Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
பாலியல் ஒழுக்கமின்மை மகப்பேற்றைப் பாதிக்கும்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Gynaec & Infertility

பாலுறவின் அடிப்படை நோக்கம், ஒரு பரம்பரையிலி ருந்து அடுத்த பரம்பரைக்கு வீரியமுள்ளமர பணுக்களைக் கடத்துவதுதான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த மரபணுக் கடத்தல் சங்கிலி யில் தொடர்பைப் பேண முடிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அக்காரணங்கள் எவையாயினும் அவற்றைச் சரிசெய்து, அவர்களது மனிதப் பண்பைப் பேணுவதற்குக் கைகொடுக்கிறது இன்றைய மருத்துவ விஞ்ஞானம். இந்த  விஞ்ஞா னத்தை லண்டனில் கற்று, இன்று பலரது வாழ்க்கைக்கும் அர்த்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார் டொக்டர் திருமதி. லதா முருகன். மதுரையில் இயங்கி வரும் ராகவேந்திரர் மருத்துவமனைகளின் உரிமையாளரான டொக்டர் முருகனின் துணைவியார். அவரை www.medicalonline.in சார்பில் சந்தித்தோம்.

இனப்பெருக்கத் தடை என்பது என்ன?


இனப்பெருக்கத்தைத் செய்யமுடி யாமையே இதற்குக் காரணம். ஒருவரி டமிருந்து அவரது அடுத்த தலைமு றைக்கு வீரியமான மரபணுக்களைக் கடத்த முடியாதிருப்பதுதான் இதன் பொருள். இதில் ஆணுக்கும் பெண் ணுக்கும் என்று தனிப்பட்ட பல கார ணங்கள் இருக்கின்றன. ஆண்களை பொறுத் தவரையில் விந்தணுக்களின் எண்ணிக்     கையோ அல்லது அவற்றின் உருவாக்கமோ போதியளவில் இல்லாமை மற்றும் விந்தணு க்களின் நீந்தும் தன்மை குறைவாகவே இருப்பதைக் குறைபாடுகளாகச் சொல்ல முடியும். பெண்களைப் பொறுத்தளவில், கரு முட்டைகளின் வலுவற்ற தன்மையே முக் கிய இடம்பிடிக்கிறது. இவை முன்னைய காலங்களில் காணப்பட்ட குறைபாடுகளே. ஆனால், பல நூற்றாண்டுகளைக் கடந்து வந் துள்ள இன்றைய மனிதனிடத்தில் இவை தொடர்பான பல குறைபாடுகள் தோன்றத் தொடங்கியுள்ளன. ஒப்பீட்டு ரீதியாக, அன் றைய மக்களைவிட இன்றைய மக்களிடமே மலட்டுத்தன்மை அதிகமாகக் காணப்படு கின்றது. சராசரியாக ஏழு பேரில் ஒருவர் மலட்டுத் தன்மைக்கான காரணிகளைக் கொண்டிருப்பதாக அண்மைய மருத்துவக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மாசடைந்தி ருக்கும் சூழல், மாறுபட்டு வரும் உணவுப் பழக்கவழக்கங்கள் என்பனவே இவற்றுக் கான அடிப்படைக் காரணங்களாகச் சொல் லப்படுகின்றன. ஆயினும், இன்றைய நாட் களில், ஒருவரின் பாலியல் பங்குதாரர்களா கப் பலபேர் இருப்பதுவும் ஒரு முக்கியமான காரணம்தான். வெளியில் தெரியாவிட்டா லும், ஒருவருக்கு மேற்பட்டவர்களோடு பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு நோய்த் தொற்றுக்களால் கருப்பை மற்றும் கருக் குழாய்களில் பாதிப்பு என்பன ஏற்படுகின் றன. இந்தியாவைப் பொறுத்தளவில் காச நோய்ப் பாதிப்புக்கு ஆளாவோரின் எண் ணிக்கையும் அதிகம். இதன் தாக்கமாகவும் இந்த மலட்டுத்தன்மை தோன்றலாம்.

அடுத்தது ஆடைக் கலாசாரம். முக்கிய மாக ஆண்கள் இறுக்கமான உள்ளாடை களை நீண்ட நெடுநேரத்துக்கு அணிந்திருப் பதால், விதைப்பை அளவுக்கதிகமாக வெப் பமடைகிறது. அதிகளவான வெப்பம் உயிர ணுக்களைக் கொன்றுவிடும் என்றுதான் இயற்கையே விதைப்பையை உடலுக்கு வெளியில், எந்நேரமும் நீர்த்தன்மை காணப் படக்கூடிய இடத்தில் அமைத்துத் தந்திருக் கிறது. அப்படியிருக்கையில் இதுபோன்ற உடைகள் உயிரணுக்களைக் கொன்றுவிடு கின்றன.

