Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
பக்கவிளைவுகளற்ற ஹோமியோபதி மருத்துவம்
medicalonline-appointmenticon
medcialonline-Homeopathy

டொக்டர் ஹனிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறைதான் ஹோமியோபதி மருத்துவம். அவர் ஒரு அலோபதி டொக்டர்.  அவர் ஹோமியோபதி முறையை கற்றபின், அலோபதி மருத்துவத்தை விட்டுவிட்டு, அவர் ஹோமியோபதி மருத்துவ முறையை மேற்கொண்டார். பின்னர் மொழி பெயர்ப்புத்துறையைத் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தார்.

அப்போது மலேரியா நோயை குணமாக்கும் தன்மை கொண்ட சின்கோனா பார்க் என்னும் மரப்பட்டை, எம்மாதிரியான நோய்களைக் குணப்படுத்துகிறது என்று கண்டறிய ஆர்வம் கொண்டார்.

அதற்கு தன்னையே சேதனைக்குட்படுத்திக் கொண்டார். அதில் மலேரியா நோய்க்குரிய அறிகுறிகள் அனைத்தும் தனக்கு ஏற்படுவதை உணர்ந்தார்.

இந்நிகழ்வே பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத ஹோமியோபதி முறையை அவர் கண்டுபிடிக்க ஏதுவாக அமைந்தது. லத்தீன் மொழியில் சிமிலியா, சிமிலிபஸ், கியூரேடர் (Similia, Similibus, Curator) என்று செல்வார்கள். அதனை ஆங்கிலத்தில் `Likes Cure Likes' என்று கூறுவார்கள். இந்நிலையில் கடந்த 16 ஆண்டுகளாக ஹோமியோபதி மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, சேவை புரிந்து வரும் டொக்டர். பீட்ரீஸ் மேரி அவர்களை சந்தித்தோம்.

ஹோமியோபதி பக்க விளைவு களற்ற மருத்துவம். ஆனால், அலோபதி போன்று ஹோமியோபதி பிரபலம் ஆகாகதற்கு காரணம் என்ன?

இது தவறான கருத்து. இதற்கு முன்னர் ஏழைகள் விரும்பும் மருத்துவம் என்று கூட ஓர் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் படித்தவர்கள், பணக் காரர்கள் தான் பக்க விளைவுகளற்ற மருத்துவத்தை விரும்புகிறார்கள். ஏழைகளுக்கு இது குறித்த விழிப் புணர்ச்சிகள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடைய வில்லை எனக்கூறலாம். ஏனெனில் பல ஆண்டுகளாக வியாதி என்றால் ஊசி, மாத்திரை எனப் பழகியவர்கள், பக்கவிளைவு களற்றது என கூறப்படும்.

இம்முறையை உடனடியாக ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவது உண்மைதான். என்றாலும் 15 வருடத்திற்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது பல இடங்களில், நூற்றுக் கணக்கில் ஹோமியோபதி மருத்து வமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் பயன்பாட்டை வெகுவாகப் புரிந்து, லண்டன் மாநகரில் ஒரு தனி மருத்துவமனையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்க நாட்டிலும் இம்முறை பரவத் தொடங்கியுள்ளது. வட இந்தியா, கேரளா மற்றும் பல ஆசிய நாடுகளிலும் இதற்கென பரவல் ஏற்பட்டு வருவது கண்கூடு. தமிழகத்தில் இதற்கென அரசுக் கல்லூரியும், தனியார் கல்லூரிகளும் உள்ளன. வட இந்தியாவில் இதன் பயன்பாடு மிக அதிகம். "பக்க விளைவுகளற்ற மருத்துவம் ஹோமியோபதி" என்று உறுதியாகச் செல்லாம். இது குறித்த விமர்சனங்கள் பற்றிய அறியாமை இருப்பதனால் தான் இம்மாதிரியான கேள்விகள் தவிர்க்க முடிவதில்லை.

வலி நிவாரணத்துக்காக (Steroid) ஸ்டீராய்டு கிடையாது. அதன் பின் அதற்குண்டான பக்க விளைவு குறைக்க, தனியான மாத்திரைகள் எதுவும் தேவை யில்லை. இருந்தாலும் தற்போது ஹோமியோபதி மருத்துவம் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது.  

ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சங்கள் பற்றிக் கூறுங்கள்?

இதில் அறுவை சிகிச்சை  கிடையாது. நோயாளிக்கு ஊசியும் கிடையாது. முழுக்க முழுக்க மாத்திரைகளாலேயே குணப் படுத்தப்படும். ஆனால் அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்படும், வியாதிகளான மூலம், பௌத்திரம், மூக்கில் சதை வளர்தல், தொண்டையில் சதை வளர்தல் போன்றவைகளுக்கு அறுவை சிகிச்சை யில்லாமலேயே வெற்றிகரமாக, குணப்படுத்தி வருகிறோம் என்பது கண்கூடு.

