முப்பரிமாண கண்ணாடிகளால் பார்வைக் குறைபாடு அதிகரிக்கும்

  • Dr.Manohar Babu
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
முப்பரிமாண கண்ணாடிகளால் பார்வைக் குறைபாடு அதிகரிக்கும்

கண்கள்-விஞ்ஞான வளர்ச்சிக்கும், மனிதனின் அறிவியல் பூர்வமான சிந்தனைக்கும் தூண்டுகோலாக விளங்கிக்கொண்டிருப்பவை என்று குறிப்பிட்டால் அதனை யாரும் மறுப்பதற்கில்லை.

கண்கள், சாதாரண மனிதனிடத்தில் அழகுணர்ச்சியை தோற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றுபவை. நாம் மற்றவர்களோடு எப் படிப்பட்ட நெருக்கத்தினை - உறவினைக் கொண்டிருக்கிறோம் என்பதனை எதிரா ளிக்குத் தெரிவித்திடும் கருவி. இந்த உலகை நாம் காண கடவுள் கொடுத்த கெமரா.... எனப் பலவாறு குறிப்பிட லாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்த முகத்தின் அழகு கண் களை வைத்துத்தான் தீர் மானிக்கப்படுகிறது. அனைவருக்கும் அனைத் துத் தருணங்களிலும் முக் கியமாகத் தேவைப்படும் கண்ணைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண் டிய பல விடயங்கள் இரு க்கின்றன. ஒவ்வொருவ ரும் உடல் ரீதியாகத் தங் களுக்கு ஏதேனும் பாதி ப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கான தீர்வை நோக் கிச் செ ல்கின்றனர். ஆனால் அத்தகைய விதி களிலிருந்து விலக்கப்பட் டவை கண்கள்.

இங்கே, கண்கள் குறித்த பல சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்கிறார், கண் புரைக் கான சத்திரசிகிச்சை யினை தையலில்லாமல் செ ய்வதில் நிபுணரும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை களை செ ய்து, அதில் நூறு சதவீத வெற்றியை தக்க வைத் துக்கொண்டிருப்பவரும், செ ன்னையில் இயங்கி வரும் செ ன்னை ஐ-கேர் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநருமான டொக் டர் மனோகர் பாபு.

ஆரோக்கியமான மனிதன் ஒருவனால் வாழ்க்கை முழுவதும் கண்ணாடியை அணியாமல் இருக்க இயலுமா?


மிக மிகக் கடினம். பார்வைக் குறைபாடு கள் என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னு டைய கண்களைப் பயன்படுத்தும் விதத்தில் தான் அடங்கியிருக்கிறது. விஞ்ஞான வளர்ச் சியின் ஒரு தொந்தரவாக, இன்றைய கால கட்டத்தில் மிக இளம் வயதிலேயே பார் வைக் குறைபாடுகள் வரத் தொடங்கியுள் ளன. குழந்தைகளும், மாணவர்களும் அதிக நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலும், கணி னியில் அமர்ந்து இணைய தளத்தைப் பார் வையிடுவதாலும் அளவுக்கதிகமான அல் ட்ரா வயலட் கதிர்களை நம்முடைய கண்கள் சந்திக்கின்றன. இதனால் கண்கள் அதிகள வில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக் கிறது.

மேலும் ஆணாக இருந்தாலும் சரி, பெண் ணாக இருந்தாலும் சரி. ஒவ்வொருவரும் நாற்பது வயதைக் கடந்துவிட்டால் பார்வைக் கான தசை  நரம்புகளில் இறுக்கம் குறைந்து தளர்ச்சியடைந்துவிடும். இது இயல்பானது. மாற்றியமைக்க முடியாதது. இத்தகைய தரு ணங்களில் தூரப் பார்வை அல்லது கிட்டப் பார்வை போன்ற பார்வைக் குறைபாடுகள் ஏற்படுவது இயல்பு. இந்த நிலையை நோய் என்றோ அல்லது வியாதி என்றோ குறிப்பி டக்கூடாது. எனவே ஒவ்வொருவரும் நாற் பது வயதைக் கடந்தவுடன் கண் மருத்துவரை அவசியம் சந்தித்து, தங்களுடைய பார்வைத் திறனை சோதித்துக்கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றி னால் மரணம்வரை பார்வையிழப்பு இல்லா மல் இருக்கக்கூடும். ஆனால் கண்ணாடி அணிவது என்பது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் ஒவ்வொ ருவரின் விழித்திரையும் ஒரே தன்மை கொண்ட தாக இருப்பதில்லை. அத்துடன் சில பயிற் சிகளைச் செ ய்வதால் கண்ணாடி அணிவது தள்ளிப்போடப்படுமே தவிர, கண்ணாடியை அணியாமல் வாழ்க் கையை நடத்த முடி யாது. என்னுடைய அனு பவத்தில் யோகா சொல் லித் தரும் பயிற்சியாள ர்களே கண்ணாடி அணி ந்திருப்பதைக் கண்டி ருக்கிறேன். அத்துடன் கண்ணாடி அணியா மல் வாழ்க்கை முழுவதும் இருக்க முடியும் என்பதை இதுவரை மருத்துவத்துறை அறிவி யல் பூர்வமாக நிரூபிக்கவில்லை.

