Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
கொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை முறை - சூப்பர் பிஷியல் லைபோசக்ஷன்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Physiotherapy

சிக்ஸ்பேக் கட்டுடல் தோற்றத்துடன் வலம் வர இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பத்தை உள்வாங்கி, பாதுகாப்பான முறையில் சிக்ஸ்பேக்கை உருவாக்குவதில் தன்னிகரில்லா மருத்துவர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கு வேட்டு வைக்கும் தொப்பை மற்றும் கூடுதலான சதைப்பகுதிகளில் உள்ள கொழுப்பை அகற்றுவதில் நவீன சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர். நோயாளிக்கும், தனக்குமான உறவை, மருத்துவர் என்ற எல்லைக்கோட்டிற்கும் அப்பாலும் நேசிப்பவர் என்ற பல முகங்களோடு வளைய வருகிறார் சென்னையில் இயங்கி வரும் முபரன் மருத்துவமனையின் காஸ்மெடிக் சத்திர சிகிக்சை நிபுணரான டொக்டர் கார்த்திக். இவரை சந்தித்து, காஸ்மெடிக் சத்திர சிகிச்சையில் உள்ள சந்தேகங்களை கேட்டபோது, அவர் www.medicalonline.in க்கு அளித்த விளக்கங்கள் இதோ..

உடல் பருமனுக்குக் காரணமான கொழுப்பை அகற்ற தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள சூப்பர் பிஷியல் லைபோசக்ஷன் என்ற சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்தும், அதன் தனித்துவம் குறித்தும் எங்களுக்கு விளக்குங்களேன்?

உடலுழைப்பு குறைவாக இருப்பதாலும், உணவு பழக்கத்தினை மாற்றியமைத்துக் கொண்டதினாலும், ஒரு சிலருக்கு பரம்பரையின் காரணமாகவும் தான் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. இப்பிரச்சினை ஆண், பெண் என இரு பாலாருக்கும் வரக்கூடியது. ஆண்களுக்கு வயிற்றுப்பகுதியின் இரு புறங்கள், மார்பு, பின்புறம் ஆகிய பகுதிகளிலும், பெண்களுக்கு பின்புறம், இடுப்பு, தொடை, கை ஆகிய பகுதிகளிலும் அதிகப்படியாக கொழுப்பு தங்கி, உடற் பருமன் பிரச்சினையை உருவாக்குவதோடு, அழகையும், தன்னம்பிக்கையையும் கெடுக்கிறது. இதனால் ஒரு சில தருணங்களில் அன்றாட நடவடிக்கைகளில் கூட இயல்பாக ஈடுபட முடிவதில்லை. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை தான் சூப்பர் பிஷியல் லைபோசக்ஷன் அல்லது ஹை டெபினிஷியன் லைபோசக்ஷன்.

இந்த சிகிச்சையில், உடலில் எப்பகுதியில் கொழுப்பு சேர்ந்திருக்கிறதோ அப்பகுதியில் ஒரு சிறிய அளவிலான ஊசியின் மூலம் அங்கிருக்கும் அதிகப்படியான கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும். உடலிலிருந்து கொழுப்புகள் அகற்றப்பட்ட பின் மீண்டும் அவை சேர்ந்துவிட வாய்ப்புண்டு. ஆனால் இம்முறையில் இதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், பழைய சிகிச்சை முறையில் வயிற்று பகுதியின் மேல் மற்றும் கீழ் அடுக்குகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளில் ஏதேனும் ஒரு அடுக்குகளில் உள்ளதை மட்டுமே உறிஞ்சு எடுத்துவிடுவார்கள். அதனால் அப்பகுதியில் மீண்டும் கொழுப்பு சேர்ந்துவிடும். நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் சிகிச்சையில் இரு அடுக்குகளிலும் கொழுப்பு எடுத்துவிடுவதால் மீண்டும் கொழுப்பு சேராது. இது தான் எம்முடைய சிகிச்சையின் சிறப்பம்சம். மேலும் இவ்வகையிலான சத்திர சிகிச்சை துல்லியமானது. பாதுகாப்பானது. அதிக கால அவகாசம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. விரைவிலேயே இயல்பாக இருக்கலாம்.

உடலுக்கு சக்தியை வழங்குவதில் கொழுப்பிற்கும் பங்கிருக்கும் போது, அதனை அகற்றுவதால் உடல் சோர்வடையாதா?


