Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
புற்றுநோயைக் கண்டு பயம் வேண்டாம்!
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Oncology

புற்றுநோய் என்றதும் அதிர்ந்துபோய், செய்வதறியாது திகைத்த காலம் அது. இன்று,  மருத்துவம் வெகுவாக முன்னேறிவிட்ட யுகத்தில், புற்றுநோயின் தாக்கம் அதேயளவு இருக்கிறதா? என்ற கேள்விக்கு www.medicalonline.in ல் விளக்கமளிக்கிறார். கே.கோவிந்தராஜ்.

புற்றுநோய் - அன்றும், இன்றும்...?

புற்றுநோய் என்ற பதம் உயிர்கொல்லி நோய் என்ற வடிவிலிருந்து மாறியிருக்கிறது. குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்கள், சிறுநீரகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பிறப்புறுப்புப் புற்றுநோய் என்பனவற்றை ஆரம்ப நிலையில் அடையாளம் கண்டுகொண்டால் முற்றாக குணப்படுத்திவிடக்கூடிய வசதியை அறிவியல் வளர்ச்சி ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தச் செய்தி மக்களைச் சென்றடையும்வரை இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களிடம் மட்டுமே தோன்றும் புற்றுநோய்களும் இருக்கின்றனவே?

பத்தாண்டுகளுக்கு முன்வரை, பெண்களின் பிறப்புறுப்புப் புற்றுநோயின் தாக்க வீதம் அதிகரித்துக் காணப்பட்டது. இன்று மார்பகப் புற்றுநோயே முதலிடம் பிடித்துள் ளது - முக்கியமாக, தெற்காசிய நாடுகளில். இதற்குப் பிரதான காரணம் தற்போதைய மக்களின் மேல்நாட்டுப் பாணியிலான உணவுப் பழக்கவழக்கங்களே. அடுத்ததாக, தாய்ப்பால் கொடுப்பதில் பெண்களுக்குள்ள தயக்கம். வெளித் தோற்றம் பாதிக்கப்படும் என் பது மட்டுமன்றி, பெண்களின் பணிச்சுமையாலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது அருகிவருகிறது. இன்னோரன்ன காரணங்களால் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகும் பெண்களின் விகிதம் அதிகரிக்கிறது.

புற்று நோய்க்கு பலியான எனது தாயாரின் நினைவாக, கடந்த எட்டு ஆண்டுகளாக அவரது பெயரில், `டொக்டர் கே.சாந்தா மார்பகப் புற்றுநோய் மையம்' என்ற ஒன்றினை நிறுவி நடத்தி வருகிறேன். இந்த மையத்தின் மூலம், மார்பகப் புற்றுநோய் பற்றிய சுயபரிசோதனை முறையை இலவச மருத்துவ முகாம்கள் வழியாகக் கற்றுத் தருகின்றோம். மேலைநாட்டுப் பெண்களில் ஏறத்தாழ அனைவருமே முப்பது வயதுக்கு மேல் மார்பகப் புற்றுநோய்க்கான `மேமோகிராம்' எனும் பரிசோதனையைச் செய்துகொள்கிறார்கள்.  பொருளாதாரச் சிக்கல்களால் இந்தப் பரிசோதனையை கீழைத்தேய நாடுகளில் பெண்கள் செய்துகொள்வதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில், தங்களுடைய கைகளாலேயே செய்துகொள்ளக்கூடிய எளிய முறையிலான பரிசோதனையை, செய்துக்கொள்ளும் வழிவகைகளைக் கற்றுத் தருகிறோம். பத்து ஆண்டுகளின் பின், இந்தியாவில் ஒருவர் மார்பகப் புற்றுநோயால் உயிரிழக்கக்கூடாது என்பதே இந்த மையத்தின் லட்சியம்.

இருபது ஆண்டுகளாக எமது மருத்துவமனை சார்பில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மையத்தின் மூலம் பெண்கள் பிறப்புறுப்புப் புற்றுநோயைத் தவிர்க்கும் முகமாக, கிராமங்கள் தோறும் சென்று திரைக்காட்சிகள் மூலம், இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் இந்நோயைக் கண்டறிவதற்கான `பாப்ஸ்மியர்' எனும் பரிசோதனையையும் செய்கிறோம். இந்நோ யின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துமுகமாக, HPV தடுப்பூசிகளையும் வழங்கி வருகிறோம். வருமுன் காப்பது சிறந்ததல்லவா?

ஆண்கள் எந்தவிதமான புற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள்?

