Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சர்க்கரை நோயை எளிய சிகிச்சையால் கட்டுப்படுத்தலாம்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Diabetology

நீரிழிவு என்றாலே நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய், சர்க்கரை வியாதி அல்லது டயாபடீசைப்பற்றிய சந்தேகங்களுக்கு www.medicalonline.inல் விளக்கம் அளிக்கிறார் இந்த துறையின் நிபுணரும் சென்னையில் இயங்கிவரும் டொக்டர் ஏ.ராமச்சந்திரன்ஸ் டயாபடீஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான டொக்டர் ஏ. ராமச்சந்திரன். 

இன்றைக்கு மேற்கத்திய உலகில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவது நூற்றுக்கு 7 சதவீதம் தான். ஆனால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய பகுதிகளில் இதன் சதவீதம் 15லிருந்து 18க்காக இருக்கிறது. இதற்கு என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு முன் சர்க்கரை வியாதி எதனால் வருகிறது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் கலாச்சாரத்தின் அடிப்படையிலும், மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டதாலும் நிகழ்ந்த ஒரு பின் விளைவு என்றும் கூறலாம். அதாவது உணவு அதிகமாகி, உழைப்பு குறைந்ததன் பயனாக நாம் நமது உடலுக்கு சர்க்கரை வியாதியை பரிசாக தந்திருக்கிறோம். நம் உடலின் இயல்பான எடை அளவை மீறி, அதிகளவு எடை இருந்தால் அதுதான் நீரிழிவு நோய்க்கான ஒரு ஆரம்பகட்ட அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். நாம் நமது வாழ்வியல் நடைமுறைகளை மாற்றிக் கொண்டதாலும் இது வருகிறது என்றும் கூறலாம்.

தற்பொழுது நமது இளம் தலைமுறையினரிடம் குறுகிய காலத்தில் குறைவாக உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆக்கிரமித்து இருப்பதால் இரவு நேரங்களில் பணிபுரிதல், காலம் தவறிய உணவுமுறை, குறைவான உடல் உழைப்பு, அதிக கொழுப்பு சத்துள்ள உணவை உட்கொள்வது ஆகியவற்றால் இளம்தலைமுறையினர் சர்க்கரை வியாதியை இரு கரம் கொண்டு அழைக்கின்றனர். இதன் பிறகு பல்வேறு உடல் உபாதைகளுடன் மகிழ்ச்சியில்லாமல், மருந்து மாத்திரைகளுடன் வாழ்வதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர். இதனால் மன அழுத்த நோய்க்கும் ஆளாகிறார்கள்.

பெற்றோர்களுக்கு இந்நோய் இருந்தால் அவர்களது வாரிசுகளுக்கு தவறாமல் வரும். இவ்விடயத்தில் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். அவர்களைப் போலவே முதுமை பருவத்தில் வரும் என்று கூறுவதைவிட முன்னதாகவே வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் இதனை கட்டுபடுத்த இயலும். முறையான உணவு முறை, எளிய பயிற்சி, சத்துள்ள உணவு வகைகள் இவற்றுடன் மனதை நிலையாக வைத்திருந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயலும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்து, அதனை அவர் உணர்ந்து கொள்ளாமல் 10 ஆண்டுகளுக்கு மேல், சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே கண் பார்வை குறைபாடுகள், இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகியவை வரும் என்று உறுதியாக கூற முடியும்.

நம் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் தமக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதனை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. வேறு விடயமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்போதுதான் தங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்கிறார்கள். தற்பொழுது கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் உண்பதால் சென்ட்ரல் ஒபிசிட்டி என்கிற தொப்பை ஏற்படுகிறது. இது ஏற்பட்டாலும்கூட உங்கள் உடலில் சர்க்கரை வியாதி ஆக்கிரமித்துள்ளது என்பது தெரியவரும். இதன் பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்பவர்கள் சர்க்கரை நோயை தங்களது கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர்.

சர்க்கரை நோயை தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இனிப்பு, ஐஸ்கீரிம், கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், துரித வகை உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை உறுதியாக தவிர்த்திட வேண்டும். அதற்கு இணையாக காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தினசரி 30 நிமிடமாவது நடைப்பயிற்சியோ அல்லது தேகப்பயிற்சியோ செய்வது அவசியம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு சர்க்கரை வியாதி தாக்குவது 50 வயதிற்கு மேல் இருக்குகிறது. ஆனால் நகர்புறங்களில் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோய் தாக்குகிறது.

2020ஆம் ஆண்டு தெற்காசியா முழுமைக்கும் 70 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதேபோல் அவர்களுக்கு இதய நோய், சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள், ரத்தக் கொதிப்பு ஆகிய நோய்கள் தாக்குவது நான்கு மடங்கு அதிகரித்திருக்கும். விழிப்புணர்வுடனும், மருத்துவரின் ஆலோசனையுடனும், சுய கட்டுப்பாடுடனும் நடந்து கொள்பவர்களில் 35 சதவீதத்தினர் இந்நோய் தாக்குவதிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம். அதாவது அவர்களுக்கும் இந்த நோய் இருக்கும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க்கு மற்ற மருத்துவமுறைகளில் சிகிச்சை மேற்கொள்வதை விட ஆங்கில மருத்துவமான அலோபதியில் மேற்கொள்வதுதான் சிறந்தது. தெற்காசியாவை பொறுத்தவரை சர்க்கரை வியாதி என்பது ஜீன் கோளாறுகளால் ஏற்படுவது. இதனை தவிர்க்க நமது அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு புதிய கண்ணோட்டத்துடன் நமது வாழ்க்கையை நடத்துவதற்கு நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். அது என்ன உறுதிமொழி என்றால், அளவான உணவு, சத்தான உணவு, போதிய பயிற்சி, மன அழுத்தம் ஏற்படாமல் நமது நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் அமைத்துக் கொள்ளுதல்... இப்படி சிலவற்றை உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுவோமேயானால் 40 வயதிற்குள் நமது உடலுக்குள் புகுந்துவிடதயாராக இருக்கும் சர்க்கரை வியாதியை 60 வயதில் சந்திக்கும்படி தள்ளிப்போடலாம் அல்லது ஒத்திவைக்கலாம்.