தமிழர்களைப் பொறுத்தவரையில் கருக் கட்டல் பற்றிய பூரண அறிவின்மையும் ஒரு காரணமாகிறது. எமது கலாச்சாரத்தின் தன் மையால், பாலுறவு பற்றி வெளியில் பேசிக் கொள்வது மிகக் குறைவாக இருக்கிறது. எத் தனைதான் தொடர்பூடகங்கள் மூலம் பாலு றவு குறித்துத் தெரிந்துகொண்டாலும் கருக் கட்டலுக்குப் பொருத்தமான நேரம், முறை பற்றிய அறிவு அவர்களிடத்தில் இல்லை. பெண்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். என்னிடமேகூட, திருமணமாகி மூன்று வரு டங்களாகியும் குழந்தைப்பேறு இல்லை என்று வந்தவர்கள் உண்டு. ஆனால், அவர் களிடத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. நேரம் தெரிந்து இணையாதது மட்டுமே கார ணமாக இருந்தது. பலருக்கு இது ஆச்சரிய மாக இருந்தாலும் இப்படியும் நடப்பதுண்டு.

இன்றைய காலத்தில் ஆண், பெண் இருவரும் தொழிலுக்குச் செல்கிறார்கள். இருவருக்கும் தொழிற்சுமைகள் இருக் கின்றன. களைத் துச் சோர்ந்து வீடு திரும்பும் இவர்களும் இந்த உசிதமான நேரம் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தம்மால் முடிந்த நாட்களில் மட்டுமே தாம்பத்தியத்தில் ஈடு படுகிறார்கள். இது, குழந்தைப் பேற்றில் தாம தத்தை ஏற்படுத்துகிறது. கருக்கட்டுவதற் கென்று ஒரு உசிதமான காலம் இருக்கிறது. அந்த நேரத்தில், ஆரோக்கியமான ஆணும், பெண்ணும்  இணைவார்களெனின் கருக் கட்டல் நிகழும் வாய்ப்பு உண்டு.

அந்த நேரம் குறித்து விளக்குவீர்களா?

சீரான மாதவிடாய்ச் சுற்று இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு சரி யாகப் பதினைந்தாம் நாள் கருமுட்டை வெளியாகும். அப்படி வெளியாவதைப் பரி சோதனைகள் மூலம் அறியலாம் அல்லது பெண்களின் அடிவயிற்றில் கனமாக உணர் தல், பெண்களின் பிறப்புறுப்பில் வெள்ளை நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளியாவது என்பவற்றைக் கொண்டும் அறிந்துகொள்ளலாம். இந்த முட்டையின் ஆயுட்காலம் பன்னிரண்டு மணி நேரங்கள் மட்டுமே. ஆனால், பெண்ணின் உட லுக்குள் புகும் ஆணின் விந்தணுவோ நாற்பத்தெட்டு மணிநேரம் உயிர்த்திருக்கும். ஆகையால், கரு முட்டை வெளியாவதைத் தெரிந்து கொண்டோ அல்லது மாதவிடாய் ஏற்பட்ட பதினைந்தாம் நாளுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ தாம்பத்தியத்தில் இணைந்தால், பூரண ஆரோக்கியமுள்ள தம்பதி யினருக்குக் கருக்கட்டல் நிகழும் வாய்ப்பு இருக்கிறது. திருமண மாகி, மகப்பேற்றை விரும்பும் தம்பதியினர், பொதுவாகவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உறவுகொள்வது நல்லது. ஆனால் இவை எவற்றையும் ஒரு வேலையாகக் கரு திச் செய்யக்கூடாது. சுமைகள், சஞ்சலங்கள் இல்லாத மனோநிலை, இருவருக்கும் உறவு துய்ப்ப தில் ஈடுபாடு, துப்புறவு என்பன கட்டாயம் பேணப்பட வேண்டும்.

சீரற்ற மாதவிடாய் என்பதே மகப்பேற்றுக்குத் தடையான ஒரு காரணியாகச் சொல்லப்படுகிறதே?

