Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
அதிக மனச்சோர்வுக்கு அருமருந்து
medicalonline-appointmenticon
medcialonline-Psychiatry

மனநலம் சார்ந்த  குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு ஹிப்னாடிசம் மூலமாகவும் சிகிச்சை வழங்கி குணப்படுத்தமுடியும் என்கிறார் சென்னையில் இயங்கிவரும்  ரூஷி குமார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் செல்ஃப் டெவலப்மெண்ட்டின் இயக்குநர் டொக்டர் அசாரியா செல்வராஜ்.  அவர் சைக்கோ தெரபி குறித்தும், அதனை பயன்படுத்துவது குறித்தும் தன்னுடைய எண்ணத்தை www.medicalonline.in உடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒருவர் தமக்குத்தாமே அறிதுயிலை ஏற்படுத்திக்கொள்ளலாம். அதில் சஜஷன்கள் எனப்படும் கூற்றுமொழி களை ஆழ்மனதில் பதியவைப்பதன் மூலம் அறிதுயிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லது கற்பனா சக்தியைக் கொண்டும் ஆழ்மனதில் கருத்துகளை பதியவைக்கலாம். இதனை சற்று விளக்கமாக காண்போம். பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி விளம்பரங்களில் படங்கள் மற்றும் காட்சிகளைக்கொண்டு, பார்ப்பவர்கள் மனதில் தாக்கங்களை ஏற்படுத்தி,  விற் பனையை அதிகரிக்க செய்கின்றார்கள். ஏனெனில் காட்சிகள் நீண்டகாலம் மனக்கண்ணில் நிலைத்து நிற்பன.

சற்று நேரம் கண்களை மூடுங்கள். உங்கள் வாயில் ஊறுகாய் (pickles) இருப்பதாக பாவனை செய்து பாருங்கள். சில விநாடிகளிலேயே நாக்கில் ஜலம் சுரப்பதை உணர்வீர்கள். அறிவியல் ரீதியில் ஊறுகாயின் உறைப்பு, புளிப்பு முதலிவை நாக்கில் பட்டு .அதனால் உண்டாகும் சமிக்ஞைகள் நுண்ணிய் நரம்புகள் வழியாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலிருந்து தூண்டுதல் ஏற்பட்டு  நாக்கில் உள்ள சுரப்பிகளை சென்றடைவதால்தான் உமிழ்நீர் சுரக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது ஊறுகாய் இருப்பதாக கற்பனை செய்வது எப்படி உமிழ்நீரை சுரக்க செய்கிறது?

இங்கே தான் ரகசியம் இருக்கிறது.

உங்கள் ஆழ்மனதிற்கு கற்பனைக் கும், நிறத்திற்கும் வித்தியாசம் தெரி யாது. இன்னொரு வகையில் சொல்லபோனால் உங்கள் ஆழ்மனம் நீங்கள் கற்பனை செய்வதை நிஜம் என்று நம்பிவிடுகின்றது. அதாவது ஆழ்ந்த அறிதுயிலில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த கற்பனை யதார்த்தமாகவும், நடைமுறையில் சாத்தியமுளளதாகவும் இருக்கவேண்டும். உதாரணமாக ஒரு பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியராக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். பாட சாலையில் குறைவாகமதிப்பெண் எடுக்கும் மாணவன்,  அதிக மதிப்பெண் எடுத்து சித்தியடைந்தால் எப்படி யிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் என்று வைத்துக்கொள்ளுங்கள், மைதானத்தில் நீங்கள் சிறப்பாக ஆடுகின்றீர்கள். உங்கள் ஆட்டத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான இரசிகர்கள் எழுந்து நின்று கைகளைத்தட்டி கரகோ ஷம் செய்வதைப்போல்  கற்பனை செய்து பார்க்கலாம். நீங்கள் ஒரு திரைப்பட கலைஞர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் நடிப்பு திறமையை கண்டு ஆயிரகணக்கான ரசிகர்கள் கைதட்டி மகிழ்வதாக கற்பனை செய்து பார்க்கலாம்.  நீங்கள் ஒரு வியாபாரியாக இருக்கலாம். அப்படியெனில், நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களிடம் புன்சிரிப்புடன் பேசுவது போலவும், உற்சாகத்துடன் சேவை செய்வது போலவும் கற்பனை செய்து பாருங்கள். அல்லது உங்கள் வியாபாரதலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போல் கற்பனை செய்து பாருங்கள். ஓர் அரசு அலுவலகத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ சாதாரணப் பணியாளரோ இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து, பலன்களை மனதில் வடிவமையுங்கள். தற்போது இருப்பதைவிட அதிக கவுரவம், அதிக வசதி என்று கற்பனை செய்து பாருங்கள்.

