Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
நீரிழிவு நோயாளிகளுக்கும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Orthopedic Surgery

மூட்டு மாற்று சத்திர சிகிச்சை நிபுணர்

தென்னிந்திய நடிகரான விஷால், சமீ பத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது.

சந்திரமுகி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பி.வாசுவிற்கு எல்.ஒன், எல்.டூ... என்ற டிஸ்க் வலுவிழந்ததால் விரைவாக செயற்பட முடியாமல் தவித்தார்.

சன்.ரி.வியின் முதன்மைச் செயல் இயக்குநருக்கு சி.ஒன், சி.டூ என்ற டிஸ்க்கில் சிக்கல். அவரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேற்கண்ட மூவருக்கும் தன்னுடைய நிபுணத்துவத்தால் சிகிச்சையளித்து, அவர்களின் இயல்பான செயற்பாட்டிற்கு கொண்டு வந்தவர், சென்னையில் இயங்கி வரும் ஹீலீயாஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், எலும்பு மாற்று சத்திரசிகிச்சை  நிபுணருமான டொக்டர் நந்தகுமார். இவரிடம் என்பு மருத்துவம் குறித்து எம் வாசகர்கள் கேட்ட சந்தே கத்திற்கு பதிலளிக்குமாறு வினவினோம்.

விபத்து நடந்த முதல் ஒரு மணித்தியாலத்தை `கோல்டன் ஹவர்' என்று மருத் துவர்கள் குறிப்பிடுவதன் காரணம் என்ன?

விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இரத்தம் அதிகளவில் வெளியாகும். இரத்தம் வெளியானால் சிறுநீ ரகம், இதயம் போன்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு செயலிழக்கக் கூடும். அத்துடன் விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தம் குறை வாக இருந்தால், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செ ன்று இரத்தத்தையோ அல்லது அதற்கு மாற்றான திரவத்தையோ உடலுக்குள் செலுத்தினால், அவர்களைக் காப்பாற்ற இயலும்.  எனவே இதனைப் போதிய காலத்திற்குள் அதாவது விபத்து நடந்த முதல் மணி நேரத்திற்குள் அவர்களுக்கு, சிகிச்சையளிக்கப்பட்டால், அவர்களைக் காப்பாற்றிவிடலாம். இதனால்தான் விபத்து நடந்த முதல் மணி நேரத்தை கோல்டன் ஹவர் என்கிறோம்.

மூட்டு வலிக்கும், உடற்பருமனுக் கும் எத்தகைய தொடர்பு இருக்கிறது?

உங்களுடைய உடலின் முதுகுப் பகுதி யில் முப்பது கிலோகிராம் எடையுள்ள ஒரு பையைக் கட்டித் தொங்கவிடுகிறேன். அத னைச் சுமந்துகொண்டே நீ ங்கள் உங்களுடைய அனைத்துக் காரியங்களையும் செய்கிறீர்கள் என்றால், முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, தோற்பட்டை வலி என சகல பகுதிகளிலும் வலி ஏற்படும். ஒரு வாரம் சென்ற பின் முதுகில் பொருத்தப்பட்ட முப்பது கிலோ எடையை அகற்றிவிட்டால்... நீங்கள் திருப்தியான மாற்றத்தை உணர்வீர்கள். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். உங்களுடைய உயரத்திற்கேற்ற எடையை விட கூடுதலான எடையை சுமந்துகொண்டே யிருக்கிறீர்கள். இதனால் உங்களின் எடையைத் தாங்கிக்கொண்டிருக்கும் கால் மூட்டு, கணுக்கால் மூட்டு தேய்வடையத் தொடங் குகிறது. அதே தருணத்தில் தொடர்ந்து உடற் பயிற்சி செய்தால், உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன், தசை கள் வலிமையடைந்து, மூட்டுகள் தேய்மானம் தடுக்கப்படுகின்றது. அதனால்தான் உடல் எடை அதிகமாக இருப் பவர்களும், உடற்பருமனாக உள்ளவர்களும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறோம்.

அதேபோல் முதுகு வலிக்கு வயிற்றுப் பகுதி மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசை களை உறுதியாக வைத்திருக்கவேண் டும். இந்தப் பகுதியில் தசை களை வலுவுடன் வைத்திருக்காவிட்டால், தொப்பை உருவா கும். இதுதான் முதுகு வலிக்கு மூலகாரணம்.

