Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சமையலறையே மருந்தகம், சமைக்கும் முறையே மருந்து
medicalonline-appointmenticon
medcialonline-Siddha Treament

`அவசியம் ஆரோக்கியம்' என்ற நிகழ்ச்சி மூலம் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்துவம் குறித்து பொதுமக்களிடைய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவர் டாக்டர் டி. என். கோவிந்தராஜு www.medicalonline.in க்காக அளித்த விளக்கம்.

தெற்காசியாவின் பெரிய மருத்துவ சவாலாக விளங்கி வரும் நீரிழிவு நோய்க்கு ஆங்கில மருத்துவம் உள்ளிட்ட எல்லாவித மருத்துவ சிகிச்சை முறைகளும், `மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்று பரிந்துரைக்கின்றன. இந்த வலியுறுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கு சித்த மருத்துவம் எத்தகைய ஆலோசனையை முன்வைக்கிறது?

உணவே மருந்து. மருந்தே உணவு. சமைக்கும் சமையலறையே மருந்தகம். சமைக்கும் முறையே மருந்து. இதனை தான் சித்த மருத்துவம் தன்னுடைய அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்பதை உணர்ந்து, பயன்படுத்தினால் ஆரோக்கியம் உறுதி. நாம் காரம், புளிப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என ஆறு வகையான சுவையைக் கொண்டிருக்கிறோம். இது எம்முடைய சிறப்பு என்றே சொல்லவேண்டும். இந்த ஆறு சுவைகள் எம்முடைய உடலில் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ பாதிக்கப்படுகிறோம்.

குடும்ப சூழல், பொருளாதாரச் சூழல், புறச்சூழல் என்ற பல காரணங்களால், நாம் இந்த ஆறு வித சுவையை சரிசமமாக பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. இதனைத் தொடர்ந்து எம்முடைய தொடர் இயக்கம் பாதிக்கப்படவே, மருத்துவ உதவியை நாடுகின்றோம்.

இந்நிலையில் எம்முடைய உடலை குணப்படுத்த ஏராளமான மருத்துவ சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், தெரிவு செய்வதில்  நாம் குழப்பமடைகின்றோம். அதே தருணத்தில் நாம் எடுத்துக்கொள்ள மருத்துவ உதவியால், விரைவில் பலன் பெறவேண்டும் என்ற எண்ணத்தையும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் எந்த மருத்துவ சிகிச்சை முறையையும் உறுதிபட பின்பற்றுவதில்லை. இதனால் மருத்துவ உதவி தொடர்கதையாகின்றது.

முதலில் எமக்கு ஏன் நோய் ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய வேண்டும். அதற்கான மூல காரணத்தை மருத்துவர் உதவியுடன் கண்டறிந்தவுடன், அவர் கூறும் அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தாலே நோய் குணமாகும்.

உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பின் செயல்பாட்டில் ஏற்பட்ட பாதிப்பால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்பதை சொல்வதற்கு முன், நோயாளி, அளவுக்கதிமான உணவை உண்டாரா? அளவுக்கதிமான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுபவரா? அல்லது பரம்பரை காரணமா? என்பதை முதலில் கண்டறியவேண்டும். அதனைத் தொடர்ந்து நாடி அடிப்படையில் கணக்கிட்டு, முதலில் உணவுக்கட்டுப்பாட்டையும், உடலுழைப்பையும் பரிந்துரைக்கவேண்டும்.

இலங்கையர்களை அதிகமாக பாதிக்கும் கடினமான தோல் வியாதியான சோரியாஸிஸும், நீரிழிவும் ஒன்று தான் என்றும், இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்கலாமேத் தவிர முழுமையாக குணப்படுத்திவிட இயலாது என்கிறார்களே இது உண்மையா?

மற்ற நாட்டினர் யாரேனும் சோரியாஸிஸால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று மாதமோ அல்லது ஆறு மாதமோ சிகிச்சை எடுத்துக்கொண்டால் எதிர்பார்க்கிற பலன் கிடைக்கிறது. ஆனால் இலங்கை நாட்டினரைப் பொறுத்தவரை இரண்டாண்டு காலம் வரை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இது புறச்சூழல் மற்றும் மண்ணின் தன்மையாகத் தான் கருதவேண்டியதிருக்கிறது. சோரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை.

