச ப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த சிறிய லேச ர் ஒளி பல்ஸ் கருவிழிப்படலத்தில் ஊடுருவும் போதும், அதில் உள்ள கார்னியா அணுக்களுக்கு எந்த சே தாரமும் ஏற்படாமல்  ஒரு புதிய ஃபிளாப் உருவாக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கார்னியல் ஃபிளாப்பை திறந்து கருவிழிப்படலம் சீரமைக்கப்பட்டு அதன் பின் மூடப்படுகிறது. நாளடைவில் எந்தவித பின்வினைவுகளும் இல்லாமல் ஏற்கனவே உள்ள திசுக்களுடன் மூடப்பட்ட ஃபிளாப் ஒன்றிணைந்துவிடும். இருபது நி மிடங்களில் முடிந்துவிடும் இந்த அறுவை சிகிச்சை க்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு இருக்கிறது.

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்டீரியர் செக்மென்ட் ஐ ட்ரான்ஸ்பிளான்டேசன் என்னும் சிகிச்சை முறை ஒரு நோயாளிக்கு எந்த தருணத்தில் அவசியமாகிறது?

அதாவது ஒரு நோயாளிக்கு கண்ணின் வெளிப்புற பகுதியும், உட்புற பகுதியும் இணைந்து பாதிக்கப்பட்டிருக்கும் போது இது போன்ற புதிய அறுவை சிகிச்சை கள் அவசியமாகிறது. இந்த அறுவை சிகிச்சை யில் நோயாளியின் கருவிழி, கண்ணின் விழிவெண்படலம், கண்ணின் மணி, பாப்பா மற்றும் லென்ஸ் ஆகிய அனைத்தும் மாற்றப்படும். இந்த அறுவை சிகிச்சை  இரண்டு பாகங்களை கொண்டது. முதலில் பயோப்ராஸ்தசிஸ் என்பதனை உருவாக்கிக் கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து  குளூட் ஐ ஓ எல் என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செ யற்கை முறையிலான கண்ணின் மணி, பாப்பா, லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டு ப்ராஸ்தடிக் பகுதியை உருவாக்குவார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேர அறுவை சிகிச்சை க்கு பின் நோயாளிக்கு பார்வை கிடைக்கும். இதனால் கிடைக்கும் பார்வை மற்றும் கண் பகுதியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இல்லையேல் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பிறவிக் கோளாறால் பார்வையை இழந்தவர்களுக்கும், விபத்தினால் பார்வையைஇழந்தவர்களும் ஓ ஓ கே பி என்ற சிகிச்சை மூலம் பார்வையை மீட்டெடுக்க இயலும் என்கிறார்களே அது சாத்தியம் தானா?

ஓஸ்டியோ ஓதோண்டோ கெறோட்டோ ப்ராஸ்தீஸிஸ் என்று மருத்துவ துறையினரால் குறிப்பிடப்படும் அறு வை சிகிச்சை யில் பல்லில் துளைப் போட்டு, செ யற்கை கண்ணை உருவாக்குவார்கள். அதன பின் கார்னியோ காடராக்ட் என்ற அறுவை சிகிச்சை யை செ ய்வார்கள். இதன் பின் பார்வை மீட்டெடுக்கப்படும். உலகத்தில் பத்திற்கும் குறைவான இடங்களில் தான் இம்மாதிரியான அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்படுகிறது.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் கண்ணில் லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள். பார்வை குறைபாடு உள்ளவர்கள் பதிஎனட்டு வயது வரை காத்திருந்து தான் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமா?

முதலில் இது ஒரு தவறான அபிப்ராயம். பார்வை குறைபாடு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோச னை பெறுவது தான் சிறந்தது. தற்போதெல்லாம் பிறந்து ஒரு மாதம், இரண்டு மாதம் ஆன குழந்தைகளுக்கு கூட நாங்கள் கண் அறுவை சிகிச்சை யை செ ய்கிறோம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை. எனவே பார்வை குறைபாடுகளோ அல்லது கண் தொடர்பான கோளாறுகளோ இருந்தால் பதினெட்டு வயது வரை காத்திருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய ஆலோச னை பெறுவது தான் ச ாலச் சிறந்தது. இல்லையெனில் பார்வையை மீட்டெடுக்க இயலாமற் போவதற்கும் வாய்ப்பு உண்டு.

மேல் வரிசை பற்களில் சொத்தை இருந்து, அந்த பற்களை அகற்றினால் கண்ணில் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையா?

இல்லை. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. மக்களிடம் இருந்து வரும் மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

தங்களுடைய மருத்துவ அனுபவத்தில் மறக்க இயலாதவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

பாலக்காட்டில் பொறியாளராக இருக்கும் ஒருவருக்கு அவருடைய ஆறாவது வயதில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. அவருக்கு அந்த காலக்கட்டத்திய அறுவை சிகிச்சை  செ ய்து, கண்ணாடியை அணிவித்தேன். அவரது வாரிசுகள் இருவருக்கும் பார்வை குறைபாடுகள் இருந்தது. அந்த குழந்தைகள் பிறந்த முதல் மற்றும் இரண்டாவது மாதத்தில் அறுவை சிகிச்சை  செ ய்து பார்வை வழங்கியது எம்மால் மறக்க இயலாது.

உங்களுடைய மருத்துவமனையின் சார்பாக சமுதாயத்திற்கு வழங்கி வரும் பங்களிப்பு என்ன?

சிகிச்சைக்காக வரும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் மக்களில் தினசரி இருபது முதல் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக அறுசை சிகிச்சையினை செய்து வருகிறோம். கண் புரை, க்ளக்கோமா, உள்ளிட்ட கண் தொடர்பான நோய்களைப் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.

தற்போது கண் மருத்துவத்துறையில் ஏராளமான நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுவது நம்முடைய கைகளில் தான் இருக்கிறது. தெற்காசியாவில் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் முதல் தாக்கம் க்ளக்கோமா என்று பெயரில் பார்வையில் இருப்பதால், தயவு செய்து நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்கவும். பார்வை குறைபாடு வந்தால மட்டும் மருத்துவரை அணுகுவதை விட கண் தொடர்பான மற்ற உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம்.

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,844