Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சீறுநீரக சிக்கல்களுக்கு டயாலிஸஸ் சிகிச்சை நிரந்தரமானதல்ல
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Urology & Nephrology

சென்னையின் பிரபல சிறுநீரக மருத்துவர் டாக்டர் ராம.மெய்யப்பன் அவர்களை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கிறது?

முதன்மையான காரணமாக நீரிழிவைக் குறிப்பிடலாம். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுள் பெருன்பான்மையானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறுநீரக செயல்பாட்டில் பிரச்சினை வரும். சில வயதானவர்களுக்கு சிறுநீர் பாதையில் விரும்பதகாத அளவில் சதை வளர்ந்து, அடைப்பு ஏற்ப டும். இதன் மூலம் கிட்னிக்கு பின்னோக்கிய அழுத்தங்கள் அதிகரித்து, அவை பழுதாகக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. சிறுநீர் பிரியும் குழாயின் மேலேயுள்ள தோல்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கூட சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

முதுமை காரணமாக சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுமா?

நிச்சயமாக. ஒரு மனிதனுக்கு நாற்பது வயது கடந்து விட்டாலே அவர்களின் உடலில் உள்ள சிறுநீரகத்தின் வீரியமான செயல்பாட்டில் மந்த நிலை உருவாகத் தொடங்குகிறது. சிறுநீரகம், மனிதனின் உடலில் கழிவு நீரகற்று தொழிற்சாலையாகத் தான் செயல்படுகிறது. இது எப்போதும் ஒரே அளவில் செயல்படுவதில்லை. ஆரோக்கியமான மனிதர்களுக்கும் இது பொருந்தும். இது ஒரு வகையான சுத்திகரிப்பு பணியினை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் சோர்வாகத்தான் மருத்துவத்துறை இதனை பார்க்கிறது.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாருக்கு, எப்போது அவசியமாகிறது?

இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலும் பழுதாகிவிட்ட நிலையில் தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிறது. உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று பழுதாகி, முற்றிலும் செயலிழந்து, மீதமுள்ள ஒரு சிறுநீரகத்தில், அதன் செயல்பாடு மூன்றில் ஒரு பங்கு செயல்படும் தன்மையில் இருந்தாலும் கூட இந்த சத்திர சிகிச்சை தேவையில்லை.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டறிந்து நீரிழிவு நோயினை உறுதிப்படுத்திக்கொள்வதைப்போல், சிறுநீரகத்தின் செயல்பாட்டினை கண்டறிய இரத்தத்தில் கலந்திருக்கும் யூரியா மற்றும் சீரம் கிரியாட்டினின் என்ற சோதனை மூலம் கண்டறியலாம். அந்த சோதனையில் கிரியாட்டினின் அளவு 1.5 என்ற அளவு வரை இருந்தால், சிறுநீரகம் இயல்பாக இயங்குகிறது என்றும், அதற்கு மேலாக இருந்தால் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதாகவும் அறிந்துக் கொள்ளலாம். ஒரு சிலருக்கு இந்த கிரியாட்டினின் அளவு இயல்பை விட அதாவது 6 அல்லது 7 க்கு மேல் சென்றுவிட்டால், அவர்களுக்கு உடனடியாக டயாலிஸஸ் என்ற சிகிச்சையினை அளித்து, உடலில் உள்ள சிறுநீரை வெளியேற்றி, கிரியாட்டினின் அளவு கட்டுபடுத்தப்பட்ட பின் அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகும். அதே தருணத்தில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு பொருத்தமான மாற்று உறுப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பதற்காக தொடர்ந்து டயாலிஸஸ் என்ற சிகிச்சையினை வழங்க இயலாது. காரணம் இந்த சிகிச்சை முறையினை அதிகளவில் தொடர்ச்சியாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. கட்டணம் கூடுதல் என்பதை விட உடல் ஆரோ க்கியத்திற்கு சற்று எதிரானது என்றும் கூட சொல்லலாம்.

உடலில் இருந்து வெளியாகும் சிறுநீரில் யூரியாவின் அளவு குறைந்துவிடும். உடலில் பொட்டாசிய சத்தின் அளவு அதிகரித் துவிடும். இதனால் முகம், கை, கால் ஆகிய பகுதிகள் வீங்கி விடும். இத்தகைய நிலை யே இதற்கான அறிகுறி. இதனைத் தொடர் ந்து அனுபவமிக்க சீறுநீரகத்துறை சத்திர சிகிச்சை நிபுணரை அணுகி, ஆலோசனைப் பெற்று, டயாலிஸஸ் செய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை செய்துகொள்ளவேண்டும்.

அமெரிக்கா மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் சுன்னத் செய்துகொள்வதன் பின்னணியில் மறைந்திருக்கும் மருத்துவ காரணங்கள் என்ன?

இவர்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து ஆண்களும் செய்து கொள்ளவேண்டிய சிகிச்சை இது. யூதர்கள், தங்கள் இனத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்தவுடன் இவ்வகையான சிகிச்சையை செய்து விடுகிறார்கள்.  இஸ்லாமியர் சற்று வளர்ந்தவுடன் இதனை செய்துகொள்கிறார்கள். இதனால் என்ன பயன்? என்றால், ஆணுறுப்பின் முன் பகுதியில் முடியிருக்கும் தோலை அகற்றுவதன் மூலம் அப்பகுதியில் அழுக்குகள் தேங்குவதில்லை. அப்பகுதி தினசரி குளிக்கும் போது தூய்மைப்படுத்தப்படுகிறது. இத்தகையோர்களுக்கு புற்று நோய் தாக்குவது மிகமிக குறைவு. அதே தருணத்தில் அவர்களுக்கு தாம்பத்தியத்தில் எந்த குறைபாடும் ஏற்படுவதில்லை.

