Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இதயநோயிலிருந்து மீள்வதற்கான எளிய வழி
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

இதயம் தொடர்பான நோய்கள் பற்றி, `சவோல்' என்ற சிகிச்சை  முறையை அறிமுகப்படுத்தி, இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு உதவியவரும், டெல்லியில் உள்ள சவோல் இதய மருத்துவ மையத்தின் இயக்குநரும், இதய நோய் நிபுணருமான டொக்டர் பிமல் சாஜரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.  

இதய நோயாளிகளை மீட்பதற்காக தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை சிகிச்சை யைப் பற்றி விளக்குங்களேன்?

இதய நோயின் பாதிப்பிலிருந்து மீட்ப தற்காக மருந்து, மாத்திரை, பைபாஸ் சத்திர சிகிச்சை , ஆஞ்சியோபிளாஸ்டி என்று ஆங் கில மருத்துவத்துறையில் இதய நோய் மருத்துவத்துறையின் வளர்ச்சி அபாரமானது. ஆனால் இதய நோயாளிக ளின் எண்ணிக்கை குறையா ததுடன், தொடர்ச்சியாக அதிகரித்தும் வருகிறது. சிகிச்சை  எடுத்துக் கொண்ட வர்களும் முழுப் பலனை அனுபவிக்கவில்லை. ஏன் இந்த நிலை? என்று யோசிக்கும்போது உருவா னதுதான் சவோல் செயற் திட்ட சிகிச்சை .

இந்த சிகிச்சை  மூன்று பகுதிகளைக் கொண்டது. இயற்கையான பைபாஸ் (Natural Bypass) அதா வது சத்திர சிகிச்சை யில் லாத பைபாஸ், உயிரிவேதி யியல் அடிப்படையிலான ஆஞ்சியோபிளாஸ்டி (Bio-Chemical Angioplasty) மற்றும் சவோல் இதய பாது காப்புத் திட்டம் (Saaol Heart Program)

இதய நோய் பன்முகக் காரணிகளால் ஏற்படுவதால் ஏதேனும் ஒரு காரணிக்கு மட் டும் தீர்வு காண்பது சரியான முடிவாகாது. இதற்காக ஐந்து எளிய வழி களை உருவாக்கினேன். 1) நோயை அறி தல், 2) மன உளைச்சலைக் குறைத்தல் 3) உணவு முறைகளில் மாற்றம் 4) யோகா (தியானம்) 5) உடற் பயிற்சி.

இதய நோய் தங்களைத் தாக்கியிருக் கிறது என்பதையும், அதிலிருந்து மீள்வதற் கான வழிகளைப் பற்றியும் சாதாரண மனித னும் புரிந்துகொள்ளும் வகையில் அவ னுக்கு கல்வியளிக்கப்படவேண்டும். இதய நோய்க்கான அறிகுறிகள், இரத்த அழுத்தம், இரத்தத்திலுள்ள குளுக்கோஸ், கொலஸ்ட் ரோல், ட்ரைகிளிசரைட்கள் ஆகியவை இருக்க வேண்டிய அளவுகள், அடைப்புகள் தோன்றக் காரணங்கள், அவற்றை இனம் கண்டறிதல், அதற்கான சோதனைகள், மருந் துகள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் ஆகிய வற்றை நோயாளிகள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

நோய் பற்றிய அறிவு முழுமையாகத் தெரிந்துவிட்ட பிறகு, வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்ள அதாவது, மாற்று வாழ்க்கை முறையைத் தெரிவுசெய்வதில் சிக்கல் இருக்காது.  நோய் வந்த பிறகும், நோய் வருவதற்கு முன்பும் மன உளைச்சல் இல்லாமல் இருப்பது,  அதாவது எம்மு டைய நடவடிக்கையின் அணுகுமுறையை மாற்றியமைத்துக்கொள்வது, உண்ணும் உணவில் மாற்றத்தை அனுமதிப்பது, குறிப் பாக, எண்ணெய்யை முற்றிலுமாகத் தவிர்ப் பது, யோகா அல்லது தியானத்தைச் செய்வ தையும், தினசரியோ அல்லது வாரத்திற்கு ஐந்து தினங்களுக்கோ குறைந்தபட்சம் முப் பத்தைந்து நிமிட அளவிற்கு நடைப்பயிற்சி செய்வது என்ற ஐந்து எளிய முறைகளைக் கடைப்பிடித்தால் இதயநோய் வருவதைத் தவிர்த்துக்கொள்ள முடிவதுடன், வந்து, சிகிச்சை  எடுத்துக்கொண்ட பின்பும் எத்த கைய பின்விளைவும் ஏற்படாமல் தடுத்து, இதயநோயிலிருந்து முழுமையாக விடு பட்டு, ஆரோக்கியமாக வாழவும் முடியும்.

