Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
பற்களின் பாதிப்பு: மாரடைப்புக்கும் வாய்ப்பு உண்டு
medicalonline-appointmenticon
medcialonline-Dentistry

அழகான பற்கள் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால் பலரும் பற்சுகாதாரத்தில் அக் கறை காட்டுவதில்லை. இந்த அலட்சியம் உங்களை மாரடைப்பு வரை கொண்டு செல் லலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? இந் தத் தகவலை எமது வாசகர்களுக்காகச் சொன் னவர் திருச்சி, உறையூரில் ஸ்ரீ ஞானகுரு பல் வைத்திய சாலையின் தலைமை பற்சிகிச்சை நிபுணர் டொக்டர். குருசரண். அவர் www.medicalonline.in க்காக வழங்கிய பிரத்தியேக செவ்வி இதோ...!

பற்களைப் பாதிக்கும் பிரதான நோய்கள், அவற்றுக்கான காரணங்கள் எவை?


பற்சொத்தை, ஈறுகளில் ஏற்படக்கூடிய நோய்கள் என்பவையே மிகப் பொதுவான தாகவும் பிரதானமானதும் ஆகும். நம் உடல் வெளியுலகத்தோடு விரைவாகத் தொடர்பு கொள்ளக்கூடிய ஊடகம் நமது வாய். வாய் மூலமாக உடலினுள் நுழையும் கிருமிகள் பற் களிலேயே தங்குகின்றன. எல்லோருடைய பற்களிலும் இதுபோன்ற கிருமிகள் காணப் படும். உணவு உற்கொண்ட பின், பற்களை முறையாகச் சுத்தம் செய்யாதவிடத்து உண வுத் துணிக்கைகள் பற்களிலேயே தங்கிவிடு கின்றன. இத்துணிக்கைகளில் வந்து சேரும் கிருமிகள் அவற்றுடன் சேர்ந்து வளர்கின்றன. இதன்போது இந்தக் கிருமிகள் ஒரு வகை யான அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமி லம் பற்களின் `எனாமலை'ச் சிதைக்க ஆரம் பிக்கின்றன. இதன்மூலம் பற்களின் மேற்பு றத்தில் சிறிய துளைகள் ஏற்படுகின்றன. இதைச் சரியாகக் கவனிக்காதவிடத்து அந்தத் துளைகளுக்குள் மேலும் மேலும் உணவுத் துணிக்கைகள் சென்று அடைத்துக்கொள்வத னால் இன்னும் இன்னும் கிருமிகள் உற்பத்தி யாகின்றன. இப்படியாக, முழுப் பல்லுமே பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ஈறுகளில் பாதிப்புகள் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக் கியமானது பற்களில் அழுக்குச் சேர்வதே. பற்களை முறையாகப் பேணாதவிடத்து பற்க ளில் தங்கும் அழுக்குகள் நீக்கப்படுவ தில்லை. இதன்மூலம் ஈறுகள் பாதிக்கப் படலாம். அடுத்தது பற்களின் ஆரோக் கியத்திற்குத் தேவைப்படுகின்ற விற்ற மின்கள், சுருக்கமாகச் சொன்னால் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் இல்லாமையும் இதற்குக் காரணமாகின்றது. மரபு ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாவோரும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சினை களுக்கு முகங்கொடுக்க நேரி டுகிறது.

இவை தவிர, ஒருவருக்கு ஏற்படும் வேறு நோய்களின் பக்கவிளைவாகவும் ஈறுகள் பாதிக்கப் படலாம். உதாரண மாக, ஒருவருக்கு மஞ்சள் காமாலை தோன்றுமாயின் அவரது ஈறுகள் கரையும் சாத்தியங்கள் தோன்றுகின் றன. இது போன்றே, சர்க்கரை நோய் உள்ள வர்களுக்கும் ஈறு கரைந்து பற்கள் பாதிக்கப் படலாம்.

மேல் தாடையில் காணப்படும் பற்களைப் பிடுங்கினால் பார்வைக் குறைபாடுகள் மற் றும் மூளையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்றொரு கருத்து நிலவுகிறதே?