தற்கால இளைய தலைமுறையினர் முப்பரிமாணக் காட்சியைக் காண்பதற்காக வழங்கப்படும் கண்ணாடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலோ அல்லது முப்பரிமாண விளைவுடன் தயாரிக்கப்படும் வீடியோ கேம்ஸ்களைத் தொடர்ந்து விளையாடுவதாலோ அவர்களுக்கு பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இத்த கைய பாதிப்புகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவு. 3 டி எபெஃக்டுடன் கூடிய வீடியோ கேம்ஸை தொடர்ந்து விளை யாடும் கலாச்சாரம் இன்னும் தெற்காசியா வில் முழு அளவில் பிரபலமாகவில்லை. என்றாலும் இத்தகைய விளையாட்டை விளையாடுபவர்களுக்கு அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கத்திற்கும், இன்பெரா கதிர்க ளின் தாக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அத னால் பார்வைக் குறைபாடுகள் தோன்றுவ தைத் தவிர்க்கமுடியாது. இவர்களை விட ஊட்டச் சத்துக் குறைவால் கண்புரை ஏற் பட்டு பார்வையைப் பறிகொடுக்கிறவர்கள் தான் அதிகம்.

பெண்களுக்குப் பேறு காலத்தின் போது பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல் வந்தால் அதற்கு சிகிச்சை  எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்களே.  உண்மையா?

இது தவறான நம்பிக்கை. ஆனால் பேறு காலத்தின்போது எல்லாப் பெண்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதால் இரத்த அழுத் தம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்த கைய தருணங்களில் கண்களின் ரெட்டினா பகுதியில் உள்ள நரம்புகளின் செ யற்பாட் டில் மாறுதல்கள் ஏற்படுகின்றனவா என்பதை ஆராய வேண்டும். அப்படி மாறுதல்கள் ஏற் பட்டால் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், அருகிலுள்ள கண் மருத்துவ நிபுணர்களை ஆலோசித்து, அந்தப் பெண்ணுக்கு சத்திர சிகிச்சை  மூலம் குழந்தையை வெளியே எடு க்க வேண்டிய நிலை உருவாகும். அதனை செ ய்யவில்லை எனில் பிரவத்தின்போது தாய்க்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நிலை மிக அரிதானவர்களுக்குத்தான் ஏற்படுகிறது.

மூன்று மாதக் கருவைச் சுமந்துகொண் டிருந்த, இருபத்தியொரு வயதான பெண் ணொருவருக்கு, திடீரென்று கண்புரை ஏற் பட்டு, இரண்டு கண்களிலும் பார்வையி ழப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்மணி என்னி டம் வந்து ஆலோசனை கேட்டபோது, ஒரு கண்ணில் சத்திர சிகிச்சை யை உடனே செ ய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினேன். அவர்க ளும் சம்மதிக்கவே உடனே என் மருத்துவ மனையிலேயே அவர்களுக்கு கண் புரைக் கான சிறப்பு சத்திர சிகிச்சை  செ ய்யப்பட்டது. பிறகு அந்தப் பெண்மணிக்குக் குழந்தை பிறந்து ஒராண்டு கழித்து மற்றொரு கண்ணி லும் சத்திர சிகிச்சை யைச் செ ய்தேன். எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கண் தொடர்பான சிக்கல்கள் உருவானால் அதற்காக சிகிச்சை  எடுத்துக்கொள்வது எந்த வகையிலும் வயிற் றில் உள்ள கருவைப் பாதிக்காது.

கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பார்வையிழப்பை மீட்டெடுக்க இயலாதா?

முடியாது. ஏனெனில் கள்ளச் சாராயத்தை அருந்துவதால், அதிலிருக்கும் மீத்தேல் ஆல் கஹால் என்னும் விஷம், பார்வைக்கான நரம் பினை பாதித்து, அதனை அழித்து விடுகிறது. அல்லது அதன் செ யற்பாட்டை முற்றிலுமாக முடக்கிவிடுகிறது. இதனால் விழித்திரை செ யலிழந்து பார்வையிழப்பு ஏற்படுகிறது. பார்வைக்கான நரம்புகளை மீண்டும் புதுப் பிக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டறிய ப்படவில்லை என்பதால் இது அசாத்தியமே.