சாவோல் மருத்துவ சிகிச்சை  எப்படிப்பட்டது? இயற்கையான பைபாஸை எப்படி மேற்கொள்கிறீர்கள்?


விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை என்ற இரண்டின் கலவைதான் இந்த சிகிச்சை . அலோபதியில் பைபாஸ் சிகிச்சை  இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந் தால் அதனை நீக்கிவிடும். ஆனால் மீண்டும் வராது என்று எந்த உறுதியையும் வழங் காது. அந்த இரத்தக் குழாயே பாதிக்கப்பட்டி ருந்தால், அதனை செம்மைப்படுத்தாமல், அதற்குப் பதிலாக செயற்கையான இரத்தக் குழாயைப் பொருத்திவிடுகிறார்கள். எனி னும் இதனுடைய ஆயுள் குறித்தும், செயற் பாடு குறித்தும் எந்தவித உறுதியும் கிடைப் பதில்லை. ஆனால் இயற்கையான பைபா ஸில் (இ.சி.பி.) ஒரு இயந்திரத்தின் மூலம் நோயாளியின் கணுக்கால் பகுதி, தொடைப் பகுதி, பிட்டப்பகுதி, இடுப்புப் பகுதி என,  கால் பகுதியிலிருந்து அழுத்தம் கொடுத்து, இப்பகுதியில் இருக்கும் இரத்த செல்கள் மூலம், ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, இரத்தக்குழாயில் ஏற்பட்டிருக் கும் அடைப்புகளைச் சீராக்குகிறோம். இந்த சிகிச்சை , நோயாளியின் தன்மையைப் பொறுத்து, முப்பத்தைந்து நாட்களிலிருந்து

நாற்பது நாட்கள் வரை தினசரி ஒரு மணி நேரம் வீதம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இயற்கை யாக எமக்கு வழங்கப்பட் டிருக்கும் இரத்தக் குழாயைச் சீரடையச் செய்கிறோம்.

மேலும் இரத்தக் குழா யில் அடைப்புகளை உருவாக் கும் கொலஸ்ட்ரோல் போன்ற அம்சங்களை, நாங்கள் வலியுறுத் தும் உணவு முறையைத் தீவிரமாகப் பின்பற்றச் செய்து, மேற்கொண்டு கொழுப்பு சே ராமல் தடுத்து விடுகிறோம். இவ்வகையிலேயே இதனை சாத்தியப்படுத் துகிறோம். அலோபதியில் மேற்கொள்ளப் படும் பைபாஸ் சத்திர சிகிச்சை யின் வெற்றி வீதம் மிகக்குறைவு என்பதோடு கட்டண மும் மிக அதிகம். அதே நேரம் ஒரு முறை பைபாஸ் செய்துவிட்டால் இனித் தொல்லை யில்லை என்றும் மருத்துவர்கள் உறுதி தருவ தில்லை.

சத்திர சிகிச்சை யில்லாத வகையிலான ஆஞ்சியோபிளாஸ்டியைப் பற்றியும் சொல்லுங்களேன்?