ஒரு குறிப்பிட்ட வியாதி அறுவை சிகிச்சை யினால் தான் சரியாகும், என்ற நிலையில் இருப்பவர்கள், ஆரம்ப நிலையிலேயே ஹோமியோபதி சிகிச்சை  மேற்கொண்டால் நல்ல பலனை அளிக்கும். அத்துடன் அறுவை சிகிச்சையும் தேவைப்படாது. அடுத்து, உடனடி நிவாரணம் ஹோமி யோபதியில் கிடையாது என்றுசெல்லப் பட்டது. அதுவும் தற்போது பொய்த்துப் போனது.

காய்ச்சல், சளி, தலைவலி ஆகியவை ஏற்பட்டால், அதற்கென உடனடி நிவாரணம், ஹோமியோபதியிலும் உண்டு. ஆனால் வெகு நாட்களாக சிரமப்படுத்தும் மூட்டு வலி போன்ற கடுமையான நோய் உள்ளவர்கள் உடனடி நிவாரணத்தை எந்த மருத்துவத்திலும் எதிர்பார்க்க முடியாது. அதற்குரிய அறிகுறியைக் கண்டறிந்து, தேய்மானத்தை சரிசெய்ய சிறிது நாட்கள் பிடிக்கும் என்பதே உண்மை.

ஊசி முறையை ஹோமியோபதி எக்காலத்திலும் பின்பற்றியதில்லை. அனைத்து மாத்திரைகளும் இனிப்பாகவே இருக்கும் காரணத்தினால் குழந்தைகள் கூட விரும்பி உண்பது தெரிந்ததே.

சர்க்கரை வியாதிக்காரர்கள் ஹோமியோபதி மருத்துவத்தில் கொடுக்கப்படும் இனிப்பான மாத்திரைகள் உட்கொள் ளலாமா?

நிச்சயமாக, இன்னும் செல்லப் போனால் அரிசி உணவின் மூலம் உட்கொள்ளப்படும் சர்க்கரையின் அளவை விட மிக மிகக் குறைந்த அளவிலேயே ஹோமியோபதி மாத்திரையின் சர்க்கரை அளவு உள்ளது. மிளகு அளவு, கடுகு அளவு உள்ள இம்மாத்திரைகள், பல்வேறு வடிவத்தில் இயந்திரங்கள் மூலம் தயார் செய்யப்படுகின்றன. பாலுடன் சர்க்கரை மற்றும் மாத்திரைக்கான மூலக் கூறுகள் பல்வேறு வடிவத்தில், மிகக்குறைந் தளவு ஆல்கஹாலுடன் (Alchohol) சரிவிகத்தில் கலக்கப்படுகின்றன. நோய்க்குத் தகுந்தாற் போல் மாத்திரைகள் வீரியம் குறைக்கப் பட்டும், கூட்ட ப்பட்டும் தயார் செய்யப்படு கின்றன. சில மாத்திரைகள், 30 முறையும், வேறு சில மாத்திரைகள் 1000 முறை வரையும் திரும்பத் திரும்ப வீர்ய மேற்படும் வகையில் தயாரிக்கப்படும். அதிக முறை தயார் செய்யப்பட்ட மாத்திரைகள் மிகவும் சக்தி வாய்ந்த நிலையை அடைகின்றன. பலப் படுத்தப்பட்ட இம்மாத்திரைக்கு முடிவு நாள் (Expiry date) கிடையாது.

வேறுபட்ட இடச் சூழலைக் கொண்ட மேலை நாட்டில் தயாரிக்கப் படும் மாத்திரைகள் ஆசியச் சூழலுக்கு ஏற்றதா?

நோய்க்கிருமியின் நிலையைத் தெரிந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு சக்தியைச் செலுத்த வேண்டுமென்பது தான் எல்லா மருத்துவத் துறைகளின் நோக்க மாகும்.  அதிலும் குறிப்பாக மேலைநாட்டு மருந்துகள் நமக்கு ஒவ்வாது எனவும், நம்நாட்டு மருந்துகள் அவர்களுக்கு ஒத்துப் போகாது எனவும் கூறிக்கொள்வது தவறு. தொடக்க காலத்தில் விற்கப்பட்ட மருந்துகள் அனைத்தும், வெளி நாட்டி லிருந்து தருவிக்கப் பட்டவையே. தற்போதைய நிலையில் ஆசியாவின் பல பகுதிகளில் இதற்கென மூலிகைகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதற்கு அதிகளவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இங்குள்ள நிறுவனங் கள் இணைந்து செயலாற்றுகின்றன. இதற்கு முன்னர் ஹோமியோபதி மருந்துகள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன.

தற்போது அந்நிலை வெகுவாகக் குறைந்து விட்டன. ஹோமியோபதி மருந்துகள் எளிய விலைக்கு விற்கப்படு வதற்கான காரணமும் இதுவே.

தற்போது இந்தியாவில் அரசு மட்டுமல்லாது தனியாரும், இதற்கென கல்லூரிகள் நடத்தி வருகின்றனர். இதில் B.H.M.S என்று செல்லப்படும் பட்டப் படிப்பு உண்டு. ஹோமியோபதி துறையில் பட்டமேற் படிப்புகளும் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பது இத்துறையை மேலும் சற்று உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. பல்வேறு ஆராய்ச்சி முறைகள் தில்லியில் உள்ள வல்லுநர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நடை முறைப் படுத்தப்பட்டு, மெய்ப்பிக்கப் பட்டு வருகின்றன.

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,160