Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
மூட்டுமாற்று அறுவைச்சிகிச்சை
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Orthopedic Surgery

மூட்டுவலி வயதானவர்களுக்குத்தான் வரும் என்பது, இன்றளவும் மக்களிடையே இருந்து வரும் நம்பிக்கை. ஆனால் இயந்திரத்தனமான வாழ்க்கை மாற்றத்தால் இளம் வயதினருக்கும் தற்போது மூட்டு வலி  ஏற்பட தொடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்பு தேய்மானம் என்பது நீரிழிவு, உடற்பருமன் என்பதைப்போல்  இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று.  எலும்பு தேய்மானம் என்றவுடனேயே சிலர் அறுவைச்சிகிச்சை  தான்  முடிவான தீர்வு என்று நினைக்கின்றனர். ஆனால் இந்த கருத்து தவறானது என்றும், பாதிப்பு மிகவும் முற்றி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என்கிறார் தமிழக நகரான திண்டுக்கல்லில் வெற்றிக்கரமாக செயல்பட்டு வரும்  ராஜ ராஜேஸ்வரி மருத்துவமனையின் நிறுவனரும், எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சையில் நிபுணருமான டொக்டர். க. விக்னேஷ்ராஜ். இவர் வழங்கிய சிறப்பு செவ்வி:

எலும்பு தேய்மானம் தொடர்பாக எம்மாதிரியான  சிகிச்சை கள்  உள்ளன?

எலும்பு தேய்மானம் தொடர்பாக வழங்கப்படும் சிகிச்சைக்களை `ஹாட் ஆர்த்தோபேடிக்' மற்றும் `ஹோல்டு ஆர்த்தோபேடிக்' என இரண்டு வகையாகப் பகுக்கலாம். இதில் `ஹாட் ஆர்த்தோபேடிக்'  என்பது,  விபத்தின் மூலம் எலும்பில் ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்கும் சிகிச்சையை குறிக்கிறது. `ஹோல்டு ஆர்த்தோபேடிக்'  என்பது, இயல்பாக மனிதனின் செயல்களால், எலும்புகளில் ஏற்படும்  தேய்மானத்தை சீரமைக்கும் சிகிச்சை யைக் குறிக்கிறது.   ஒரு சிலருக்கு எலும்பு தேய்மானத்தால் நடமாடுவது கூட கடினமான செ யலாகிவிடும்.  இதற்கு நி வாரணம் தருவதற்காக தற்போது  பல்வேறு வலி நீ க்கிகள், பிஸியோ தெரபி, மூட்டுகளில் போடப்படும் ஊசிகள்  என்பன  அறிமுகமாகியுள்ளது. இவற்றினால் சீரமைக்க முடியாமல், மிக மோச மான நிலை ஏற்பட்டாலும் கூட,  அதனையும்குணப்படுத்த  முட்டுமாற்று அறுவைச் சிகிச்சை  என்ற நவீன சிகிச்சை  முறையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

மூட்டு தேய்மானம் என்றால் என்ன?

நமது உடலில் எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு எனப்படும். மேலும் நமது உடலில் உள்ள  எலும்புகள் இயங்கும்போது அவை நேரடியாக உரசிக் கொள்ளாத அளவுக்கு அவற்றினிடையே `கார்டிலேஜ்' என்ற சவ்வு உள்ளது. இந்த சவ்வு பகுதியில் சைனோவியல் ஃபுளுயிட் என்ற திரவம் சுரக்கிறது.  இது எலும்புகளின் இயக்கத்தின்போது ஏற்படும் மூட்டுக்களின் தேய்மானத்தைக் குறைக்க உதவுகிறது. முதுமையின்  காரணமாக சவ்வு தேய்ந்து போய், எலும்புகள் நேரடியாக உரசிக்கொள்ளும் நிலை உருவாகுவதைத் தான்  மூட்டு தேய்மானம் என்று குறிப்பிடுகிறோம். இதனால், எலும்புகள் ஒன்றோடொன்று நேரடியாக உரசி தாங்க முடியாத அளவிற்கு வலி தோன்றுகிறது.

