கருமுட்டை தானம் இரு முறை மட்டுமே

  • Dr.Sivakamu Dhandapani
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
கருமுட்டை தானம் இரு முறை மட்டுமே

தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு, கவுன்சிலிங் வழங்கி அவர்களுக்கு வந்திருக்கும் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவ தோடு, அதனை எதிர்கொள்ளும் நம்பிக்கை யையும் சே ர்த்தே வழங்கி வருபவர். கரு சிதைவை மருத்துவ காரணத்தோடு மட்டும் அணுகாமல் அதற்குரிய சமூகத்தின் பிரதி பலிப்பும் குறித்தும் தெளிவான கருத்தினை கொண்டிருப்பவர். பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் என்பதனை தொடர்ந்து உரத்த குரலில் வலியுறுத்தி வருபவர். மகப்பேறு துறையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரர். இப்படி பலவற்றை குறிப்பிட்டு கொண்டே போகலாம். யாரைப் பற்றி என்கிறீர்களா?

சென்னையில் சக்தி மருத்து வமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நி ர்வாக இயக்கு நரும், மகப்பேறு துறை நி புணருமான திருமதி. சிவகாமுதண்டபாணியைப் பற்றித் தான் இந்த முன்னுரை. இவரிடம் பல சந்தேகங்களுக்கு விடையளிக்குமாறு கேட்டோம். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

குழந்தை பேறின்மைக்கும், கரு சிதைவிற்கும் தொடர்பிருக்கிறதா?

இயற்கையான கரு சிதைவினை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். ஆனால் செயற்கையாய் மேற்கொள்ளப்படும் கரு சிதைவினை யாருமே முழு மனதுடன் விரும்புவதில்லை. செயற்கையான முறையில் கரு சிதைவினை செய்யும் போது சில தருணங்களில் சட்டத்திற்கு புறம்பாகவும், சில தருணங்களில் நோயாளியின் உடல் நிலை, சமூக நிலை ஆகியவற்றிற்காக சட்டத்திற்குட்பட்டும் செய்யப்படுகிறது.

சட்ட விரோதமாக செய்யும் கரு சிதைவில் தகுதியான மருத்துவர்கள், தரமான மருத்துவமனை ஆகியவற்றின் பங்களிப்பு இருக்காது. ஆனால் ச ட்டத்திற்குட்பட்டு செய்யும் கரு சிதைவின்போது இவை முற்றிலும் களையப்படுவதால் நோயாளியின் உயிருக்கும், எதிர்காலத்தில் வாரிசு உருவாகுவதற்கும் எந்த வித இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியாக கூற இயலும். தகுதியற்றவர்களால் செ ய்ப்படும் கரு சிதைவினால் தொடர்புடைய பெண்ணிற்கு கருக்குழாயில் ரணம்,  இன்பெக்ஃசன், மாதவிடாய் கோளாறுகள். உயிரிழப்பு  ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. கரு சிதைவு முறையாக - முழுமையாக செ ய்யப்படவில்லையென்றால் அந்த பெண்ணிற்கு வயிற்று வலி, இரத்த போக்கு ஆகியவை ஏற்படும். இதனையே அறிகுறி யாக எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மகப்பேறு மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் பிலோப்பியன் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

சீறுநீரகம் பாதிக்கப்பட்டு, அது செயல்படாமலும் போகலாம். நுரையீரலிலும் பாதிப்புகள் உருவாகும். எனவே ச ட்டத் திற்கு புறம்பாக கரு சிதைவினை மேற் கொள்ளக்கூடாது என்று தான் பரிந்துரைக் கிறோம். அதே தருணத்தில் திருமணத்திற்கு முன் தனக்காக நிச்சயிக்கப் பட்ட மாப்பிள்ளையுடன் எல்லை மீறி பழகியதால் ஏற்பட்ட கருவினை கலைக்கு மாறு தற்போதைய இளந்தலைமுறை பெண்கள் சகஜமான மனநி லையுடன் தகுதியான மருத்துவரை அணுகுகிறார்கள்.

இந்த நிலையை சமுதாயமும், அரசாங்கமும், நாகரீகத்தின் மாற்ற மெனக் கருதி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய விழிப்புணர்வை வரவேற்றாலும், நம்முடைய மண்ணின் கலாச்சாரத்தை காப் பாற்றும் பொறுப்பு மருத்துவராகிய எமக்கும் உள்ளதால் ஒரு முறை நடந்த தவறை மீண்டும் செ ய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி கூறிவிட்டுதான் கரு சிதை வினை மேற்கொள்கிறோம்.