உண்மைதான். பெண்கள் எல்லோருக் கும் மாதம் ஒரு முறை மாதவிடாய் தோன்று வதில்லை. அவர்களது இனப்பெருக்க உறுப் புகளில் காணப்படக்கூடிய ஏதோவொரு தாக்கத்தால், நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு முறை கூட மாதவிடாய் தோன்றலாம். சிலருக்கு நாற்பது நாட்களுக்குள் இரண்டு முறைகள் மாதவிடாய் தோன்றலாம். இப்படி யானவர்களின் கருமுட்டைகள் சீக்கிரம் வெடித்துவிடும். ஆகையால், சீரற்ற மாத விடாய் என்பதை, மகப்பேறு தாமதமாவதற் கான முன்னறிவிப்பாகவும் சொல்லலாம்.

அப்படியானால், பூப்படைந்த பெண்ணிடம் சீரற்ற மாதவிடாய் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டுமா?

பிறந்த ஒரு குழந்தை எப்போது தூங்கும் என்பதை நம்மால் சரியாகக் கணித்துவிட முடியாதல்லவா? அதுபோலவே, சுமார் பன் னிரண்டு அல்லது பதின்மூன்று வயது வரை உடலுக்குள் இயங்கிக்கொண்டிருந்த கடி காரம், பூப்படைந்ததற்குப் பின் கொஞ்சம் தடுமாறலாம். அதன்போது இதுபோன்ற தாமதங்கள் தோன்றலாம். அது குறித்துக் கவ லைப்படத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரையில், இருபது வயது வரை சீரற்ற மாதவிடாய் பற்றி வருந்தத் தேவை யில்லை என்றுதான் சொல்வேன்.

செயற்கை முறையில் குழந்தைப்பேறை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள். இது எத்தனை சதவீத வெற்றியைத் தந்திருக்கின்றது?

மரபு ரீதியான செயற்கை முறைக் குழந் தைப் பேற்றுச் சிகிச்சையானது, உலக அளவி லேயே இருபது முதல் முப்பது சதவீதம் வரையான வெற்றி வாய்ப்புகளையே தரு கின்றது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கும் `இக்ஸி' முறையில் அறுபது சதவீத வெற்றியை எதிர்பார்க்கலாம். ஆகையால் பலரும் அதை விரும்புவர். ஆனால், இக்ஸி முறையில் உயிரணுவானது கருமுட்டையி னுள்  ஊசி மூலமாகத் திணிக்கப்படுகிறது. சில பரிசோதனைகளின் பின்புதான் அந்த உயிரணு தெரிவுசெய்யப்படுகிறது என்றா லும், அதன் மூலம் உருவாகும் அடுத்த தலை முறை எப்படி இருக்கும் என்பது குறித்து நம்மால் மிகச் சரியாகச் சொல்ல முடியாது. ஆகையால், எல்லோருக்கும் இக்ஸி சிகிச்சை சிபாரிசு செய்யப்படுவதில்லை. வீரியமுள்ள மரபணு இருந்தும் போதிய அளவில் உயி ரணு இல்லாத ஆண்களுக்கே இக்ஸி முறை சிபாரிசு செய்யப்படும். உயிரணு உற்பத் தியே இல்லாத ஆண், தன் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என விரும்பினால் உயிரணு தானம் மூலம் அவர் களது ஆசையைப் பூர்த்திசெய்யலாம்.

உயிரணு தானம் பற்றிச் சொல்வீர்களா?

ஒருவர் தானமாக வழங்கும் இரத்தத் தைச் சேகரித்து வைத்து, தேவை ஏற்படும் போது உபயோகப்படுத்திக்கொள்கிறோமல் லவா? அதைப் போன்றதுதான் இந்த உயி ரணு தானம் என்பதும். ஒரு கணவரால் தன் மனைவிக்குத் தாய்மைப் பதவி தரமுடியாத நேரத்தில், இந்த உயிரணு வங்கியில் இருந்து அவர்களுக்குப் பொருத்தமான உயிரணு தெரிவுசெய்யப்பட்டு, ஒரு சில பரிசோதனை களுக்குப் பிறகு செலுத்தப்படுகிறது. இதில், யாருடைய உயிரணு யாருக்கு வழங்கப்பட் டது என்பது மருத்துவர் மட்டுமே அறிந்தி ருப்பார் என்பதால், ரகசியம் காக்கப்படும்.

