Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
காந்த சிகிச்சையின் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும்
medicalonline-appointmenticon
medcialonline-Magnetic Treatment

உலகத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. பல சிகிச்சை முறைகளை பின்பற்றினா லும் தீராத நோயை கொண்டிந்தவர்களுக்கு காந்த சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கிறது என்று கேள்விப்பட்டதும், காந்த சிகிச்சை என்றால் என்ன? இதன் மூலம் தீர்க்கமுடியும் நோய்கள் என்ன? என்பது குறித்து இத்துறையின் நிபுண ரான டொக்டர் எம்.ஜி. அண்ணாதுரையிடம் www.medicalonline.in சார்பில் விளக்கம் கேட்டோம். அவர் அளித்த விளக்கம் இதோ...

காந்த சிகிச்சை என்றால் என்ன? இந்த சிகிச்சையின் மூலம் எம்மாதிரியான நோய் களை குணப்படுத்தமுடியும்?

நம் எல்லோருடைய உடம்பிலும் காந்த சக்தி ஓரளவு இருக்கிறது. இந்த காந்த சக்தியின் அளவு குறையும்போது நமது உடலை இயக்கும் மின்சக்தியின் அளவும் குறைகிறது. நம்முடைய ஒவ்வொரு உறுப்பிலும் மிக குறைந்த அளவிலான மின்சக்தி உள்ளது. அதனுடன் இணைந்துள்ளது தான் காந்த சக்தி. இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எல்லா நோய்களும் குணமாகும் போது உடலில் காந்த சக்தி அதிகரிப்பதுடன், குறிப்பிட்ட அளவில் மின்சக்தியும் அதிகரித்தி ருக்கும். காந்த சிகிச்சை என்பது ஒரு இயற்கை முறையிலான சிகிச்சை. இந்த சிகிச்சை முறை நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுவாக காந்தம் என்றால், அதற்கு இரு துருவம் இருக்கும். ஒன்று வட துருவம், மற்றொன்று தென் துருவம். அதைப்போல் நமது உடலை ஆராயும்போதும் வலது பக்கம் வட துருவமாகவும், இடது பக்கம் தென் துருவ மாகவும் கூறுகிறார்கள். இடுப்புக்கு மேல் பகுதி வட துருவம் என்றும், இடுப்புக்கு கீழ் தென் துருவம் என்றும், முன் பக்கம் வட துருவம் என்றும், பின் பக்கம் தென் துருவம் என்றும், மேலும் ஒரு உறுப்பை தனியாக எடுத்தோ மானால் அதன் வெளிப்புறம் வடதுருவம் என்றும், உள்புறம் தென் துருவம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இரு துருவங்களில் உள்ள சக்திகள் எதிரெதிராக  மோதுவதால் தான் இயக்கமே நடைபெறு கிறது. நோயுற்றிருக்கும் போது உறுப்பு களுக்கு ஏற்ற வகையில் காந்தத்தின் மீது பத்து நிமிடமோ அல்லது அதற்கும் கூடுத லாக சில நிமிடங்களோ வைத்திருக்கும் போது, உடலுக்கு கூடுதலாக நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் இருந்தால், எந்த நோயும் நம்மை தீண்டாது. இது காந்த சிகிச்சையின் தத்து வம், அதாவது உடலுக்கு காந்த சிகிச்சையின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கிக் கொள்கிறோம்.

காந்தங்களின் துருவங்களுக்கு என்ன குணம் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார் கள். அதில் வட துருவங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கு குளுமைத்தன்மை யும், ஒரு பொருள் மேல் காந்தத்தை  வைத் தால் அங்கு அணு சிதைவும் நடைபெறும். காரத்தன்மை உடையது. தென் துருவங்களில் வெளிப்படும் கதிர் வீச்சுக்கு வெப்பத்தன்மை இருப்பதும் ,  அதனால்  தொடர்ந்து எல்லா செயல்களிலும் ஊக்கப்படுத்தி,  வேகத்தைக் கூட்டும். புளிப்புத் தன்மை அதிகம்.

