Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சர்வதேச தர மருத்துவ சேவை
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-ENT Care

`உலகம் எம்முடைய உள்ளங்கைகளில்' என்று சொல்ல வைத்திருக்கிறார்கள் தகவல் தொடர்புத்துறை விஞ்ஞானிகள். இதனை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்வது? ஏன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்? எதற்காக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்? என்ற வினாவை எழுப்புவதற்கு முன், தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் மருத்துவ சுற்றுலாவைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் அதனைப் பற்றி தெரிந்திருந்தால் தான் இதன் உள்ளடர்த்தி புரியும். மருத்துவச்சுற்றுலாவிற்கும், தகவல் தொடர்புத்துறைக்கும் என்னத் தொடர்பு? மனிதனின் ஆரோக்கியம் இன்று உலகமயமாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று ஒற்றை வாக்கியத்தில் பதிலைச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்கு புரியாது என்பதால், எளிமையாக சொல்லி விளக்க வைக்கிறார் சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் காமாட்சி மருத்துவமனையில் சர்வதேச அளவிலான நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசராகப் பணியாற்றிவருபவரும், காது, மூக்கு, தொண்டை பகுதியின் சத்திர சிகிச்சை நிபுணருமான டொக்டர் ஆர். ஸ்ரீராம். அவரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

மருத்துவச்சுற்றுலாவினை தங்களுடைய மருத்துவமனை ஊக்குவிப்பதன் பின்னணி என்ன?

எம்மில் சிலருக்கு இதயம், சிறு நீரகம் சார்ந்து, மருத்துவ ரீதியாக ஒரு பிரச் சினை ஏற்படுகிறது. நீங்கள் இருக்கும் பகுதி யில் உள்ள பிரபல மருத்துவமனை யிலோ அல்லது மருத்துவ நிபுணரிடமோ ஆலோ சனை பெறுகிறீர்கள். அதற்கு அவர் உங்க ளின் பொருளாதார சக்திக்கு மீறிய அளவில் செலவழித்து, சிகிச்சை மேற்கொள்ளவேண் டும் என்று பரிந்துரை செய்திருப்பார். இப் போது நீங்கள் செய்து கொள்ள இருக்கும்  சிகிச்சைக்கான கட்டணத் தொகையை மன தில் வைத்துக்கொண்டு, சிகிச்சையை செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சிந் தனையில் மூழ்கி விடுவீர். இந்த தருணத்தில் உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிகிச் சையை, மிக குறைந்த செலவில் செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்தால்...... அதைப்பற்றி தெரிந்து கொள்வீர்கள்தானே.  அதை அறி முகப்படுத்துவது தான் மருத்துவ சுற்றுலா.

நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, உங்களுக்கான முழு மருத்துவ சேவை யை, தங்களுடைய விருப்பமான கட்டணத்தில் வழங்குவது தான் மருத்துவ சுற்றுலா வின் பிரதான நோக்கம்.

உதாரணமாக நீங்கள் ஆபிரிகா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்காசியா நாடு கள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க மற் றும் வளர்ச்சியடைந்த நாடுகளை சார்ந்தவர் என்று வைத்துக்கொள்வோம் அல்லது அந்த நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுடைய  உடலில்  மருத்துவ ரீதியாக பிரச்சினை ஏற் படுகிறது. அதனை அருகிலுள்ள மருத்து வரை நாடி, ஆலோசனைப் பெறுவதைப் போல,  மருத்துவ சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் சர்வதேச தரத்துடன் விளங்கும் மருத்துவமனைகளின்  இணையதள முக வரிக்கு சென்று ஆலோசனைப்பெறலாம். அவர்கள் தங்களுடன் உரையாடி, எம் மாதிரியான சிகிச்சையினை மேற்கொள்வது என்ற பரிந்துரையினையும், அதற்கான குறைந்தபட்ச கட்டணத்தையும், அதற்கான வரைவு செயல்திட்டத்தையும் வழங்குவார்கள். எம்மைப் போன்ற மருத்துவ சேவையில் இருக்கும் மருத்துவமனைகள், இதற்காகவே தனியாக பிரத்யேகமான குழுவினருடன் இயங்கி வருகிறோம்.

