Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
ஆங்கில மருத்துவம் பக்கவிளைவுகளைத் தருமா?
medicalonline-appointmenticon
medcialonline-General Medicine

எயிட்ஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் குறித்து முதன்முதலில் தமிழில் மருத்துவ நூலினை எழுதியவர். இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலோர் குடல்வால் நோயினால் தாக்கப்படுவதற்கு அவர்களின் முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே காரணம் என்பதில் உறுதியான கருத்தினைக் கொண்டிருப்பவர். குறைவான கட்டணம், தரமான சேவை என்பதனை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு மருத்துவச் சேவையாற்றி வருபவர்- டொக்டர் ஏ.என்.கலாநிதி. சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் கே.ஹெச்.எம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மருந்தியல் நிபுணருமான இவரை சந்தித்தோம்.

எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறதே? இதில் எவ்வளவு தொலைவிற்கு மருந்தியல் துறை வெற்றிக்கண்டிருக்கிறது?

எயிட்ஸைத் தடுப்பதற்கான ஆண்டிப யாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. ஆங்கில மருத்துவத்துடன், ஆயூர்வேதிக் முறையிலான மருந்துகள் மூல மும் நல்ல பலன் கிடைத்து வருவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எயிட்ஸ் என்ற நோயின் தாக்கம் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டால் அதனைக் குணப்படுத்த  கூடிய அளவில் மருந்தியல் துறையும், மாற்று மருத்துவத்துறையான ஆயூர்வேதத் துறையும் இணைந்து செ யலாற்றி வருகின்றன. தம்பதிகளிடையே யாருக் கேனும் எயிட்ஸ் இருந்தால் அதனை மருத்து வர்களிடம் ஒப்புக்கொள்ள மறுக்கும் சூழலே இன்னும் நீ டித்து வருகிறது. எமக்கு  எயிட்ஸ்  இருக்கிறது என்று ஒப்புகொள்ள நேரிட்டால் சமூகம் தம்மைப் புறகணித்து விடும் என்ற எண்ணம் பொதுமக்களிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இந்த இரண்டு விடயங்களில் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டால், எயிட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயினைத் தொடக்க காலகட்டத்திலேயே இனம் கண்டறிந்து, மரணத்தைத் தள்ளிப் போடலாம்.

உடலில் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாகத் தீரவேண்டும் என்ற மக்களின் ஆசையை நிறைவேற்றுவதால் தான் ஆங்கில மருத்துவத்திற்கு வரவேற்பு இருப்பதாகவும், ஆனால் ஆங்கில மருத்துவம் தற்காலிகத் தீர்வை மட்டும்தான் தருகின்றது என்ற ஒரு சாராரின் கூற்றை ஏற்கிறீர்களா?

ஆங்கில மருத்துவம் தற்காலிகத் தீர்வைத்தான் தருகின்றது என்று கூறுபவர்கள், இம்முறையால் பயன் பெற்றவர்கள் அல்ல. ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சியை, அறிவியல் ரீதியான முறையில் ஏற்காத, மாற்று மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள் தான் இது போன்றதொரு கருத்தை உருவாக்குகிறார்கள். நாங்கள் மாற்று மருத்துவ சிகிச்சை  முறை குறித்து எந்தவித எதிரான கருத்தையும் கொண்டிருக் கவில்லை, அதனையும் ஏற்கிறோம். ஆனால் அவர்களின் மருத்துவத்தில், உலக ளாவிய பொதுமைத்தன்மையும், அறிவியல் ரீதியான முறையில் விளக்கப்படாமையி னாலும் தான் நாங்கள் அதனை முழுமை யான ஆதரிக்க மறுக்கிறோம். உதாரணத் திற்கு, காய்ச்ச ல், தலைவலி, வயிறு உபாதை கள் என எல்லாவற்றிற்கும் கஷாயம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை தான் நாங்கள் ஏற்க மறுக்கிறோம். மாற்று மருத்து வத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகளின் அளவு என்ன? அதனால் ஏற்படும் சாதக, பாதக அம்ச ங்கள் குறித்து முழுமையான விவரங்களை நாங்கள் கேட்கிறோம். இயற்கை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நோயாளிக்கு, இரத்த அழுத்தம் அதிகமானவுடன் ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செ ய் கிறார்கள்.  ஆங்கில மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து மருந்துகளும் பரிசோதனைக்குப் பிறகு பொது மக்களுக் காக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கில மருத்துவ முறையைத் தவிர ஏனைய மாற்று மருத்துவத்துறையினருக்கு முறையான பரிசோதனைக் கூடங்கள் கூட இல்லை.

ஆங்கில மருந்துகளை உட்கொண்டால் பின்விளைவுகள் நிச்சயமாக உண்டு என்கிற கருத்து மக்களிடையே பரவியிருக்கிறதே?

ஆங்கில மருந்துகளை உட்கொள் வதால் மட்டுமே பின்விளைவுகள் ஏற்படு கிறது என்று கருதுவது முற்றிலும் தவ றானது. நோயாளி மற்றும் நோயின் தன்மை யையும், மருத்துவரின் அனுபவத்தையும் பொருத்து இது மாறுபடும். முதலில் வருமுன் காப்போம் என்பதற்கும், அதற்கு பின் வந்திருக்கும் நோயை இனம் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சை யினை வழங்குவதும் தான் ஆங்கில மருத்துவம் கடைபிடிக்கும் மருத்துவ நடைமுறை. தொடக்கத்தில் இனம் கண்டறியப்படும் அனைத்து பிரச்ச னைகளுக்கும் தீர்வு காண்பது எளிது.