ஆண்களைப் பொறுத்தவரையிலும் இரைப்பைப் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் என்பனவே முதலிடம் வகிக்கின்றன. அடுத்து நுரையீரல் புற்றுநோய். இவை தவிரவும் மலக்குடல், கணையம், பித்த வடிகால் பாதை, கல்லீரல் போன்ற ஏனைய உறுப்புகளிலும் புற்றுநோய்கள்     காணப்படுகின்றன. ஆறு மாதத்துக்கு மேல் ஆறாத நீண்டநாள் புண்கள், உடல் எடை இழப்பு, பசியின்மை, மலத்தில் இரத்தம் வெளியேறுதல், கருமையான நிறத்தில் மலம் வெளியேறுதல், வாந்தி போன்றனவற்றை புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் எந்த உறுப்பில் புற்றுநோய் ஏற்பட்டிருக்கின்றதோ, அந்த உறுப்பின் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றங்களையே அறிகுறிகளாகக் கொள்ள முடியும்.

புற்றுநோய் சிகிச்சை களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

முன்னைய காலங்களில் புற்றுநோயை உறுதிசெய்துகொள்வதற்காக `பயோப்ஸி' என்ற, சிறிய சதைத்துண்டைக் கொண்டு நோயறியும் வழக்கமே இருந்துவந்தது. தற்போது `ஃபைன் நீடில் எஸ்பிரேஷன் சை ட்டோலஜி' (FNAC - Fine Needle Aspiration Cytology) என்ற பரிசோதனை முறை கையாளப்படுகிறது. ஒரு மெல்லிய ஊசி மூலம் குறிப்பிட்ட உறுப்பிலிருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு, அவ்வுறுப்பில் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறு தென்படுகிறதா என்பதை அறியலாம். இதை எந்த மருத்துவரும் செய்யலாம் என்பது சிறப்பு.

சிகிச்சை  முறைகள் பெருமளவில் முன்னேறியிருக்கின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சை களை சத்திர சிகிச்சை , கதிர்வீச்சு சிகிச்சை  மற்றும் கீமோதெரபி எனும் மருந்து சிகிச்சை  என மூன்று வகைப்படுத்தலாம். இதில் உடல் சத்திர சிகிச்சை  என்பது மரபுசார்ந்தது. இரண்டாவது கதிர்வீச்சு சிகிச்சை . இது தற்போது `காமா நைஃப்', `சைபர் நைஃப்' என்பவற்றில் வந்து நிற்கிறது. சை பர் நைஃப் மூலம், புற்றுநோய் ஏற்பட்டிருக்கும் உறுப்புகளின் பகுதிகளை, கதிர்வீச்சு மூலம் துல்லியமாக, ஏனைய உறுப்புகளுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அகற்ற முடிகிறது. கீமோ தெரபியைப் பொறுத்தளவில்,  நான்கு வகையான மாத்திரைகளை மட்டுமே நோயாளிக்குத் தேவைப்படும் விதத்தில் மாற்றி மாற்றி வழங்கி வந்தோம். இப்போது கீமோதெரபியில் இருநூறுக்கும் மேற்பட்ட மருந்துகள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் எந்த உறுப்புக்கு சிகிச்சை  தேவையோ, அந்த உறுப்புக்கு மட்டும் சிகிச்சை  அளிக்கலாம். முடி உதிர்ந்துவிடுதல், வாந்தி போன்ற தேவையற்ற பக்கவிளைவுகள் தற்போதைய கீமோதெரபியில் குறைந்துவிட்டன.

எமது மருத்துவமனையைப் பொறுத்தவரையில் இரைப்பை, உணவுக்குழாய், மலக்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை யளித்து வருகிறோம். இதற்காக, தமிழ்நாட்டில் வேறெங்கும் காணப்பட முடியாத, புற்றுநோயைக் கண்டறியும் அதிநவீன `குரோமோ எண்டஸ்கோபி' என்ற பரிசோதனை முறையையும் எமது மருத்துவமனையில் கையாள்கிறோம். அதுபோலவே, இலகுவில் அணுக முடியாத சிறுகுடல் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயைக் கண்டறியவும் சிகிச்சை யளிக்கவும் கூடிய `டபிள் பலூன் எண்டாஸ்கோபி' முறையும் இங்குள்ளது.

அதுபோலவே, மிக அவஸ்தை தரும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கான `ஸ்டெ ன்ட்' சிகிச்சை யையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். மேற்படி நோயால் வாடுபவர்களால் எந்த உணவையும் உட்கொள்ள முடியாது தவிப்பார்கள். அவர்களை இந்த சிகிச்சை  மூலம் ஒரே நாளில் குணப்படுத்திவிடலாம். சிகிச்சை க்கு அடுத்த நாளே அவர்கள் எந்த உணவையும் உட்கொள்ள இந்த சிகிச்சை  வழிசெய்கிறது. ஆசியாவில், இந்த சிகிச்சை  மூலம் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை குணப்படுத்திய ஐந்து மருத்துவமனைகளில் எமது மருத்துவமனையும் ஒன்று.

