Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
குழந்தை ஆரோக்கிய குறைப்பாட்டை அலட்சியப்படுத்தாதீர்கள்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Pediatrics

குழந்தை மருத்துவத்தில் மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, மகிழ்ச்சியுடன் மருத்துவ சே வை செய்து தருகிறார் சென்னையில் உள்ள சர்வதேச மருத்துவமனையான போரூர் ஷ்ரீராமசந்திரா மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவ பிரிவில் சத்திர சிகிச்சை  நிபுணராகவும், இம்மருத்துவனையின் வளாகத்தில் இயங்கி வரும் ஷ்ரீராமசந்திரா மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் மருத்துவத்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டொக்டர் எஸ். பாலகோபால். அவரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

பொதுவாகவே சத்திர சிகிச்சை யென்றால் பதினெட்டு வயதிற்கு மேல் தான் என்றிருக்கும் போது, குழந்தைகளுக்கும் சத்திர சிகிச்சை  அவசியமாகிறதே ஏன்?


குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சை யைப் பொறுத்தவரை,  பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்காகச் செய்யப்படும் சத்திர சிகிச்சை  ஒரு வகை. பாடசாலைக்குச் செல்லும் முன்னர் செய்துகொள்ளும் சத்திர சிகிச்சை  இரண்டாவது வகை. பாடசாலையில் படிக்கின்ற குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவம் அதாவது பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு வயது வரையுள்ளவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கலுக்கான சத்திர சிகிச்சை  மூன்றாவது வகை என குழந்தைகளின் சத்திர சிகிச்சை க்கான  கால கட்டத்தை மூன்று வகைப்படும்.

இதில் முதலாவது வகை எப்போது அவசியமாகிறது என்றால், கர்ப்பப்பையில் கரு தரித்து வளர்கின்ற காலத்தில் உருவாகும் பிரச்சினைகள், ஒவ்வொரு கருத்தரித்த தாயையும் மருத்துவர்கள் பன்னிரண்டு மற்றும் இருபதாவது வாரத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்வார்கள். ஐந்தாவது மாதத்தின் முடிவில் எடுக்கப்படும் ஸ்கேன் மூலம், கரு இயல்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளதா? அல்லது அதில் ஏதேனும் சிக்கல் (இதயம், ஈரல், குடல் உள்ளிட்ட பகுதிகளில்) உருவாகுமா? என்பதை நிர்ணயிக்க முடியும்.

அதேநேரம், பிறக்கப் போகும் குழந்தை உயிர்வாழ்வதில் சிரமங்கள் இருக்கும் பட்சத்திலும், அதன் உயிரைக் காப்பாற்ற முடியாத பட்சத்திலும், பெற்றோர்களின் சம்மதத்தின் பேரிலும், தாய்க்கு ஏற்படப் போகும் ஏமாற்றத்தைத் தவிர்க்கவும், சட்டபூர்வமாக குழந்தை வேண்டாம் என்று தீர்மானிக்கவும் இந்த ஐந்தாவது மாத ஸ்கேன் பயன்படுகிறது. அதேநேரம், காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் தீர்மானித்துவிட்டால் ஒவ்வொரு மாதத்திலும் குழந்தையின் வளர்ச்சி குறித்து ஸ்கேன் எடுத்து, உறுதி செய்துகொள் ளலாம். இவ்விடயத்தில் குழந்தை பிறப்பிற்கு முன்பே பெற்றோரையும், உறவினர்களையும் மனதளவில் (சத்திர சிகிச்சை  செய்து தான் குழந்தையை பெற்றெடுத்தல், பிறந்த குழந்தைக்கு தேவைப்படும் சத்திர சிகிச்சை , அதற்கான செலவு, அதற்காகச் செலவிட வேண்டிய நேரம் என்பன) தயார் செய்கிறோம். ஏனெனில் திடீரென்று ஒரு சம்பவம் நடக்கும்போது தான் அதனை எதிர்கொள்ள நாம் சிரமப்படுகிறோம். பயமும் கொள்கிறோம். ஆனால் அது குறித்து முன்னமேயே தெரிந்துவிட்டால் பதற்றமடைவதில்லை, அத்துடன் அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் உண்டாகிவிடுகிறது.