மூட்டு தேய்மானம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, எந்த நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  அவசியம் என்று வலியுறுத்துவீர்கள்?

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட இரு பாலர்களும் நடக்கும்போது மூட்டுகளில் வலி ஏற்பட ஆரம்பிக்கும். ஆரம்ப கட்டத்தில் இரண்டு அல்லது மூன்று கிலோ மீற்றர் தூரமே இவர்களால் எளிமையாக நடக்க முடியும். இது மூட்டுத் தேய்மானத்தின் தொடக்கநி லையாகும். இந்த நி லை நாளுக்கு நாள் அதிகரித்து, அன்றாடவேலைகளைக்கூட செ ய்ய முடியாத அளவிற்கு வலி எப்பொழுது ஏற்படுகிறதோ அதனையே முற்றிய நிலை என்பர். மேலும் மூட்டுத் தேய்மானத்தை படிநிலை 1, படிநி லை 2, படிநி லை 3, படிநிலை 4 என்று நான்கு நி லைகளாக குறிப்பிடுகிறோம். மிக முற்றிய நி லையைச் சரிசெய்ய மட்டுமே மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை யினை பரிந்துரை செ ய்கிறோம்.

மூட்டு தேய்மானம் என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது?

முழங்காலில் உள்ள மூட்டு இரண்டு பக்க எலும்புகளுக்கிடையே பந்துபோல் உருண்டு கொண்டு இருக்கிறது.  வழவழப்பான குருத்தெலும்புகளின் உதவியுடன்,  மூட்டு இயங்குவதால் தான், காலை நீட்டி மடக்க முடிகிறது.  பல்வேறு காரணங்களால் குருத்தெலும்பு சேதம் அடையும் போது, மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.  இதனால், மூட்டு வலி உருவாகிறது. அதன்பின் தொடர்ச்சியாக எலும்பில் நகர முடியாத அளவிற்கு இறுக்கம் ஏற்பட்டு கை, கால்களை நீ ட்டி மடக்கக்கூட சிரமமான நிலை ஏற்படுகிறது.  இது வீக்கத்தில் ஆரம்பித்து மூட்டு பிரச்ச னையாக அதிகரிக்கிறது.

மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் கால்சியப் பற்றாக்குறையால் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டினைத் தீர்க்க கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான காய்கறிகள், பால், அளவான அசைவ உணவு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு எலும்புகளைப் பராமரித்து வந்த ஹார்மோன் சுரப்பி தன் பணியை சீராக செய்யாததால்ஏற்படும்  இது போன்ற பாதிப்பைத் தவிர்க்க `ஹார்மோன் -ரீ- இம்பிளேஸ்மெண்ட் தெரபி' என்ற சிகிச்சை  வழங்கப்படுகிறது. இம்முறையை அவரவர் உடல் நி லைக்கு ஏற்றவாறு  மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கு, ஊட்டச்சத்துக் குறைவினால் வரும் குறைபாடுகளைவிட,  அதிகமாக உண்பதால் வரும் பிரச்சனைகளே அதிகம். சரிவிகித உணவு மூலமும், தக்க உடற்பயிற்சிகள் மூலமும் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் எலும்புத் தேய்மானத்தை குறைக்க முடியும்.

 `அதிக எடை'யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை  செய்து கொள்வதால் எந்த  பிரச்ச னையும் ஏற்படாது என்றாலும், எடையைக் குறைப்பதே நல்லது என்று ஆலோசனை வழங்குகிறோம்.

மூட்டுமாற்று அறுவை சிகிச்சையைப் பற்றிக் கூறுங்கள்?

எலும்பு தேய்மானம் அடைந்த மூட்டுகளுக்கிடையேயான சவ்வுக்குப் பதிலாக பாலி எதிலினினாலான  செயற்கை சவ்வு பொருத்தப்படுகிறது. தேய்மானத்திற்கு ஏற்ப இந்தச் சவ்வின் அளவு  இருக்கும். இடுப்பு, கால்  ஆகிய மூட்டுகளுக்கும், அரிதாக தோள் எலும்புக்கும் இத்தகைய மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை  செ ய்யப்படுகிறது.

