Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
மகப்பேறின்மைக்கான நவீன சிகிச்சைகள்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Gynaec & Infertility

மகப்பேறு மருத்துவர் டொக்டர். செந்தாமரைச் செல்வி www.medicalonline.in க்காக அளித்த செவ்வி:


நீங்கள் மகப்பேறு மருத்துவத் துறையினைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் பற்றிக்  கூறுங்கள்?
இந்த மருத்துவம் மகளிருக்கு மட்டும் செ ய்கின்ற மருத்துவம் என்பதால், இதனைப் பெரிதும் விரும்பி ஏற்றுக்கொண்டேன்.
உண்மையில் பெண்கள் வலிமையான வர்களே! ஹார்மோன்கள் ரீதியில் பார்தோ மானால், பெண்கள் மிகவும் வலிமையா னவள். பொதுவாக பெண்கள் கணவன், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு உணவினை பரிமாறிவிட்டு, குறைந்த  உணவினையே உட்கொள்கிறார்கள். இங்கிருந்துதான்  ஒரு பெண்ணிற்கு பிரச்ச னைகள் ஆரம்பமாகின்றன. தனக்கு ஒரு  நோயிருந்தால் அதனைப் பொருட் படுத்தாமல், குழந்தைகள் முதல்  பெரிய வர்கள் வரை உள்ள நோயினைப் பெரிதாக எண்ணி, தன்னைக் கவனிக்காமல் விட்டு விடுகிறாள். பெண்கள் போதிய உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளாமையால் அனிமியா குறைபாடு ஏற்படுகிறது. கருவுற்ற தாய்மார்கள் மச க்கையினால் 4 மாதங்கள் ச ரியாக உணவு உண்ணாமல்  இருப்பதால், அவர்கள் பின்னர் வரும் மாதங்களில் உணவினை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும்போது இரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைபாட்டியனாலேயே, பெரும்பாலும் பிரச வத்தில் பிரச்ச னை ஏற் படுகிறது. பெண்களுக்கு  மகப்பேறின் போது ஏற்படும் இரத்த இழப்பினைப் பற்றிய விரிப்புணர்வு இல்லை.  குழந்தை இழப்பு, கருக்கலைதல் போன்றவற்றிற்கான காரணம் கூடப் பலருக்குத் தெரிவதில்லை. பிரச வ காலத்தில் ச ர்க்கரை அளவினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பொதுவாகப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன?

பெண்களின் பருவ வயது முதற்கொண்டே அவர்களுக்குப் பிரச்ச னைகள் ஆரம்பமாகி விடுகின்றன. ஒவ்வொரு மாத விலக்கு காலங் களின் போதும் மன அழுத்தமும், இரத்த அழுத்தமும் அதிக மாகிக் கொண்டே போகின்றது. திருமண மான பெண் களுக்கு குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ப தினால் கூட, மன அழுத்தம் ஏற்படுகின்றது. மன அழுத்தத்தினால் தூங்காத பெண்களும் உண்டு. காலையில் 5 மணிக்கு எழ வேண்டும் என்கின்ற எண்ணம் கூட, பெரிய மன அழுத்தத்தினை உருவாக்கி விடுகின் றது. `இந்த அழுத்தம் + ஊட்டச்ச த்து பற்றாக்குறை' இவை இரண்டும் இணைந்து, பிரச்ச னைகளை பலவாறாக உருவாக்கி விடுகின்றன. மாதவிலக்குக்கு முதல் நாள் மார்பு கனத்து தோன்றுதல், வயிற்றுப் பகுதிகளில் வேறுபட்ட பிரச்ச னைகள் தோன் றும். மெனோபஸ் காலங்களில், ஹொர் மோன் களின் சுரப்பு பலமின்றி இருக்கும். மன உளைச்ச லும் அதிகமாக இருக்கும். இந்தக் காலங்களில் பெண்களுக்கு எலும்பு களில் தேய்மானம் ஏற்பட்டு,  ஒவ்வொரு வேலையும் மிகக் கஷ்டமானதாக இருக்கும்.
இளம்பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டிகள் பற்றிக் கூறுங்கள்?
பொதுவாக சில இளம் பெண்களுக்குச் கர்ப்பப்பைகளில் கட்டிகள் தோன்றுகின்றன. ஆனால் பொதுவாகக் கருப்பையில் ஏற் படும் ச தைக் கட்டிகளால் பெண்கள் நி றைய பாதிக்கப்படுகின்றனர். 50 வயது வரை இந்தக்கட்டி வளர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் இதன் வளர்ச்சி ஹார்மோனைச் ச ார்ந்து அமைகிறது. 50 வயதுக்குப் பின்னர் கட்டியின் அளவு குறையும். இந்தக் கட்டி ஏற்படுவதால் குழந்தையின்மை, இரத்தப் போக்கு அதிகரித்தல் போன்றவை நி கழும். இந்தக் கட்டி இருக்கும் போது வலியும் இருக்காது. வயிறு பெருக்கும் போது மட்டுமே அதைக் கண்ட அறிய முடியும். விலக்கின் போது இரத்தம் கட்டிகட்டியாக போகும். 30 நாள்களில் வரவேண்டிய விலக்கு 25, 20 நாட்களிலேயே வரும். இரத்தப் போக்கு குறைவாகவோ, மிக அதிகமாகவோ நி கழும். இவைகளை வைத்து குறைபாட்டுக்குரிய கட்டிகள் இருப்பதை அறியலாம்.
இன்றைக்கு தைராய்டு பிரச்ச னை நி றைய பேருக்கு உள்ளது. இந்தப் பிரச்ச னையால் மகப்பேறில் ஏற்படும் இடையூறுகள் என்னனென்ன?
பல வேலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தைராய்டு ஹார்மோன்தான். இனப் பெருக்க மண்டலத்தையும் தன்னு டைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. தைராய்டு குறைபாட்டினால் உடல்பருமன், முட்டை வெளிப்பாடு, கருக்கலைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  தைராய்டு குறைபாடு இருப்பது தெரியாததால், பிறக்கும் குழந்தைக்கும் தைராய்டு பிரச்ச னை வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே முன்கூட்டியே எல்லா ஹார்மோன்களின் அளவையும் சே ாதிப்பது அவசியம்.