நம் உடலில் இருக்கும் பாகங்களில் இன்றி யமையாததாக இரண்டை குறிப்பிடுவர். அதில் ஒன்று இருதயம் மற்றொன்று கல்லீரல். இருதயம் இயங்கினால் தான் எல்லாமே இயங்கும். கல்லீரல் தான் உணவை செரித்து, உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சக்தியாக  அனுப்புகிறது. கல்லீரலில் சுரப்பது புளிப்பான திரவம். இங்கு ஏற்படும் சரிசமமற்ற விகிதத்தை, வடதுருவ  காந்தப் பகுதியை வலதுபுறம் வைப்பதன் மூலம் சரிசமமாக்க முடிகிறது. அதே போல் இடதுபுறம் இருக்கும் இதயத்தின் சக்தியை அதிகரிக்க, தென் துருவ காந்த பகுதியை இடதுபுறம்  வைக்கலாம். இதனால் உடம்பில் இருக்கும் நோய் குறையும். இதைத் தவிர்த்து வலி, ஆஸ்துமா, அலர்ஜி ஆகியவற்றிற்கான சிறந்த தீர்வாக காந்த சிகிச்சை விளங்குகிறது. வடதுருவத்தை வலது கையிலும், தென் துருவத்தை இடது கையிலும், வைப்பதன் மூலம்  தொப்புளிலிருந்து உச்சந் தலை வரைக்கும், வட துருவத்தை வலது காலிலும், தென் துருவத்தை இடது காலிலும் வைத்திருப்பதன் மூலம், இடுப்புக்கு  கீழ் முதல் அடிப்பாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதில்லாமல் எரிச்சல், நமைச்சல், கட்டி, புண் மற்றும் வேண்டாத சதை வளர்ச்சி களான மரு, பரு, புற்றுநோய் கட்டிகள் ஆகிய வற்றிற்கு இடது, வலது என்று பேதம் பார்க் காமல் வலது புறத்தில் காந்தத்தை வைத்து சிகிச்சை எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது உறுதி. அதே போல் கருப்பை வளர்ச்சியின்மை, மலட்டுத்தன்மை. ஆண்மை குறைவு, இன்சுலின் சுரக்காத சர்க்கரை நோய் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு தென் துருவத்தில் வைத்து சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் டொக்டர் மெஸ்மர் என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட காந்த சிகிச்சை, பிற்காலத் தில் அறிவியல் பூர்வமாக இல்லை என்று மறுக்கப்பட்டது. ஆனால் நீங்கள் காந்த சிகிச்சையினால் நோய்களை குணமாக்க முடியும் என்று கூறுகிறீர்களே! இவற்றில் எது உண்மை?


டொக்டர் மெஸ்மர் தன்னுடைய உடலில் உள்ள சக்தியை ஒன்றுதிரட்டி அதை காந்த சக்தி என்றும், அதை தன்னுடைய கண் மூலம் செலுத்தினார் என்றும், அதை  `ஹிப்னாட்டிசம்' என்றும் அழைத்தனர். சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வெளிவந்த ஒரு புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்ககூடும். அதாவது ஒருவரின் உடலில் மின்சாரத்தால் இயங்கும் சலவைப்பெட்டி  ஒன்று  ஒட்டியிருப் பது போன்ற புகைப்படம். இதன் மூலம் என்ன தெரியவருகிறது என்றால், ஒருவரது உடம்பில் காந்தசக்தி இருக்கிறது என்பதை தான் பறை சாற்றுகிறது. அதே சமயத்தில் அக்கு பஃஞ்சர் என்ற சிகிச்சையில் நமது உடலில் நான்கு மில்லி வோல்ட் மின்சாரம் இருப்பதை நிரூபித் திருக்கிறது. இந்த மின்சாரத்திற்கென்று ஒரு மின்னோட்ட பாதை இருக்கிறது. இந்த மின் னோட்ட பாதை சரியாக இயங்காதபோது தான் நமக்கு நோய் இருப்பதாக கண்டறிகிறோம். இந்த தடையை அகற்றிவிட்டாலே நோய் பூரணமாக குணமடைகிறது. எனவே உடலில் மட்டுமல்ல எங்கு மின்சக்தி இருக்கிறதோ அங்கு காந்த சக்தி இருக்கும் என்பது அறிவியல் ஒப்புக்கொண்டிருக்கும் உண்மை. ஆகையால் நமது உடலில் மின்சக்தி இருக் கிறது எனும்போது அங்கு காந்த சக்தியும் இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஏன் இந்த சிகிச்சை முறையை அனை வராலும் பின்பற்ற முடியவில்லை?