சிறுநீரக கோளாறுக்காக மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு செல்லும் போது, மருத்துவர்கள், நோயாளியின் ஆசன வாய் பகுதியில் பரிசோதனை செய்வது எதனால்?

ப்ராஸ்டேட் என்லார்ஜ்மெண்ட் எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகத்தான் அத்தகைய சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

சிறுநீரக சிக்கல்களுக்கு தண்ணீர் அருந்துவது தான் சரியான தீர்வா?

யூரினரி இன்பெஃக்சன் அல்லது சிறுநீரகத்தில் கல் ஆகிய பிரச்சினைகள் இருந்தால் தண்ணீர் அருந்தலாம். சிறுநீரகம் பழுதாகியிருந்தால் தண்ணீர் அருந்துவது மேலும் சிக்கலை தோற்றுவித்துவிடும்.

அதனால் பிரச்சினை யைப் பொருத்தே தண்ணீர் அருந்துவது தீர்வாகும். இதனை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே தொடரவும். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிற்றர் தண்ணீர் சீரான இடைவெளியில் அருந்த வேண்டும்.

சிறுநீரகக்கல் கரைவதற்காக தொடர்ந்து வாழைத்தண்டு சாறு அருந்துகிறார்கள். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட வாய்ப்பிருக்கிறதா?

வாழைத்தண்டிற்கும், சிறுநீரகக்கல்லிற்கும் நேரடியான தொடர்பேயில்லை. இதனை மாற்று மருத்துவம் பரிந்துரைக்கும் இயற்கை மருத்துவப் பொருள் மட்டுமே. வாழைத்தண்டு சாறு, சிறுநீரகக்கல்லை நேரடியாக குணப்படுத்துகிறது என்பது மருத்துவ ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

திராட்சைச் சாறு அருந்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுமாம். உண்மையா?

பழச்சாறுகளை விட கோககோலா, பெப்சி கோலா ஆகியவற்றை அருந்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கான வாய்ப்பு உண்டு. ஏனெனில் அதில் தான் ஆக்சிலேட்கள் அதிகமுண்டு. இந்த ஆக்சிலேட்டுகள் தான் சிறுநீரகத்தில் கல்லை உருவாக்குகின்றன. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது. தக்காளிப்பழத்திலும் ஆக்சிலேட்டுகள் அதிகமுண்டு. அதனால் தக்காளியை நேரடியாகவோ அல்லது தக்காளிச் சாறாகவோ அருந்தக்கூடாது. அதற்கு பதிலாக தக்காளியை ரசத்திலோ, குழம்பிலோ பயன்படுத்தி சாப்பிடலாம்.

சிறுநீரக மருத்துவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள் என்ன?

கடந்த பதினைந்து ஆண்டுகளில் மற்ற துறைகளைக் காட்டிலும் சிறுநீரகத்துறை மருத்துவத்தில் ஏராளமான நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லோப்றாஸ்கோப்பி சத்திர சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிறுநீரகக்கல்லை மின் அதிர்வு கொடுத்து குணப்படுத்தக்கூடிய சிகிச்சைஎன பலவற்றை குறிப்பிடலாம்.

வலி நிவாரணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு மாற்றாக எதனை பரிந்துரைக்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது வலி நிவாரணத்திற்கான ஊசிகளையோ தொடர்ச்சியாக உபயோகப்படுத்துபவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கப்படுவது உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதே தருணத்தில் வலி நிவாரணத்திற்காக எப்போதாவது மாத்திரைகளை சாப்பிடுவதால் இது பாதிக்கப்படுவதில்லை.

தங்களுடைய மருத்துவ அனுபவத்தில் சாதனையாக எதனை கருதுகிறீர்கள்?

நாங்கள் ஒரு காலத்தில் சாதனையாக கருதி செய்த சத்திர சிகிச்சைகளெல்லாம் இன்று எளிமையாக மாறிவிட்டன. அதனால் எதனையும் சாதனையாக கூற இயலாது. தற்போது மூளைச் சாவு ஏற்பட்ட ஒருவரின் உடலிலிருந்து கிட்னியை எடுத்து, மற்றொருவருக்கு பொருத்துவது தான் சாதனையாக கருதப்படுகிறது.

நெஞ்சு வலி என்றால் உடனே கார்டியாலஜிஸ்ட்டை சந்தித்து ஆலோசனை கேட்கிறோம். விபத்தில் கை, கால் மற்றும் ஏனைய பகுதிகளில் அடிப்பட்டால் உடனே எலும்பு மருத்துவ நிபுணரை சந்திக்கிறோம். ஆனால் சிறுநீரகத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதற்குரிய சிறப்பு மருத்துவரை அணுகாமல், அருகிலுள்ள பொது நல மருத்துவரையோ அல்லது மருந்து கடைகளையோ அணுகி, ஆலோசனை பெறுகிறார்கள். அதற்கு பின் சிறுநீரக பிரச்சினை தீவிரமானவுடன் இத்துறைக்கான மருத்துவர்களை சந்திக்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.  உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால், முதலிலேயே அதற்குரிய சிறப்பு மருத்துவரை சந்தித்தால், நல்ல விளைவு உண்டாகும்.

தொடர்புக்கு: 0091 98400 68248

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,155