இது முற்று முழுதாகத் தவறான கருத்து. பழங்காலத்தில் இப்படியான கருத்துருக்கள் பலவும் வழக்கத்தில் இருந்திருக்கலாம். மருத்துவமும் அறிவியலும்  வளர்ந்துவிட்ட இக்காலத்தில் இவை தவறானவை மட்டு மல்ல; பாதிப்பு உண்டாக்கக்கூடியனவும் ஆகும். உதாரணமாக, மேற்தாடையில் சொத் தைப் பல் ஒன்று அடையாளங்காணப்பட் டால் உடனேயே அதை அகற்றிவிடுவதன் மூலம் தான்ஏனைய பற்களைப் பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால், மிகுதிப் பற்களை யும் இழக்கவே நேரிடும்.

பற்சிகிச்சைத் துறையில் புகுத்தப்பட்டி ருக்கும் புதிய சிகிச்சைகள் என்னென்ன?

பல் வேர் சிகிச்சை என்ற மரபு ரீதியான சிகிச்சை இப்போது நவீனப்படுத்தப்பட்டிருக் கிறது. சிலருடைய பற்கள் உறுதியாக இருந் தாலும் அவற்றின் வேர்கள் சீழ்கொண்டிருக் கலாம். அந்த வேர் சிறிதளவேனும் ஆரோக் கியமாக இருக்குமாயின், நவீன உபகரணங் கள் ஊடாகப் பல்லில் ஒரு சிறு துளையிட்டு அதனூடாக பல் வேர்க்குழாய் நுனி வரை சென்று எக்ஸ்ரே எடுத்துவிடுகிறோம். அதன் பின், பாதிக்கப்பட்டிருக்கும் வேர்களைச்சுத் தம் செய்து மருந்து தடவுகிறோம். அந்த வேர்களில் காணப்பட்ட கிருமிகள் செயலி ழந்தவுடன் அந்தப் பகுதியை அடைத்து, பற் களின் மேல் ஒரு உறையையும் போட்டு விடு கிறோம். இதன்மூலம் உண்மையான பற் களை அகற்ற வேண்டிய தேவை தோன்றுவ தில்லை. முன்னாட்களில் இந்த சிகிச்சையின் வெற்றி குறித்து உறுதியாகச் சொல்ல முடி யாத நிலை இருந்துவந்தது. ஆயினும் இன்று, இந்த சிகிச்சை நூறு சதவீத வெற்றியைத் தந்து கொண்டிருக்கிறது.

ஏதேனும் காரணங்களுக்காக பல் வரிசை யின் இடையில் ஓரிரு பற்களை இழக்க நேரிட்டால், அந்த இடம் நிரப்பப்படவேண் டும். இல்லாத பட்சத்தில், அருகாமையில் இருக்கும் ஏனைய பற்களும் சாய ஆரம்பிக் கும். முன்பு, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொருத்தப்படும் செயற்கைப் பற்களை நிரந் தரமாக வைத்துக்கொள்ள முடிந்திருக்க வில்லை. ஆயினும் இப்போது, பாலம் கட் டும் முறையில் நிரந்தரமாகவே பற்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.

கடைவாய்ப் பற்களை இழந்தவர்களுக்கு செயற்கைப் பற்களைப் பொருத்தும் சந்தர்ப் பங்களில், டைட்டானியம் எனும் ஒரு வகை உலோகத்தினாலான  `ஸக்ரூ'க்களை ஈறுக ளுக்குள் வைத்துவிடுகிறோம். இதன் சிறப் பம்சம் என்னவென்றால், நான்கு முதல் ஆறு மாத காலத்திற்குள் இந்த `ஸ்க்ரூ'க்கள் தாடை எலும்புகளுடன் இணைந்துவிடும். அதன் பின் ஈறுகளை விலக்கி அந்த `ஸ்க்ரூ'க்களு டன் பற்களைப் பொருத்திவிடுகிறோம்.

இதுவரை பீங்கானும் உலோகமும் கலந்த கலவை மூலமாகவே செயற்கைப் பற்கள் அமைக்கப்பட்டுவந்தன. ஆனால் தற்போது பீங்கானை மட்டுமே உபயோகப்படுத்தி செயற்கைப் பற்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பொருத்திய பின், இயற்கையான பற்களின் நிறத்தையொட்டிய நிறங்களைப் பூசிவிடுவோம். பார்ப்பதற்கு எந்த வித்தியாச மும் தெரியாத அதேவேளை, இயற்கைப் பற் கள் தரும் உறுதியை இவையும் தரும். இது வும் பற்சிகிச்சையில் ஒரு முன்னேற்றம்தான்.

