Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இளமையை நிலைநிறுத்திக்கொள்ள உதவும் லீச் தெரபி
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Acupuncture

எம்மில் பலர் லீச் தெரபி என்றால் என்ன? அதனால் என்ன பயன்? என்பது குறித்து அறிந்துகொள்வதில் ஆவலாயுள்ளனர். அவர்களின் ஆவலைத் தணிக்கும் வகையில் லீச் ரெபி பற்றிய விளக்கங்களை www.medicalonline.in ல் தருகிறார் சென்னையில் இயங்கி வரும் ஷங்கர் அக்குபஞ்சர் மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநரும், அக்குபஞ்சர் மருத்துவருமான டொக்டர் எம். என். சங்கர்.

அக்குபஞ்சர் மருத்துவம் என்றால் என்ன? இதன் மூலம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியும்?

எந்தவொரு நோயையும் குணமாக்கிக் கொள்ளும் சக்தி நம்முடைய உடலுக்கு இயற்கையாகவே உண்டு. தடை எங்கு இருக்கிறது என்பதையும், அதற்கு என்ன காரணம் என்பதையும் அறிந்து அதற்குரிய தூண் டலை மிகத்துல்லியமாகச் செய்தாலே போது மானது. இதனைச் செய்வதுதான் அக்குபஞ் சர் மருத்துவம். இம்மருத்துவ முறையில் உட லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி தூண்டப் பட்டு, செயற்பட வைக்கப்படுகிறது.

நல்ல தேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவ நிபு ணர்கள், நோயாளிகளின் நாடிகளைப் பிடித் துப் பார்த்து, உடலில் எந்த உறுப்பு அதிக மாகச் செயற்படுகிறது? எந்த உறுப்பு பாதிக் கப்பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவர். எந்த உறுப்பாக இருந்தா லும் அதிகமாக வேலை செய்வதும் தவறு... குறைவாக வேலை செய்வதும் தவறு. இதை சமநிலைப்படுத்த, அதற்குரிய முக்கியமான புள்ளிகளைத் தொட்டுத் தூண்டிவிட்டால் போதுமானது.

டொன்சில், தலைவலி, முடி கொட்டுதல், கண் நோய், பார்வைக் குறைபாடு, மூக்கு தொடர்பான நோய், பல் கோளாறு, குறட்டை, திக்குவாய், காது நோய், தைரொ ய்ட், நுரையீரல் சம்பந்தப்பட்ட குறைபாடு கள், ஆஸ்துமா, வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், சிறுநீரகக் கோளாறுகள், மூட்டு வலி, கழுத்து வலி, மன நலம் சார்ந்த பிரச்சினைகள் எனப் பலதரப் பட்ட நோய்களையும் குணப்படுத்த முடியும்.

அக்குபஞ்சர் மற்றும் அக்கு பிரஷர் என்ற மருத்துவ சிகிச்சை களெல்லாம் வலி நிவாரணத்திற்கானவை என்ற கருத்து உண்மையா? பொய்யா?

பொய். இது இந்திய மக்களின் பாரம்ப ரிய மருத்துவ முறை. இந்த மருத்துவ முறை புத்த மதத்தின் மூலமாக இலங்கை, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றது. அதனைத் தொடர்ந்தே அமெரிக்கா, ரஷ்யா, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற மேற்கு லக நாடுகளுக்கு அறிமுகமானது. ஆரம்ப காலத்தில் நானும் இது ஒரு வலி நிவாரணி என்றுதான் கருதியிருந்தேன். அதன் பின் இத னால் குணமாக்க இயலாத நோய்களே யில்லை என்பதை உணர்ந்தேன். சத்திர சிகிச்சை  என்பது ஒரு உறுப்பு முழுவதுமாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட் டுமே அவசியமாகிறதே தவிர மற்றைய தரு ணங்களில் அல்ல.

வெரிகோசிஸ் பெயின் என்னும் கணுக் கால் பகுதிகளில் நரம்புகள்  புடைத்தும், சுருண்டும் இருக்கும் நிலைக்கு அக்கு பஞ்சரில் தீர்வு உண்டா?

