லேப்ராஸ்கோபிக் - வலியற்ற நவீன அறுவை சிகிச்சை

  • Dr.Ajit Raghuvaran
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
லேப்ராஸ்கோபிக் - வலியற்ற நவீன அறுவை சிகிச்சை

இருபத்தியோராம் நூற்றாண்டில் மருத்துவ துறை, உலகிற்கு அறிமுகப்படுத்திய புதிய அறுவை சிகிச்சை  முறை- லோப்ராஸ்கோபிக். காட்சி ஊடகத்தின் அபார வளர்ச்சியை கண்டுணர்ந்த மருத்துவத்துறை விஞ்ஞானிகள், இதனை தம்முடைய துறைக்கு பயன்படுத்த எண்ணத் தொடங்கினர். அதன் விளைவாக உருவாகியது தான் இந்த லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை  என்று கூட சொல்லாம்.

வருடத்திற்கு கோடி கணக்கிலான ரூபா அளவிற்கு வணிகம் செய்திடும் தனியார் நிறுவனத்தின் உயரதிகாரியொருவருக்கு செயலராக இருப்பவர் திருமதி. சல்மா பக்ரூதீன். இவருக்கு பித்தப்பையில் பாதிப்பு. இதற்காக மருத்துவ விடுப்பு வேண்டும் என்று கோர, நிறுவனமோ இரண்டு தினங்கள் மட்டும் விடுப்பு அளித்ததுடன், லோப்ராஸ்கோபிக் என்ற புதிய வகை அறுவை சிகிச்சையைப் பற்றியும் அறிவுறுத்தியது.

திருமதி சல்மா, அறுவை சிகிச்சைக்கு பின்னர் மூன்றாவது நாளில் முழு நலமுடன் மீண்டும் பணிக்கு திரும்பினார். அத்துடன் தான் பயனடைந்த நவீன சிகிச்சை குறித்து பிரச்சாரமே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாமல்மருத்துவ சேவையாற்றிவரும் தமிழக நகரான நாகர்கோவில் கோபால்பிள்ளை ஜவஹர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், லோப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை  நிபுணருமான டொக்டர் அஜித்தை சந்தித்து, வளர்ச்சியடைந்து வரும் நவீன அறுவை சிகிச்சை  முறையான லோப்ராஸ்கோப்பைப்பற்றி தம்முடைய அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளமாறு கேட்டோம்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியம் முழுவதிலும் கைப்பேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எப்படி உயர்ந்து கொண்டே வருகிறதோ, அதேப் போல் சாவித்துவார மற்றும் ஊசித்துவார அறுவை சிகிச்சை  என்றழைக்கப்படும் குறைந்த பட்ச  ஊடுருவல் முறையிலான அறுவை சிகிச்சை யும் உயர்ந்து வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் அறுவை சிகிச்சை  என்றால் நோயாளியின் ஒத்துழைப்பில் அறுவை சிகிச்சை  முடிந்தபின்னும் தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் இந்த மனநி லையை மாற்றியமைத்திருக்கும் முறை தான் இந்த சாலித்துவார மற்றும் ஊசித்துவார அறுவை சிகிச்சை. இதனை ஆங்கிலத்தில் கீ ஹோல் சர்ஜரி, லோப்ராஸ்கோபிக் சர்ஜரி, பின் ஹோல் சர்ஜரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை யின்போது, நோயின் தன்மையைப் பொறுத்து, உடலின் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட இருக்கிறதோ அதற்கு அருகில் மூன்று துவாரங்கள் உருவாக்கப்படுகின்றன. முதலாவது துவாரத்தின் மூலம் எம்மாதிரியான அறுவை சிகிச்சை, எங்கு மேற்கொள்ளப்படுகிறது என்ற துல்லியமான விவரத்தை கண்டறிவதற்காகவும். இரண்டாவது துவாரத்தின் மூலம் அதற்கான சிகிச்சை யை மேற்கொள்வதற்கும், மூன்றாவது துவாரத்தின் மூலம் அறுவை சிகிச்சை யின் போது அகற்றப்பட்ட அல்லது நீ க்கப்பட்ட கழிவுகளை உடலுக்கு வெளியே கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சை யின் போது இரத்த இழப்பின் ச தவீதம் கணிச மான அளவிற்கு குறைகிறது. இரத்தம் ஏற்றப்படுவதற்கான சூழலுக்கும் அவசியமில்லாமற் போகிறது. அறுவை சிகிச்சையின் காலகட்டம் அதிகபட்சமாக 45  நிமிடம் வரை மட்டுமே. அறுவை சிசிக்சைக்குள்ளாகும் பாகங்கள்,இயல்பை விட  முப்பது மடங்கு அளவிற்கு நுண்ணோக்கி மூலம் பெரிதாக்கப்படுவதால்அறுவை சிகிச்சை  துல்லியமாக மேற்கொள்ள இயலுகிறது. அறுவை சிகிச்சை யினால் ஏற்படும் தழும்புகளின் அளவு பெருமளவில் குறைக்கப்படுகிறது. மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய தினங்கள் ஏழுபது சதம் குறைகிறது. இதனால் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களில் சுமார் ஒரு லட்ச  ரூபா வரை சேமிக்க இயலுகிறது. இயல்பான வாழ்கை முறைக்கு திரும்பும் காலகட்டம் மிக விரைவில் உருவாகிறது. அறுவை சிகிச்சை  என்றாலே மக்களிடம் இருந்த ஒருவித பயஉணர்வை இந்த முறையிலான அறுவை சிகிச்சை  அகற்றியிருக்கிறது என்றே சொல்லலாம்.

இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை, முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, வயிற்றில் உள்ள அனைத்து பாகங்களுக்கான அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதைகளுக்கான அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை, இருதய நுரையீரலுக்கான அறுவை சிகிச்சை, தோள்பட்டை மூட்டுக்கான அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை  என இதன் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.

எம்முடைய அனுபவத்தில் 46 வயதான பெண் நோயாளி, இரண்டு முறை சிசேரியன் முறையில் குழந்தைகளை பெற்றெடுத்தவர், வயிறு மற்றும் முதுகு வலிஅதிகமாக இருக்கிறது என்று கூறியதால், எம்முடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே தருணத்தில் பித்தப்பை மற்றும் கர்ப்பப்பை அகற்றவேண்டியதிருந்தது. லோப்ராஸ்கோபிக் மூலம் வெற்றிகரமாக செய்தோம்.

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை யிலும் இந்த லோப்ராஸ்கோபிக் முறை பயன்படுத்தப்படுகிறது. உடற்பருமனின் முந்தைய கட்டமான கூடுதல் எடையை குறைக்கவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

தற்காலத்தில் பொது மருத்துவம் மட்டுமே படிப்பதை விட முதுகலை மருத்துவத்தையும், நவீன மருத்துவ தொழில் நுட்பத்தையும் கற்றுகொள்ளவேண்டிய கட்டாயம் இன்றைய மருத்துவர்களுக்கும், எதிர்கால மருத்துவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட முன்னேற்றம் என்ற கோணத்தில் தான் பார்க்கிறேன்.

கண்ணின் முன்பக்க பகுதியில் மாற்று அறுவை சிகிச்சை

உலகத்தில் முதன்முறையாக கண்ணின் முன்பக்க பகுதியில் மாற்று அறுவை சிகிச்சை  செய்து, சென்னை டொக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. இது குறித்து எம்மிடம் விளக்கமளித்த டொக்டர் அமர் அகர்வால், "தமிழக நகரான வேலூரிலிருந்து கலா-கோவிந்தராஜ் என்ற தம்பதிகளின் நான்கு மாத குழந்தைக்கு கண்ணில் கோளாறு இருப்பதாக எங்களின் வேலூர் கிளைக்கு சிகிச்சை  பெற வந்திருந்தனர். அங்குள்ள மருத்துவர் களிடம், குழந்தை பிறந்தபோது வலது கண்ணில் சிறிய வெண்புள்ளி ஒன்று இருந்ததாகவும், அது பெரிதாக வளர்ந்து, கண்ணை துருத்தி கொண்டு இருப்பதால், வலி ஏற்பட்டு அவதி பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். தகவலறிந்ததும், இந்த குழந்தையை செ ன்னை மையக் கிளைக்கு வரவழைத்து பரிசே ாதனை செ ய்தனர் டொக்டர் சூச ன் ஜேக்கப் தலைமையிலான மருத்துவ குழுவினர்.

உடனடியாக அறுவை சிகிச்சை  செய்வதென தீர்மானிக்கப்பட்டு, முதன்முறையாக வேறெங்கும் மேற்கொள்ளப்படாத கண்ணின் முன்பக்க பகுதியில் மாற்று அறுவை சிகிச்சை  என்று எங்களால் பெயரிடப்பட்ட - ஆன்டீரியர் செ க்மெண்ட் ஐ ட்ரான்ஸ்பிளான்டேஷன் அறுவை சிகிச்சை யினை மேற்கொண்டோம். இந்த வகை அறுவை சிகிச்சை யில்  குழந்தையின் கருவிழி, கண்ணின் விழிவெண்படலம், கண்ணின் மணி, பாப்பா மற்றும் லென்ஸ் ஆகிய அனைத்தும் மாற்றப்பட்டன.  இந்த அறுவை சிகிச்சையை முதலில் இரண்டு பாகங்களாக கொண்ட பயோப்ராஸ்தசிஸை உருவாக்கினோம். இதன் மூலம்  கருவிழி மற்றும் கண்ணின் விழிவெண்படலம் அடங்கிய பயோலாஜிக்கல் பகுதியையும், அதனைத் தொடர்ந்து  குளூட் ஐ ஓ எல் என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாக  எம்மால் உருவாக்கப்பட்ட செ யற்கை முறையிலான கண்ணின் மணி, பாப்பா, லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டு ப்ராஸ்தடிக் பகுதியை உருவாக்கினோம். 

5 மணிநேரம் வரை நீ டித்த பின், இந்த அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக நடைப்பெற்று, அந்த குழந்தைக்கு பார்வை கிடைத்துள்ளது" என்றார். மேலும் `அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளில், அந்த குழந்தை கண்ணைத் திறந்து அனைவரையும் பார்த்தது. அறுவை சிகிச்சை  செய்யாத இடது கண்ணை மூடியபோதும் வலது கண்ணால் அனைவரையும் எந்தவித தடங்கலுமின்றி பார்த்து, சிரித்து எங்களின் ச ாதனை முயற்சியை வெற்றிகரமாக்கியது. இந்த அறுவை சிகிச்சை  மூலம் எங்கள் மருத்துவமனை, புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும், இந்த அறுவை சிகிச்சை யில் எம்முடன் டொக்டர் சூச ன் ஜேக்கப் மற்றும் அவரது குழுவினரும் பங்கேற்றதாக\' தெரிவித்தார்.