நான் அவுஸ்திரேலியாவிற்கு சென்று சிகிச்சையளித்து வருகின்றேன். அங்குள்ள சூழல், உணவு பழக்கம் காரணமாக, நோயாளிகளுக்கு வீரியம் குறைந்த சித்த மருந்துகளே நல்லதொரு பலனைத் தருகின்றன என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அங்குள்ளவர்கள் காரம். புளிப்பை தவிர்த்துவிடுகிறார்கள். உப்பையும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். இதனால் வீரியம் குறைந்த சித்த மருந்துகளே போதுமானவையாக இருக்கிறது.

ஒரு ஆரோக்கியமான கணவனுக்கும் ( உயிரணுவின் எண்ணிக்கையும் வீரியமும் சரியான அளவில் இருப்பவர்கள்), ஒரு ஆரோக்கியமான மனைவிக்கும் (கருமுட்டையின் உற்பத்தியும், கருப்பையின் வளர்ச்சியும் சரியான அளவில் பெற்றிருப்பவர்கள்) திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றால் ஆங்கில மருத்துவம், ஐவி எப், இக்ஸி போன்ற முறைகளை பரிந்துரைக்கிறது. இத்தகையவர்களுக்கு சித்த மருத்துவம் எத்தகைய சிகிச்சைகளை பரிந்துரைகளாக வழங்குகிறது?

தம்பதிகளுக்குள் யாரேனும் குறைபாடு இருந்தால் அதனை மருத்துவ ரீதியாக கண்டறிந்து, அதனை சீரமைத்து குழந்தை பிறப்பிற்கான வழியை உறுதி செய்ய இயலும். ஆனால் குறைபாடுகளே இல்லாத போது அங்கு மருத்துவம் பயனற்று போகிறது அல்லது அவர்கள் விரும்பும் தீர்வை தர இயலாமல், வேறு ஒரு தீர்வினை திணிக்கிறது. ஆனால் இத்தகைய தம்பதிகளுக்கு சித்த மருத்துவம் வேறு ஒரு வகையான சிகிச்சையை பரிந்துரைக்கிறது. சித்தர்கள் மெய்ஞான அறிவு பெற்றவர்கள் என்பதால், இத்தகைய தம்பதிகளின் குறையை கர்ம வினை என்று குறிப்பிட்டு, அதற்குரிய தீர்வினை வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை சஷ்டி அல்லது வளர்பிறை பிரதோஷம் ஆகிய திகதிகளில் தங்களின் முன்னோர்களை மனதார வணங்கி, உணவை அதிகம் உண்ணாமல், ஒரு ஏழைக்கு அன்னதானம் வழங்கிய பின், தாம்பத்யத்தில் ஈடுபட்டால் நிச்சயம் கரு உண்டாகும். இதனை சித்த மருத்துவம் மட்டுமே பரிந்துரைக்கிறது. இதனால் பலன் கிடைத்தவர்கள் அதிகம்.

அதே தருணத்தில் சித்த மருத்துவம் என்றால் செக்ஸிற்கான மருத்துவம் என்று ஊடகங்களில் வெளியாகும் விளம்பரத்தில் உண்மை இல்லை. சித்தர்கள் என்றைக்குமே இதனை மட்டுமே வலியுறுத்தவில்லை. தீராத நாட்பட்ட எந்த வியாதியையும் குணப்படுத்தும் தன்மை சித்த மருத்துவத்திற்கு உண்டு.

உடற் பருமனைக் குறித்து சித்த மருத்துவம் எத்தகைய சிகிச்சைகளை கொண்டிருக்கிறது?

சித்த மருத்துவம் இதனை அதளரோகம் என்று குறிப்பிடுகிறது. உடலின் எடை, அளவிற்கு அதிகமாக கூடிவிடுவதால், முதலில் மன நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவே சோர்வை உண்டாக்கி, உடலின் செயல்பாடுகளை மந்தப்படுத்துகிறது.

பசித்தவுடன் தான் சாப்பிட வேண்டும். தேவையற்ற தருணங்களில், எத்தகைய நிர்பந்தங்களுக்கும் உடன்படாமல், சாப்பிடுவதில் ஒரு முறைமையை கடைபிடிக்கவேண்டும். உழைப்பிற்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சரிசமவிகிதமான சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதிகமாக சாப்பிட்டு நாம் தான் நோயை சுமக்கிறோமே தவிர, குறைவாக சாப்பிடுபவர்கள் பெரும்பாலான சிக்கல்களை சந்திப்பதில்லை.