எலும்புகளுக்கு இடையேயுள்ள சவ்வுகள் வலுவிழந்துபோகும்போதுதான், எலும்புகள் ஒன்றோடொன்று உராய்கின்றன. இப் படி உராய்வதால் வலி ஏற்படுவதைத்தான் ஆர்த்தரைட்டீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

உடற்பருமன் இல்லாமல், பார்ப்பதற்கு கச்சிதமாக இருப்பவர்களில் மிகச்சிலருக்கு  எலும்புகளுக்கிடையேயிருக்கும் சவ்வு வலுவில்லாமல் இருக்கும். இத்தகையோருக்கும் முதுமைக்கு முன்னரே  மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என எல்லா எலும்பு இணைப்புகளிலும் வலி உருவாகும். பரம்பரை காரணமாக ஏற்படும் இத்தகைய சிக் கல்களுக்கு, தற்போதைய மருத்துவத்துறை மாத்திரைகளையும், ஒரு சிறிய அளவிலான சத்திரசிகிச்சை யையும் அறிமுகப்படுத்தியி ருக்கிறது. இதனை மேற்கொண்டால் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம். மேலும் இவர் கள் தொடக்க காலத்திலிருந்தே எடையை அதிகமாகத் தூக்கக்கூடாது. உடற்பயிற்சியை தொடர்ந்து செ ய்து வரவேண்டும்.

மூட்டு வலியை தொடக்க காலத்தில் அலட்சியப்படுத்தியவர்களுக்கும், சிகிச்சையை உரிய காலத்தில் மேற்கொள்ளாத வர்களுக்கும்தான் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையைச் செய்யப் பரிந்துரைக்கிறோம்.

மூட்டு மாற்று சத்திரசிகிச்சை , இடுப்பு மாற்று சத்திரசிகிச்சை, தோற்பட்டை மாற்று சத்திரசிகிச்சை  ஆகிய வற்றின் ஆயுள் தன்மை எவ்வளவு?

பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய அறுவை சிகிச்சை  செ ய்துகொள்பவர்களுக்கு நாங்கள் இருபதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளித்தோம். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட் டுள்ள ஆக்சீனியம் என்ற உலோகத்தாலான பொருளை, சத்திரசிகிச்சையின்போது நோயாளிக்குப் பொருத்துவதால், அவர்கள் விரைவில் குணமடைவதுடன், அதன் ஆயு ளும் அதிகரிக்கிறது. அதாவது முப்பது ஆண் டுகளுக்கும் மேலாக உழைக்கக்கூடியவை என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம். மூட் டுகளுக்கிடையே பொருத்தப்படும் பிளாஸ் டிக்காலான சவ்வுகளின் ஆயுள், நோயாளி யின் உடல் இயக்கம் மற்றும், பயன்பாட்டைப் பொருத்து இது அமைகிறது. இளம் வயதிலேயே மூட்டு மாற்று சத்திரசிகிச் சையைச் செ ய்துகொள்பவர்களுக்கு  `ஓபரே ஷன் வித் அவுட் சிமெண்ட்' என்ற நவீன முறையிலான சத்திர சிகிச்சையை செ ய்து, அதிகபட்ச பலனை வழங்கிவருகிறோம்.

மூட்டு மாற்று சத்திர சிகிச்சை யை எந்த நிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செ ய்வீர்கள்?

மூட்டுவலியை,  தொடக்க காலகட்டத்திலேயே கண்டறிந்து, மருந்துகளால் தீர்வுகாண இய லாதபோது, ஆர்த்தரைஸ் கோப்பிக் எனப்படும் சாவித் துவார நுண் ணறுவை சிகிச்சை  மூலம் சத்திர சிகிச்சை  செ ய்து, இயல்பாக இருக்கின்ற மூட்டினை மேலும் தொடர்ந்து சிறப்பாக செ யற்படவைக்கி றோம். இந்த நிலையில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை யால் மூட்டுகளுக்கிடையே உள்ள சவ்வானது, இயல்பான செ யற்பாட் டிற்கேற்றவாறு வளச்சியடைகிறது. ஆனால் இந்தச் சவ்வு முழுமையான தேய்மானம டைந்து, அதிகபட்ச வலியுடன் வருபவர்க ளுக்குத்தான் மூட்டுமாற்று சத்திர சிகிச்சை  யைப் பரிந்துரைக்கிறோம்.