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை க்கான கட் டணமும் அதிகம்தான். இந்நிலையில்,  பொருத்தப்படும் செயற்கையான பொருட் கள், மருந்துகள் பின்விளைவுகளைத் தரக் கூடியவை என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதற்காக நாங்கள் சாதாரண நோயாளிகளுக்கு ட்ரிப்ஸ் அதாவது, குளுக்கோஸ் ஏற்றுவார் களே, அந்த முறையில், அங்கீகரிக்கப்பட்ட, வேதியல் பொருட்கள், கலப்பற்ற, பின் விளைவுகளை ஏற்படுத்தாத மருந்துகளைக் கொண்டு, கைகளில் உள்ள நரம்புகள் மூலம் அந்த பயோ மருந்துகளை உட்செலுத்துகி றோம். நோயாளி ஒருவருக்கு இரண்டு மணித்தியாலம் முதல் இரண்டரை மணித்தி யாலம் வரை பொறுமையாக மருந்தினை உட்செலுத்துகிறோம். நோயாளியின் தன் மையைப் பொறுத்து இம்முறையை 20 வகையாகக் கையாண்டு, ஆஞ்சியோ பிளா ஸ்டியை செய்கிறோம். கட்டண மும் குறைவு. சத்திர சிகிச்சை  செய்து கொள்ளவேண் டுமே என்ற பயமும் இல்லை. இயற்கையா னது என்பதால் பின்விளை வுக்கும் இடமில்லை.

இவ்வகையான சிகிச்சை யை யார் எடுத்துக்கொள்ள வேண்டும்?

இதய நோய் பாதிப்பிற்கான அறிகுறி கள் தென்படும் யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சை யை எடுத்துக்கொள்ளலாம். இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறு கள் அதிகம். மாரடைப்பு, மூளைப்பகுதிக்கு இரத்தம் செல்வதில் சிக்கல் உள்ளவர்கள், காதடைப்பு, திடீரென்று நெஞ்சுவலி, மாத விடாய் நின்ற பிறகு மனக்குழப்பத்திற்கு ஆளாவோர் எனப் பலரும் இந்த சிகிச் சை யை எடுத்துக்கொள்ளலாம். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பரிசோதனை மூலம் தெரிய வந்தால் இந்த சிகிச்சை யை எடுத்துக் கொள்ளவேண் டும். பத்தொன்பது வயதிற்கு உட்பட்டவர் களைப் பெரும்பாலும் இதய நோய் தாக்கு வதில்லை. காரணம், எத்தகைய உணவை அவர்கள் எடுத்துக்கொண்டாலும் அவை ஜீரணித்துவிடுகின்றன. ஆனால் இருபது வயதிற்கு மேல் சாப்பிடும் எண்ணெய்ப் பதார்த்தங்கள், கொழுப்புகள் இரத்தக் குழா யில் படிகின்றன. நாற்பது வயதைக் கடந்த வுடன் இரத்தக் குழாயில் சே ர்ந்திருக்கும் கொழுப்புகள் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கி ன்றன.  அதனால் தான் நாங்கள் ஐந்து எளிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத் துகிறோம். அதே தருணத்தில் இதய நோயா ளிகள் நடைப்பயிற்சியை காலை வேளைக ளில் செய்வது உத்தமம். நடைப்பயிற்சியின் போது சோர்வோ அல்லது தலைச்சுற்றலோ, வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்பட்டால் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொள் ளாமல் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுத்து விட்டு, வலி சீரானவுடன் தொடர்ந்து நடக்க லாம்.

இதய நோய் வராமல் தடுப்பதோ, வந்த பின் சிகிச்சை  எடுத்து மீள்வதோ நோயாளிக ளின் கையில்தானிருக்கிறது. இதய நோய் வந்துவிட்டால், உணவுக் கட்டுப்பாடு, மன உளைச்சல், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து மீள்வது, யோகா, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி என்ற எளிய முறைகளைப் பின்பற்றி இதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.  இந்த சிகிச்சை யால் ஒருவித ஆண் மலட்டுத் தன்மைக்கும் தீர்வு கிடைக்கிறது. இந்த சிகிச்சை  அலோபதிக்கு எதிரானதல்ல. இதய நோய்க்கு அலோபதி சிகிச்சை  எடுத்துக்கொண்டால் வேதியல் தன்மை கலந்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். ஆனால் இந்த சிகிச்சை யை எடுத்துக்கொண் டால் மிக குறைந்த அளவிலான அலோபதி மருந்தையே எடுத்துக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்.

தொடர்புக்கு: 0091 9840292448

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,829