நம் உடலில் வயிற்று பகுதியில் மட்டும் தான் கொழுப்பு இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். அப்படியல்ல. மார்பு பகுதிகளிலும் கூட கொழுப்பு இருக்கிறது. நாங்கள் எல்லா இடத்தில் உள்ள கொழுப்பையும் எடுப்பதில்லை. தேவைக்கதிகமாக இருக்கும் கொழுப்பை மட்டுமே உறிஞ்சுகிறோம். இதனால் உடல் பலவீமடையாது. மாறாக தேவைக்கதிகமான கொழுப்பு அகற்றப்பட்டதால் உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கத் தொடங்கும். இவ்வகையிலான சத்திர சிகிச்சையின் போது, நோயாளிக்கு வழங்கப்படும் அனஸ்தீசியாவின் அளவில் மட்டுமே மாறுபாடு இருக்குமே தவிர வேறு எந்த வித குறைபாடும் இல்லை.

இவ்வகையான சிகிச்சைக்கு பிறகு உடல் எடை குறையுமா?


உடலின் எடையை திடீரென குறைப்பதை நாங்கள் விரும்புவதில்லை. ஏனெனில் அது ஆரோக்கியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. பாதுகாப்பானதுமல்ல. இவ்வித சிகிச்சைக்கு பின்னர் உடலின் எடை சிறிதளவே குறையும். அதாவது உதாரணத்திற்கு 147 கிலோ எடையுள்ளவர், இந்த சிகிச்சைக்கு பின்னர் 142 கிலோ எடையுடன் இருப்பார். இந்த சிகிச்சைக்கு பின்னர் நாங்கள் அறிவுறுத்தும் உணவு கட்டுப்பாட்டை உறுதியாக கடைபிடித்தால் 120 கிலோ உடல் எடையுடன் பராமரிக்க இயலும்.

இந்த சிகிச்சையின் போது கொழுப்புடன் இரத்தமும் உறிஞ்சு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?

இது ஓரளவிற்கு உண்மை தான் என்றாலும், அளவில் மிகக்குறைவு. தோலிற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் சிகிச்சையை வடிவமைத்திருக்கிறோம்.

ஒரு முறையில் ஆறு லிற்றர் கொழுப்பு தான் அகற்றப்படவேண்டும். அதற்கு மேல் அகற்றினால் ஆரோக்கியதிற்கு கேடு வரும் என்கிறார்களே சரியா?

மருத்துவமனை சூழல் இல்லாத தருணங்களில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையில் தான் இந்த அளவீடு. ஆனால் நாங்கள் முழுவதும் மருத்துவமனை சூழல் மற்றும் அணைத்து வித வசதிகளுடன் கூடிய பின்னணியில் இந்த சிகிச்சையினை மேற்கொள்வதால் இந்த அளவீடகள் பொருந்தாது. எம்முடைய அனுபவத்தில் நான் ஒரே முறையில் 12 லிற்றர் கொழுப்பை அகற்றியிருக்கிறேன். இதனை அகற்றும் போது மருத்துவர்கள் தான் சோர்வடைவார்களே தவிர நோயாளி சோர்வடையமாட்டார்கள். இந்த அளவீடு எங்கு சாத்தியம் ஆகும் என்றால், காலையில் மருத்துவமனையில் இவ்வகையிலான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மாலையில் வீடு திரும்ப திட்டமிட்டிருக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சாதாரண அறிவுரை மட்டுமே. உடலின் எடையில் பத்து சதவீத எடையுள்ள கொழுப்பினை ஒரே முறையில் அகற்றலாம் என்பதும் மருத்துவ உலகில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு நியதி. அதாவது 150 கிலோ உடல் எடையுள்ள ஒருவரின் உடலிலிருந்து, அவரின் உடல் எடையில் பத்து சதவீதமான 15 கிலோ கொழுப்பை ஒரே தருணத்தில் அகற்றலாம் என்று பொருள். அதேப்போல் உடலில் ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து மட்டும் தான் எடுக்க வேண்டும் என்றில்லை. வயிறு, கை, மார்பு, தொடை, இடுப்பு என எல்லா பகுதியிலிருந்தும் ஒரே தருணத்தில் கொழுப்பை அகற்றலாம்.

யாருக்கு, எப்போது இவ்வகையான சத்திர சிகிச்சை அவசியமாகிறது?

தொப்பையால் முதுகுத் தண்டின் செயல்பாட்டில் ஒரு சமச்சீரற்ற தன்மை உருவாகி வலியாக இருந்துக்கொண்டிருக்கும். அத்தகையோர்கள் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதை விட, வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை இவ்வகையிலான சிகிச்சை மூலம் அகற்றினால், முதுகு வலி குறைவது போல் உணர்வார்கள். ஆனால் இவ்வகையான சத்திர சிகிச்சை செய்தால் முதுகு வலி குறையும் என்று நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது. தங்களின் உடல் எடையை சுமந்து, பணியாற்ற முடியவில்லை என்று கருதும் அனைவருக்கும் இவ்வகையான சத்திர சிகிச்சை அவசியம்.