பொதுவாகவே தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு சர்க்கரை வியாதி இப்படி அதிவேகமாக பரவுவதற்கான காரணத்தை ஆராய்ந்தோமென்றால், ஒருவரது உடலை அவரது சமுதாய நிலை (Social Status) யுடன் ஒப்பிடும் பாங்கு, வேகமான வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட பின்விளைவு, நமது இளம் தலைமுறையினரின் கண்மூடித்தனமான மேற்கத்திய கலாச்சார  பின்பற்றல்... இப்படி பல காரணங்களை கூறலாம். மேற்கத்திய நாடுகளில் இந்த சதவீதம் கட்டுக்குள் இருப்பதற்கு அவர்களது தெளிவான திட்டமிட்ட வாழ்க்கை நடைமுறையே காரணம்.

சர்க்கரை வியாதி இருக்கும் கருவுற்ற பெண்களுக்கு அதன் தீவிரம் வேறு விதங்களில் தெரியவரும். குழந்தையின் நலம், உயிர் மற்றும் உறுப்புகள் போன்றவை பாதிக்கப்படக் கூடும். அவர்களின் பிரசவமே சற்று பிரச்சனைக்குரியதாக ஆகிவிடும். இதற்கு தீர்வு இருக்கிறதா என்றால் இருக்கிறது. கருவுறும் பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளும்போதே, கொழுப்பு சத்து மிக்க உணவுகளை தவிர்த்தல், காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உட்கொள்ளுதல் போன்ற சில நடவடிக்கைகள் மூலம் பிரசவத்தை சிரமம் இல்லாமல் எளிதாக்கலாம். ஆனால் குழந்தைக்கு சர்க்கரை வியாதி ஜீன் கோளாறுகளால் வருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அது எப்போது தாக்கும் என்று உறுதியாக கூற இயலாது. கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் குழந்தைகளுக்கு பிரசவம் ஆன பின்னரும் 30 சதவீத அளவில் தொடரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு இயல்பான மனிதருக்கு உணவருந்தும் முன் சர்க்கரையின் அளவு 100ஆக இருக்க வேண்டும். அதேபோல் உணவு உண்ட பின் அதன் அளவு 140க்குள் இருக்க வேண்டும். இதுதான் சரியான அளவீடு. இதற்கு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பிரச்சனை இருக்கிறது என்பதனை புரிந்து கொண்டு மருத்துவரை நாடி ஆலோசனையுடன் கூடிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

தற்பொழுது தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் எண்ணற்ற இளம் தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ளும்படி வற்புறுத்துகின்றன. மேலும் இதன் மூலம் அவர்களின் பணித்திறன் மேம்படும் என்ற நிபுணர்களின் ஆலோசனையை அந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தங்களது ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனைகளை செய்துகொள்ள ஊக்கம் தருகிறது. இதனை ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் உடலின் சர்க்கரை அளவை தெரிந்து கொண்டு, அதனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

பழங்காலத்தில் இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள் ஏழ்மை நிலையில் இருந்தபோது டைஃபாய்டு, காலரா, டயரியா போன்ற சில நோய்களால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்திருப்பதை வரலாறுகள் பதிவு செய்திருக்கிறது. ஆனால் தற்காலத்தில் முதுமை பருவத்திற்கு முன்னரே மரணத்தை தழுவுதல் அதிகமாகியிருக்கிறது. இதற்கென்ன காரணம் என்று ஆராய்ந்தோம் என்றால், அவர்களுக்கு இதய நோய் சிறுநீரக நோய், வாதநோய் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மூலம் என்று பார்த்தோம் என்றால் அது டயாபடீஸ் என்கிற சர்க்கரை வியாதியை தான் அடையாளமாக காட்டுகிறார்கள்.

ஏழ்மை நிலையிலிருந்த தெற்காசிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் அடைந்து வரும் அபார வளர்ச்சியால் விளைந்த எதிர்மறை விளைவு என்று இதனை குறிப்பிடலாம். மீண்டும் வலியுறுத்துகிறேன். சர்க்கரை நோயை வர அனுமதிக்காதீர்கள். அதற்கான முன்னெச்சரிக்கையுடன் உங்கள் வாழ்க்கை நடைமுறையை அமைத்துக் கொள்ளுங்கள். அதனையும் மீறி வந்துவிட்டால் இதற்கு ஒரே தீர்வு உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதுதான். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையை குறைப்பதற்கான அனைத்து முறைகளையும் கடைபிடியுங்கள்.

தொடர்புக்கு: +91 - 044 - 28582003 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,969