மூல நோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை

  • Dr.Sunder
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
மூல நோய்க்கு லேசர் அறுவை சிகிச்சை

ஜீரணத் தொகுதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பதில் நிபுணரான டாக்டர் கே. சுந்தர் www.medicalonline.in க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

பைல்ஸ் எனப்படும் மூல நோய் பலருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனையாகும். இதனால், உயிருக்கு ஆபத்து இல்லையென்றபோதிலும், அடிக்கடி கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியது. மூல வியாதியால் பாதிக் கப்பட்ட பலர், மருத்துவரை அணுகுவதற்கோ அல்லது அது பற்றி விவாதிப்ப தற்கோ வெட்கப்படுகின்றனர். எனினும், கடுமையான வலி காரணமாக அவர்கள் அச்சமடைகின்றனர்.

Haemorrhoids என்பது மூலநோயின் மருத்துவ பெயராகும். ஆசன வாயைச் சுற்றி உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் நரம்புகள் காணப்படுகின்றன. இவற்றில் ஏற்படும் வீக்கமே மூலம் எனப்படுகிறது. இதற்கு காரணம், மலச்சிக் கல். மலம் இறுகிவிடும்போது அதைக் கழிக்க அதிக பலத்தை பிரயோகிப்பதால் கடுமையான வலி உருவாகிறது. மூல நோய்ப் பரம்பரை பரம்பரையாக பலருக்கு வருகிறது. அதனால், குடும்பத்தில் யாரேனும் மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அடுத்த தலைமுறையினர் முன்னெச்சரிக் கையாக, வாழ்க்கை முறை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்தால், மூல நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டாகும்.

அதே நேரத்தில் கடினமான வேலை, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து அல்லது நின்றுகொண்டு பணியாற்றுபவர்கள் (பேருந்து ஓட்டுனர்கள், போக்குவரத்து காவலர்கள், ஹோட்டல் சர்வர்கள் போன்ற வர்கள்) மற்றும் கர்ப்பிணிகளுக்கும் மூல நோய் ஏற்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், மூல நோயால் அதிகளவில் பாதிக்கப்படு கின்றனர். குழந்தையைச் சுமப்பதால் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக Haemorrhoidal நரம்புகள் பெரிதாகின்றன. குழந்தைப் பேற்றின்போது இத்தகைய நரம்புகள் அதிக அழுத்தத்திற்கு உட்படுகின்றன. எனினும், கர்ப்பம் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மூல நோய் தற்காலிக பிரச்சனையாகவே இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு, அது தானாகவே சரியாகி விடும்.
அறிகுறிகள்

`பளிச்\' சென்ற சிவப்பு நிற இரத்தம் கலந்த மலம் வெளிவருவதுதான், மூல நோய்க்கான அறிகுறியாகும். அதேபோல் ஆசனவாய்ப்பகுதி வீங்குவதால் கடுமையான வலி உருவாகும். எரிச்சல் அல்லது அரிப்பும் ஏற்படும்.

தவிர்ப்பது எப்படி?
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டால் மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். அதனால், உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பீன்ஸ், பழங்கள், சாலட்டுகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலத்தை அடக்கி வைக்கக் கூடாது. உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினம் அதிகளவில் தண்ணீர் அருந்துவதுடன், குறைந்தது நாள்தோறும் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

என்ன சிகிச்சை ?
சிலருக்கு மூல நோய் அறிகுறிகள் தானாகவே சரியாகி விடும். மூல நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகும். வழக்கமான மூல அறுவை சிகிச்சை என்பது வலி மிகுந்ததாக இருக்கும். இதனால், பலருக்கு அச்சம் ஏற்படும். மேலும் பலருக்கு மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கும் பரிசோதிப்பதற்கும் கூச்சமாக இருக்கும். ஆனால், இன்று வலியில்லாமல் மூல நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கூடிய லேசர் அறுவை சிகிச்சைகள் வந்து விட்டன. மருத்துவத்துறையில் லேசரின் வரவுக் குப் பிறகு மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் எளிதான விடய மாகி விட்டது. அதன் பெறுபேறுகளும் நன்றாக இருக்கிறது. லேசர் அறுவை சிகிச்சையில் உள்ள சாதகமான அம்சம் என்னவெனில், குறைந்த அளவு இரத்த இழப்புதான் ஏற்படும். மேலும் வலி இல்லாத அறுவை சிகிச்சை என்பதால், விரைவில் வழக்கமான பணிக்குத் திரும்பிவிடலாம். உட்கார்வதிலோ அல்லது நடப்பதிலோ எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை.

லேசர் அறுவை சிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?
Proctoscope and Sigmoidoscope ஆகிய சாதனங்களின் உதவியுடன் ஆசன வாயில் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் மலம் வெளியேறும்போது வலி ஏற்படுவதற்கான காரணங்கள் அல்லது பெருங்குடலில் ஏதாவது வளர்ந்துள்ளதா ? (பொதுவாக இவை வெளியே தெரிவதில்லை) என்பது கண்டறியப்படுகிறது. மயக்க மருந்து கொடுத்து தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. லேசர் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களே இந்த சிகிச்சைகளை அளிக்க முடியும்.