இவை தவிர மரபு ரீதியான சிகிச்சைகள் பலவும்  முன்னேற்றம் கண்டுள்ளன.

புகைப்பழக்கம் பற்களைப் பாதிக்குமா?

நிச்சயமாக! பற்களின் ஆதாரமாக இருப் பவை ஈறும் தாடை எலும்புமே. புகைப்பழக் கம் உள்ளவர்கள் அதிகளவிலான நிக்கொட் டினை வாய்க்குள் எடுத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம் முதலில் ஈறுகள் பாதிக்கப்படு கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவை கரைய ஆரம்பிக்கும். அடுத்து அது பாதிப் பது தாடை எலும்பை. இதுவும் கரையத் தொடங்கியதும் பற்கள் பிடிமானம் எதுவு மின்றி ஆட ஆரம்பித்து நாளடைவில் விழுந் தும் விடுகின்றன. மொத்தத்தில், புகைப்பவர் கள் பெருமளவிலும் விரைவாகவும் பற்க ளில் பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.

குழந்தைகளின் பாற்பற்களுக்கிடையில் அதிக இடைவெளி இருக்கிறதே...! இது குழந்தைகளின் பல் வரிசையைப் பாதிக் குமா? அதற்கான சிகிச்சையை எத்தனை வயதில் பெற்றுக்கொள்ளலாம்?

இந்த இடைவெளி பல் வரிசையைப் பாதிப்பதில்லை. மாறாக சீர்படுத்துகின்றது. ஒரு குழந்தையிடம் பாற்பற்கள் தோன்றும் போது இதுபோன்ற இடைவெளி இருப்பது சகஜமே. இதற்குக் காரணம், பாற்பற்கள் விழுந்த பின் முளைக்கும் பற்கள் சீராகவும் பெரிதாகவும் வளர்வதற்குப் போதிய இடம் தேவைப்படுவதே. இடைவெளி இல்லாத போதுதான், விழுந்து முளைக்கும் பற்கள் மேலேறி வளர்ந்துவிடுகின்றன. சீரற்று வள ரும் பற்களுக்கான சிகிச்சைகளை ஆறு வயது முதல் செய்துகொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை உணர்வுகொண்டவர் கள், அடிக்கடி பல் மருத்துவர்கள் மூலம் பற்களைச் சுத்தம் செய்துகொள்கிறார்கள். இதனால் பற்கள் பாதிக்கப்படாதா?

ஆறு மாதங்களுக்குக்குறைந்த காலகட் டத்தில் எந்தவொரு பல் மருத்துவரும் ஒரு வருக்கு இரண்டு முறை பற்களைச் சுத்தம் செய்வதில்லை. ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களைச்சுத்தம் செய்துகொள்வ தனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. சரியாகச் சொல்வதானால், எல்லோரும் இது போல் வருடத்திற்கு இரண்டு முறை பற் களைச் சுத்தம் செய்துகொள்வது வரவேற் கத்தக்கது. காரணம், பல் துலக்கும்போது பற் களுக்கிடையில் தங்கிவிடும் அழுக்கை பல் மருத்துவராலேயே களைய முடியும். அவ் வாறு களையாதவிடத்து அவ்வழுக்கு முத லில் ஈறுகளைத் தாக்குகின்றது. இப்படியாக ஈறுகள் தாக்கப்பட்டிருப்பதை, வாயில் மெலி தான துர்நாற்றம் வீசுவதைக் கொண்டும் பல் துலக்கும்போது ஈறுகளில் இருந்து குருதி வடி வதைக் கொண்டும் அறிந்துகொள்ளலாம். உடனடியாகக் கவனிக்கப்படாதவிடத்து, ஈறு கள் வீக்கமுற்றுச் சிதைய ஆரம்பிக்கும். இது மட்டுமன்றி, பற்களில் தேங்கும் அழுக்குக ளால், கர்ப்பிணித் தாய்மார் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எடை குறையவும் அதன் மூலம், பிறக்கும் குழந்தைகளின் உடல் மற் றும் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற் படவும் இடமுண்டு. நோய் நொடிகளும் சீக் கிரமே தொற்றிக்கொள்ளலாம்.