மலட்டுத் தன்மைக்கு தைராய்டும் ஒரு காரணம். இதைப்போல மலட்டுத் தன்மைக்கு வேறு என்னென்ன காரணங்கள் உண்டு?

மாதவிடாய் சுழற்சியாக நடைபெற்றால் மகப்பேறில் பிரச்ச னைகள் இல்லை. தெடார்ச்சியில்லாமல் மாதவிடாயில் பிரச்சனை இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே சிகிச்சை  பெறுவது நல்லது. எடை அதிகம் இருப்பதாலும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. தக்க உணவு வகைகளை டாக்டரின் ஆலோசனையின் மூலம் பெறுதல் அவசியம். மன அழுத்தம் கூட ஒரு வகையில் மலட்டுத் தன்மைக்கு காரணமாகவே அடைகிறது. காலம் தாழ்த்தி திருமணம் செ ய்வதும் மலட்டுத் தன்மைக்கு ஒருவகைக் காரணமே. இனப்பெருக்க காலம் என்பது மிகக்குறைந்த எல்லையை உடையதே ஆகும். 20 இல் இருந்து 31 வயது வரை ஏறுமுகமாக இனப்பெருக்க மண்டலச் செ யல்பாடு இருக்கும். 35 வயதுகளில் இயற்கையைக் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 40 வயது வாக்கில் பெரும்பாலும் கருத்தரிக்கும் சூழல் உடல்நி லையில் இல்லாமலும் போய் விடுகிறது. இது பொதுவான கணக்கீடு. இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு.
சிலருக்கு கருமுட்டை வெளிப்பாட்டி னால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சியை சரியாகக் கவனித்து சரி செய்ய வேண்டும். ஹார்மோன்களின் அளவைச் ச ரிபார்ப்பதும், பெண் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி களை அளிப்பதினாலும் இது போன்ற குறைகளைச் சரிசெய்ய முடியும்.
சோதனைக் குழாய் குழந்தை பற்றிய  தவறான மனநிலை மக்களிடம் உருவாக்கி இருக்கிறது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
முதலில் இந்த மன நி லையே தவறு. சோதனைக் குழாய்க் குழந்தை என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில்,  வேறு வழியே இல்லை என்னும்போது செ யல்படுத்த வேண்டியது. இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத பட்ச த்தில், அத்தகைய தம்பதியர்களுக்காகவே இந்த செயற்கை முறைக் கருத்தரிப்பு நி கழ்த்தப் படுகிறது. இயற்கையான கருத்தரிப்பு என்பது எத்தனையோ படிமுறைகளைக் கொண்டது. படிநிலைகளில் ஏற்படும் சின்ன மாறுபாடு களால் கூடக் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம். ஏன் கருத்தரிப்பு தள்ளிப் போகிறது என்ற காரணத்தைக் கண்டறிய வேண்டும். கண்டுபிடித்த குறைபாடுகளை மருத்துவத்திலோ, அறுவைச் சகிச்சையிலோ சரி செய்தாக வேண்டும். பின்னர் கருத்தரிப் புக்குத்தக்க முறையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மகப்பேறு தொடர்பான குறையை ச ரிசெ ய்தலில்,
1. காரணம் காணல்
2. சிகிச்சையில் சரி செய்தல்
3.தக்க கருத்தரிப்பு முறையை தேர்ந்தெடுத்தல் ஆகிய மூன்று படிகள் உண்டு. இந்த சோதனைக்குழாய் குழந்தை கருத்தரிப்பு 28-30 வயதிற்குள்ளாகவே செ ய்வது நல்லது. ஏனெனில் அந்த வயதிற்கு பின்னர், ஹார்மோன் குறைபாடு, சார்க்கரை அளவு அதிகரிப்பு முதலிய வாய்ப்புகள் அதிகம். குழந்தைப் பேறு மருத்துவம் என்றாலே சோதனைக்குழாய் குழந்தை (test tube baby) என்ற கண்ணோட்டம் மாற  வேண்டும்.