கடந்த நான்காண்டுகளுக்கு முன் சிங்கப் பூரில் இருக்கும் எமது நண்பர் ஒருவருக்கு உடலில் பிரச்சினை ஏற்பட்டது. அவரும் அங்குள்ள மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். மருத்து வரோ சத்திர சிசிச்சை செய்யவேண்டும் என் றும், அதற்கு இந்திய மதிப்பில் பத்து லட்ச ரூபாய் செலவாகும் என்று அறிவுறுத்தியி ருக்கிறார். நண்பரோ அந்த அளவிற்கு பொருளாதார சக்திபடைத்தவர் அல்ல. இந் நிலையில் எம்மைத் தொடர்பு கொண்டு விப ரங்களை கூற, நானும் எம்முடைய மருத்து வத்துறை நண்பர்களிடம் அணுகி, இது குறித்து விளக்கம் கேட்க, அவருக்கான சிகிச் சையினை இந்தியாவில் குறிப்பாக தமிழகத் தில் மேற்கொண்டால் ஒரு லட்ச ரூபாய் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் தான் செலவா கும் என்று சொல்ல, அந்த நண்பர் இந்தியா விற்கு வந்து சிகிச்சையை மேற்கொண்டார்.

சர்வதேச மருத்துவ சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தங்களிடம் இருக்கும் தனித்துவம் மிக்க விடயம் என்ன?


எம் மருத்துவமனையின் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி மூல மாகவோ எம்மை தொடர்புக் கொள்ளும் மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு எம்மாதிரியான மருத்துவ சேவை தேவைப் படுகிறது என்பதை கேட்டறிகிறோம் அல்லது அதற்கான ஆவணங்களை பரிசோதித்து, எம்மாதிரியான சிகிச்சை அவசியம் என்பதை கண்டறிந்து சுட்டிக்காட்டுகிறோம். அதன் பின் அந்த நோயாளியின் நோய்க்கான தீவிரத்தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய அவசர நிலையையும் நினைவூட்டுகிறோம். இதே தருணத்தில் ஒரு சில நோயாளிகளுக்கு இணைய தளம் மூலமாக இலவசமாக மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குகிறோம். அத்துடன் அவர்கள் கேட்கும் மருத்துவதுறை ரீதியான சந்தேகங்களுக்கு எம்மருத்துவமனையில், இதற்காகவெனச் செயல்படும் மருத்துவ குழுவினர், உரிய விளக்கம் அளிக்கிறார்கள். அந்த விளக்கத்தில் திருப்தியடைந்த பின்னரே அந்த அயல்நாட்டு மருத்துவச் சுற்றுலா பயணியின், மருத்துவ சுற்றுலாவிற்கான பயணத் திட்டம் முழுமையாக தயாரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய தாயகத்திலிருந்து கிளம்பி, சென்னையில் உள்ள விமான நிலையத்திற்கு வந்திறங்குவது முதல், அவர் குணமாகி திரும்பிச் செல்லும் வரையிலான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு, அதனை மூன்று பிரதிகள் எடுத்து, மருத்துவ சுற்றுலா பயணி, மருத்து வமனை நிர்வாகம், அவர் சிகிச்சை பெறும் காலகட்டத்தில் அவரை பராமரிப்பதற்காக எம்மால் நியமிக்கப்படும் குழுவின் தலைமை செயலதிகாரி ஆகியோரிடத்தில் வழங்குகிறோம். அதன் பிறகு கண்காணிப்பு குழுவினரால் இந்த திட்டம் முழுமையாகவும். செம்மையாகவும் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்கிறோம். அத்துடன் எம்முடைய மருத்துவமனையில் அனைத்துவிதமான உடலியல் சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்கான மருத்துவ வசதி இருக்கிறது. இவையணைத்தும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். அதே தருணத்தில் புற்று நோயை குணப்படுத்துவதில் தமிழகத்திலேயே அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இருப்பது எங்களின் தனி சிறப்பம்சம்.

இம்மாதிரியான பயணிகளுக்கு தாங்கள் வழங்கும் சலுகைகளும், இதற்கான நடைமுறைகளும் என்ன?