நீ ரிழிவு நோயாளியாக இருப்பவர் கள், மூட்டு மாற்று சத்திர சிகிச்சை  செய்து கொள்ளலாமா?

நீ ரிழிவு நோயாளிகளுக்கு அவ்வித சத்திரசிகிச்சை யால் பின்விளைவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகமிருந்தாலும், இதனைச் செ ய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். ஏனெனில் நீ ரிழிவு என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல. அதற்காக மூட்டு மாற்று சத் திரசிகிச்சையையே செய்யக்கூடாது என் பதை மருத்துவத்துறை ஏற்கவில்லை. இத்த கையோருக்கு, முதலில் நாங்கள் நீ ரிழிவை கட்டுக்குள் கொண்டுவந்த பின்பே சத்திர சிகிச்சை யை மேற்கொள்கிறோம். மேலும் இந்த சத்திரசிகிச்சை யை மேற்கொள்ள அதிக நேரம் தேவையில்லை என்பதால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவருவ தும் எளிது. எனவே, நீ ரிழிவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கூடு தல் கவனம் என்ற ஒரேயொரு நிபந்தனையுடன் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை செய்துகொள் ளலாம். அத்துடன் மருத்துவர் எப்போது பரிந்துரைக்கிறாரோ அப்போதுதான் செய்துகொள்ள வேண்டும். அதனைப் புறக் கணிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ கூடாது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவத் தின்போது இடுப்பு எலும்பு விரிவடைவதால் அவர்கள், முது மையடையும் முன்னரே இடுப்பு எலும்பு பழுதடையத் தொடங்குகி றது. இந்நிலையில் அவர்களுக்கு எத்த கைய தருணத்தில் இடுப்பு எலும்பிற் கான மாற்று தேவைப்படுகிறது?

பெண்களின் மாத விடாய் நின்ற காலத் திலிருந்து, ஈஸ்ட் ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சமச் சீரற்ற தன்மை யினால், எலும் பில் உள்ள கால் சியத்தின் அளவு வேக மாகக் குறை யத் தொடங் குகிறது. இத னால் இடுப்பு எலும்பு பலவீனமடைகிறது. அதனால்தான் பெண்கள், மெனோபாஸ் நின் றவுடன், மருத்துவரை ஆலோசித்து, உடற் பயிற்சி செ ய்வதுடன், கால்சியம் சத்துள்ள மாத்திரைகளையும் சாப்பிடவேண்டும் என்று ஆலோசனை சொல்லி வருகிறோம்.

`லிம்ப் லென்த்னிங்' என்ற சிகிச்சையின் மூலம் எலும்புகளை வளரச் செ ய்ய முடியும் என்கிறார்களே. அது எப்படி?

பலர் எலும்பு முறிந்துவிட்டால் அது மீண் டும் வளராது என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உண்மையல்ல. உடலியக்கத்தைப் பொருத்தவரை எலும்பு என்பதும் உயிருடன் இயங்கக்கூடி யதுதான். அதற்கும் வளர்ச்சி உண்டு. தவறாக எலும்புகளை இணைத்துவிட்டாலோ அல் லது குறையுடன் பொருத்திவிட்டாலோ, எலும்புகள் தன்னை வளர்த்துக்கொண்டு இணைந்துவிடும் தன்மையது. இந்த நிலை இருபத்தியொரு வயது வரை கூட நீ டிக்கும். ஒரு எலும்பிற்கும் மற்றொரு எலும்பிற்கும் இடையே உள்ள உயரக்குறைபாடு ஐந்து அல்லது பத்து செ .மீ குறைவாக இருக்குமாயின், அதனை இந்த லிம்ப் லென்த்னிங் முறையில் சிகிச்சையளித்து தீர்வு காணலாம். இம்முறையில் தினசரி ஒரு மி.மீற்றர் வரை எலும்புகளை இழுக்க இயலும். இதனையும் நாங்கள் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.

விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட் டால் ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் மாற்று மருத்துவமான கட்டு மருத்து வத்தை நாடுவது ஆரோக்கியமானது தானா? இதன் பின்விளைவுகள் எவை?

மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண் போர், பின்விளைவுகள் குறித்து கவலைப் படுவதில்லை. இது தவறு. ஏனெனில் இம்மருத்துவத்தின் தத்துவம் பொதுமையற்றது. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை வழங்குவதால் நம்பகத்தன்மை குறைகிறது. அத்துடன் இவர்கள் போடும் இறுக்கமான கட்டால் அப்பகுதியில் இரத்த ஓட்டம் சீராகச் செ ல்வதில்லை. எலும்புகள் மிகத்துல்லியமாகத்தான் இணைக்கப்படுகிறது என்பதற்கு எந்தவித உறுதியும் வழங்கப் படுவதில்லை. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் எக்ஸ் றே சோதனை செய்து, எலும்புகளின் பாதிப்புகளை கண்டறிந்தபின்னரே சிகிச்சை யளிக்கப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் அதிகமாகப் பயணம் செய்பவர்களுக்கு இடுப்பு வலி, தோற்பட்டை வலி, கழுத்து வலி ஆகி யவை ஏற்படும் என்பது உண்மையா?

இது மருத்துவ ரீதியாக இதுவரை நிரூபிக் கப்படவில்லை. ஆனால் இரு சக்கர வாகனத் தில் சென்றாலும் அல்லது நான்கு சக்கர வாக னத்தில் செ ன்றாலும் தினசரி உடற்பயிற்சி செ ய்து, தசைகளை இறுக்கமாக வைத்திருப்பவர்களுக்கு எந்த வலியும் ஏற்படுவ தில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு உடலுழைப்பு குறைவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அதனால்தான் வலி ஏற்படுகிறது. வாகனத்தை ஓட்டுவதால் அல்ல.

தங்கள் அனுபவத்தில் மறக்க இயலாத ஒன்றை பகிர்ந்துகொள்ளுங்களேன்?

பத்தாண்டுகளுக்கு முன், ஒருமுறை இடுப்பிற்கு கீழ் எலும்பு வளர்ச்சியேயில்லாத ஒரு பெண்ணை அவரது கணவர் தோளில் சுமந்தபடி அழைத்து வந்தார். (இவர்களை மருத்துவ ஆலோசனை பெறுமாறு ஏற்கனவே சொல்லியிருந்தோம்) அந்தப் பெண் ணைப் பரிசோதித்தபோது, அவரின் இடுப்பு எலும்பு செயற்படாததைக் கண்டறிந்தோம். சிலரின் உதவியோடு அவர்களுக்கு இலவசமாக இடுப்பு எலும்பு மூட்டு மாற்று சத்திர சிகிச்சையைச் செய்து, நடக்கவைத்தோம். பிறந்ததிலிருந்து நடக்க இயலாமற்போன அந்தப் பெண், முதன்முதலாக நடக்கத் தொடங்கியவுடன், அவர் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவேயில்லை. இன்று அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து, ஆரோக்கியத் துடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட திகதியில் எங்களைச் சந்தித்து ஆசி பெற்று வருவதை எண்ணித் திருப்தியடைகிறோம்.

அதேபோல் என் நண்பர் ஒருவரின் மகளுக்கு திருமணம் செய்யத் திகதி குறிக்கப் பட்டது. திருமணத்திற்குப் பத்து நாட்களுக்கு முன், தம்முடைய நண்பர்களுக்கு அழைப் பிதழ் வைத்துவிட்டுத் திரும்பும்போது  மண மகனும், மணமகளும் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கிவிட்டார்கள். பெண்ணைப் பெற்ற தந்தையோ, திருமணம் நின்றுவிடக் கூடாது என கெஞ்சத் தொடங்கி விட்டார். அந்தப் பெண்ணைப் பரிசோதித்து, எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் நவீன முறையி லான சிகிச்சை யைச் செ ய்து, பத்தே நாளில் நடக்கவைத்து, குறிப்பிட்ட திகதியன்று திரு மணத்தையும் நடத்த உதவி செ ய்தோம். இதுபோல் பல விடயங்கள்...

இவை மற்றவர் பார்வையில் சாதனை யாகத் தெரிகிறது. எங்களைப் பொறுத்த வரை இது எங்கள் கடமை. எம் தொழிலைக் கடமையாகக் கருதி, விருப்பத்துடன் செ ய்து வருகிறோம் என்று தான் சொல்வேன்.

மேலதிக விபரங்களுக்கு

கைப்பேசி எண்: 00 91 98410 52275

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,140