Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இதய சத்திர சிகிச்சையில் `நானோ' தொழில்நுட்பம்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

மனித உடலில் முதுமையடையாத பகுதி இதயம். ஆனால் இந்த இயந்திரப் பகுதி இயங்குவதும், இயங்காததும் எம்முடைய கைகளில் தானிருக்கிறது. குழந்தை, கருவில் உருவாகும் போதே இதயக்கோளாறுகளுடன் இருக்கிறதா என்பதனைக் கண்டறிவதில் தொடங்கி, மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இதயத்தை மற்றவர்களுக்கு பொருத்தி இயங்க வைப்பது வரை, இதய மருத்துவத்துறை தற்போது பல்வேறு நவீன வசதி வாய்ப்புகளுடன் வளர்ந்து, சேவையாற்றி வருகிறது. இந்த சேவையை உலகத்தரத்துடன் வழங்கி வரும் ஒரு சில மருத்துவமனைகளில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃப்ராண்டியர் லைஃப் லைன் மருத்துவமனையும் ஒன்று. சர்வதேச அளவிலான இதய நோயாளிகள் இம்மருத்துவமனையை அணுகி, ஆலோசனையும், சிகிச்சையும் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதன் சூட்சுமம் குறித்து, இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், சர்வதேச அளவில் பெயர் பெற்ற இதய நோய் சத்திர சிகிச்சை நிபுணருமான டொக்டர் கே. எம் செரியனை www.medicalonline.in சார்பில்  சந்தித்து கேட்டோம்.

குழந்தைகளுக்கு வரும் இதயக் கோளாறை முழுவதுமாக குணப்படுத்த இயலுமா?

பெண்கள் கருவுற்றிருக்கும் காலங்களில் அவர்கள், ரூபெல்லா வைரஸ் என்ற கிருமிகளின் தொற்றுக்கு ஆளாகியிருந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதய செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதேப்போல் பெண்கள், கருவுற்றிருக்கும் காலங்களில் போதிய அளவிற்கு ஊட்டசத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொளளாமலிருந்தால் கூட வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது உறுதி என்று பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டவுடன், எப்போது எவ்வகையான சத்தர சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்கவேண்டும். சிலருக்கு வயிற்றிற்குள் இருக்கும் போதே சிகிச்சை தேவைப்படும். ஒரு சில குழந்தைக்கு பிறந்து 24 அல்லது 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை தேவைப்படும். எதுவாக இருந்தாலும் பாதிப்பின் ஆரம்ப நிலை என்றால், அதனை நூறு சதவீதம் குணப்படுத்திவிடலாம். ஆனால் சிக்கல் பல்வேறு கட்டங்களைக் கடந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் தொன்ணூறு வீதமே வெற்றிப் பெறும். அதேப்போல் மருத்துவத்துறையில் இவ்வகையான சிகிச்சையின் போது டோட்டல் கரெக்ஷன் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் எம்முடைய அனுபவத்திலிருந்து குழந்தைகளுக்கு டோட்டல் கரெக்ஷன் என்பது பொருந்தாது. அதற்கு பதிலான டோட்டல் ரிப்பேர் என்ற பொருளில் பயன்படுத்துவதே பொருத்தமானது. அதாவது குழந்தையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதய பாதிப்பிற்கான சிகிச்சையை தீர்மானிப்பது தான் டோட்டல் ரிப்பேர். அதே தருணத்தில் பிறக்கும் போது இதயக்கோளாறுடன் பிறக்கும் பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவளானால், மற்றைய பெண்களைப் போல் குழந்தைப் பிறப்பை வைத்துக்கொள்ளமுடியாது,

மாற்று இதயம் பொருத்தப்பட்ட பெண்மணியொருவர் குழந்தையைப் பெற்றுக்கொள்ள இயலுமா?

ஒருவரின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்துவதால், பொருத்தப்பட்ட மாற்று இதயத்தின் செயல்பாட்டினை தடை செய்வதற்காக உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி பணியாற்றும். அதனை கட்டுப்படுத்துவதற்காகவும், பொருத்தப்பட்ட இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதற்காகவும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் போது, அவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்ள இயலுமா? என கேட்பது சற்று சிக்கலான வினா. விதிவிலக்காக ஒரு சிலருக்கு சாத்தியமாகுமேத் தவிர அனைவருக்கும் இது சாத்தியமாகும் என்று கூற இயலாது.

மாரடைப்பிற்கு காரணமான இதய செயலிழப்பை கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இ.இ.சி.பி சிகிச்சையைப் பற்றி முரணான கருத்துகள் வருகிறதே ஏன்?

என்ஹான்ஸ் எக்ஸ்டேர்னல் கவுண்டர் பல்சேஸன் என்று விவரிக்கப்படும் இ.இ. சி.பி என்ற சிகிச்சையை, இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மாத்திரைகளால் சீரமைக்க முடியாத தருணத்திலும், பைபாஸ் சர்ஜரி செய்ய முடியாதவர்களுக்கும், பைபாஸ் சர்ஜரி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும், பைபாஸ் செய்தும் அடைப்பு உள்ளவர்களுக்கும் ஏற்றது. ஆஞ்சைனா இருக்கும் போதே, இந்த சிகிச்சை மூலம் கொரனேரி பகுதியில் புதிய பிளட் வெசல்ஸை உருவாக்கலாம். இந்த சிகிச்சை, தினசரி ஒரு மணி நேரம் வீதம் முப்பந்தைந்து அமர்வுகளில் வழங்கப்படும். இந்த சிகிச்சை வழங்கும் முன் ரேடியோ தெரபி மூலம் இதயத்தின் செயல்பாடு கண்காணிக்கப்பட்ட பின்னரே அளிக்கப்படும். அதே தருணத்தில் இந்த சிகிச்சையை வேறு எதற்கும் பயன்படுத்த இயலாது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளே தெரிவதில்லையே ஏன்?