உலகத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. ஆங்கில மருத்து வம் தன்னை அதிகளவில் விளம்பரம் செய்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டதோடு மட்டு மல்லாமல் மற்ற சிகிச்சை முறைகளிலிருந்த மக்களை  தன் பக்கம் திசை திருப்பியது என்று தான் சொல்லவேண்டும். நான்காயிரம் வருடத் திற்கு முன் தற்போதுள்ள நோய்களை விட மிக கொடூரமான நோய்களை, அறுவை சிகிச்சை யில்லாமல் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை யளித்து குணப்படுத்தியிருக்கிறார்கள். `அக் கரைக்கு இக்கரை பச்சை' என்ற மனிதர்களின் மனநிலையை ஆங்கில மருத்துவம் தனக்காக சரியாக பயன்படுத்திக் கொண்டது. ஆனால் ஊடகங்கள் அதிகமானதால் மீண்டும் பழைய மருத்துவ முறைகள் மீது மக்களின் கவனம் திரும்புகிறது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் அமெரிக்காவில் ஏறக்குறைய நாற்பது சதவீதத்தினருக்கும் மேல் ஆங்கில மருத்து வம் அல்லாத வேறு ஒரு மருத்துவ சிகிச்சையை பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து தங்கி சிகிச்சை பெறும் புட்டபர்த்தி மருத்து வமனையில், கடந்த ஆறு ஆண்டுகாலமாக காந்த சிகிச்சை முறையிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

காந்த சிகிச்சையில் தங்களின் பங்களிப்பு என்ன?


தமிழகத்தில் ஆங்கில மருத்துவம் அல்லாத வேறு சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்து, அதன்படி உருவான காந்த சிகிச் சையை, 1985ஆம் ஆண்டில்  தொடங்கினேன். இந்த சிகிச்சை முறை வட இந்தியாவில் பிரபல மாக இருந்தது. அங்கு சென்று இதற்கான கல்வியை முறைப்படி கற்று தேர்ந்தேன். பின்னர் இதற்கு தேவைப்படும் உபகரணங் களையும் தயார் செய்யத் தொடங்கினேன். இன்று இலங்கை உள்பட பல நாடுகளுக்கும், இங்கிருந்து காந்த சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகளை ஏற்றுமதி செய்கிறோம்.

இந்த சிகிச்சை முறையை எந்த வயதிலிருந்து மேற்கொள்ளலாம் மற்றும் காந்தங்களின் சக்தி என்ன?


மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தை களுக்கு வழங்க தொடங்கலாம். காந்தங்களுக்கு இடையில் வைக்கப் படும் தண்ணீரில் இருக்கும் ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சி ஜன் அணுக்கள் சிதைக்கப்பட்டு அவைகள் மெல் லிய,  அடர்த்தி குறைவான காந்த நீராக மாற்றப்படுகிறது. இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று வேளையாக, ஒரு குறிப் பிட்ட அளவு,  அருந்தும்போது உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை, சுத்திகரித்து ,மலமாக வெளியேற்றுகிறது. அதைவிட நமது நோய்க் கான முதற்காரணம், மாசடைந்த சுற்றுப்புற சூழல், சுத்திகரிக்கப்படாத குடிநீர், இரசாயனம் கலந்த உணவு. எனவே இதனால் உருவாகும் புதிய புதிய பெயரிடப்படாத நோய்களுக்கு காந்த சக்தி மூலம், அதாவது அணுசிதைவு செய்யப்பட்ட நீரை அருந்துவதன் மூலம் நீங்கள் நோய்களை அணுகவிடாமல்  தடுக்க லாம். இதைவிட வேறு ஒரு உண்மையை கூறு கிறேன் கேளுங்கள். ஒரு லிட்டர் பெற்றோலை வாங்கி, இந்த காந்தங்களை பக்கவாட்டில் வைத்து சுத்திகரிப்பதால் உங்கள் வண்டிக்கு கூடுதலாக பத்து அல்லது பதினைந்து கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும். அதன் ஆயுளும் அதிகரிக்கும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. சுட வைத்து ஆறின பாலை காந்தங்களின் மேல் சில நிமிடங்கள் வைத்துவிட்டு அருந்து வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் சக்தியின் அளவு அதிகம். அதே போல்  காந்தத்தின் மீது நாற்பது மணி நேரம் தேங்காய் எண்ணெயை வைத்து, அதன் பின்,  அதை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வது நின்றுவிடும். பயன் படுத்தும் எந்த உணவுப்பொருளையும் காந்தங் களின் மீது வைத்த பின் உபயோகப்படுத்தி னால் அதன் இயக்கமும், சக்தியும் கூடுதலா கும். ஒவ்வொரு பொருளின் அடர்த்திக்கேற்ப காந்தத்தின் மீது வைத்திருக்கும் நேரத்தின் அளவு இருக்கும். குறிப்பாக பெற்றோலுக்கு ஐந்து மணி நேரம், தண்ணீருக்கு எட்டு மணி நேரம், தேங்காய் எண்ணெய்க்கு நாற்பது மணி நேரம்  என்று வரையறுத்திருக்கிறார்கள்.

