Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
குழந்தைகளின் இதய பாதிப்பு சவாலானது
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

ஆதி மனிதன் மிருகங்களின் தாக்குதலுக்கு பயந்து பரண் அமைத்து வாழ்ந்தவன். அதனால் தான் இன்று வரை அவனுடைய மரபணுக்களில் பயம் கலந்தேயிருக்கிறது என்கிறார்கள் மரபணு ஆய்வாளர்கள். மனிதனிடத்தில் இருக்கும் பயம் என்ற உணர்வு தான் இதயத்தின் செயல்பாட்டிற்கு எதிரி என்கின்றனர் மற்றொரு துறை ஆய்வாளர்கள். மனிதன் தன்னுடைய இயல்பிற்கு மீறி, உணவு விடயத்தில் அக்கறை காட்டுவதால் தான் இதயம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் மற்றொரு பிரிவு ஆய்வாளர்கள். இப்படி விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் வெளியானாலும், இதயம் இயங்குவதன் அடிப்படையை தெளிவாக புரிந்துகொண்டால், அதனை ஆரோக்கியமாக இயங்க வைக்க இயலும் என்றும், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பை, நவீன மருத்துவ கருவிகளின் உதவியுடன், துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சை அளித்து, சீராக செயல்பட வைக்க இயலும் என்றும் www.medicalonline.in இடம் கூறினார், சென்னையில் செயல்பட்டு வரும் எம். ஆர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரும், இதய சத்திர சிகிச்சை நிபுணருமான டொக்டர் ஆர். ஆனந்தன்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இதய கோளாறுகளை சீராக்குவதில் உள்ள சவால்கள் என்ன?


குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய பாதிப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம். குழந்தை பிறக்கும் முன்  தாயின் வயிற்றில் வளரும் போதே உள்ளவை. குழந்தை பிறந்தவுடன் உள்ளவை என இரண்டு வகையாக பிரித்தறிந்து சிகிச்சையளிக்கலாம். குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போது, பரிசோதனை மூலம் இதயத்தின் செயல்பாட்டில் ஏதேனும் சமச்சீரற்ற தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டால் அதனை, அந்த தருணத்திலேயே சீரமைக்க முடியும் என்றால் அதற்குரிய சிகிச்சையளித்து சீராக்கிவிடலாம் அல்லது குழந்தை மற்றும் தாயின் உயிருக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது சிக்கலாகவோ இருக்காது என்று கண்டறியப்பட்டால், குழந்தை பிறந்தவுடன் அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதே தருணத்தில் சில குழந்தைகள் இதய பாதிப்புடன் பிறந்து, அதனை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்துவதில் சிக்கல் எழும் என்ற சூழல் இருந்தால் அந்த குழந்தைக்கு சத்திர சிகிச்சை உட்பட எந்த சிகிச்சையும் பலன் தராது அதாவது அந்த குழந்தை அதனுடைய இரண்டாமாண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாடாது.

இதயம் தொடர்பான கோளாறுகள் உள்ளது என்பதனை எம்மாதிரியான அறிகுறிகள் மூலம் உணரலாம்?

ஒவ்வொருவரின் நெஞ்சுக்கூட்டிற்குள் கையளவு அகலமுள்ள இதயம், தான் உடல் முழுவதிற்கும் இரத்தத்தை எடுத்துச் செல்கிறது. இந்த இதயத்திற்கு மூன்று கொரனேரி இரத்த குழாய்கள் மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.

இந்த குழாய்களில் கொழுப்பு படிவதால், அப்பகுதியில் உள்ள இரத்த குழாய், அதன் அளவில் தடித்துவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சமச்சீரற்றதாகிவிடுகிறது. ஒரு தருணத்தில் இப்பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. இதனையே மாரடைப்பு என்று குறிப்பிடுகிறோம். இந்த மாரடைப்பு ஏற்பட்டு ஆறு மாத காலத்திற்குள் அப்பகுதியில் உள்ள இரத்த குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், அப்பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் நிரந்தரமாக சிதைவடைந்து, மரணத்திற்கு வழிவகுக்கும். எனவே மாரடைப்பு வந்தவுடன் சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதே நல்லது.

நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். அதிகமாக வியர்க்கும். படபடப்பு ஏற்படும். மூச்சடைப்பு நிகழலாம். கழுத்துப்பகுதியில் இறுக்கி பிடிப்பது போன்ற வலி ஏற்படும். ஒரு சிலருக்கு இதில் எந்தவித அறிகுறியுமில்லாமல் வருவதற்குரிய வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அறிகுறிகளை தோற்றுவிக்கும் நரம்புகளின் செயல்பாட்டில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதால், அவர்களுக்கு வலியேயில்லாமல் கூட மாரடைப்பு தோன்றும்.