கணுக்கால் பகுதிகளுக்கு மேலிருக் கும் ஆடுதசை யை இரண்டாவது இத யம் என்பார்கள். ஆடுதசை யின் இயக்கத்திற்கு நடைப்பயிற்சி முக் கியம். இதயத்திலிருந்து புறப் படும் இரத்தம் கால்பகுதி வரை வந்து மீண்டும் திரும்பவேண் டும். திரும்புவதற்கான சக்தி ஒவ் வொருவரின் நடையைப் பொறுத்தே அமைகிறது. நடைப் பயிற்சி இல்லாதவர்களுக்கும், உட்கார்ந்தே பணியாற்றுபவர்க ளுக்கும் இத்தகைய நோய் தாக்கும். திரும்புவதற்கான சக்தியில்லாமல் இரத்தம் ஓரிடத்தில் தங்கி விடுகிறது. தங்கிய இரத் தம் தன்னுடைய இயல்புத் தன்மையை விட்டு, அசுத்தமடைந்து, இதுபோன்ற நரம்பு முடிச்சுகளை உருவாக்கி, தீராத வலியை ஏற்படுத்திவிடும்.

சிலருக்கு அசுத்தமான இரத்தம் கரும் பச்சை  வண்ணத்திலும் மாறிவிடும். இத்தகை யோர் மேற்கொள்ளும் சத்திர சிகிச்சை யால் அவர்களால் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலாததைக் காணலாம்.

ஆனால் அக்குபஞ்சர் மூலம் மேற்கொள் ளப்படும் சிகிச்சை யில் இரத்தம் ஓட்டம் தூண்டப்பட்டு, அசுத்தமான இரத்தம் வெளி யேற்றப்படுகிறது. அதற்குப் பிறகு நாங்கள் பரிந்துரைக்கும் எளிய உணவு முறையை மேற்கொள்ளும்போது, நோயாளிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் கள். அசுத்தமான இரத்தத்தை அகற்றுவதற்கு அட்டைப் பூச்சியைப் பிரதானமாகக் கொண்ட லீச் தெரபி வடிவிலான சிகிச்சை  தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

லீச் தெரபி எனப்படும் அட்டைப் பூச்சி மூலமான தெரபியின் மூலம் எந்த நோய்களைக் குணப்படுத்தலாம்?

அட்டைப் பூச்சிகளில் ஏராளமான வகை கள் உள்ளன. அட்டைப் பூச்சிகளின் எச்சி லில் நூற்றியிரண்டு விதமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் ஆன்ட்டி பயாடிக், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி பாக்டீரியா உள்ளிட்ட பல மருத் துவ குணங்கள் அடங்கிய அட்டைப் பூச் சியை மேற்குலகிலிருந்து இறக்குமதி செய்து இவ்வகையிலான தெரபியை மேற்கொள்கி றோம். இதன் மூலம் உடலில் உள்ள முக்கிய மான பகுதியிலிருக்கும் அசுத்தமான இரத் தம் சுத்திகரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய ஆயுளில் நாற்பது வயதைக் கடந்துவிட்டால் தங்களுடைய உடலினை ஒரு முறையாவது சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக முதுமையை எளிதாக எதிர்கொள்ள முடியும். சொரியாஸி ஸால் பாதிக்கப்பட்டவர்கள் லீச் தெரபி மூலம் சிறப்பான பலனைப் பெறலாம் இவ் வகை சிகிச்சை யினை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் தொடர்ந்து ஆறு முறை மேற்கொண்டால் போதுமானது. மேலும் இத் தகைய தெரபியினை மேற்கொண்டவர்க ளுக்கு மாரடைப்பு வருவது குறைந்திருக் கிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டிருக்கிறது.

தங்களின் மருத்துவ அனுபவத்தில் மறக்க இயலாதவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்?

