Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இதய இரத்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சிகிச்சை
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

இதய நோய் சிகிச்சை நிபுணர்

மாரடைப்பு - வயதானோர் மட்டுமன்றி, இன்றைய இளம் தலைமுறையினரும் சந்தித்து வரும் உடலியல் சிக்கல். தெற்காசியாவில் ஆண்டுதோறும் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 75 சதவீதம் உயர்ந்துகொண்டே வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதயநோயின் ஒரு விளைவான மாரடைப்பு குறித்தும், அதற்கெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நவீன சிகிச்சை  குறித்தும் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய தமிழக நகரங்களில் செயற்பட்டு வரும் `நியோமெட்' மருத்துவக் குழுமத்தின் இயக்குநரும், இதய நோய்க்கான சத்திர சிகிச்சை  நிபுணருமான டொக்டர் எல்.சிவபாலனை சந்தித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை நடைமுறைகளை நாம் அடியோடு மாற்றிக்கொண்டுவிட்டோம். நாம் அதிக நேரத்தைச் செ லவிடும் இடமான வீட்டிலிருந்து, பணியாற்றும் அலுவலகம் வரை அனைத்தையும் இயந்திரமயமாய் மாற்றிய மைத்துக்கொண்டு, உடலுழைப்பைக் குறைத்துக்கொண்டுவிட்டோம். இதன் பின் விளைவுதான் மாரடைப்பு என்று சொல்ல லாம்.

அதாவது, ஒவ்வொருவராலும் தங்க ளின் உயரத்திற்கேற்ற உடல் எடையை அறிந்து, அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை. குடும்ப மருத்துவர்களோ அல்லது மருத்துவ நிபுணர்களோ பரிந் துரைத்தாலும் அதற்குப் போதியளவு முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பொதுவாக,  ஒருவரது எடையானது, அவரது உயரத்திற் குத் தேவையானதைவிட, இருபது சதவீதம் அதிகரித்தாலே மாரடைப்பு தோன்றுவதற் கான சாத்தியக்கூறு அதிகரித்து விட்டது என்று பொருள். இவற்றுடன் நீ ரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியனவும் கூடுத லான உடல் எடையால் வந்துவிடும்.

இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் என்னும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, கொரனேரி இரத்த நாளங்களில், இந்த கொழுப்புச் சத்துக்கள் படிந்து, (Atheroscierosis) சிறிது சிறிதாக அடைப்பை ஏற்படுத்தும். இவையே எந்த வித முன்னறிவிப்புமின்றி இதயத்தைத் தாக்கி, நெஞ்சு வலி (Angina)  மற்றும் மாரடைப்பு (Heart Attack)  ஆகியவற்றை ஏற் படுத்துகின்றன.

கொரனேரி இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அங்கு நோய்கள் உரு வாகி நெடுநாளாகியிருந்தால் மட்டுமே திடீரென்று மாரடைப்பு தாக்கக்கூடும். `ஆஞ் ஜைனா' என்றழைக்கப்படும் நெஞ்சு வலி ஏற்படுவதுதான் இதற்கான அறிகுறியாகும். இத்தகையோருக்கு நெஞ்சு வலி, மார்பின் நடுப்பகுதியில் உருவாகி, கழுத்து, தாடை, இரு கைகள், முழங்கை அல்லது மணிக் கட்டு வரை செ ல்லும். இதயம் அதிகம் இரத் தம் கேட்டு எழுப்பும் அபயக்குரலே அந்த வலி.

உடல் அளவுக்கதிகமான வகையில் உழைப்பில் (Physical exertion) ஈடுபடும் போதும், உள்ளம் அதிகளவில் உணர்ச்சி வயப்படும் (Emotional upset) போதும், வயிறு நிறைய உண்ட பின்பும் இவ்வலி தாக்கக்கூடும். அத்தகைய தருணத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டாலோ அல்லது அதற்குரிய மாத்திரையை நாவிற்கு அடியில் வைத்து சப்பிக்கொண்டிருந்தாலோ வலி அகலும்.

ஆஞ்ஜைனா வலி மாரடைப்பல்ல. இதயத்திற்கான தசை, தனக்குத் தேவையான பிராண வாயுவைப் பெற முடியாதபோது, தனக்குப் பழுது ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற நிலையில் தன்னிச்சையாக மேற் கொள்ளும் முயற்சியே இந்த நிலை. எனவே, இந்த வலியால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வேறு சிலருக்கு ஆஞ்ஜைனா வலி ஏற் பட்டு, ஓய்வு எடுப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்போது, உறக்கத்தில் வலி ஏற்பட்டால், அதுவே ஆபத்தான நிலை என் பதை உணர்ந்துகொள்ளவும்.