குழந்தை பால் குடிக்க முடியாமல், உணவுக் குழாயும், மூச்சுக் குழாயும் சிலருக்கு இணைந்தேயிருக்கும் அல்லது உணவுக் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கும். இது போன்ற சிக்கலை சந்திக்கும் குழந்தைக்கு, பிறந்த  6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்குள் சத்திர சிகிச்சை  செய்யவேண்டியிருக்கும். வயி றும் அதனுடைய பகுதிகள் அனைத்தும் இயல்பான இட த்தில் இல்லாமல் நெஞ்சுப்பகுதிக்குள் ஏற்றமாகிவிடும். இதனால் பிறந்த குழ ந்தை மூச்சு விடுவதில் கடு மையான சிரமம் இருக்கும். இது போன்ற பிரச்சினையை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு, பிறந்து 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் சத்திர சிகிச்சை  செய்யவேண்டியிருக்கும்.  சிறுகுடல், பெருங்குடலில் அடைப்புகளோடு பிறக்கும் குழந்தைகளுக்கும் அதற்குரிய காலகட்டத்தில் சத்திர சிகிச்சை  அவசியமாகிறது. இத்தகைய பிரச்சினைகளுள்ள குழந்தைகளுக்குச் செய்யப்படும் சத்திர சிகிச்சை யின் வெற்றிவீதத்தை நிர்ணயிப்பது கடினம். அதற்காக சத்திர சிகிச்சை  அவசியமற்றது என்று எண்ணவேண்டாம். இன்று எத்தனையோ குழந்தைகள் மிக நுண்ணிய அளவிலான சத்திர சிகிச்சை யை செய்து வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

அதற்கடுத்து, பிறந்து 6 மாதம்  முதல் மூன்றரை வயது வரையுள்ள குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சை . ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் உள்ள சிக்கல்கள், விரைப்பையைச் சுற்றியுள்ள நீர்க்கட்டிகள், குடலிறக்கம், வயிற்றிலேயே விரை தங்கிவிடுதல், சிறுநீர் துவாரம் வளர்ச்சியின்மையால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றிற்று சத்திர சிகிச்சை  மூலமே தீர்வு வழங்கப்படுகின்றன. இத்தகையவர்களுக்கு சிலநேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சத்திர சிகிச்சை யும் அவசியமாகிவிடும். அதேபோல், ஆசன வாயின் அமைப்பு இல்லாதிருத்தல் அல்லது இயல்பாக இல்லாதிருத்தல் போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் குழந்தைகளுக்கு முதலில் எட்டாவது மாதத்தில் வயிற்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தெரிவு செய்து, ஓட்டை அமை த்து, மலத்தை வெளியேற்ற வழி காணப்படும். அதன் பிறகே ஆசன வாயை உருவாக்கி, அதன் செயற்பாட்டைக் கண்காணித்துச் சீராக்குவோம்.

அடுத்தது பாடசாலையில் படிக்கும் குழந்தைகளுக்கானது. இப்பிரிவினர் பெரும்பாலும் அப்பென்டிஸைடிஸ், சிறுநீரகக் கல், பித்தப்பை கல், விபத்து, குடல் பகுதியில் ஏற்படும் நோய்த்தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கும் சத்திர சிகிச்சை  மூலமே உரிய தீர்வு காணப்படுகின்றன. ஒரு சிலருக்கு அதிசயமாக பன்னிரண்டு வயதில் விரைப்பைச் சுருக்கம் வந்துவிடும். இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, சத்திர சிகிச்சை  செய்தால் தான் காப்பாற்ற இயலும்.

பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகளில் உள்ள வித்தியாசங்கள் என்ன?


குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சை யின் போது மிக முக்கியமாகக் கருதப்படுவது கன்சர்வேடிஸம். அதாவது குழந்தையின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டே சத்திர சிகிச்சை  யைத் தீர்மானிப்பது. இது எளிதான காரியமல்ல. ஏனெனில் சில சிக்கல்களுக்கு அவர்களின் வளர்ச்சியே தீர்வாக அமையலாம்.

பெரியவர்களுக்கு சத்திர சிகிச்சை யின் போது நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, இரத்த அழுத்தம் போன்ற இடையூறுகள் இருக்கும். ஆனால் இவை குழந்தைகளுக்குக் கிடையாது. அதனால் சத்திர சிகிச்சை யின்போது, அனஸ்தீஷியா வழங்கும் பணி கடினமாக இருக்காது.  அதேபோல், தோல் பகுதியில் வளர்ச்சி இருப்பதால், சத்திர சிகிச்சை க்குப் பின்னான வடுக்களும் விரைவில் மறைந்துவிடும். பெரியவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்கு நரம்புகள் எளிதில் கிடைக்கும். ஆனால் குழந்தைகளுக்கு இது சாத்தியமாவதில்லை. இவற்றையெல்லாம் விட பெற்றோ ர்களின் உணர்ச்சி நிலை (பேரண்ட்ஸ் எமோஷனல் ஸ்டேடஸ்)தான் மிகப்பெரிய சவால்.