இப்பொழுது மேலும் ஒரு ரகசியத்தை சொல்லப்போகிறேன். எண்ணங்களை விட உணர்ச்சிகளுக்கே ஆற்றல் அதிகம்.அதாவது, தேச பக்தி அல்லது தாய்நாட்டின் மீதிருக்கும் பற்றின் காரணமாக ஒரு போர்வீரன் தனது உயிரை பணயம் வைத்து எதிரிகளுடன் போரிடுவதும்,  அல்லது பிள்ளையின் மீதிருக்கும் அளவற்ற பாசத்தால், அவளை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்திட தன்னையே  வருத்திக்கொள்ளும் ஒரு தாயின் கடினமான செயலும் இதற்கு சரியான உதாரணங்கள்.

எனவே சுயமாக ஹிப்னாடிச பயிற்சி மேற்கொள்ளும்போது கற்பனை காட்சிகளை உணர்ச்சிகளுடன் வடிவமையுங்கள். சாதனைகள் படைத்து முன்னேறும்போது ஏற்படும்உணர்ச்சிகளை உள்ளத்தில் உணர்ந்துபாருங்கள். இது சற்று கடினமாக இருந்தாலும் கூட தொடர் பயிற்சியின் மூலம் சாத்தியமாகும்.

அதேப்போல் தமிழில் அதீத மனசோர்வு என்றும் ஆங்கிலத்தில் டிப்ரஷன் என்று குறிப்பிடப்படும்  ஒருவகை மனநோய்க்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன்,  ஹிப்னாடிச முறையில் கற்பனை காட்சிகளை மனக்கண்ணில் வடிவமைக்குமாறு பாதிக்கப்படடவரை ஊக்கப்படுத்துவதன் மூலம் அற்புதமான பலன்களை காணமுடியும்.

முதலில் பாதிக்கப்பட்டவரை ஒரு வசதியான இருக்கையில் அமரச்செய்து அல்லது மிருதுவான படுககையில் படுக்கச்செய்து, ஹிப்னாடிச நிலையில் அவரிடம், `இப்பொழுது உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் திருமண வைபவம் நடக்கின்றது. திருமண வீடு, திருமண மண்டபம், வாழைத்தோரணங்கள், மண மேடை, மேடை அலங்கரிப்புகள் முதலியவற்றை மனக்கண்ணில் பாருங்கள். திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவரும் உற்சாகத்துடனும், புன்சிரிப்புடனும் காணப்படுகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர். நீங்களும் உற்சாகத்தில் திகழ்கின்றீர்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது......' இப்படி பேசி சஜஷன்களை அவரின் மனதில் பதியவைப்பதன் மூலம் அற்புதமான பலன்களை விரைவில் காணமுடியும்.

மருத்துவர் அசாரியா செல்வராஜ்,  ஒரு விடயத்தில் தீர்மான கருத்தைக்கொண்டிருக்கிறார். அதாவது மனநோய்களுக்கு மன நோய் மருத்துவர்கள் தான் சிகிச்சையளிக்கவேண்டும் என்பதே அது. அவர்கள் வழிகாட்டினால் தான் ஹிப்னாடிச மருத்துவர்களின் உதவியை நாடவேண்டும் என்றும்,  யாரும் மனநோய்க்கு நேரடியாக ஹிப்னாடிச மருத்துவரிடம் சிகிச்சை பெறக்கூடாது என்கிறார்.  ஏனெனில் ஹிப்னாடிச மருத்துவர்கள்,  மனநோயின் ஒரு பகுதியை மட்டுமே குணப்படுத்துவதில் வல்லவர்கள்.

தொடர்புக்கு: +91 98402 96428

 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in 

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,845