உடலைச் சோர்வடையச் செய்யும் ஒட்டுண்ணிகளும் அதற்கான தீர்வுகளும்!

  • Dr.Madhumitha
  • Feb 08, 2018
Appointment                Doctor Opinion          
 
உடலைச் சோர்வடையச் செய்யும் ஒட்டுண்ணிகளும் அதற்கான தீர்வுகளும்!

வயிற்றில் உடலில் நுழையும் புழுக்கள் உணவு மற்றும் தண்ணீரின் வழியாகத்தான் உடலை அடைகிறது. உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால் அதனால் நோய் மண்டலம் வலிமை இழந்து உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் பலவீனம் ஆகிவிடும்.

பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும்.

நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன. இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும். அதற்கு முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

நாள்பட்ட செரிமான பிரச்சனைகள்:

வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். 

அடிவயிற்று வலி:

ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல்:

குறிப்பாக இம்மாதிரி யான அரிப்பு இரவில் ஏற்படும்போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறு நாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

சோர்வு மற்றும் பலவீனம்:

வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும்.

பசியின்மையுடன் எடை குறைவு:

பசியின்மை அதிகரிப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம். அதிலும் அதிகமான அளவில் புழுக்கள் உடலில் பெருகியுள்ளது என்று அர்த்தம்.

பற்களை கொறிப்பது:

உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால், பற்களை கொறிப்போம். ஏனெனில் உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் அதிகரிக்கும். அதனால்தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும்போது பற்களைக் கொறிக்கின்றனர்.

இரத்த சோகை:

உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றை உறிஞ்சி, இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும்.

சரும பிரச்சனைகள்:

உடலினுள் ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின், சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை உண்டாக்கும்.

வயிற்று மற்றும் குடல் புழுக்களை அழிக்க எளிமையான வழிகள்:

பூண்டு:

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் வயிற்றில் உள்ள புளுக்களை அறவே அழித்து விடும். அன்றாட உணவில் பூண்டை சேற்ப்பதோடு அவ்வப்பொழுது ஒரு பச்சை பூண்டை சாப்பிட்டு வருவதும் சிறந்தது.

பூசணி விதை & பப்பாளி விதை:

இவை இரண்டையும் நன்கு காய வைத்து பின்பு பொடி செய்து நிதமும் ஒரு டீஸ்பூன் வெண்ணீரில் உட்கொண்டால் அதுசெறிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும்.

பாதாம்:

தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது வயிற்றில் இருக்கும் புழுக்களின் வளர்ச்சியை தடுத்து வயிறு சுத்தமாக இருக்க உதவும்.

தயிர்:

அன்றாடம் உணவில் தயிர் சேர்க்கும்போது, உடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளரும். இவை குடல் புழுக்களை அழித்து வெளியேற்றும்.

புதினா:

எலுமிச்சை தினமும் ஒரு கப் புதினா சாற்றுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து வெண்ணீரில் வெரும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புழுக்கள் அறவே அழியும்.

ஹோமியோபதி என்பது மருத்துவர் சாமுவேல் ஹனிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் மருத்துவம் ஆகும். ஹோமியோபதி மருத்துவமுறை என்பது ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்கின்ற கோட்பாட்டின்படி இயங்கும் மறையாகும். ஒரு மருந்து எதை உருவாக்குகிறதோ, அதை முழுமையாகக போக்கக்கூடிய நீக்கக்கூடிய தன்மையும் அதனுள்ளே கொண்டுள்ளது என்பதே ஹோமியோபதி மருத்துவமாகும். ஹோமியோபதி மருந்துகளுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது. 

மேல் குறிப்பிட்டுள்ள இயற்கை உணவு பொருட்களோடு தன் உடல் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்தை உட்கொண்டால் வயிறு மற்றும் குடல் புழுக்களின் தொல்லையில் இருந்து எளிதில் குணமடையலாம்.

மேலதிக விபரங்களுக்கு டாக்டர் மதுமிதா, டாக்டர் மதுஸ், ஹோமியோ கேர், மதுரை, அலைபேசி - 8939266767