சோதனைக்குழாய் முறையில் கருத்தரிப்பதனால், பிரசவம் ஏற்படும்போது குழந்தைக்கு பாதிப்புக்கள் ஏற்படுமா?

பிரச வத்தில் உள்ள பிரச்ச னைகள் எல்லாம், பெண்களிடம் உள்ள விழிப்புணர் வைப் பொருத்ததே ஆகும். இயற்கையாக பிரச வத்திற்கு செ ல்பவரிடம் கூட பிரச்சனை வருவதுண்டு.  இன்றைக்கு  சுகப்பிரச வத் தைவிட, அறுவைச் சிகிச்சையிலேயே பெரும்பாலான பிரச வங்கள் நி கழ்கின்றன. இதற்குக் காரணம் ஊட்டப் பொருட்களும், உடற்பயிற்சியும் இன்மையே. பெரும் பாலும் சோதனைக் குழாயில் கருத்தரிக்கும் பெண்கள் 30-35 வயதுகளில் கருத்தரிப்ப தால், வயது குறைவான பெண்களைவிட உடல் இளகும் தன்மையிலிருந்து முதிர்வாக இருப்பதாலும், அதிகமான அழுத்தத்தாலும் பிரச வத்தில் பிரச்சனை வருவது இயல் பானதே. எனவே குழத்தைகளை அறுவைச் சிகிச்சையில் பிறக்க வைப்பதே  பாதுகாப்பானது.
வெளியில் கருமுட்டை விந்தணு இணைவு மட்டுமே செ யற்கை. மற்றபடி தாயின் கருவறையில் இயல்பாகவே, இயற்கையாகவே குழந்தை வளர்கிறது. எனவே செயற்கை முறையில் உருவாக்கப் பட்டாலும், அது இயற்கையான குழந்தை யே. உடல்நலக்குறைவு ஏற்படும் என்ற கருத்து தவறானது. அவ்விதம் குறைபாடு கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதற் குப் போதிய சான்றுகள் இல்லை, நி ரூபிக்கப் படவும் இல்லை.

வெளிநாட்டில் இருந்து வரும் நோயாளிகள் எவ்வாறு தொடர்பு கொள்வது, சிகிச்சைக்கு எத்தனை நாட்கள் ஆகும்?

மகப்பேறு சோதனை செய்ய விரும்புபவர்கள் தொலைபேசி, மின்னஞ்ச ல் மூலம் தொடர்பு கொண்டு பேச லாம்.  பேசி அனுமதி பெற்று பெண்கள் மாதவிலக்காகும் 1,2,3ஆம் நாட்களில் வந்தால், பல்வேறு விதமாக மருத்துவப் பரிசோதனைகளை முடித்து விடலாம்.  இவை தவிர கருத்தரிப்பு ச ரியாக நடக்கிறதா என்று அதற்குரிய சோதனை மூலம் அறிய வேண்டும்.  இவை தவிர ஆண்கள் விந்தணுவினை சோதிக்க வேண்டும்.  
ஆண்களைப் பொருத்தவரை குறைகள் இரண்டு வகைதான்.  ஒன்று உடலுறவு கொள்ளத்தக்க உடல்வாகு, மற்றொன்று எண்ணிக்கை மற்றும் செ யல் வேகம் கொண்ட நல்ல அமைப்பான விந்தணுக்கள் இவற்றை கண்டறிய வேண்டும். இந்தச் சோதனைகளைச் செய்து முடிக்க சுமார் 15-20 நாட்கள் வரை ஆகும். கர்ப்பத்தை உறுதி செய்து கொண்ட பின்னர் அதைத் தக்க வைப்பதற்கான மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தன்னாட்டிற்குச் செல்லாம்.  பிரசவத்தையும் கருத்தரிப்பு சிகிச்சை  செய்து கொண்ட மருத்துவரிடமே பார்ப்பது நல்லது. முடியாதவர் தக்க ஆலோசனைகளுடன் தங்கள் நாட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் மேலும் ஆலோசனைகளுக்கு மருத்துவரை தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு: +91 98421 31341

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,968