`ஆஞ்ஜைனா' போன்ற வலி ஏற்பட்டாலோ அல்லது வலி போன்ற உணர்வு மார் புப் பகுதியில் ஏற்பட்டு பதினைந்து நிமிடங் களுக்கு மேல் நீ டித்தாலோ மாரடைப்பு (Coronary Attack, Myocardial infraction) ஏற்பட்டுள்ளதாகக் கருத வேண்டும்.

அதாவது, இதயத் தசையில் செயற்படும் ஒரு பகுதி, போதிய பிராண வாயுவைப் பெற இயலாமல் சிதைந்துவிட்டது என்பதே இதன் பொருள். இது, கொரனேரி இரத்த நாளங்களின் வழியாக இதயத்திற்குச் செல்ல வேண்டிய போதிய இரத்தம்,  இரத்த நாளங்களில்  படிந்திருக்கும் கொழுப்புக ளால், உரிய வேகத்தில் இதயத்தில் பாய இயலாததாலும், இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செ ல்லும் இரத்த நாளங்களில் இரத் தம் உறைந்து, கட்டியாகிவிடுவதாலும் மார டைப்பு ஏற்படுகிறது.

அத்துடன், இரத்த நாளங்களில் கொழுப் புப் படிவதால், இரத்த நாளம் தடித்து விடு கிறது. எனவே, இதன் வழியாகச் செ ல்லும் இரத்த ஓட்டத்தின் வேகமும் இயல்பாகவே குறைந்துவிடுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இதயத்தின் இயக்கத்தில் மாற்றம் (Rhythm Disturbance), இரத்த ஓட்டத்தில் தொய்வு (Sluggish blood flow), புகை பிடித்தல், மன உளைச்சல், கருத்தடை மாத் திரைகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றால் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டி ஏற்படுகி றது.

இதய இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீ க்குவதற்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரிதான் இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு, மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிக செலவு பிடிக்கும் இந்த மருத்துவ சிகிச்சை யை எல்லாத் தரப்பினரும் பெற முடிவதில்லை.

அதே தருணத்தில் இத்தகைய சிகிச்சை கள், நோயாளிக்கு ஒருசில தொல்லைக ளையும் வழங்கி வந்தன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கிலேஷன் சிகிச்சை, ஓஸோன் சிகிச்சை , இ.இ. சி.பி சிகிச்சை  எனப் பல சிகிச்சைகள் அறி முகப்படுத்தப்பட்டு நடைமுறையில் செ ய் யப்பட்டு வருகின்றன.

இதில் கிலேஷன் சிகிச்சை  என்பது,  இரத் தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீ க்கு வதற்காக சத்திர சிகிச்சை  இல்லாமல் நீக்கும் முறை.

அதாவது, இம்முறையில் EDTA என்னும் மருந்தை நரம்பின் வழியாக உடலுக்குள் செலுத்தி, அடைப்பை நீ க்கலாம். அதி றோஸ்சியறோசிஸ் (Atheroscierosis)  என்ற நிலையில் இருக்கும் நோயாளிக்கு இந்த சிகிச்சை  ஏற்றது. ஒரு சில நோயாளிக ளுக்கு இந்த கிலேஷன் சிகிச்சையால் முழுமையான பலன் கிடைக்காதபோது இதற்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை  தான் ஓஸோன் சிகிச்சை .

ஓஸோன் எனப்படுவது, காற்றில் இருக் கும் ஒரு இயற்கையான வாயு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

மருத்துவத்துறையில் ஒக்சிஸனுக்கு ஆற்றல் ஏற்றுவதன் மூலம் மருத்துவத்திற் கான ஓஸோன் தயாரிக்கப்படுகிறது. உடலுக்குள் இருக்கும் வைரஸ்களையும், நுண்ணு யிரிகளையும், பூஞ்சை களையும் அழித்து ஒழிப்பதில் ஓஸோன் விரைந்து செ யற்படுவது பல முறை நிரூபிக்கப்பட்டிருக் கிறது

இம்முறையில் செறிவூட்டப்பட்ட ஓஸோன் நோயாளிக்கு நரம்பின் மூலம் உடலுக்குள் செலுத்தப்பட்டு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு அகற்றப்படு கிறது.