இழந்த கன்னித்தன்மையை மீட்டெடுக்க இவ்வகையிலான சத்திர சிகிச்சை உதவுகிறதா?


இழந்த கன்னித்தன்மையை ஒரு போதும் மீட்டெடுக்க இயலாது. ஆனால் ஒரு சிலருக்கு அப்பகுதியின் நுழைவுவாயில் இயல்பை விட பெரிதாக இருக்கும். அவர்களுக்கு டைட்னிங் என்றொரு சிகிச்சை மூலம் நிவாரணம் பெறலாம். மேலும் வேறு சிலருக்கு அப்பகுதி முழுவதுமே சமச்சீரில்லாமல் இருக்கும். அதனை சீராக்கவும் சத்திர சிகிச்சை இருக்கிறது.

பெண்கள் தங்களின் மார்பகங்களை பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ அல்லது சீராக்கவோ பயன்படுத்திக்கொள்ளும் சத்திர சிகிச்சையினால் எத்தகைய பின்விளைவுகள் உண்டு?

பெண்கள் இவ்வகையிலான சிகிச்சையை செய்து கொண்ட பிறகு மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்ற தவறக்கூடாது. உடல் எடையை அதிகரித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் எடை அதிகரித்துவிட்டால் பின் விளைவு உறுதி.

பிளாஸ்டிக் சர்ஜரி, காஸ்மெடிக் சர்ஜரி இவற்றில் எது சிறந்தது? ஏன்?

இரண்டு சத்திர சிகிச்சையிலும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தில் எந்த மாற்றமுமில்லை. மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் விருப்பத்தின் அடிப்படையிலே இவை தெரிவுச் செய்யப்படுகின்றன. காஸ்மெடிக் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரிையை விட சற்று பொறுமையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்று சொல்லலாம்.

உடல் எடையை குறைப்பதற்காக செய்யப்படும் பேரியாட்ரிக் சர்ஜரிக்கும், நீங்கள் செய்யும் சர்ஜரிக்கும் என்ன வித்தியாசம்?

உடற்பருமன் பிரச்சினைக்காக மேற்கொள்ளப்படும் பேரியாட்ரிக் சத்திர சிகிச்சையில் வயிற்றுப்பகுதியின் கொள்ளளவு செயற்கையாக குறைக்கப்படுகிறது. இதனால் பலன் இருந்தாலும், எதிர்காலத்தில் சுருக்கப்பட்ட வயிற்றுப்பகுதியில் விட்டமின் பி சத்து கிரகிக்கப்படுவதில் குறைபாடு ஏற்படும்.இதனால் ஆயுள் முழுவதும் விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரை சாப்பிட வேண்டியதிருக்கும். அத்துடன் மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டியதிருக்கும். இயற்கைக்கு முரணான இவ்வகையான சத்திர சிகிச்சையை விட, நாங்கள் செய்யும் காஸ்மெடிக் சத்திர சிகிச்சை பாதுகாப்பானது. துல்லியமானது. எம்முடைய அனுபவத்தில் ஒருவருடைய உடல் எடையை 140 கிலோவிலிருந்து, 110 கிலோவாக குறைத்திருக்கிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழாமல் இருக்க போடெக்ஸ் என்ற ஊசியினை பயன்படுத்துகிறார்களே இதன் ஆயுள் எவ்வளவு மாதங்கள்?

ஆண்களைப் பொருத்தவரை நான்கு மாதங்களும், பெண்களைப் பொருத்த வரை ஆறு மாதங்களும் இருக்கிறது என்பதை எம்முடைய அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் இவ்வகையான சத்திர சிகிச்சை தேவையற்றது என்றும், பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்றும் கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்றைக்கு இது எல்லா தரப்பினருக்கும் அவசியமான சத்திர சிகிச்சைகளில் ஒன்றாகிவிட்டது. அத்துடன் இந்த சிகிச்சை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளும் வகையில் வெளிப்படையாகவும், எளிமையாகவும், குறைவான கட்டணத்திலும் கிடைக்க வழி வகை செய்திருக்கின்றோம். எனவே அனைவரும் இதனை பயன்படுத்திக்கொண்டு, தங்களின் அழகோடு உழைக்கும் திறனையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
 

தொடர்புக்கு:  0091 96000 58899 / 00 91 94440 35171
 
Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,962