நீரிழிவு நோயாளிகளுக்கு ப்ளட் வெசல்சுடன் கண், சிறுநீரகம் உள்ளிட்ட பல பாகங்களும் பாதிக்கப்படுகின்றன. இவர்களுக்கு நரம்புகள் கூட பாதிப்படையும். அப்போது தான் அதன் அறிகுறிகளையே உணரமுடியும். இத்தகையோர்களை ட்ரெட் மில் இ. சி. ஜி என்ற பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சையளிக்க இயலும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்களே.. ஏன்?

மருத்துவர்களின் பரிசோதனையின் படி இதய துடிப்பின் வேகம் 40 சதத்திற்கு மேல் உள்ளவர்களும், ஏழு நிமிடம் வரையிலான இயல்பிற்கு மீறிய இதய துடிப்பினை பராமரிப்பவர்களும்  தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மற்றவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது மருத்துவர்களின் எச்சரிக்கையை மனதில் வைத்துக்கொண்டு தான் ஈடுபடவேண்டும். ஆனால் அதே தருணத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் வயாக்ரா என்னும் மாத்திரையை பயன்படுத்த கூடாது.

கைகளாலேயே ஆஞ்சியோகிராம் செய்ய முடியும் என்கிறார்களே. இதன் பலன் என்ன?


முன்பெல்லாம் தொடை பகுதிகளில் ஆஞ்சியோகிராம் சோதனைப் பார்க்கப்பட்டது. இதனால் நோயாளி மருத்துவமனைகளில் மூன்று தினங்கள் வரை செலவிடவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது கைகளாலேயே ஆஞ்சியோகிராம் செய்து, இதய அடைப்பினை, இனம் கண்டறிந்து சிகிச்சையளிக்கக்கூடிய நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி அதிக வசதியைப் பெறுகிறார். படுக்கையில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பாட்டுக்கேட்டுக்கொண்டே ஆஞ்சியோ செய்துவிடலாம். அனஸ்தீசியா தேவையில்லை. காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மாலையில் பரிசோதனை செய்துக்கொண்டு, முடிவினை தெரிந்துக்கொண்டு திரும்பலாம். ஆனால் இந்த சிகிச்சையையும் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு, பேஸ்மேக்கர் கருவியை பொருத்திக்கொண்டவர்கள், தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறார்களே ஏன்?

இதய கோளால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காகத்தான் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திக்கொண்டவர்கள், ஓட்டப்பயிற்சிக் கூட எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் நவீன பேஸ்மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டு, பொருத்தப்படுகிறது. எனவே இந்த கருவியால் இயல்பான வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் அதிக மின்னழுத்த சேகரிப்பான் (440 வோல்ட் ட்ரான்ஸ்பார்மர்) இருக்குமிடத்திலும், விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த இலத்திரனியல் பரிசோதனை சாவடிகளிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனெனில் இத்தகைய கருவிகளில் பொருத்திவைக்கப்பட்டிருக்கும் லித்தியம் என்ற வேதிப் பொருள், அதிக மின்னழுத்த சேகரிப்பான்  உள்ள இடத்திற்கு அருகில் செல்லும் போது தேவையற்ற முறையில் விரயமாகும். இதனால் இந்த கருவியின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் குறைய வாய்ப்புண்டு என்பதால், அத்தகைய இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறோம்.

இத்துறையில் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லுங்களேன்?

ஸ்டெம்செல் தெரபி,  நானோ டெக்னாலஜி, டிஸ்யூ இன்ஜினியரிங் என பல வித நவீன சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிஸ்யூ இன்ஜினியரிங் என்ற பிரிவில் தற்போது நானோ கோட்டிங் கொடுப்பது என்ற நவீன சிகிச்சை, எங்களுடைய மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குழாய்களை சீரமைக்கும் போது இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த ரசாயனம் கலந்த செயற்கை குழாய்களை விட, தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் உயிரி வேதியல் துறையின் கண்டுபிடிப்பான நானோ தொழில் நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் பொலிஸீன்-எஃப் என்ற செயற்கை குழாய்களை பொருத்துவதன் மூலம் நோயாளிகளின் இதய இயக்கம் மேம்படுத்தப்படுகிறது. இவ்வகையான குழாய்களைப் பொருத்துவதால், இதயம் தன்னுடைய இயல்பான நிலையை விரைவில் அடைகிறது. இதயத்தை பாதிக்கும் பாக்டீரியாக்களை இவ்வகையான குழாய்களின் வாயிலில் தடுக்கப்படுகிறது. அத்துடன் இயற்கையாக உருவாகும் புதிய இரத்த அணுக்களையும் இவை தடை செய்வதில்லை. உடலில் பொருத்தப்பட்டுள்ள இந்த செயற்கையான உடலுறுப்பை, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் விரைவில் ஏற்கின்றன. இப்படி பல நன்மைகளைக் இந்த நானோ தொழில் நுட்ப அடிப்படையில் உருவாகும் செயற்கை இரத்த குழாய்கள் பெற்றிருப்பதால், நோயாளிகளுக்கு அதிக பலன்கள் கிடைத்து வருகின்றன. இத்தகைய நவீன சிகிச்சையை எங்களுடைய மருத்துவமனையில் துல்லியமாகவும், தரமாகவும் செய்து, நோயாளிகளுக்கு மகிழ்ச்சியை வழங்கி வருகிறோம்.

 

தொடர்புக்கு: 0091 44 26564224
 
Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,841