குழந்தைகளுக்கான ஒவ்வொரு சத்திர சிகிசை யின்போதும் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களின் ஒருங்கிணைப்பு பிரதானமாகக் கருதப்படுகின்றன. காரணம் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக விளங்கப்போகும் குழந்தைகளுக்கு சத்திர சிகிச்சை  செய்கிறோம் என்ற உணர்வு மேலோங்கியிருப்பதே.

சிலர், இன்றைய இளந்தாய்மார் குழந்தை வளர்ப்பில் வீட்டில் உள்ள முதியவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் வழங்காமல், மருத்துவர்களின் அறிவுரையை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள் என்கிறார்கள். இது சரியா?

இந்த வினாவிற்கு பதிலளிக்கவேண்டுமானால் சற்றுப் பின்னோக்கிச் செல்லவேண்டும். ஆங்கில மருத்துவம், கிட்டத்தட்ட ஐம்பது முதல் எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அறிமுகமாகி பிரபலமடைந்து வருகிறது. மருந்தகங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துகள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாகத்தான் இருந்து வருகின்றன. இவற்றின் நோக்கம் மனிதனுக்கு தரமான ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவது தான். மனிதனைத் தாக்கும் கிருமிகள், தொற்று நோய்கள் ஆகியவற்றை ஆங்கில மருத்துவம் வென்றிருக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை. அதே தருணத்தில் மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி வாழ்க்கை நடத்திவிட முடியாது என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எழுபது வருடத்திற்கு முன் குழந்தைகள் பிறந்தார்கள், வளர்ந்தார்கள், வாழ்ந்தார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட கட்டிடங்கள், ஆலயங்கள் எல்லாம் இன்றும் இருக்கின்றன. இவையனைத்தும் மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்ததன் அடையாளம்தான். அதனால் பழைய விடயங்கள் எல்லாமே கைவிடப்படவேண்டியவையல்ல. புதிய விடயங்கள் எல்லாம் ஏற்கக்கூடியவையுமல்ல. அவசியமானவற்றிற்கு மட்டும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றால் போதுமானது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்பதற்கு மருத்துவரின் அறிவுரை தேவையில் லை. அது ஒவ்வொரு தாயினதும் இய ல்பான விடயம். இதில் பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவர்கள் உள்ளே வரலாம்.

ஒரேயொரு செய்தியை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். மருத்துவமனைச் சூழலில் தற்போது பிரசவங்கள் நடப்பது இயல்பாகிவிட்டதால், குழந்தையின் தந்தையை பிரசவ அறைக்குள் அழைத்து வந்து, தாய் படும் பிரசவ வேதனையைக் கண்டுணரச் செய்வதுடன், குழந்தைக்கும், தாயிற்கும் இடையேயுள்ள தொப்புள் கொடியை கத்திரிக்கக்கூடிய வாய்ப்பையும் வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே உள்ள முக்கியத்துவம் மீண்டும் புத்துயிரளிக்கப்பட்டு வருகிறது. எனவே மருந்துகள் வாழ்க்கையை நடத்துவதில்லை. வியாதியை அகற்ற மட்டுமே மருந்துகள் பயன்படும். அதேநேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண் டும்.

குழந்தை மருத்துவத்தைப் பொறுத்தவரை எம்மாதிரியான விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

பிரச்சினைகளைத் தள்ளிப்போடாதீர்கள். `குழந்தைதானே! வளர்ந்தால் சரியாகிவிடும்' என்ற முடிவைப் பெற்றோர்கள் சுயமாக எடுக்கவேண்டாம். மருத்துவர்களின் ஆலோசனையுடன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும். இதன்மூலம் குழந்தைகளை இழக்க வேண்டிய வாய்ப்புகள் குறையும். சத்திர சிகிச்சை  என்றவுடன் பெற்றோர்கள் முதலில் பயப்படுவது மயக்க மருந்துகளுக்கு. அந்தப் பயம் தற்போது தேவையில்லை. குழந்தைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மருத்துவத் தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது.

தொடர்புக்கு:   0091 98402 11464

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,837