ஒளி விலகலுக்கான நவீன சிகிச்சை

  • Dr.Amar Agarwal
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
ஒளி விலகலுக்கான நவீன சிகிச்சை

அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், கண்புரை அறுவை சிகிச்சையில் மைக்ரோபிகோனித் என்ற அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியதற்காக மூன்று சர்வதேச  விருதுகளை பெற்றவரும், சிறப்பான மருத்துவ சேவை ஆற்றியதற்காக இந்திய அரசின் பத்மபூஷன் என்ற உயர்ந்த விருதை பெற்றவருமான டொக்டர் அமர் அகர்வால். இவரிடம் இந்த துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து கேட்டபோது, இன்ட்றாலேஸ் என்ற நவீன சிகிச்சையைப்பற்றி www.medicalonline.in உடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு காலகட்டத்தில் புகையிரத நிலையத்திற்குச் செ ன்று பயணசீட்டை முன்பதிவு செய்து கொள்ள மணிகணக்கில் நின்று கொண்டிருப்போம். ஆனால் இன்றோ வீட்டில் அமர்ந்துகொண்டே புகையிரதத்தில் பயணிப்பதற்கான பயணசீட்டை முன்பதிவு அளவிற்கு தொழில நுட்பம் வளர்ந்துவிட்டது. போக்குவரத்து துறையில் நடந்த இந்த நவீன மாற்றங்களைப்போல்  மருத்துவத்துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பொதுவாக கிட்டப்பார்வை (மயோபியா), தூரப்பார்வை (ஹைபெரோபியா), சிதறல் பார்வை (ஆஸ்டிக்மேடிசம்) போன்ற ஒளி விலகல் கோளாறுகளை விட்டமின் மருந்துகளாலோ, மாத்திரைகளாலோ முற்றிலும் குணப்படுத்த முடியாது. கண்ணாடி அணிவதையோ  அல்லது கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவதையோத்தான் மருத்துவர்களால் பரிந்துரைசெய்யப்பட்டு வந்தன. இந்த தருணத்தில் ஏராளமான நாட்டைச் சார்ந்த இளம் தலைமுறையினர் கண்ணாடி அணிந்துகொள்வதை அசெ ளகரியமாக உணர்ந்தனர். அதிலிருந்து விடுதலை கிடைக்காதா! என்றும் ஏங்கினர். மேலும் கண்ணாடி அணிவதால் விமானப்பணிப்பெண், கடற்படை அதிகாரி போன்ற பதவிகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எனவே இவர்களின் குறைகளை களைவதற்காக மருத்துவத்துறை அறிமுகப்படுத்தியது தான் லேசிக் தொழில் நுட்பம்.

1990 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லேசிக் லேசர் தொழில் நுட்பத்தின் மூலம், ஒளி ஊடுருவு கருவிழிப்படலம் சரி செய்யப்பட்டு பார்வை மேம்படுத்தப்படுகிறது. இம்மாதிரியான அறுவை சிகிச்சையில் மைக்றோ கெறோடோம் மெக்கானிகல் பிளேட் மூலம் கார்னியல் உருவாக்கப்படுகிறது. இதில் தையல்கள் எதுவும்இல்லாததால் தானாகவே குணம் அடைந்துவிடும். இருப்பினும்  இம்முறையில் பொருத்தப்பட்ட பிளேட்டால் பதினைந்தாயிரத்தில் ஒருவருக்கு சிரமம் ஏற்பட்டது. அதனை குறைப்பதற்காக அறிமுகமானது புதிய தொழில் நுட்பம்  தான் இன்ட்றாலேஸ்.


இதனை அமெரிக்கா விண்வெளி நி றுவனம் மற்றும் நாசா விஞ்ஞானிகளும் பரிந்துரை செ ய்கின்றனர். மேலும் இம்முறையில் பிளேடுகள் எதுவும் பயன்படுத்தப்படாததால், பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்ச ம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சை  துல்லியமானது. பாதுகாப்பானதும் கூட. இந்த சிகிச்சை யினை ஒரு முறை மேற்கொள்கிறவர்கள் அதன் பின்  வாழ்நாள் முழுவதும் கண்ணாடி
யையோ, லென்சை யோ அணிய தேவையில்லை. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவருக்கும் மட்டுமே  இந்த அறுவை சிகிச்ையை செ ய்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இம்முறை மூலம் கார்னியாவில் சிறிய அளவில் லேசர் ஒளி பாய்ச்சப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த சிறிய லேசர் ஒளி பல்ஸ் கருவிழிப்படலத்தில் ஊடுருவும் போதும், அதில் உள்ள கார்னியா அணுக்களுக்கு எந்த சே தாரமும் ஏற்படாமல்  ஒரு புதிய ஃபிளாப் உருவாக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கார்னியல் ஃபிளாப்பை திறந்து கருவிழிப்படலம் சீரமைக்கப்பட்டு அதன் பின் மூடப்படுகிறது. நாளடைவில் எந்தவித பின்வினைவுகளும் இல்லாமல் ஏற்கனவே உள்ள திசுக்களுடன் மூடப்பட்ட ஃபிளாப் ஒன்றிணைந்துவிடும். இருபது நி மிடங்களில் முடிந்துவிடும் இந்த அறுவை சிகிச்சை க்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு இருக்கிறது.

தொடர்புக்கு: +91 44 2811 2811