தங்களுடைய அனுபவத்தில் குண மான நோயாளிகளை பற்றிக் கூற முடியுமா?

1992ல் திருச்சியைச் சேர்ந்த வயதான பெண்மணி பத்தாண்டு காலம் வாத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த வர் எங்கள் காந்த சிகிச்சை முறையால் குண மடைந்தார்.  அரசு மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பிலிருந்து அல்சரால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆஸ்துமா நோயாளி ஒருவரும் மூன்று நாட்களில் குணமாகியுள்ளனர்.

முதுமையில் இருப்பவர்களுக்கு  இந்த காந்த சிகிச்சை பெரிதளவில் உதவி புரியுமா?

ஒவ்வொருவருக்கும் நாற்பது வயதிற்கு பின், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையத் தொடங்கும். இந்நிலையில் காந்த சிகிச்சையை ஒரு மருத்துவமாக பாராமல், தினசரி மூன்று வேளை காந்த நீரை பருகியும், பத்து நிமிடங் களுக்கு காந்தத்தின் மீது கைகளை வைத்து, முறையாக பயிற்சி செய்வதையும் நாம் வழக்கப்படுத்திக்கொண்டால் பல நோய்கள் நம்மை அணுகாது.  அதையும் மீறி வரும் நோய்களை அறுபது சதம் வரை ஒத்திப் போடலாம்.

இந்த சிகிச்சை, பெண்களுக்கு எப்படி உதவி புரியும்?

நமது உடம்பில் ஏற்படும் நோய்களுக்கு சுரப்பிகளின் முறை தவறிய நடவடிக்கைகளே காரணம். பொதுவாக பெண்கள் தங்களின் அழகு மீது அதிகமாக கவனம் செலுத்துவார் கள். முடி உதிர்வது, முக அழகு ஆகிய பிரச்சினைகளுக்கு காந்த நீரே போதுமானது. பிறப்புறுப்பு மற்றும் மார்பகங்களில் தோன்றும் புற்றுநோய்களுக்கு நாங்கள் தயாரித்து வழங்கும்  காந்தத்தத்தாலான மார்புக்கச்சை பட்டையை உபயோகப்படுத்தினல் பலன் உறுதி. அதன் விலை மிக குறைவு. இதனை உறங்கச்செல்லும் முன் மூன்று மணி நேரம் வைத்துக்கொண்டு உறங்கினால் போதும். இதே காந்தத்தை தென் துருவத்தில் வைத்தால் மார்பக வளர்ச்சி சிறிது கூடும். மாதவிடாய் காலங்களில் தாங்க முடியாத வலி இருந்தால், காந்தத்தை வயிறு மேல் வைத்தால் வலியும் குறையும். இரத்தப் போக்கும் நிற்கும். கருப்பை வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினை யிருந்தால், அவர்கள் காந்தத்தை தென் துரு வத்தில் வைத்துக்கொண்டால் பலன் கிடைக் கும்.

தொடர்புக்கு: 0091 44 25735207

 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in 

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,146