Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
ஆஸ்டியோஃபொரோஸில் எனப்படும் எலும்பு தேய்மான நோய்
medicalonline-appointmenticon
medcialonline-Orthopedic Surgery

எண்சாண் உடம்புக்கு எலும்பே பிர தானம் என மருத்துவ உலகில் கூறு வது வழக்கம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உறுதியான, அடர்த்தி யான எலும்புகளே அடிப்படை. எலும்புத் தேய்மானத்திற்கும் அதன் அடர்த்தி குறைவிற்கும் முதுமை முக் கியமான காரணம் என்பது பெரும் பாலானோரின் நம்பிக்கையாகும். ஆனால், 60 வயதிலும் ஆரோக்கிய மான எலும்புகளுடன் வாழ முடியும் என ஆய்வுகள் உறுதியளிக்கின்றன.
    முறையான உணவுப் பழக்கங்களை யும் சரியான வாழ்க்கை முறையைக் கொண்டவர்களையும் ஆஸ்டியோ ஃபாரோஸிஸ் போன்ற எலும்பு தேய்மான நோய் தாக்காது என உறுதி யாகக்கூறலாம்.
ஏழு வயதானாலும் எழுபது வயதானாலும் நாம் தேர்ந்தெ டுக்கும் வாழ்க்கை முறைதான் எலும் புகளின் நலத்தை பாதுகாக்கிறது.
    எலும்புகள் தேய்மானம் அடையும் நிலை ஆஸ்டியோ ஃபாரோஸிஸ் (Osteoporosis) எனப்படும். இது சிறிய அல்லது பெரிய எலும்பு முறிவு நிலைக்கு கொண்டு செல்லும். அதனால், நாம் உண்ணும் உணவில் போதுமான கால்சியம் இருப்பதோடு, எலும்புகளிலும் கால்சியம் போது மான அளவுக்கு இருக்க வேண்டும். கீரை வகைகள், முள்ளங்கி, முளைப் பயறுகள், முட்டைக்கோஸ், கடுகுக் கீரை, பசலைக்கீரை மற்றும் பால் போன்றவற்றில் கால்சியம் அதிகளவில் உள்ளது.
    இந்நோயினால் பாதிக்கப் பட்டுள்ளோம் என்பதை உணரவே பல காலங்களாகும். நடந்து செல்லும்போது, தற்செயலாக தடுக்கி விழுந்தாலோ அல்லது மிகச்சுலபமான செயல்களை செய்தாலோ, ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து வேறோரு இடத்திற்கு நகர்த்தும்போதோ எலும்புகள் முறிய நேரிடுகிறது. அப் போதுதான் அவர்களால் ஆஸ்டியோ போரோஸிஸ் நோயை உணர முடிகிறது.
    புகை பிடிப்பவர்கள் இயல் பாகவே கால்சியத்தை இழக்கும் ஆபத்துக்கு உட்படுகின்றனர். இவர்களுக்கு சாதாரண மனிதர்களைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக எலும்பு முறியும் வாய்ப்புள்ளது. அதே போல், எலும்பு தேய்மானத்தில் மதுசாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
    மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ஆஸ்டியோஃபொரோசிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சில மருத்துவர்கள் இதற்கு ஈஸ்ட்ரோஜென் சப்ளி மெண்ட்ஸ் எடுத்துக்கொள்ள பரிந் துரை செய்கின்றனர். ஆனால், இது பெரிய அளவில் பலன் அளிப்ப தில்லை என்பதே பொதுவான கருத் தாக உள்ளது.
    ஏற்கனவே, நீங்கள் ஆஸ்டியோ ஃபாரோஸிஸ் நோய்க்கு ஆட்பட்டி ருந்தால் உங்களுடைய உடற்பயிற்சி பற்றி மருத்துவரிடம் சொல்ல வேண் டும். மருந்தோ அல்லது சிகிச்சையோ அதற்கு தீர்வாகக் கிடைக்கலாம். பொதுவாக, ஆண்களை விட பெண் களே ஆஸ்டியோ ஃபொரோஸிஸ் நோய்க்கு ஆளாகின்றனர்.
    ஸ்டிராய்ட் வகை சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், ஆஸ்டியோஃபொ ரோஸிஸ் நோய்க்கு சிகிச்சை மேற் கொள்ளும்போது மருத்துவரிடம் அதுபற்றி தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதன்மூலம் மருத்துவர் உங்களின் ஸ்டிராய்ட் மருந்தின் அளவை குறைக்கவோ அல்லது பிற சிகிச்சையையோ பரிந்துரைக்க முன்வரலாம்.

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
7,513