இது தவிர, பற்களில் தேங்கும் அழுக்கி னால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற் படும் சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன. பொதுவாகவே, பத்து வயது முதற்கொண்டு அனைவருடைய இரத்தக் குழாய்களிலும் `அத்துரோகுளோரஸிஸ்' எனப்படும் படிமா னம் படியத் தொடங்குகிறது. ஆனால் பற் களில் தேங்கும் அழுக்கின் பிரதி விளைவாக இந்தப் படிமானம் வழக்கத்தை விட வேக மாகப் படிய ஆரம்பிக்கிறது. ஒரு நீர்க்குழா யில் பாசி படரப் படர அதன் வீச்சு குறைகிற தல்லவா? அதுபோலவே, இரத்தக் குழாய் களில் படியும் இந்தப் படிமானம் இரத்த வோட்டத்தின் வீச்சையும் குறைக்கிறது. இதன்மூலம் இதயத்திற்குப் போகும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பினால் மார டைப்பும், மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால், பரிசோதனை மூலம் பற்களைப் பரிசோதித்துக்கொண்டால் தேவையற்ற பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

முக்கியமாகப் பெண்கள் பூப்பெய்துதல், மாதவிலக்கு நாட்கள், கர்ப்பம் தரிக்கும் சந் தர்ப்பங்களில் பற்கள் குறித்து கவனம் எடுத் துக்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் சந்தர்ப் பங்களில் உடல் ஒரு புதிய மாற்றத்தை அடைவதால் ஈறுகள் பாதிக்கப்படலாம். அது போலவே மாதவிலக்கு சமயங்களில் ஈறுக ளில் இருந்து இரத்தம் கசியவும் வாய்ப்புகள் உண்டு. இவற்றைத் தவிர்ப்பதற்கு, பற்களை முறையாகப் பராமரித்தாலே போதும்.

ஸ்கேலிங், வைட்னிங், பற்களில் மினு மினுப்பான கற்கள், டாட்டூஸ் என்றெல் லாம் சொல்கிறார்களே?

ஸ்கேலிங், க்ளீனிங் என்பது பற்களைச் சுத்தம் செய்வதாகும்.  மஞ்சள் நிறப் பற்களை உடையவர்கள் வைட்னிங் அல்லது ப்ளீச்சிங் சிகிச்சையைச் செய்துகொண்டால் பற்களின் நிறம் சுமார் ஒரு வருட காலத்துக்கு வெண்மையாகத் தோற்றம் தரும். ப்ளீச்சிங் செய்த முதல் பத்து நாட்களுக்கு, பற்களில் கூச்சம் இருக்கும். உணவு உட்கொள்ள சற்றுச் சிரமமாக இருக்கும். இது தவிர வேறு பக்க விளைவுகள் இந்த சிகிச்சைகளில் இல்லை.

பளபளக்கும் கற்களைப் பொருத்திக் கொள்வது, டாட்டூஸ் வரைவது என்பவற்றை முறையாகச் செய்துகொண்டால் பக்க விளை வுகள் ஏற்படாது.

பற்களின் பாதுகாப்பு பற்றி...?

இரு வேளை தூரிகையால் பற்களைச் சுத் தம் செய்தல், சூடான அல்லது மிகக் குளி ரான உணவுப் பதார்த்தங்களைத் தவிர்த்தல், உணவு உட்கொண்ட பின் வாய் கொப்பளித் தலுடன் வாரத்திற்கு மூன்று முறை `டென்டல் ஃப்ளாஸ்' எனப்படும் நூலைக் கொண்டு பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல் வேண்டும். முக்கியமாக இடையுணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரணம், நம் உடலுக்குள் ஒரு பௌதிகக் கடிகாரம் இயங்குகிறது. அந்தக் கடிகாரத்தின் படி, உணவு வேளைகளின் போது நம் வாயில் எச்சில் ஊறுகிறது. இது, பற்களிலிருந்து வெளியாகும் ஒரு வகை அமிலத்தைக் கழு விச் சுத்தம் செய்து விடுகிறது.  அத்துடன், பற்களின்உராய்வுத் தன்மையையும் குறைக்கிறது. இடையுணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, உரிய நேர த்தில் எச்சில் சுரக்காமையால் இந்த வசதி கிடைப்பதில்லை. ஆகையால், இடையுணவு தவிர் க்கப்பட வேண்டும். குளிர்பா னங்களையும் பழச்சாற்றையும் கூடிய வரை யில் தவிர்ப்பது நல்லது.

தொடர்புகளுக்கு: 0091 9842457858

 

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
7,498