Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இதயநோய்க்கான நவீன சிகிச்சைகள்
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

திருச்சி மாநகரில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை  நிபுணரான டொக்டர். கு. அரவிந்த் குமார், இதய நோய்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நவீன சிகிச்சைகளைப் பற்றி  www.medicalonline.in க்கு அளித்த செவ்வி...

மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது?

இருதயத்தின் இரத்த நாளங்களை தாக்கும் மாரடைப்பு, திடீரென்று தோன்று வது அல்ல. இந்நோய் சுமார் இருபதாண்டு காலத்திற்கு மேலாக எவ்வித அறிகுறியும் இல்லாமல் வளரும் நோய்.  சிலரை இந்நோய், அதிக இரத்த அழுத்தம், புகை பிடித்தல் போன்றவையினால் இரத்த நாளத்தின் உட்புறசுவர் பாதிக்கப்படும் போது இந்நோய் ஆரம்பமாகிறது.  உட்புற சுவர் பாதிக்கப்பட்ட பின், மிருதுவான பகுதி கரடுமுரடாகிறது.  அப்பகுதியின் மீது இரத்தத்தில் மிதக்கும் கொழுப்பு ச த்துக்கள் படிந்து கொண்டே வந்து, இரத்த ஓட்டத்திற் கான பாதையை குறுகலாக்கி, வழக்கமான இரத்த ஓட்டத்தை தடை செ ய்கிறது.  இதற்கு மேல் நாளத்தில் ஒரு விறைப்போ (Spasm) அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் உறை கட்டிபடுதலோ, (Clot thrombus)  ஏற்பட் டால் இரத்த ஓட்டம் முழுவதுமாக தடைபட நேரிடும்.  இவ்விறைப்பு ஓய்வாக இருக்கும் போது கூட இது ஏற்படலாம். இவ்வித அடைப்பு அதிகமாகும்போது, மார்பில் ஒரு இறுக்கமோ (Angina), அல்லது மாரடைப்போ (Heart Attack) ஏற்படுகின்றது.

மாரடைப்பு வந்தவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை  முறை சிறந்தது?

மாரடைப்பு வந்தவர்களுக்கு இருதயத்தில் உள்ள தசை களின் பாதிப்பைப் பொருத்தும், மீண்டும் நெஞ்சுவலி வருவதை பொருத்தும், ஒருவரது வயதினைப் பொருத்தும் மருத்துவ சிகிச்சை  முறை மாறுபடும். அதிக தீவிரமாக உள்ளவர் களுக்கு அவர் மருத்துவ மனை விட்டு போகும் முன்பே, அவருக்கு ஏஞ்சியோகிராம் செ ய்து, அதில் அடைப்பு உண்டா என்று கண்டறிந்து சிகிச்சை செய்கிறோம். மற்றவர் களுக்கு சுமாராக ஒரு மாதம் கழித்து, அவர்களுக்கு Treadmill என்று சொல்லப்படும் பரிசோதனை செ ய்து பார்க்கப்படும். அதில் மாற்றங்கள் இருந்தால் ஏஞ்சியோகிராம் செ ய்யப்படும்.
இவ்வாறு நாம் ஏஞ்சியோ கிராம் செய்யும்பொழுது, இரத்தக் குழாய்களில் எத்தனை அடைப்பு உண்டு, எந்த இடத்தில் உண்டு என்று கண்டறியப்பட்ட பின்னரே இதனைப் பொருத்து ஒருவருக்கு ஏஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) என்ற முறையில் ஸ்டென்டிங் (Stending) அல்லது பைபாஸ் ஆபரேஷன் (CABG) செய்யப்படும்.
இதில் ஒரு சிகிச்சை  முறையும், மற்ற சிகிச்சை  முறையும், ஒன்றைவிட மற்றது சிறந்தது என்று கிடையாது.  ஒவ்வொரு வருடைய நோயின் தன்மையை அனுச ரித்தே முடிவு செய்யப்படும்.

ஏஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன?

ஏஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) என்றால் நாம் தொடையிலிருந்தோ, கை வழியிலோ, கத்திட்டர் (Catheter) மூலம் இருதயத்தில் உள்ள இரத்தக் குழாய் அணுகப்படும்.  இரத்தக் குழாய் வழியாக (dye) ஒருவித மருந்து செ லுத்தப்படும் பொழுது, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு தெளிவாக தெரியும்.  அதுபோல் தெரியும் அடைப்பை ஒரு சிறிய கம்பிபோல் ஒரு சாதனத்தை வைத்து அடைப்பை கடந்து, பலூன் வைத்து அடைப்பு களையப்படும்.  அவ்வாறு எடுக்கப்பட்ட அடைப்பு, மீண்டும் வராது இருக்க அந்த இடத்தில் ஸ்டெண்ட் (Stent) என்று கம்பிபோல் உள்ள பொருள் பொருத்தப்படும்.  அது பொருத்தப்பட்ட இடத்தில் இருந்து மாறாது இரத்த குழாயில் அப்படியே இருக்கும். இம்முறையை நாங்கள் Angioplasty என்று கூறுகிறோம்.

மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

தவிர்க்கக்கூடிய காரணங்கள்: புகைபிடித்தல், உயர்ந்த அளவு இரத்த கொழுப்பு, மன உளைச்சல், சர்க்கரை வியாதி, பருமனான உடல்வாகு, குணாதிசயம், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தல்
தவிர்க்க இயலாத காரணங்கள்: முதுமை, பாரம்பரியம் இவற்றினால் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

கொலஸ்ட்ராலினால் இருதய வியாதி எவ்வாறு வருகிறது?

கொலஸ்ட்ரால் சில உணவு வகைகளில் உள்ள ஒரு வித கொழுப்பு ச த்தாகும்.  ஈரலும் கொழுப்புச்ச த்தை உற்பத்தி செ ய்கிறது. இவற்றை இருவகை கொழுப்பு புரதங்கள் இரத்தத்திற்கு எடுத்துச் செ ல் கின்றன.  குறைந்த அழுத்தம் உள்ள கொழுப்பு புரதம் (LDL) இரத்தக் குழாயின் அடைப்புகளை தோற்றுவிக்கின்றன.  எனவே இது `தீமை பயக்கும் கொலஸ்ட் ரால்' (bad cholesterol) என்றும், அதிக அழுத்த கொழுப்பு புரதங்கள் (HDL) இரத்தத்தில் உள்ள கொலாஸ்ட்ராலை நீ க்கு கின்றன.  எனவே இவை `நன்மை பயக்கும் கொலஸ்ட்ரால்' என்றும் அழைக்கப்படும்.  மூளை, இருதயம் போன்ற நாளங்களில் கொலஸ்ட்ரால், அடைப்பை உண்டாக்கி இரத்த ஓட்டத்தை தடைபடுத்துகிறது.  இது முக்கியமாக அதிக கொழுப்பு நி றைந்த மாமிச ங்கள் (மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி) முட்டையின் மஞ்ச ள் கரு, வெண்ணெய், நெய், பாலேடு, வனஸ்பதி, தேங்காய் எண்ணெய் போன்ற சில தாவர எண்ணெய்கள் முதலியவற்றில் ஏற்படுகின்றது.

அதிக இரத்த அழுத்தம் உண்டாகக் காரணங்கள் யாவை?

பாரம்பரியம், வயது, கூடுதல் எடை, மிகுந்த உப்புச்ச த்து உள்ள உணவுப்பழக் கம், மது, மன உளைச்ச ல், சிறுநீ ரக பாதிப்பு, சிறுநீ ரக கற்கள், சில நாளமில்லா சுரப்பிகள் அதிகம் சுரப்பதனாலும், இரத்தக் கொதிப்பு வரலாம். ஆனால் இரத்த கொதிப்பு வந்தவர்கள் கணக்கை பார்த்தால் 99% காரணமில்லாமல் தான் வருகிறது.

சர்க்கரை வியாதியினால் இருதயத் திற்கு வரும் பாதிப்புகள் என்ன?

சர்க்கரை வியாதி உள்ளவர் களுக்கு 2 முதல் 4 மடங்கு மாரடைப்பு கூடுதலாக வர வாய்ப்புள்ளது. ச ர்க்கரை வியாதி உள்ளவர்கள் 80 ச தவீதத்தினர் இருதய வியாதியினாலேயே இறந்து விடுவார்கள்.
இருதய வியாதி, இரத்த குழாய் அடைப்பு மூலமாகவோ, நேரிடையாக தசை களின் பாதிப்பு மூலமாகவோ ஏற்பட லாம். ச ர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூடுதலாக கொலஸ்ட்ரால் அடைப்பு காணப் படும். சாதாரணமானவர்களை காட்டிலும், இரத்த குழாயில் அடைப்பு பல இடங்களிலும், சிறிய மற்றும் பெரிய இரத்த குழாய்களிலும், கூடுதலாகவும் காணப் படும்.

மாரடைப்பு நோயின் அறிகுறிகள் யாவை?