பீஹார் மாநிலத்தைச் சோந்த ஒரு பெற் றோருக்கு ஏழாவதாகப் பிறந்த ஒரு குழந்தை பிறவியிலேயே கண்பார்வையை இழந்து விட்டதால் அந்தப் பெற்றோர் அந்தக் குழந் தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.  அந்தக் குழந்தையை அவர்களது உறவினர் எடுத்து வளர்த்து வந்தார். என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு சிகிச்சை க்காக வந்தார்கள். அந்தச் சிறுவனுடைய பார்வையை மீட்டெ டுத்ததை என்னுடைய சாதனையாகவே கரு துகிறேன்.

அண்மையில் நடைபெற்ற போரினால் எம்மண்ணில் கலக்கப்பட்டுள்ள வேதியல் பொருட்கள் மூலம் எதிர்காலத்தில் மகப் பேறின்மையும், மலட்டுத்தன்மையும் அதிகரிக்கும் என்கிறார்களே உண்மையா?


பாதிப்பு இருப்பதை மறுக்க முடியாது. அதே தருணத்தில் அணு குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகரில் உள்ள மக்க ளுக்கு அதிலிருந்து மீள இவ்வகை மருத்துவமே உரிய பலனளித்தது என்பது வரலாற்றில் ஒப்புக்கொள் ளப்பட்ட உண்மை. எனவே எத்த கைய பாதிப்பிருந்தாலும் அக்குபஞ் சர் மூலம் உரிய தீர்வு காண இயலும்.

இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள இளைய தலைமுறை யினர் `ஜங்க் ஃபுட்' எனப்படும் தயா ரிக்கப்பட்டு, பெட்டிகளில் அடைக் கப்பட்ட உணவை அதிகமாக எடுத் துக்கொள்கிறார்கள். இதில் சுவைக் காகச் சே ர்க்கப்படும் செயற்கையான வேதியல் பொருட்களால் நம்மு டைய உடலில் உள்ள நோய் எதிர்ப் புச் சக்தியினை முடக்கி வைத்துவிடு கிறது. இதனால் அவர்கள் சொல்ல முடியாத பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இயற்கையான பொருட்களைக் கொண்டு, இயற்கை யான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம் நம்மு டைய ஆரோக்கியத்தை நாமே உறுதி செய்துகொள்ளலாம்.

பிரசவத்திற்குப் பின், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பாலை புகட்ட முடியாமல் தவிக்கும் தாய்மார்களுக்கு அக்குபஞ்சர் தான் சரியான தீர்வினை வழங்குகிறது என்கிறார்களே?


தாய்பால் சுரக்காத தாய்மார்களின் சுண்டு விரலின் நகக்கண்ணில் மறைந்திருக்கும் ஒரு புள்ளியை ஊசி மூலம் தூண்டுவதன் மூலம் தாய்ப்பாலைச் சுரக்கவைக்க இயலும். அதே சுண்டுவிரலின் மற்றொரு பகுதியில் மறைந் திருக்கும் புள்ளியைத் தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ அழுத்துவதன் மூலம் மார டைப்பு வந்தவரை அதிலிருந்து காப்பாற்ற இயலும். அதேபோல் திடீரென்று மயக்கம டைந்தவர்களை அதிலிருந்து மீட்க வேண்டு மானால் அவர்களின் மூக்குப் பகுதிக்கு கீழே இருக்கும் சிறிய பள்ளம் போன்ற பகுதியில் சிறிய அளவிலான அழுத்தத்தைக் கொடுத் தால் அவர்கள் மயக்கத்திலிருந்து மீண்டு விடுவர். மேலும் இது தொடர்பாக `உடல் நலம் உங்கள் கையில்' என்ற தலைப்பில் இம்மருத்துவத்தின் சிறப்பு குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடு பட்டு வருகிறேன்.

எந்தவொரு நோயும் ஆரம்பக்கட்டத்தில் இருந்தால் மட்டுமே அக்குபஞ்சரால் குணமாக்க இயலும் என்றும், அந்நோய் முற்றிவிட்டால் இம்மருத்துவம் பலனளிக் காது என்றும் கூறப்படுவது இது சரியா?