இம்முறையாலும் இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தீர்வு கிடைக்காவிடில், நாங்கள் பரிந்துரைக்கும் மற்றொரு சிகிச்சை முறைதான் இ.இ. சி.பி. என்னும் சிகிச்சை  முறை.

இம்முறையில் நோயாளிக்கு முதலில் 3 DCCG என்ற பரிசோதனையின் மூலம் நோயின் தன்மை கண்டறியப்பட்டு சிகிச்சை  வழங்கப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் விட ஜேர் மனிய மருத்துவ நிபுணர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை யான ஈ.எஸ். எம்.ஆர். அதாவது, எக்ஸ்ட்ரா கார்போரி யல் ஷொக் வேவ் மயோகார்க்ளியல் ராவேஸ்குளோரைசேஷன் (Extra corporeal Shock wave Myocarclial Ravascularisation)  என்ற நவீன சிகிச்சை யை மேற்கொண்டால் எதிர் பார்க்கின்ற பலன் கிடைப்பது உறுதி.

இந்த நவீன சிகிச்சையின் படி நோயாளிக்கு சத்திர சிகிச்சை  செய்யப்படுவதில்லை. பல நாட்கள் மருத் துவமனையில் தங்கவேண்டிய சூழல் ஏற்படுவதும் இல்லை. வலியில்லை. இரத்த இழப்பில்லை. சிசிச்சைக்கான கால அளவே இருபது நிமிடம் மட்டும்தான். மயக்க மருந்து வழங்கப்படுவதில்லை. இதனால் நோயாளி தனக்கு எம்மாதிரியான சிகிச்சை  வழங்கப்படுகிறது என்பதை அருகி லுள்ள திரையில் காண இயலும்.

இந்த சிகிச்சையின்படி, நோயாளியின் இதயத் தசை யில் எங்கு அடைப்பு ஏற்பட் டிருக்கிறது  என்பது துல்லியமாகக் கண்டறி யப்பட்டு, அந்த இடத்தில் இந்த இயந்திரத் தைப் பொருத்தி, அதிலிருந்து அதிர்வலைகள், உரிய முறையில் கணக்கிடப்பட்டு செ லுத்தப்படுகின்றன.

உடலுக்குள் செலுத்தப்படும் அதிர்வலைகள், இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை முழுமையாக அகற்றுகிறது. இதன் மூலம் நோயாளிக்கு முழுமையான தீர்வு வழங்கப்படுகிறது.

செ லவைக் கணக்கிட்டால் மற்ற தீர்வுக ளான சத்திர சிகிச்சை  மற்றும் பை பாஸ் சர்ஜரியை விடக் குறைவு. இதனை ஒரு முறை மேற்கொண்டால் போதுமானது. மீண்டும் மாரடைப்பு வருவது தவிர்க்கப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை க்குப் பின்னரும் தீராத நெஞ்சு வலியால் (Refractory Angina)  அவதிப் படுபவர்கள், 70 சதவீதம் முதல் 100 சத வீதம் வரை இருதய அடைப்புகள் உள்ளவர் கள், நீ ண்ட காலமாக மருந்தை உட்கொண்ட பின்னரும், நெஞ்சுவலியிலிருந்து போதுமான நிவாரணத்தைப் பெறாதவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் அளவிற்கு உடலில் வலு இல்லாதவர்கள், பைபாஸ் சத்திர சிகிச்சை யைச் செய்துகொள்ள விரும்பாதவர்கள், பை பாஸ் சத்திர சிகிச்சை  செய்துகொள்ளாமல் அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை யைப் பெற எண்ணுபவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தும், முழுமையான குணம் பெறாதவர்கள், வயதின் காரணமாக சத்திர சிகிச்சை யை மேற் கொள்ள முடியாதவர்கள், உடலில் உள்ள மற்ற கோளாறுகளால் (நீ ரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீ ரகக்கோளாறு) சத்திர சிகிச்சையை செய்து கொள்ள முடியாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த நவீன சிகிச்சை  ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த சிகிச்சையின் கால அளவு நோயாளியின் தன்மையைப் பொறுத்து, வாரத்திற்கு மூன்று முறை என, குறைந்தபட்சம் ஐந்து வாரம் முதல் ஒன்பது வாரம் வரை மேற்கொள்ளப்படுகிறது.

மேலதிக விபரங்களுக்கு

கைப்பேசி எண்: 00 91  93810 51041

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,162