கண்களை தானமாகப் பெறுவதன் மூலமாகவோ அல்லது ஓ.ஓ.கே.பி மூலமாகவோ இவர்களின் பார்வையை மீட்டெடுக்க வாய்ப்பு உண்டா?

கண்களை தானமாகப் பெறுவது என்பது கருவிழியை மாற்றுதல், அதாவது நமக்கு கார்னியா பகுதிகளில் அடிபட்டு, பார்வைக் குறைபாடு இருக்கும் தருணத்தில்தான், இறந் தவர்களின் கண்களில் இருந்து பெறப்படும் கருவிழியைப் பொருத்தி பார்வையை மீட் டெடுக்க இயலும். சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பிற்கு இவை பொருத்தமா காது. ஓ.ஓ.கே.பி என்பதும் கார்னியா எனப் படும் கருவிழி மாற்றலில் கையாளப்படும் ஒருவித அணுகுமுறையே. மதுவால் பார் வையிழப்பு ஏற்பட்டவர்களுக்குப் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டுவிடுவதால், கண் தானம் மூலமாகவோ அல்லது ஓ.ஓ.கே.பி மூலமாகவோ அவர்களின் பார்வையை மீட் டெடுக்க இயலாது. ஏனெனில் இவர்களின்  கண்களின் மீது ஒளியைப் பாய்ச்சினால், அதனை உணரமாட்டார்கள். எந்த உணர்வும் இல்லாதபோது அவர்களுக்கு சிகிச்சை யளிப் பதில் பலனிருக்காது.

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தெற்காசியாவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிடும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்புடையதா?

முற்றிலும் சரியே. பார்வைக் குறை பாட்டை ஏற்படுத்துவதில் டயாபடிக் ரெட் டினோபதி எனப்படும் நீ ரிழிவு நோயால் ஏற் படும் பார்வைக் குறைபாடு, மூன்றாம் இடத் தில் உள்ளது. பொதுவாக, பார்வைக் குறை பாட்டைப் பொறுத்தவரை கண்புரையால் பாதிக்கப்படுவோர்கள்தான் அதிகம். அத னைத் தொடர்ந்து க்ளுக்கோமா  எனப்படும் கண் நீ ர் அழுத்தத்தால் ஏற்படும் பார்வைக் குறைபாடு. இதற்கடுத்து வருவதுதான் டயப டிக் ரெட்டினோபதி. மேற்கூறிய மூன்று வித பார்வைக் குறைபாடுகளும் ஆரம்ப கட்டத் தில் கண்டறிப்பட்டால் பார்வையிழப்பிலிரு ந்து பாதுகாக்க இயலும். அதற்கான அனை த்து நவீன வசதிகளும் தற்போது வந்துவிட் டன. கண்ணைப்  பரிசோதிக்கும்போதே, அதன் பார்வைத் திறன் கணக்கிடப்படுகிறது. பார்வைக் குறைபாட்டை என்.பி.டி.ஆர். என்ற அளவீட்டாலும், பி.டி.ஆர். என்ற அள வீடுகளாலும் குறிப்பிடுகிறோம். இதில் என். பி.டி.ஆர். என்ற அளவீட்டுக்குள் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டால், கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ், சத்திர சிகிச்சை  ஆகிய வற்றின் மூலம் பார்வை குறைபாட்டை நிவர் த்தி செ ய்து, அவர்களை பார்வையிழப்பி லிருந்து பாதுகாக்க இயலும். எனவே நீ ரிழிவு நோய் இருக்கிறது என்று சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் கண் மருத்து வரை அணுகி, ஆண்டுதோறும் கண் பரிசோ தனை செ ய்துகொள்வது கட்டாயம்.

தங்களுடைய சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?

செ ன்னையைச் சே ர்ந்த முப்பத்தியிரண்டு வயதுள்ள பெண்மணி ஒருவர், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பார்வை மீட் பிற்கான சத்திரசிகிச்சை யைச் செ ய்துகொண் டார். சத்திரசிகிச்சை க்குப் பின் ஒரு மாதம் செ ன்ற பின்னரும் பார்வை திரும்பாததால் என்னிடம் சிகிச்சை க்காக வந்தார். அவருக்கு எளிய முறையில் லேசிக் லேசர் மூலம்  சிகிச் சை யளித்து பார்வையை மீட்டெடுத்ததைக் குறிப்பிடலாம். இரண்டு கண்களிலும் பார்க் கும் திறன் இழந்த மலேஷிய நாட்டின் முன் னணி அழகுக் கலை நிபுணரான பெண்மணி ஒருவருக்கும் சத்திர சிகிச்சை  மூலம் பார் வையை மீட்டெடுத்ததைக் குறிப்பிடலாம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு:

கைப்பேசி எண்:   00 91 98411 82532