அழகான புன்னகையும் பல்வரிசையும்!

  • Dr.Naveen Kumaar
  • Jan 11, 2018
Appointment                Doctor Opinion          
 
அழகான புன்னகையும் பல்வரிசையும்!

அழகான புன்னகை வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். பல் வரிசை சீராக அமைவது அழகான புன்னகைக்கு வழி வகுக்கும். மேலும் சீராக அமைந்த பற்கள் முகத்தோற்றத்தையும், அதன் மூலம் தன்னம்பிக்கையையும் மேம்படுத்தும்.

சீரற்ற பல்வரிசை (Dental Malocclution) அமைவது எதனால்?

சீரற்ற பல்வரிசை அமைய பலகாரணிகள் இருந்தாலும். அவற்றுள் சில.

1. பற்கள் பெரிதாகவும், பல் தாடை சிறிதாகவும் அமைந்து இருந்தால் பற்சீர் வரிசை பாதிக்கப்படும்.

2. பிறப்பிலே சில நிரந்தர பற்கள் இல்லை என்றால் பற்களுக்கு இடையே அதிகமான இடைவெளி ஏற்பட்டு பல்வரிசை பாதிக்கப்படும்.

3. பரம்பரையில் பற்களின் வரிசை எடுப்பாக அமைந்து இருந்தால் குழந்தைகளுக்கு எத்துப்பல்வரிசை அமைவது சாத்தியமாகும்.

4. சிறு வயதில் குழந்தைகளுக்கு கைசூம்பும் பழக்கம், நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் பல் வரிசை பாதிக்கப்படும்.

சீரற்ற பல்வரிசை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

1. குழந்தைகளுக்கு எட்டு வயதிலேயே பல் வரிசை அமைப்பு ஏற்படும் எப்படி இருந்தால் நல்லது என பல் மருத்துவர் மற்றும் பல் சீரமைப்பு சிறப்பு மருத்துவரை (Orthodontist), அணுகி ஆலோசனை பெறவும்.

2. வரிசை மாறிய பற்கள் கோணல் பற்கள் எடுப்பான பற்கள், பற்களின் இடையே இடைவெளி இவை அனைத்தும் பற்களில் கிளிப் போடுவது மூலம் பல்வரிசையை மாற்றி சீரமைத்து திருத்தமாக அமைக்கலாம்.

3. கிளிப் போடுவதற்கு வயது தடையல்ல!! பற்களை சுற்றியுள்ள ஈறுகளும் எலும்புகளும் வலுவாக இருப்பின் வயது தடையல்ல. எனினும் சிறு வயதில் கிளிப் போடுவதால் சிகிச்சை கால நேரம் குறையும்.