Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
இலங்கை மக்களக்கு சிறப்புச் சலுகைகளுடன் உயர்தரமான சிகிச்சை
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Cardiology

கே.எம்.சி மற்றும் கே.எம்.சி சிறப்பு மருத்துவமனையின் (ஸீஹார்ஸ் மருத்துவமனை) நிர்வாக இயக்குநரான அவர் டொக்டர். சந்திரகுமார், எளிய மக்களுக்கான சிறப்பு சலுகைகளையும், நவீன சிகிச்சை முறைகளைப் பற்றியும் www.medicalonline.in க்கு அளித்த செவ்வி...

இதயக்கோளாறுக்கான காரணங்கள், நவீன சிகிச்சைகளைப் பற்றிக் கூறுங்கள்?

வாழ்வியலில் ஏற்படும் மாறுதல்கள், உணவுக் கட்டுப்பாடின்மை, உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், சுற்றுச்சூழல், மாசு ஆகியவை இரத்தக் கொதிப்பை அதி கப்படுத்தி, இருதய கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதய நோய்களுக்கான பிரத்தியேக பிரிவில் (கே.எம்.சி ஹார்ட்ஸ் சிட்டி) இருதய நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறோம்.
அவசர காலங்களில் இதய நோயாளி களைக் காப்பாற்ற, தேர்ந்த மருத்துவ நிபுணர்களின் குழு அடங்கிய KMC Heart Brigade மற்றும் Hospital On Wheels முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. கலர் டாப்ளர் ஸ்கேன், செயற்கை நாடித்துடிப்பு கருவி, இதய ஆன்ஜியோகிராம், நவீன இதய அறுவைச் சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான இருதய சிகிச்சைப் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது.
இரத்த ஓட்டப் பரிசோதனை (இதய ஆன்ஜியோகிராம்) ஆன்ஜியோ பிளாஸ்டி, மூளை இரத்த ஒட்டப் பரிசோதனை, பலூன் வால்வ் சிகிச்சை, நிரந்தர நாடித்துடிப்புச் சிகிச்சை போன்ற சிக்கலான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் படைத்ததாக இங்கு அமைந்துள்ள நவீன கேத்லேப் உள்ளது. தொற்றுக் கிருமிகள் அறவே அணுகாதவாறு இதய அறுவைச் சிகிச்சைக்கான, நவீன அறுவைச் சிகிச்சை அரங்கமும் செயல்பட்டு வருகிறது. இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை, வால்வு மாற்றுச் சிகிச்சை, இதய பிறவிக் குறைபாட்டிற்கு அறுவைச் சிகிச்சை, இரத்தக்குழாய் அறுவைச் சிகிச்சை போன்ற அனைத்து சிக்கலான அறுவைச் சிகிச்சைகளும் இங்கு வெற்றிகர மாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை இங்கு 5000 ஆன்ஜியோ கிராம், 1000க்கும் மேற்பட்ட இருதய மற்றும் பைபாஸ் அறுவைச் சிகிச்சைகள் நடத் தப் பட்டுள்ளன. இதயத்தை முழுமையாகப் பரிசோதித் துக் கொள்ள 'PERFECT HEART' என்னும் பரிசோத னைத் திட்டம் அனைவருக்கும் உகந்த கட்டணத்தில் வழங் கப்படுகிறது.
10 நபர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தால், ஒரு குழந்தைக்கு இலவசமாக இதய அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. மருந்து வாங்கக் கூட வசதி இல்லா தவர்களுக்கு அதையும் சமூக நல அமைப்பு களின் மூலம் இலவசமாக அளித்து வருகிறோம்.

புற்றுநோய் சிகிச்சைக்கு நீங்கள் வழங்கி வரும் சிறப்புச் சலுகைகள் என்ன ?