மேலும் ஒரு சிலர் தங்களுக்கு இதயம் தொடர்பான கோளாறுகள் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருப்பவர்களுக்கு, நெஞ்சில் சிறிய அளவில் வலி தோன்றியவுடன், மருத்துவர் பரிந்துரைத்திருக்கும் மாத்திரையொன்றை நாவின் அடியில் வைத்துக்கொண்டால் வலி நின்றுவிடும். மாத்திரையை வைத்தும் வலி குறையவில்லை என்றால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

நெஞ்சில் தோன்றும் இத்தகைய வலியின் கால அளவு, குறைந்தபட்சம் பத்து நிமிடத்திலிருந்து அதிக பட்சம் இருபது நிமிடம் வரை நீடிக்கும். அதனையும் கடந்து வலி நீடிக்குமேயானால் அவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு, பேஸ்மேக்கர் கருவியை பொருத்திக்கொண்டவர்கள், தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்களே ஏன்?

இதய கோளால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகத்தான் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திக்கொண்டவர்கள், ஓட்டப்பயிற் சிக் கூட எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் நவீன பேஸ்மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டு, பொருத்தப்படுகிறது. எனவே இந்த கருவியால் இயல்பான வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் அதிக மின்னழுத்த சேகரிப்பான் (440 வோல்ட் ட்ரான்ஸ்பார்மர்) இருக்குமிடத்திலும், விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த இலத்திரனியல் பரிசோதனை சாவடிகளிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனெனில் இத்தகைய கருவிகளில் பொருத்திவைக்கப்பட்டிருக்கும் லித்தியம் என்ற வேதிப் பொருள், அதிக மின்னழுத்த சேகரிப்பான்  உள்ள இடத்திற்கு அருகில் செல்லும் போது தேவையற்ற முறையில் விரயமாகும். இதனால் இந்த கருவியின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் குறைய வாய்ப்புண்டு என்பதால், அத்தகைய இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறோம்.

இதய நோய் தொடர்பாக ஆணிற்கும், பெண்ணிற்கும் வேறுபாடு உள்ளதாமே- இதன் மருத்துவ காரணங்கள் என்ன?

பெண்களுக்கு நாற்பத்தைந்து வயது வரை மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் குறைவு. ஏனெனில் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயால் அதாவது ஈஸ்ட்ரோஜன் என்னும் சுரப்பியால் இதயம் தொடர்பான கோளாறுகள் ஏற்படாத வகையில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. இத்தகைய பாதுகாப்பு ஆண்களுக்கில்லை. அத்துடன் கொரனேரி பாதிப்புகள் ஆண்களை மட்டுமே தாக்குகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால் அவர்களுக்கும் இதய நோய், ஆண்களை போலவே தோன்றும். ஆனால் தற்போதுள்ள இளம் தலைமுறை பெண்கள் கொலஸ்ட்ரால் அதிகமுள்ள உணவை உண்பதாலும், உடற்பயிற்சியில்லாததாலும், பெண்களும் புகைப்படிப்பதாலும் இளம்வயதிலேயே இதய கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.

இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் செய்வதில் தற்போது எளிய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறதாமே... அதன் செயல்பாடு எப்படி?

முன்பெல்லாம் இதய அடைப்பை கண்டறிய தொடைகளில் ஆஞ்சியோகிராம் எடுத்து கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிக்கு அதிக தொல்லை தராத அளவிலான முறையில் கைகளாலேயே ஆஞ்சியோகிராம் செய்து, இதய அடைப்பினை, இனம் கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய நவீன சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி, படுக்கையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பாட்டுக்கேட்டுக்கொண்டே ஆஞ்சியோ செய்துவிடலாம். அனஸ்தீசியா தேவையில்லை. காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மாலையில் பரிசோதனை செய்துக்கொண்டு, முடிவினை தெரிந்துக்கொண்டு திரும்பலாம்.

இதய செயலிழப்பை கண்டறிய உதவும் இ.இ.சி.பி என்ற சிகிச்சையின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லுங்களேன்?

பைபாஸ் சர்ஜரி செய்ய முடியாதவர்களுக்கும், பைபாஸ் சர்ஜரி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும், பைபாஸ் செய்தும் அடைப்பு உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் படி பரிந்துரைக்கிறோம்.

தினசரி நாற்பத்தைந்து நிமிடம் நடைபயிற்சி அவசியம் செய்யவேண்டும். உடற்பருமனையோ அல்லது நிரிழிவையோ வருவதை அனுமதிக்காதவண்ணம் உங்களுடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 00 91 94441 86182

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,832