அயல்நாட்டினர் தமிழகத்திலுள்ள விமான நிலையத்திற்கு வந்திறங்கு வதிலிருந்து, அவர் சிகிச்சை பெற்று, சுற்றுலாவை முடித்து தாய கம் திரும்பும் வரை அவருக்கு தேவையான அனைத்து உதவிக ளையும் அக்கறையுடன் வழங்குகி றோம். முன்னதாக அவர் எங்களை தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச் சைக்கு சம்மதம் தெரிவித்த பின் னர், அவரிடம் சேவை கட்ட ணம் என்ற பெயரில் ஒரு நியா யமான கட்டணத்தை (200 அமெரிக்க டொலர்)  நிர்ணயிக்கி றோம். இதில் பாதி தொகையினை முன்னதா கவும், மீதியை சிகிச்சை  பெற்று பூரண நலத்துடன் தாயகம் திரும்புவதற்கு முன்பாகவும் வசூலிக் கிறோம்.

பெரும்பாலானவர்கள் தங்களுடைய மருத்துவ செலவிற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற இய லுமா? என்று கேட்கின்றனர். மருத்துவ காப் பீடு பெறுவதில் இன்னும் உலகளாவிய கொள்கை ஒன்று வகுக்கப்படவில்லை. அத னால் ஒரு சில மருத்துவமனைகளில் தான் இது சாத்தியப்படுகிறது. அதே தருணத்தில் 40 சதத்திற்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் மருத்துவ காப்பீடு செய்து கொள்ளாதவர் கள். ஏனெனில் இதற்கான பிறீமியம் தொகை அதிகம். அவர்களில் பெரும்பாலா னோர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவை நாடுகின்றனர். அவர்களுக்கு நாங்கள் நியாயமான கட்டணத்தில் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையைச் செய்கிறோம். பெரும்பாலான ஐரோப்பியர்கள்,  சென்னை யில் சிகிச்சையும், கேரளாவில் ஓய்வு எடுப் பதையும் தான் விரும்புகிறார்கள்.

சிகிச்சை பெறுவதற்கு முன் மதிப் பிடப்பட்ட செலவுத் தொகை,  எந்த கார ணம் கொண்டும் மறுமதிப்பீடு செய்வதற் கான சூழலை நாங்கள் உருவாக்குவதில்லை.  

இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும் தான் உயர் ஸ்தானீகராலய அளவில் பல்வேறு கட்டுபா டுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை உறுதியாக பின் பற்றுகிறோம்.

பல்வேறு நாடுகளில் மருத்துவ சுற்றுலா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த அனுமதி வழங்கப்பட்டாலும், இன்னும் சில நாடுகளில் அதற்கு எதிர்ப்பு இருக்கிறது.  இணையதளம் மூலமான வீடியோ கான் பரன்சிங்  வசதியை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. அதனை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் மருத் துவ சுற்றுலா குறித்த நடைமுறைகளை எளி மைப்படுத்த இந்திய அரசு தெளிவான கொள்கையை வகுக்கவேண்டும் என்றும் நாங்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்திருக் கிறோம்.

வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பும் விடயம் என்ன?

மனிதனின் ஆரோக்கியம் இன்று உலகமயமாக்கப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் வழங்கப்பட்டு வரும் உயர்தர மருத்துவ சிகிச்சை இன்றும் தமிழகத்திலேயே கிடைக்கிறது. அதுவும் குறைந்தபட்ச கட்டணத்திலேயே கிடைத்துவருவது தான் இதன் சிறப்பு. இன்று நோய்களை இனங்கண்டறிவதில் மேலை நாடுகளுக்கு இணையான நவீன மருத்துவ உபகரணங்கள் எம்மைப் போன்ற சர்வதேச தரத்திலான மருத்துவமனைகளிலும் கிடைப்பதால், சிறப்பாக செயல்பட இயலுகிறது. ஆரோக்கியத்துடன் இருப்பதை வரவேற்கிறோம். அதே தருணத்தில் ஏதேனும் சிக்கல்கள் வந்துவிட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

தொடர்புக்கு: 0091 98406 61188

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

 


medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,164