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் களுக்கு முற்றிலும் இலவசமாக ஒவ்வொரு வியாழக் கிழமையும் புற்றுநோய் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கதிர்வீச்சு கோபால்ட் என்ற இயந்திரத்தினை கனடா நாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.  இந்த வசதியினை அண்மையில் இந்திய நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இரைப்பை, சிறுநீரகம், மூளை போன்ற தனிப்பட்ட உறுப்புகளுக்காகச் செய்யப்படும் பிரத்தியேக நவீன சிகிச்சைகள் பற்றிக் கூறுங்கள்?
உணவுக்குழாய், இரைப்பை, குடல், கல்லீரல், கணையம் போன்ற பகுதிகளில் ஏற்படும் அனைத்து விதமான நோய்க ளுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்தச் சிகிச்சைகளுக்குத் தேவை யான நவீன உபகரணங்களான உணவுக் குழாய் உள்நோக்கும் கருவி, மலக்குடல் உள்நோக்கும் கருவி, லேப்பராஸ் கோப்பி போன்றவற்றை ஒரே இடத்தில் கொண்டு மருத்துவச் சேவையை வழங்கி வருகிறோம். மிகவும் சரியான சிரமமான லேப்பராஸ் கோப்பி அறுவை சிகிச்சைகளும் இங்கு இலகுவாகச் செய்யப்பட்டு வருகிறது. சிறுநீரகக் கோளாறுகளுக்குத் தேவை யான சிகிச்சைகளான டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) எண்டோஸ்கோப்பி சிகிச்சை, சிறுநீரகக் கற்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் சிறுநீரக லேப்பராஸ்கோப்பி அறு வைச் சிகிச்சை போன்ற அனைத்து விதமான நவீன சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.
மிக நுண்ணிய மூளை மற்றும் நரம்பு மண்டலக்கட்டி, இரத்தக்குழாய் சம்பந்தப் பட்ட கடினமான அறுவைச் சிகிச்சைகளும் மிகவும் இலகுவாகச் செய்யப்பட்டு வரு கிறது. விபத்து காரணமாகத் தலைக்காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடிச் சிகிச்சை அளிக்க மயக்க மருந்து நிபுணர்கள், முட நீக்கு இயல் நிபுணர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் , பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், முக எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், சிறுநீரக நிபுணர்கள், இரைப்பை, குடலியல் நிபுணர்கள்  அடங்கிய நிபுணர் குழு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது.

உங்கள் மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள் செய்யப் படுகிறதா?

வயது முதிர்ந்தோர்க்கு எலும்பு தேய்மா னம்  ஏற்படுவதினால் மூட்டுகளிலும், இடுப் பிலும் வலி அதிகமாக உண்டாகும். இதனால் உட்காருவதும் எழுந்திருப்பதும், நடப்பதும், நிற்பதும், ஆகிய செயல்கள் மிகுந்த வலியை உண்டாக்கும். இதனால் எமது மருத்துவ மனையில் தேய்ந்த மூட்டுகளுக்குச் செயற்கை முறை மூலம் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து வருகிறோம். முக்கியமாக கால், முழங்கால், தோள்பட்டை, போன்ற இடங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் வசதிகள் இங்கு உள்ளது.
நிபுணர்கள் அடங்கிய முடநீக்கு இயல் பிரிவில், இடுப்பு, தோள்பட்டை, முட்டி ஆகியவற்றிற்கான மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. எலும்பு முறிவு சிகிச்சைக்கு 'C Arm. Laminar Flow Theatre. Pnematic Drilling System' உள்ளிட்ட நவீன வசதிகள் அனைத்தும் எங்களிடம் உண்டு, நோயாளிகள் நடக்க முடியாமல் எங்களை நாடி வருகின்றனர். அவர்களை விரைவில் நடமாட வைப்பதுதான் எங்கள் நோக்கம். அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு விரைவில் குணம்பெற பிசியோதெரபி பயிற்சியும், உடற்பயிற்சியும் அளிக்கப் படுகிறது.

உறுப்புகள் மறுசீரமைப்பு சிகிச்சைகள் பற்றிக் கூறுங்கள்?


விபத்தில் காயம் அடைந்தவர்களில் 70 சதவிகிதம் நபர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். கை, கால் மற்றும் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் நுண் அறுவைச் சிகிச்சை மட்டுமே உறுப்புகளை மறுசீரமைக்க உதவும். 25 ஆண்டு அனுபவம் உள்ள நிபுணரின் தலைமையில் பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. உதட்டுப்பிளவு மற்றும் அன்னம் சரி செய்யும் சிகிச்சைகளும் நோயாளி களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. ரோட்டரி சங்கம் மூலம் சுமார் 150 நபர் களுக்கு இந்த அறுவைச் சிகிச்சையை இலவச மாகச் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தின்கீழ் இப்பிரிவில் இதுவரை 300 நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

கண் சிகிச்சைகளில் நீங்கள் அளிக்கும் சலுகைகள் என்ன?


