Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
குடி மற்றும் போதைக்கு அடிமையாதலும் ஒரு நோயே!
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Psychiatry

உலக சுகாதார நிறுவனம், 1990களில் குடி மற்றும் போதைக்கு அடிமையாதல் என்பது ஒரு நோய் என அறிவித்தது. குடி மற்றும் போதைக்கு அடிமையானவர்களை அதி லிருந்து மீட்கப் பல கவர்ச்சிகரமான மாற்று மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகளின் அறிவிப்பு இருப்பினும், இதற்கும் அலோ பதி மருத்துவம் உரிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அதிலுள்ள சிறப்பம்சங்கள் என்ன என் பது குறித்து சென்னையில் இயங்கி வரும் அரச அங்கீகாரம் பெற்ற விஸ்டம் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் கே.ரவீந்திரன், இயக்குநர் எஸ்.அறிவுடை நம்பி, மன நல மருத்துவர் சி.அன்புதுரை மற்றும் பொது மருத்துவர் வினோத் ஈனோஸ் ஆகியோ ரை www.medicalonline.in சார்பில் சந்தித்துக் கேட்டறிந்தோம்.

குடிக்கு அடிமையானவர்கள் என்று எப் படி இனம் கண்டுகொள்கிறீர்கள்? அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளும் முதல் கட்ட சிகிச்சை என்ன?

மது அருந்துவது சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு முன், மேலைத்தேய நாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளக் குறியீடான மது அருந்தும் பழக்கத்தை, எம்மவர்கள் அதற்கேயுரிய அடர்த்தியையும், உள்ளடக் கத்தையும் தெரிந்துகொள்ளாமல் பின்பற்று வதால் ஏற்படுவது தான் இந்த குடிப்பழக் கம்.

அவர்கள் எங்கு? எப்போது? யாருடன்? எது வரை? என்ற பல அம்சங்களுடன் இந் தப் பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அவர் களின் சுய முன்னேற்றத்திற்காகவோ அல்லது சுய மகிழ்ச்சிக்காகவோதான் இதில் ஈடு படுகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரி யும். இவர்களை `சோஷியல் ட்ரிங்கர்' என்று அழைக்கிறார்கள்.

இவர்கள் வைத்திருக்கும் எந்தக் கட்டுப் பாட்டையோ அல்லது நிபந்தனையையோ பின்பற்றாதவர்களைத்தான் குடிக்கு அடிமை யானவர்கள் என்று வகைப்படுத்துகிறோம். இவர்கள் யாருடனாவது அருந்துவார்கள். அளவுக்கு மீறி அருந்துவார்கள். இடைவிடா மல் அருந்துவார்கள். இடம் பொருள் தெரியாமல் அருந்துவார்கள். இவர்கள்தான் குடிக்கு அடிமையானவர்களாகக் கருதப் படுகிறார்கள். கொக்கேய்ன், அபின், பிரவுண் சுகர் போன்ற போதை மருந்துகளைப் பயன்படுத்துப வர்களும் போதைக்கு அடிமை யானவர்களே.

நோயாளி மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் விருப்பத்தின் பேரில் இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதலில் உடல் ரீதியான சோதனைகளைச் செய்கிறோம். பொதுநல மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்களால் இது மேற்கொள்ளப்படுகிறது. கை, கால் நடுக்கம், பசியின்மை, தூக்கமின்மை, பயம், பதற்றம், சிகிச்சை க்குப் பின்வாங்கும் போக்கு போன்ற காரணிகளுக்கு இருபத்தி யொரு நாட்களுக்கு சிகிச்சை யளிக்கப்படுகி றது. இதனை `டீடோக்ஸிபிகேஷன்' (Detoxi fication) என்று குறிப்பிடுகிறோம்.

கவுன்சிலிங் என்கிற கலந்துரையாடல் சிகிச்சை  எதிர்பார்த்த பலனைத் தருவதில் லையே, ஏன்?

மது அருந்துபவர்களின் அடிப்படையை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வ மும், குடிப்பதால் உருவாகும் போதையின் அளவை அறிந்துகொள்ள வேண்டும் என்று உந்துதலுக்காகவும், மற்றவர்களின் கேலிக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவும் சூழலின் கட்டாயத்திற்காகவும்தான் மதுவினை அருந் தத் தொடங்குகிறார்கள்.

முதலில் மது அருந்தும் எவரும் குறிப் பிட்ட அளவிற்கு மேல் (தோராயமாக 45 மி.லி.) அருந்த இயலாது. மது அருந்தியவு டன் ஏற்படும் உடல் கிளர்ச்சியை விரும்புகிறவர்கள் மட்டுமே அதனைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்கள் ஒரு எல்லையை மீறிச் செயற்படும்போது - அதாவது, மது அருந்தி, மது அருந்தி, அதில் கலக் கப்பட்டுள்ள வேதிப்பொருட்களுக்கு ஏற்ப செயற்படும்படி உடலை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.

இதனால் `பர்சனாலிட்டி டிஸார்டர்' என்ற, வேறுபாடுகளைப் பிரித்தறிய முடி யாத மனநிலை உருவாகிவிடுகிறது.

