Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
கர்ப்பப்பை புற்றுநோய் வராமலிருக்க இளவயது திருமணம் கூடாது
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Oncology

சென்னையில் இயங்கிவரும் குருபாலா மருத்துவமனையின் பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

`முப்பது வயதை கடந்து விட்டவர் களுக்கு எப்போதாவது ஒரு கட்டத்தில் அதிகமான உதிரப்போக்கு,  துர்நாற்றத்து டன் கருப்பு நிறத்தில் ரத்தப்போக்கு ஏற் பட்டால் தங்களுக்கு ஏதோ வந்து விட்ட தாக நினைத்து பயந்து போய் விடுகிறார் கள். அதிலும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத பெரும்பாலான பெண்கள் இத்தகைய ரத்தப்போக்கை கருக்கலைவாக நினைத்து விடுகிறார்கள். ஆனால் இவர் களுக்கு வந்திருப்பது கர்ப்பப்பை புற்று நோய் என்று தெரிந்தவுடன் பதறிய டித்து ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை பெறுகிறார்கள். இது தவறில்லை நாங் களே எங்களிடம் வரும் இனம் கண்டறி யப்பட்ட புற்று நோயாளிகளை முதலில் ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்து கொள்ளவது தான் சிறந்தது என்று பரிந்துரை செய்கிறோம். ஆனால் அவர் களால் கைவிடப்பட்ட புற்று நோயாளி களை நாங்கள் குணப்படுத்துகிறோம்.

பொதுவாக ஆண்களை விட, பெண் களின் கருவுறுப்புகள் அனைத்தும் மிகவும் சிக்கலான அமைப்பை உடை யவை. அதனால் வரக்கூடிய பிரச்சினை களும் அதிகம், பாதிப்புகளும் அதிகம். அதிலும் `செர்விக்கல் கான்சர்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கர்ப்ப வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கு இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள் வது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்ளாதது, புகைப்பழக்கம் உடைய வர்களின் அருகில் அதிக நேரத்தைச் செலவிடுவது, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது, முட்டைகள் வெளிவராமல் அடைப்பட்டுப் போவது மற்றும் மனித பாப்பிலோமா என்ற வைரஸ் தாக்குதல் ஆகியவை காரணமாகின்றன.

பதினெட்டு வயதிற்கு மேல திருமணம் செய்து கொண்டாலும், சுகா தாரமற்ற உடலுறவு, ஒரிரு முறை தானே என்று வேற்று ஆளுடன் உறவு வைத்துக் கொள்வது, தரமற்ற கருத்தடைச் சாத னங்களைப் பயன்படுத் துவது, அதிக மான சுய இன்பம் செய் வது போன்றவற் றால் கூட புற்று நோய் வந்து விடும். இவை தவிர ஹார் மோன் சுரப்பிகளின் மாறுபாடுகளாலும், கர்ப் பப்பை வாய்ப்புற திரவ உற்பத்தி போது மான அளவு இல்லாமல் போனாலும் கூட புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.

கர்ப்பப்பையில் கருவணு விடு படாமை, ஹார்மோன் பிரச்சினை, சினைப்பை காயம், முன்னதாகவே மாத விலக்கு முற்றுப்பெறுவது, கருவணு தொடர்பான பிரச்சினைகள், உளவியல் காரணம், நோய் தொற்றுகளால் அழற்சி, வயிற்றுப்பகுதி நோய்கள், கருக் கலைப்பு, கருச்சிதைவுகளால் வரும் அழற்சி, எண்டோமெட்ரியோசிஸ் கருப்பை ஒட்டிக்கொள்ளுதல், கருப்பை யில் அந்நியப் பொருட்கள் ஆகிய 12 காரணங்களால் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் வருவதற்கு காரணமாகின்றன.

எல்லாவற்றிற்கும் வயிற்றுவலி தான் முதலில் தோன்றும் அறிகுறி. அதைத் தொடர்ந்து வயிற்றோட்டம் வரலாம். வயிறு உப்புசமாக இருக்கும். கரு முட்டை வெளியிடப்படாததால் மாத விலக்கு கோளாறுகள் தோன்றி உதிரப் போக்கு அதிகமாகும். வெள்ளைப்படுவ தோடு பித்த வாந்தியும் வரும். பலவீன மாக தங்களை உணர்வார்கள். முதுகு வலியும், ரத்த சோகையும் ஏற்படும். இம்மாதிரியாக அறிகுறிகள்  தோன்றிய பிறகாவது கர்ப்பப்பை ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை பாப்ஸ்மியர் எனப்படும் திசுச் சுரண்டல் பரிசோதனையை செய்து கொள்ளுங்கள்.

முறையான உணவு பழக்கம், உடல் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், உடல் எடையை சீராக பராமரிப்பது, தேவை யான அளவிற்கு உடற்பயிற்சி ஆகிய வற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கு சரியாக நிகழுமாறு பார்த்துக் கொண்டாலே இவை அணு காது. டாக்டர் ஷ்ரீதர் நம் மண்ணிலிருந்து சென்ற பல புற்றுநோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தி யவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கு மட்டு மல்லாமல் எந்த நிலையில் இருக்கும் புற்று நோயையும் குணப்படுத்தியவர் என்பது பிறகு தெரியவந்தது.

தொடர்புக்கு: 0091 44 24363835

 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in 

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,974