தங்களுடைய மருத்துவ அனுபவத்தில் சாதனையாக கருதுபவை எவை?

சில ஆண்டுகளுக்கு முன், "ஐம்பத்தியாறு வயதான அரசாங்க ஊழியரான எமது கணவர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஆங்கில மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. தற்போது மரணத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். எங்களால் அவரின் நிலையைக் கண்டு, இயல்பாக இருக்க முடியவில்லை. அவரை இந்த நிலையில் தங்களால் காப்பாற்ற இயலுமா?" என அவரின் மனைவியும், அவரின் வாரிசும் எம்மிடம் கண்ணீருடன் கேட்டனர். அவர்கள் கொண்டு வந்திருந்த மருத்துவ பரிசோனை அறிக்கையை பார்த்துவிட்டு, `முடிந்தவரை சிகிச்சையை மேற்கொள்வோம். குணமாவதும், எதிர்மறையான விளைவு ஏற்படுவதும் ஆண்டவனின் செயல்' என்று கூறிவிட்டு, பதினைந்து நாள்களுக்கான மருந்துகளை கொடுத்தேன். அத்துடன் அவர்களை மறந்துவிட்டேன். அவர்கள் மூன்று முறை சீரான இடைவெளியில் வந்து அதே மருந்து மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். நான்காவது முறையாக அவர்கள் வந்தபோது, அவர்களிடம் விசாரித்தேன். தற்போது அவர் எழுந்து நடமாடுவதாகவும், எம்முடைய வாரிசு கல்லூரிக்கு செல்வதாகவும், மகிழ்ச்சி மீட்டெடுக்கப்பட்டதாகவும் கூறினர். நானும் மகிழ்ச்சியடைந்து விட்டேன். அதனைத் தொடர்ந்து வந்த தினங்களில் குறிப்பிட்ட அந்த நபர் எம்மைச் சந்தித்து, நான் தான் நீங்கள் அளித்த சிகிச்சையில் உயிர் பிழைத்து நோயாளி என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டார். அத்துடன் தற்போது தனியாகவே நூறு கீ. மீ தூரம் பயணித்து, தங்களை சந்தித்து, நன்றியை தெரிவிக்க வந்திருப்பதாகவும் கூறினார். இது எம்முடைய மருத்துவ அனுபவத்தில் மறக்க இயலாதவை. அதே தருணத்தில் குணப்படுத்திவிடமுடியும் என்று கருதி சிகிச்சையளித்த சில நோயாளிகளுக்கு, எதிர்பார்த்த பலன் கிடைக்காத அனுபவமும் உண்டு.

போலி மருத்துவர்களை அடையாளம் காணுவற்கான எளிய வழியொன்றை சொல்லுங்களேன்?

இன்று மருத்துவ துறை மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் அசலுக்கு நிகராக போலிகளும் வந்துவிட்டன. போலிகளை அடையாளங்காணும் திறனை பொதுமக்கள் தான் வளர்த்துக்கொள்ளவேண்டும். முதலில் ஒரு மருத்துவரைப் பற்றி கேள்விப்பட்டவுடன் மேலெழுந்தவாரியாக விசாரித்துவிட்டு அவரை சந்திக்கக்கூடாது. அவரைப் பற்றி தீர விசாரிக்க வேண்டும். இன்றைய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சற்று அதிகமாக இருப்பதால் போலிகளை இனங்கண்டு கொள்வது எளிது.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கொரு முறை அவுஸ்திரேலியாவிற்கு சென்று (சிட்னி, மெல்போர்ன்) அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறேன். எம்முடைய மருத்துவ அனுபவத்தில் ஈழத்தமிழர்களை மறக்க இயலாது. மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். உணவே மருந்து. சமையலறையே மருந்தகம். சமைக்கும் முறையே மருந்து. இதனை நினைவில் கொண்டு, எமது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த மருத்துவ குறிப்புகளை நீங்களே கற்றுணர்ந்து, தயாரித்து, பலன் பெறலாம்.

தொடர்புக்கு: 0091 93630 06643 / 0091 93440 06643

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,973