கண் சிகிச்சை பிரிவிற்கு தேவையான நவீன கருவிகள் அனைத்தையும் கொண்ட, இந்திய பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையாக உள்ளோம். இதுவரை 25,000 நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு 4,000க்கும் அதிகமானவர்களுக்கு இலவசமாக கண்புரை சிகிச்சைகளை செய்துள்ளோம்.

மருவத்துச் சேவையில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

உயர்தரமான சிகிச்சை, கனிவான சேவை, குறைந்த கட்டணம் என்பதே எங்கள் நோக்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2000 படுக்கைகள், செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு ஆகும். மேலும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை முறையையும் துவங்க உள்ளோம். தற்போது உலகத் தரச்சான்றிதழ் பெற்றுள்ள எங்கள் மருத்துவமனைக்கு மேலும் பல பெருமை சேர்க்க ஆர்வத்துடன் உழைக்கிறோம்.

நவீன பல் மருத்துவச் சிகிச்சைகள் பற்றிக் கூறுங்கள்?

இங்கு முதல்முதலாக லேசர் மூலமாக பல் சிகிச்சை செய்யப்படுகிறது. புன்னகை வடிவமைத்தல், பற்களை வெண்மைப் படுத்துதல், அதிநவீன பொய்ப்பற்கள் பொருத்துதல், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்புப் பிரிவு, 24 மணி நேர அவசர பல் சிகிச்சை பிரிவு போன்றவை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மைக்ரோ அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?

காது, மூக்கு, தொண்டை, பிரிவில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் இந்த மைக்ரோ அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துக் கொள்ளலாம். காதின் அமைப் பின்படி மிகச்சிறிய மூன்று எலும்புகள் உள்ளது. இது நாம் கேட்கும் திறனுக்கு மிக முக்கியமானது, ஏதேனும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் மைக்ரோ அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு Otosclerosis என்னும் நோய்க்கு, மைக்ரோ அறுவைச் சிகிச்சை
மூலம் தான் தீர்வுகாண முடியும்.

ஸ்டெம் செல் தெரபி (Stem Cell Therappy) ஆராய்ச்சி மையத்தின் முக்கியத்துவம் என்ன?

ஸ்டெம் செல் தெரபி என்பது நோயின் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள உயிர் அணுக்களை அகற்றி புதிய அணுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் சிகிச்சை வழங்குவது. ஸ்டெம் செல் தெரபி, பாதிக்கப் பட்ட தண்டுவடம் மற்றும் முற்றிய கல்லீரல் பாதிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு குணம் அளிக்கும் சிகிச்சை முறையாகவும் உள்ளது. ஸ்டெம் செல் முறையின் மூலம் குணப்படுத்த முடியாத மற்றும் கைவிடப் பட்ட நோய்களைக்கூட குணப்படுத்த இயலும். ஆராய்ச்சியில் உள்ள இந்தப் புதிய முறை, எங்கள் மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

உங்கள் மருத்துவமனைக்கு வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு எம்மாதிரியான சலுகைகள் வழங்குகிறீர்கள்?

எங்கள் மருத்துவமனைக் குழுமம் (கே.எம்.சி - ஸீஹார்ஸ் மருத்துவமனை) திருச்சியில் மத்தியப் பகுதியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாக வந்து செல்லக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையில் மேற்கூறிய அனைத்துத் துறைகளிலும் உலகின் மிக நவீன சிகிச்சை முறைகளுடனும், 400 படுக்கை வசதிகளுடனும் இயங்கி வருகிறது. பேருந்து நிலையம், புகையிரத நிலையம், விமான நிலையம் ஆகியவை மருத்துவ மனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் வெளிநாட்டு நோயாளிகளும், வெளியூர் நோயாளிகளும் எளிதில் விரைவாகச் சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது. எனவே எங்கள் மருத்துவமனையில் தரமாகச் சிகிச்சை பெற்று நலமாக செல்லலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, விமான நிலையத்திலிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்து, செல்ல வாகன வசதிகள், சிறப்புக் கட்டண சலுகைகள், தனியாகத் தங்குமிடம் மற்றும் தனிக் கவனிப்பாளர் போன்ற வசதிகளும் செய்து தரப்படும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

தொடர்புக்கு: +91 94431 63322

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
92,830