ஒரு கால கட்டத்தில் இருந்த சர்ஜிகல் அபார்சன் பொலிவிழந்து, தற்போது மெடிகல் அபார்ச னும் வந்துவிட்டதால் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம். கரு சிதைவினால் குழந்தை பேறின்மை ஏற்படும் என்பதை தற்போ தைய நவீன மருத்துவம் பொய்யாக்கி வருவதால், இவ்விரண்டிற்கும் தொடர்பில்லை.

கரு உண்டான மூன்றாவது மாதத்தில் டவுண் சின்ட்றோம் பரிசோதனை என்கிற பெயரில் குறோமோசோம் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படுகிறதே. இதன் நிஜ பின்னணி என்ன?

குழந்தை மன வளர்ச்சி குன்றி பிறந்து, நீண்ட ஆயுளுடனும் வாழ இயலாமல் அகால மரணம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே இத்தகைய பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்படு கிறது. இத்தகைய குழந்தைகள்  ஒரு வீட்டில் இருப்பதால் அவர்களின் சகோதரிகளுக்கோ, சகோதரர் களுக்கோ ஏற்படும் ச மூகபாதிப்பு அளவிட முடியாதது. காரணம் இத்தகைய பாதிப்பிற் குள்ளானவர்களுக்கு பெண் கொடுக்கவோ, பெண் எடுக்கவோ யாரும் முன் வருவதில்லை. பாரம்பரியம் காரணமாக இந்த நோய் வரக்கூடாது என்பதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்வதை காட்டிலும், இத்தகைய குழந்தைகளை பெற்றோர்கள் சந்திக்கும் சமூக சவால்களை குறைப்பதற்காகவும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

டவுண் சிண்ட்றோமின் தொடக்கக்கால கட்டத்தை கண்டறிந்துவிட்டால் அதனை பூரணமாக மாற்றியமைத்து, தீர்வு காண இயலும். தாயின் இரத்தத்தை பரிசோதனைக்கு எடுத்து கண்டறிகிறோம்.

கருவுற்றிருக்கும் பெண்ணின் வயிற்று பகுதியில் தொடர்ந்து ஸ்கேன் எடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

இல்லை. இதுவரை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு விடயம். முப்பதாண்டுகளுக்கு மேலாக அல்ட்றா சவுண்டு எனப்படும் இந்த ஸ்கேன் பரிசோதனை நடைமுறையில் இருந்து வருகிறது. தொடர்ச்சியான அல்ட்றா சவுண்டால் பாதிக்கப்பட்ட குழந்தை இது என்று இதுவரை எந்த ஒரு குழந்தையும் கண்டறியப்படவில்லை. இருப் பினும் எந்த ஒரு இயந்திரத்தை, அதாவது மருத்துவ உபகரணத்தை தேவையில்லாமல் மருத்துவர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கு குறைந்தபட்ச ம் நான்கு முறையாவது அல்ட்றா சவுண்டு பரிசோதனை செய்வது அவசியம் என கருதுகிறேன். குழந்தை கருப்பபையில் தான் வளருகிறதா என்பதனையும், கருக்குழாயின் பகுதியில் தங்கவில்லை என்பதனை உறுதிப்படுத்தவும் இந்த பரிசோதனை அவசியமாகிறது.

அதே தருணத்தில் தவறான இடத்தில் வளரும் கருவினையும் இதன் மூலம் கண்டறிந்து தீர்வுகாண இயலும். ஐந்தாவது மாதத்தின் தொடக்கத்தில் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்பதனை கண்டறிய இந்த சோதனையை செய்துக் கொள்ளவேண்டும்.

அதேப் போல் பிரச விக் கும் முன் ஒரு முறை குழந்தையின்  இருப்பை அறிந்து கொள்ள இத்தகைய சோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்த அல்ட்றா சவுண்டு சோதனை மூலம் தாயின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைப்பப்பட்டி ருக்கிறது என்பது தான் அனைவரும் ஒப்புக்கொள்ள மருத்துவ உண்மை.

போர் நடந்துகொண்டிருக்கும் பகுதி களிலும், வெப்ப பிரதேச த்திலும் ஆண் குழந்தைகளின் பிறப்பை விட  பெண் குழந்தைகளின் பிறப்பு அதிகமாக இருக் கும் என்கிறார்களே. இது உண்மையா?

முழுமையான ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய விடயம். குழந்தை பிறப்பின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுவி லிருக்கும் குரோமோசோம்களின் எண் ணிக்கையை பொறுத்தது என்பதை தான் இது வரை நடைபெற்ற ஆய்வின் மூலம் நாம் ஒப்புக்கொண்டிருக்கும் உண்மை.