மாரடைப்பு வருபவர்களுக்கு சாதாரண மாக நெஞ்சின் இடதுபகுதியில் மற்றும் இடது கையில் வலியோ, குத்துவது போலவோ, பாரம் வைத்தது போலவோ உணரப்படும். அது இல்லாது கூடுதலாக வியர்ப்பு, படபடப்பு, மூச்சு திணறல், மயக்கமும் உண்டாக வாய்ப்பு உண்டு.

இருதய நோய் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி அவசியமா? செய்யலாமா?

இருதய நோய் உள்ளவர்கள் அவசியம் உடற்பயிற்சி செ ய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் நேரமும், வேகமும் உங்களுடைய மருத்துவரின் ஆலோச னைப் படி செ ய்ய வேண்டும். தினமும் 30 முதல் 60 நி மிடங்கள் வரை நடந்தால் இருதயத்திற்கு நல்லது.

உணவு பழக்கவழக்கங்கள் மூலம் மாரடைப்பு நோயை தடுக்க முடியுமா?

உணவு பழக்க வழக்கங்கள் மூலம் கண்டிப்பாக மாரடைப்பு  நோயை தடுக்க வாய்ப்பு உள்ளது. முதலில் நாம் உண்ணும் உணவின் அளவு நாம் செ ய்யும் வேலையை பொருத்தும், நமது உடல் எடை பொருத்தும் கணக்கிடப்படுகிறது. உணவில் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், நார்ச த்து பொருட்கள் சே ர்க்க வேண்டும். கொழுப்பு ச த்து உள்ள பொருட்கள் மாமிச ம் தவிர்க்க வேண்டும். இது வழி பின்பற்றினால் மாரடைப்பு வருவதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

இரத்த குழாய் அடைப்பு உண்டா என்று கண்டறிவதற்கான வழிமுறைகள் என்ன?

"Treadmill Test' பரிசோதனை மூலம் இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உண்டா என அறிய முடியும். இதைத்தவிர மற்ற வழிகளும் உண்டு. "Multidimensional CT, MDCT (or) 64 slice (or) 128 slice CT' என்று கூறப்படும் ஸ்கேன் மூலம் ஏஞ்சியோகிராமிற்கு இணையாக துல்லி யமாக கண்டறிய வாய்ப்புள்ளது. இது இல்லாது புதிதாக MRI மூலமும் காண வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "STRESS MIBI' என்று கூறப்படும் டெஸ்ட், Nuclear Medicine சம்பந்தப்பட்டது. இதில் மருந்து கொடுத்து இருதயத்தின் செ யல்பாட்டை அறிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

இரவு பகலாக ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இருதயத்தின் மீது கவனம் செ லுத்தாமல் விட்டு, அது பெரும் பாதிப்புக்கு உள்ளான பின், அதைப் பற்றி கவனம் செ லுத்துவது விட்டு காலம் கடந்த ஒரு செ யலாகும். எனவே 30 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் குறிப்பாக மாரடைப்பு வருவதற்கான ச ந்ததியினரை ச ார்ந்தவர் களும், மேலும் பல காரணங்கள் உள்ளவரும், வருடந்தோறும் மருத்துவ பரிசே ாதனை செ ய்து கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. எக்கோ, இரத்தத்தில் ச ர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கண்காணித்துக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் உள்ளவர்கள் கண்டிப்பாக புகையை நி றுத்தி விட வேண்டும். அதிக மன உளைச்ச ல் உள்ளவர்கள் சுற்றுப்புறச் சூழ்நி லையை மாற்றி, மன உளைச்ச லைக் குறைக்க எல்லா வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முறையாக உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அனைவருக்கும் தேவை. வள்ளுவர் கூறும் "மருந்தென வேண்டாவா யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" எனும் கொள்கையை நாம் உணவில் கடைப்பிடிக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மன உளைச்ச ல் உள்ளவர்கள், யோகாச னம் செ ய்வதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது.


எங்களிடம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாவிதமான இருதய வியாதிகளையும் கண்டறிய கே.எம்.சி. மருத்துவமனையில் எல்லாவித வச திகளும் உள்ளன. 24 மணி நேர இருதய அவச ர சிகிச்சை ப் பிரிவு, இ.சி.ஜி. எக்கோ கார்டியோகிராம், டி.எம்.டி. கேத்லாப், ஹோல்டர், நாடித்துடிப்பில் மாறுதல் உண்டாகும் பொழுது அறியும் கருவி, போன்ற அதிநவீன வச திகள் இங்கு உள்ளன. இங்கு மாரடைப்பு வந்தவர்களுக்கு மருந்து மூலம் சிகிச்சை  முறை (Thrambloysis)  ஆஞ்சியோ  பிளாஸ்ட்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்படும்.

தொடர்புக்கு: +91 92457 90108

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,826