நவீன `லேப்ராஸ்கோப்பி' சிகிச்சை  வழியாக, உடலைக் கிழிக்காமல் ஒரு சிறு துளையையிட்டு அதன் வழியாகவே, பாதிக்கப்பட்ட உறுப்புப் பகுதிகளையும் கட்டிகளையும் அகற்றிவிட முடிகிறது. இந்த சிகிச்சை யால் உடல் தழும்புகளோ, சிகிச்சை யின் பின்னான வலியோ ஏற்படாது. இந்த சிகிச்சை யை செய்துகொண்டவர்கள் வெகு விரைவிலேயே தமது நாளாந்த வாழ்க்கைக்குத் திரும்பிவிடவும் முடியும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக அதி நவீன சிகிச்சை  முறையான ஐ.ஓ.ஆர்.டி. (ஐ.ˆ.கீ.கூ. ஐணணாணூச் ணிணீஞுணூச்ணாடிதிஞு கீச்ஞீடிணி கூடஞுணூச்ணீடதூ) எனும் சிகிச்சை யையும்  அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதன் மூலம் புற்றுநோய்க்கான சத்திர சிகிச்சை யின்போதே கதிர்வீச்சு சிகிச்சை யையும் செய்துவிடலாம். இதனால் மீண்டும் புற்றுநோய் அச்சுறுத்தல் தவிர்க்கப்படுகிறது. மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

புகையிலைப் பழக்கம் இல்லாதோருக்கும் புற்றுநோய் ஏற்படுகின்றதே?


புற்றுநோய்க்கு மிக முக்கிய காரணம் புகையிலை என்பதே உண்மை. ஆனால் அது தவிரவும் பல காரணங்கள் இருக்கின்றன. புகைப்பவர்களுக்கு அருகிலிருந்து பணியாற்றும் அல்லது பழகுபவர்களும் கூட  புற்றுநோய்க்கு ஆளாக நேரலாம். சீமெந்து, அலுமினியம், அஸ்பெஸ்டாஸ் போன்ற தொழில்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பவர்களும் நச்சுப்பொருளைச் சுவாசிக்கவேண்டியிருப்பதால் புற்றுநோய்க்கு ஆளாகலாம்.

இதைவிட, மரபு ரீதியாகவும் புற்றுநோய்க்கு ஆளாவோர் பலர் உண்டு. காரணம் கண்டுபிடிக்க முடியாத புற்றுநோய்களும் உண்டு.

ஸ்டெம்செல்-மரபணு சிகிச்சை  மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

புற்றுநோய் மட்டுமன்றி, பல்வேறு நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஒரே வழியாக ஸ்டெம்செல் சிகிச்சை தான் கருதப்படுகிறது. ஆயினும் இவற்றின் பயன்பாடு குறித்த பரீட்சார்த்த ஆய்வுகளே தற்போது நடைபெற்று வருகின்றன. அவை இன்னும் பூரண நிலையை அடையவில்லை.

பிறநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு சிகிச்சை க்காக வருபவர்களுக்கு உங்கள் மருத்துவமனை என்னென்ன வசதிகளைச் செய்துகொடுக்கிறது?

இங்கு வரும் எந்த நோயாளியும் ஆலோசனைக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை (Free consultation). அதேபோல், உலகெங்கும் பேசப்படும் மருத்துவச் சுற்றுலா திட்டத்தையும் செயற்படுத்திவருகிறோம். இதில் தங்களைப் பதிவுசெய்துகொள்பவர்களுக்கான மருத்துவத் தேவைகளை  நிறைவேற்றித் தருகிறோம். உதாரணமாக, இலங்கையில் இருந்து சிறந்த மருத்துவ சிகிச்சை க்காக எம்மிடம் வர விரும்புபவர்களை திருச்சி விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்து, அவர்களுக்குத் தங்குமிட வசதி, உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளையும், சிகிச்சை களையும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம். அதனைத் தொடர்ந்து, பெற்றோரைப் பிரிந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் எம்முடன் தொடர்புகொண்டால், அவர்களுடைய நோயுற்ற பெற்றோரை நாங்களே பொறுப்பேற்றுப் பார்த்துக்கொள்ளும் திட்டம் பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

தொடர்புக்கு:  0091 98424 55566

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,971