டொக்டர் க விக்னேஷ்ராஜ்யில் தேய்மானம் அடைந்த எலும்புகளின் முன்பகுதி மாற்றப்படுகிறது.

தேய்ந்த மூட்டுக்களுக்கு பதிலாக செயற்கையான மூட்டுகளை பொருத்துவதே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை . மேலை நாடுகள் தரும் உத்தரவாதத்திற்கு (20 ஆண்டுகள்) புள்ளி விவரங்களுடன் கூடிய சன்று உள்ளதால் செயற்கை எலும்புகள் மேலை நாடுகளில் இருந்து பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுகின்றன. மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை  செய்வதில் இரண்டு வகைகள் உண்டு. காலை அதிகம் மடக்கி செயல்படுத்த உதவும் (தொழுகை செய்ய அல்லது சமணங்கால் இட) அதிக நெகிழ்வுடைய செயற்கை மூட்டுகளுக்கு ஒரு வகையாகவும், சாதாரண மூட்டுகளுக்கு மற்றொரு வகையாகவும் அறுவை சிகிச்சை  செய்யப்படுகிறது.

மூட்டுமாற்று அறுவைச்சிகிச்சை  செய்து கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? அதிலுள்ள இடர்பாடுகள் என்ன?

இதயக்கோளாறு, டையாபடிஸ் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இருப்பினும்  இரண்டு கால் மூட்டுகளையும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை  செய்யும் பொழுது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு உடல் வலிமையும், மனவலிமையும் இருக்க வேண்டும். என்று ஆலோசனையை முன்வைக்கிறோம். பெரும்பாலும் இரண்டு கால் மூட்டுகளையும்  ஒரே தருணத்தில் அறுவை சிகிச்சை  செய்வதில்லை.

பொதுவாக ஒரு மூட்டினை மாற்றி, மற்றொரு செயற்கையான மூட்டினை பொருத்தும் அறுவை சிகிச்சை  செய்ய நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களுக்கு இரண்டு மணி நேரம் போதுமானது. மேலும்  இவ்வகை சிகிச்சையை மேற்கொண்டவர்  ஐந்திலிருந்து ஏழு நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பது மிக நல்லது. பின்னர் வீடு திரும்பும் போது நடந்தே செல்லலாம். ஆனால் எந்தவித சிரமமுமின்றிச் செயல்பட பத்திலிருந்து பன்னிரெண்டு நாட்கள் வரை ஆகும்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் `எக்ஸ் றேக்களே' பெரிதும் பயன்படுகின்றன. பாதிப்பினைக் கண்டறியவும்,  எவ்விதத்தில் சிகிச்சை  அளிப்பது என்பதைத் தீர்மானிக்கவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவில் `சி.டி-ஸ்கேனும்' எலும்பில் ஏற்பட்டுள்ள பிற கோளாறுகளைக் கண்டறியப் பயன்படுத்துக்கின்றோம். காலின் முழு அளவிலான எக்ஸ் றே படத்தை காட்டி வெளிநாடுகளிலிருந்து அறுவை சிகிச்சை  தொடர்பான ஆலோச னைகளையும் பெறலாம்.

இயந்திரத்தனமான இன்றைய சூழலில் தவறான பழக்கவழக்கங்களின் காரணமாக மூட்டுக்களில் வலி ஏற்படுகிறது. இந்த மூட்டுவலிக்கு  மூல காரணம் எலும்புத் தேய்மானமே என்று உணரும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. இனி வரும் காலங்களில் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து மேம்பட்டு வரும் நவீன தொழில் நுட்ப வச திகளாலும், அதிகரித்து வரும் பாதிப்புகளாலும் இனி வரும் காலங்களில், மூட்டு மாற்றுஅறுவைச் சிகிச்சைகள் மேலும் எளிமையாக்கப்பட்டுவிடும்,  எனவே இது தொடர்பாக மக்களிடையே நி லவி வரும் நம்பிக்கை மாற்றமடையும் என்று எண்ணுகிறேன்.

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,970