உயிரணு தானத்துக்கு முன்பதாகப் பல விதமான மரபணுப் பரிசோதனைகள், இரத் தப் பரிசோதனைகள் மற்றும் தானம் தருபவ ரின் நோய் வரலாறு குறித்துப் பலவித ஆய் வுகள் செய்யப்படும். ஆகையால் பக்கவி ளைவுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் குறைவு. சிலவேளைகளில் தானம் வழங்கு பவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து அது பற்றி அவர் அறியத் தராதவிடத்து, அவர் மூலம் உருவான குழந்தைக்கும் அந்த நோய் ஏற்படலாம். அதுபோலவே, அவரது மரபணுக்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அது அந்தக் குழந்தையில் பிரதி பலிக்கும்.

இலங்கை போன்ற வெளிநாடுகளில் வாழ்பவர்கள் உங்கள் மருத்துவமனையில் மகப்பேற்றுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பினால் என்ன செய்யவேண்டும்?  

பெண், இரண்டு மாதங்கள் தங்கியிருக்க வேண்டும். ஆண், ஐந்து நாட்கள் தங்கியிருந் தாலே போதுமானது. காரணம், முதலில் பெண்ணுடைய மாதவிடாய்ச் சுழற்சியை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துவோம். அதற்கு ஒரு மாதகாலமாகிவிடும். அதன் பின், உரிய நேரத்தில் உயிரணு செல்லவோ, செலுத்தப்படவோ வேண்டும். அந்த நேரத் தில்தான் ஆணுடைய தேவை ஏற்படும். அதன் பின் கருக்கட்டல் முறையாக நடந் திருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். அது உறுதியானபின், தேவை யான ஆவணங்கள், பரிசோதனை முடிவுகள் மற்றும் ஆலோசனைகளுடன் அவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கே அனுப்பி விடுவோம்.

பொதுவாக, செயற்கைமுறையில் கருத்த ரிப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகளை ஈன்றெடுக்க முடியும். அதற் கான வசதிகள் சகல நாடுகளிலும் கிடைப்ப தனால், சொந்த நாட்டிலேயே குழந்தையைப் பிரசவிக்கலாம். அவர்கள் விரும்பினால் எமது மருத்துவமனையிலேயே கூடப் பிரச வத்தைச் செய்துகொள்ளலாம்.

இந்தத் துறையில் மறக்க முடியாத ஏதேனும் ஒரு சம்பவம் பற்றிச் சொல்லுங்களேன்?

பத்து வருட காலமாக இந்தத் துறையில் இயங்கிவருகிறேன். முன்பிருந்ததை விட, தற்போது கணவன்-மனைவிக்கிடையே யான புரிந்துணர்வு அதிகமாகியிருக்கிறது என்பதை, இதுபோன்ற உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக் கும் கணவர்களின் எண்ணிக்கையை வைத்தே அறிந்துகொள்ள முடிகிறது. மூன்று வருடங்களுக்கு முன், கிராமத்திலிருந்து ஒரு கணவனும் மனைவியும் வந்தனர். தமக்குக் குழந்தை இல்லை என்று தன் மனைவியைப் பலரும் நோகடிப்பதாகவும் குழந்தை பிறக் காததற்குத் தானே காரணம் என்றும் அந்தக் கணவர் சொன்னார். யாரோ பெற்ற பிள் ளையைத் தத்தெடுப்பதைவிட, தன் மனைவி மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள் ளத் தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டன. குழந்தையும் பிறந்தது. வருடாவருடம் அந் தக் குழந்தையின் பிறந்த தினத்தன்று அந்தக் கணவரும், அந்தக் குழந்தையும் எமது மருத் துவமனைக்கு வந்துஇனிப்புகள் பரிமாறி மகிழ்வார்கள். அண்மையில் அப்படி அவர் கள் வந்திருந்தபோது, `தனது' மகள் தனக் கொரு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று அடம்பிடிப்பதாகவும், அதற்காக உயி ரணு தானம் மூலம் இன்னொரு குழந்தை யைப் பெற்றுக்கொள்ளத் தாம் விரும்புவதா கவும் கூறினார். கல்வியறிவு குறைந்த அவர், எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு இயல்பாக எடுத்துக்கொண்டார்?

குழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு நோய் மாதிரித்தான். அந்நோய்க்குத் தகுந்த சிகிச்சைகள் அளித்தால் பூரணமாக குண மாக்க முடியும் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும் என்று நினைக்கிறேன்.

தொடர்புக்கு: 0091 0452 2323651

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,843