மேலை நாட்டு மருத்துவர்கள் ஆய்வுக் கூட முடிவின் அடிப்படையிலேயே மருத்து வத்தை வழங்குகின்றனர். ஆனால் இந்திய மற்றும் தெற்காசிய மருத்துவர்கள் நோயா ளியிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறி களைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டு, அதனடிப்படையில் மருத்துவத்தினை வழங்குகின்றனர். இதனால் இந்திய மருத்துவர்களுக்கு உலகம் முழுவதிலும் பெரிய வரவேற்பு உள்ளது. தெற்காசிய மருத்துவர்கள் கிளினிக்கல் டயாக்னைஸ் மூலமே தீர்வு காண்கிறார்கள். ஆனால் மேலைத்தேய மருத்துவர்கள் லாப் இன்வெஸ்டிகேஷன் மூலமே தீர்வு காண்கிறார்கள். நாம் முதலில் நோயாளியின்  இரத்த அழுத்தத்தைச் சோதனை செய்கிறோம். அதன் பிறகு கண் சோதனை, அதனையடுத்துத் தான் மற்ற சோதனைகளுக்குப் பரிந்துரை செ ய்கிறோம். ஆனால் மேலை நாட்டில் இதுபோன்ற  நடைமுறை இல்லை.

மருந்துகள் மூலமே குணப்படுத்தக்கூடிய நோய்களுக்கும் தற்போது அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்யப் படுகிறதே?

நமது கைகளில் ஆறாவதாக ஒரு விரல் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனை மருந் தால் கரைக்க இயலும் என்று சொல்பவன் முட்டாள். அந்நிலையில் அறுவைச்சிகிச்சைக்குப் பரிந்துரை செய்பவர் தான் புத்திசாலி மருத்துவர். அதேபோல் வளர்ந்து விட்ட கட்டியை மருந்தால் கரைக்கமுடியும் என்பது வீண்முயற்சி.  அதனைவிட மருந்துகளால் குணப்படுத்தும் மருத்துவ முறைக்கும், அறுவைச் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடிய மருத்துவ முறைக்கும் வித்தியாசம் உள்ளது. மருந்துகளால் குணப்படுத்தினால் இரண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்றும், அறுவை சிகிச்சை செய்தால் பத்து ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்றும் ஒரு நிலை உருவானால் நீங்கள் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள்? எனவே, மருந்துகளால் குணப் படுத்த முடியாதவற்றிற்குத்தான் நாங்கள் அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறோம்.

கோமா நிலையில் இருக்கும் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை  செய்யப் படமாட்டாது என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையிருக்கிறதா?

கோமாவிற்கு சென்றிருப்பதற்கான காரணங்கள் குறித்து முதலில் ஆராயப்பட வேண்டும். உதாரணமாக ஒரு நோயாளிக்கு இரத்தகுழாய் வெடித்ததால் கோமா நிலைக்கு செ ன்றிருக்கிறார் என்றால், அந்த நோயாளி, கோமா நிலையில் இருந்தாலும், அனஸ்தீசியா வழங்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை  செய்து தான் அவரை மீட்டெடுக்க முடியும். அதே தருணத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இருப்பவருக்கு, நீரிழிவுக்கான தீர்வு காணப் பட்ட பின்னரே கோமா குறித்து சிகிச்சையை மேற் கொள்ளமுடியும். அறுவைச் சிகிச்சை யின் போது நோயாளிக்குக் கொடுக்கப்படும் அனஸ்தீசியாவால் நோயாளி, கோமா நிலைக்குச் செல்ல மாட்டார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தங்களுடைய மருத்துவ அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நோயாளிகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

சமீபத்தில்,  பாதிரியர் ஒருவரும், அவர் தம் மனைவியும் எயிட்ஸால் பாதிக்கப் பட்டு, சிகிச்சை க்காக எம்மிடம் வந்தார்கள். பாதிரியாரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அவரின் மனைவியைக் காப்பாற்றி வருகிறோம். கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர் சிகிச்சை யில் நல்ல முன்னேற்றம் கிடைத்து வருகிறது.

அதே போல் பொலீஸ் உயரதிகாரி ஒருவரின் மனைவி, திடீரென்று கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். அவர் கோமாவிற்குச் சென்றதற்கான காரணத்தை ஆய்வு மூலம் கண்டறிந்து, தைராய்டு சுரப்பியில் சிகிச்சையளித்து மீட்டோம். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, நுரையீரல் பாதிப்புக்குள்ளான கொழும்புவைச் சார்ந்த நோயாளி ஒருவருக்கும் உரிய முறையில் சிகிச்சையளித்து மீட்டிருக்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது இயற்கை, அதனால் அவர்கள் எதிர் காலத்தில் சந்திக்கும் விளைவுகள் என்ன?

இத்தகைய மனஅழுத்தத்தின் காரணமாக பத்தாண்டு கழித்து வரக்கூடிய நீ ரிழிவு நோய் முன்னமேயே வரக்கூடும். பத்தாண்டு கழித்து வரக்கூடிய இரத்த அழுத்த நோயும் முன்னமேயே வரக்கூடும். போரினால் ஏற்பட்ட பானிக் டிஸ்ஆர்டர் நி னைவைவிட்டு அகல மறுக்கும். இதனால் உளரீதியாகப் பாதிப்படுவர். அவர்களின் ச ந்ததியினரும் பாதிக்கப்படலாம். போர்ப் பகுதியில் பயன்படுத்தபட்ட வேதியல் பொருட்களால் தோல் பகுதிகளில் இனம்கண்டறியமுடியாத மாற்றங்களும் ஏற்படக்கூடும்.

மேலதிக விபரங்களுக்கு,

தொலைபேசி எண் :

0091 44 2621 2218, 0091 44 2621 2844

மின்னஞ்சல் முகவரி:

khmhospital@gmail.com

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,983