மேலும் அருந்தும் மது, மனத்தை வக்கி ரத்துடனும், ஒப்பீடு இல்லாமலும் செயற் படத் தூண்டுகிறது. இதனால் குடும்ப உற வில் விரிசல், சமுதாயத்துடனான உறவில் உரசல் ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்படுகி றான்.  தன்னால் நேசித்து, போற்றப்பட்டு, காப்பாற்றப்படவேண்டிய உடலில், அளவுக் கதிமான வேதியல் பொருட்களை அனுமதித் ததால் ஏற்படும் இந்த மாற்றத்தை `கவுன் சிலிங்' என்ற கலந்துரையாடல் சிகிச்சை யால் மட்டுமே குணப்படுத்த இயலாது. ஆனால் இந்தப் பழக்கத்திலிருந்து ஏன் மீட்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த மற்ற சிகிச்சை களைவிட கவுன்சிலிங்தான் சிறந்த சிகிச்சை . ஆனால், கவுன்சிலிங் வருப வர்கள், தங்கள் மனதைத் தயார்படுத்திக் கொண்டு வருவதால்தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

இப்பழக்கத்திலிருந்து மீட்பதற்காக தாங் கள் பின்பற்றி வரும் சிகிச்சை  நடைமுறை என்ன?


இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிக ளுக்கு முதலில் முழுமையான உடல் பரிசோ தனை, அதன்பின் கவுன்சிலிங். அதனைத் தொடர்ந்து வகுப்புகள், குழு சிகிச்சை, ஆலோசனை மற்றும் குடும்ப உறுப்பினர்க ளுடன் உணர்வைப் பகிர்தல், அவர்களின் தனித்தன்மையான ஆளுமைத் திறனை வளர்த்தல், மனநல சிகிச்சை  என எங்களின் மறுவாழ்விற்கான சிகிச்சை கள் இருக்கும்.

காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணிவரை என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான விரிவான நிகழ்ச்சி நிரல் அட் டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி இயங் குகிறோம். எந்நேரமும் தரமான மற்றும் தகு தியான தாதியர்கள், சமூகப் பணியாளர்கள், உளவியல் நிபுணர்கள் (Clinical Psychologist) மருத்துவர்கள் பணியில் இருப்பதால் நோயாளிகளின் மீட்பை உறுதிப்படுத்துகி றோம். அத்துடன் சிகிச்சை க்குப் பின்னரும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையேற்படும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.

இங்கு சிகிச்சை  பெற்ற பின் மீண்டும் குடி மற்றும் போதைப்பொருட்களைப் பயன் படுத்துவோருக்கு எம்மாதிரியான சிகிச் சை யை வழங்குகிறீர்கள்?

இங்கு சிகிச்சை  பெற்றுத் திரும்புபவர் களிடம், `மீண்டும் மது அருந்தினால் இரத்த வாந்தி எடுத்து மரணத்தைச் சந்திப்போம்' என்ற எண்ணத்தை சிகிச்சை யின்போது அவர்களின் மனதில் வலிமையாகப் பதிவு செய்துவிடுவதால், இங்கு சிகிச்சை  பெற்ற வர்கள் மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு அடி மையாவதில்லை.

அத்துடன் மேற்சொன்னதுபோல் சிகிச் சை க்குப் பின்னும் எங்களின் கண்காணிப்பு தொடரும் என்பதால் யாரும் மீண்டும் மது அருந்துவதில்லை. அதையும் மீறி அவர்கள் அருந்துவார்களேயானால் அதற்குரிய விலையையும், பலனையும் அவர்கள் அனு பவித்தேயாக வேண்டும்.

மது மற்றும் போதைக்கு அடிமையானவர் களை நரம்பியல் பாதிப்பிற்குள்ளானவர் கள் என்று குறிப்பிடாமல், மனநலம் சார்ந்த நோயாளிகள் என்று குறிப்பிடு வது ஏன்?

மது அருந்துவதால் உடலில் செல்லும் வேதியல் பொருட்கள், நரம்பைப் பாதித்து அதனைத் தளர்ச்சியடைய வைக்கின்றன. மது அருந்தவேண்டும் என்பது எண்ணத்தின் அடிப்படையிலானது என்பதால், அதனை அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மன நலத்தால் மீட்கலாம் அல்லது  நரம்பியல் மருத்துவத்தாலும் மீட்கப்படலாம்.

குடி மற்றும் போதைக்கு அடிமையானவர் களை உடனடியாக மீட்கலாம் என்று விளம்பரப்படுத்தப்படும் மாற்று மருத்து வம் சார்ந்த அறிவிப்புகளை எப்படி எதிர் கொள்ளலாம்?

உலக சுகாதார நிறுவனம் 1990களில் தான் குடி மற்றும் போதைக்கு அடிமையாவ தும் ஒரு நோய் என்று அறிவித்து, அதற்குரிய சிகிச்சை களையும் வரையறுத்தது. இந்த சிகிச்சை முழு பலன்களையும் அளித்து வருகிறது.

மாற்று மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் குறித்து எவ்வித கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. எங்களின் நோக்கம் குடி மற்றும் போதைக்கு அடிமை யானவர்கள் அதிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதே.

மது மற்றும் போதைக்கு அடிமையாகா தீர்கள். அடிமையாகி, அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணமிருப்பவர்களுக்கு நாங்கள் சிகிச்சை  அளித்து (கட்டணம் வசூ லிக்காமல் கூட) மீட்கிறோம்.

குடி ஒரு நோய். இது உடல் மற்றும் ஆன் மாவைச் சார்த்தது. குடும்பத்தைப் பாதிக்கக் கூடிய நோய். வளரும் தன்மையுள்ள நோய். அதனால் இதற்கு அடிமையாகாமல், உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டு சமூகத்துடன் இணைந்து வாழ முயற்சியுங்கள்.

தொடர்புக்கு: 0091 98412 87672

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,149