தவறான கருத்து. நோய் என்பது மூன்று வழிகளில் நம்மை வந்தடைகிறது. (நாமே ஏற்படுத்திக்கொள்வது, மற்றவர்கள் மூலம் பரவுவது, சுற்றுச்சூழல் மூலம் வருவது) அதேபோல் நோயை குணப்படுத்துவதற்கும் மூன்று வழிகள் இருக் கின்றன. (நோய் வரு முன் காத்தல், வந்தவுடன் இனம் காணுதல், அதற்குரிய தீர்வைக் காணுதல்) முதலில் நோய்க்கான மூலகாரணத்தைக் கண்டறிவது தான் பிரதானம். அதை விடுத்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு பெயரைச் சூட்டி குறிப் பிடுவதெல்லாம் வீணான முயற்சி. ஒரு ஆஸ்துமா நோயாளியின் பாதிப்பிற்கான மூலகாரணத்தைக் கண்டறியாமல், அதற் கொரு தற்காலிகத் தீர்வைத் தருவதால், அவ ருடைய சிறுநீரகம் பழுதாகிறது. நுரையீரலுக் கும் சிறுநீரகத்திற்கும் நுட்பமான அளவில் தொடர்பு உண்டு. இதனைச் சிலர் உணர்வ தில்லை. அதனால்தான் ஒரேவிதமான நோய்க்கு பத்து வகையிலான நிபு ணர்கள் அவசியமாகிறார்கள். ஆனால் அக்குபஞ்ச ரில் இந்நிலை இல்லை. இங்கு மூட்டு வலிக்கு வழங்கப்படும் சிகிச்சை யில் அவ ரின் இரத்த அழுத்தமும், நீரிழிவும் கட்டுப் படுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் என்பது நோயல்ல. அது ஒரு அறிகுறி மட்டும்தான்.

அதேபோல் எந்தவொரு நோய்க்கும் மாத்திரை என்பதும் சரியான தீர்வல்ல. ஏனெ னில் சாதாரணமாக மருந்தகங்களில் கிடைக் கும் பி கொம்ப்ளெக்ஸ் மாத்திரையை உட்கொண்ட பிறகு, சிறுநீர் மஞ்சளாக வெளியேறுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே தருணத்தில் இயற்கையான மஞ்சளையோ அல்லது மஞ்சள் தூளையோ பயன்படுத்திய பின் வெளியேறும் சிறுநீர் துளியளவும் மஞ் சள் வண்ணத்தில் வெளியேறுவதில்லை. இதிலிருந்து, எம்முடைய உடல் இயற்கை யான பொருட்களை ஏற்றுக்கொள்ளும் என்பதையும் செயற்கையான பொருட்களை -  அது மாத்திரையாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ளாது என்பதை உறுதியாக உணரமுடி கிறதல்லவா! அதேபோல் அண்மையில் இந் தியாவிலும், இலங்கையின் ஒரு பகுதியிலும் பரவிய சிக்கன்குனியா என்ற நோய்க்கு, பரிந்துரைக்கப்பட்டிருந்த பரசிட்டமோல் என்ற மருந்தை எடுத்துக் கொண்ட பலர், அதன் பின்விளைவாக சிறுநீரகப் பாதிப் பிற்கு ஆளாகியிருப்பது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வங்காள தேசம், பூட்டான் போன்ற நாடுகளில் இம் மருந்து தடைசெய்யப்பட்டிருக்கிறது என்ப தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அண்மைக் காலத்தில் அச்சுறுத்திய பன் றிக் காய்ச்சலுக்கான தீர்வு, இந்திய உணவு முறையே என்று ரஷ்ய மருத்துவர்கள் கண்ட றிந்தனர்.  இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள இந்திய உணவகங்களுக்குச் செல்ப வர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உணவே மருந்து என்று எம் மூதாதையர்கள் கண்டறிந்த உண்மையை இன்றைய மருத் துவ உலகம் ஆய்வு செய்து உறுதி செய்து வருவதைக் கண்கூடாக காண்கிறோம்.

தொடர்புக்கு: 0091 98417 1400
 
Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,979