ஆறுமாதம் வரை வயிற்றில் எந்த வித குறைபாடும் இல்லாமல் வளர்ந்த கரு, ஏழாம் மாதத்தில் போது வயிற்றில் மரண மடைந்துவிட்டது. அந்த தாய் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையின் அசை வை கடந்த சில வாரங்களாக உணரவில்லை. இது குறித்து அவர் வயதானவர்களிடம் கேட்டபோது, அனைவரும் எப்போதும் உணர்ந்து கொண்டி ருக்கமாட்டார்கள் என்று விளக்கம் கூறிவிட்டனராம். இப்போது கூறுங்கள் அந்த குழந்தையின் மரணத்திற்கு மருத்துவ ரீதியான காரணம் என்ன?

வயிற்றில் வளரும் குழந்தைகளின் அசைவை இரண்டு நாட்களில் அந்த தாயால் உணரமுடிய வில்லையென்றால், உடனே அவர் ஸ்கேன் சோதனைக்கு சென்றிருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையென்றிருந்தால்  பீப்பிள் டாப்ளர் என்கிற சோதனையை செய்து, குழந்தையின் இதயத் துடிப்பை அறிந்திருக்க முடியும். எம்மைச் சுற்றிலும் ஒலி இருந்துக் கொண்டேயிருக்கிறது. அதனை மூலமாக பயன்படுத்துவதால் இந்த சோதனையில் பக்க விளைவுகள் இல்லை என்பதை உறுதியாக கூற இயலும்.

புலம் பெயர்ந்து வாழும் ஈழப் பெண்கள், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கரு முட்டை தானத்தில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் ஆறு முறை மட்டுமே கரு முட்டை தானத்தை செய்யவேண்டும் என்று மருத்துவ உலகம் ஒரு கருத்தை முன்வைக் கிறதே. இதனை ஏற்றுக்கொள்ளலாமா?

ஆறு முறை என்பது தவறு. ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே கரு முட்டையை தானமாக வழங்க இயலும். அதற்கு மேல் வழங்கினால் உடல் நலம் கெடும். ரத்ததானத்திற்கு அளவு கோல் இருப்பது போல் இதற்கும் ஒரு  அளவு கோலை மருத்துவ உலகம் நி ர்ணயித் திருக்கிறது.

மறக்க இயலாத மருத்துவ அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்?

சென்னையில் பிறந்து, பணி நிமித்தம் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் அந்த தம்பதிகளுக்கு மிகுந்த அப்பாவியாக, வெகுளியான ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவள் பெற்றோரின் சொற்களுக்கு மதிப்பளித்து வளர்ந்தவள், திடீரென்று ஒரு நாள் எம்மைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் தங்களின் வாரிசின் வயிற்றில் சிசு வளர்வதாகவும், தாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும், நாங்கள் தற்கொலைக்கு முயல உள்ளோம் என்று கூறினார்கள்.

நான் அந்த பெண்ணிடம் கவுன்சிலிங் செய்தபோது அவளுடன் படிக்கும் மாணவர்கள் சுற்றுலாவிற்கு சென்றபோது குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து வல்லுறவு கொள்ளபட்டதை தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அந்த அப்பாவி பெண்ணை கருவை கலைத்துவிட்டு, பெற்றோர்களுக்கு ஏறக்குறைய நாற்பதிற்கும் மேற்பட்ட முறையில் கவுன்சிலிங் கொடுத்து, அந்த பெண் மீதான பாசத்தை மீட்டெடுத்தேன். எனவே தற்காலத்தில் குறைந்த பட்சம் பெண் குழந்தைகளை தனியாக ஒரு குழு போலமைத்து பாலியல் கல்வியை வழங்கவேண்டும் என்பது தான எம்முடைய தாழ்மையான விருப்பம். இதன் மூலம் பெண்கள் தங்களை சரியாக உணர்ந்துகொள்வார்கள் என்பது எம்முடைய கணிப்பு. தொடர்ந்து பத்து முறை இயற்கையான முறையில் கரு சிதைவு ஏற்பட்ட பெண்ணிற்கு, பதினொராவது கருதரித்தலின் போது அழகான குழந்தையை ஆரோக்கியமான முறையில் பெற்றெடுத்தாள் சென்னையை சார்ந்த பெண்ணொருவர். எனவே நம்பிக்கையை இழக்காதீர்கள்.

கரு சிதைவு குறித்து தவறான கருத்தை கொண்டிருக்காதீர்கள். மேலும் தற்போது நவீன முறையிலான ஏராளமான சிகிச்சைகள் வந்துவிட்டன. இதனால் குழந்தையில்லையே என்ற ஏக்கத்திற்கு தீர்வு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.