எளிமைப்படுத்தப்பட்டிருக்கும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை

  • Dr.Venkata Subbarao
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
எளிமைப்படுத்தப்பட்டிருக்கும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை

எதிர்பாராமல் நிகழும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் சிகிச்சை குறித்தும், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் குறித்தும் அறிவதற்காக சென்னையில் இயங்கி வரும் சர்வதேச தரமுடைய மருத்துவமனையான றக்சித் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், எலும்பு மருத்துவத்தில் நிபுணருமான டொக்டர் சுப்பாராவை www.medicalonline.inசார்பில் சந்தித்தோம்.

விபத்தில் காயமடைந்தவர்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

விபத்தால் பாதிக்கப்படுபவர்களில் வெளிக்காயத்துடன் இணைந்த எலும்பு முறிவு உள்ளவர்கள், வெளிகாயமற்ற ஆனால் எலும்பு முறிவு உள்ளவர்கள் என இரண்டு வகையினர் உள்ளனர். இவர்களில் வெளிகாயத்துடன் இணைந்த எலும்பு பாதிக்கப்பட்டவர்கள் தான் மருத்துவ துறையால் குறிப்பிடப்படு `கோல்டன் அவர்ஸ்\' என்ற விபத்து ஏற்பட்ட, நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள். இவர்கள் அதற்குள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறாவிட்டால், பின்விளைவுகளும், பாதிப்புகளும் ஏற்படுவது உறுதி.

விபத்தின் போது தலையில் அடிப்பட்டிருந்தால் உடனே ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். தலைப்பகுதியில் இரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறதா அல்லது இரத்தம் எங்காவது உறைந்து போய் கட்டியாகியிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். அதேப் போல் விபத்தின் போது எலும்புகளில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். இதன் மூலம் எலும்பு முறிவின் தன்மையை கண்டறிந்து, அதற்கேற்றாற் போல் தீவிர சிகிச்சையோ அல்லது உடனடி சத்திர சிகிச்சையோ வழங்கி, நோயாளியை காப்பாற்ற இயலும். வெளிகாயமற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வீக்கத்தை குறைப்பதற்கான சிகிச்சை வழங்கி, அதனை கட்டுக்குள் கொண்டுவந்தபின்பு தான் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை வழங்கவேண்டும்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்குவோருக்கு காம்பவுண்ட் ப்ராக்சர் ஏற்படுவது இயல்பு. இந்நிலை மேலைத் தேய நாட்டவர்களுக்கு அவ்வளவாக ஏற்படுவதில்லை. அதே தருணத்தில் விபத்து நிகழ்ந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஒரு மணி நேரத்திற்குள் முதலுதவியும், தற்காலிக சிகிச்சையை வழங்க வேண்டும். அதாவது விபத்தில் பாதிக்கப்பட்ட உடல் பகுதியை முதலில் சுத்தமான தண்ணீரால் சுத்தப்படுத்தவேண்டும். இதன் மூலம் அழுக்குகளும், நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகளும் வருவது குறையும்.

விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட் டால் ஆங்கில மருத்துவத்தை அணுகாமல் மாற்று மருத்துவமான கட்டு மருத்து வத்தை நாடுவது ஆரோக்கியமானது தானா? இதனால் எற்படக்கூடிய பின் விளைவுகள் என்ன?

இத்தகைய மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண்போர்கள், பின்விளைவுகள் குறித்து கவலைப்படுவதில்லை. இது தவறு. எலும்புகள் என்பது ஆண்டவன் எமக்களித்த கொடை. இதனை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது தான் எம்முடைய பணி. அவர்கள் எலும்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு நேரடியாக சிகிச்சை வழங்காமல், தோலின் வெளிப்பகுதியிலிருந்து முறைப்படி அங்கிகரீக்கப்படாத சிகிச்சையை வழங்குகிறார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச் சையை வழங்குவதுடன், இவர்கள் போடும் இறுக்கமான கட்டால் அப்பகுதியில் இரத்த ஓட்டம் சீராக செல்வதில்லை. எலும்புகள் மிகத்துல்லியமாகத்தான் இணைக்கப்படுகி றது என்பதற்கு எந்தவித உறுதியும் வழங் கப்படுவதில்லை.  இதனால் இந்த மாற்று மருத்துவ சிகிச்சையை நாங்கள் ஒருபோதும் பரிந்துரைப்பதில்லை. ஆங்கில மருத்துவத் தில் எக்ஸ்றே சோதனை செய்து, எலும்புக ளின் பாதிப்புகளை கண்டறிந்தபின்னரே சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுதான் முறையான சிகிச்சையும் கூட.

ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரசவத் தின் போது இடுப்பு எலும்பு விரிவடைவதால் அவர்கள், முதுமையடையும் முன் னரே இடுப்பு எலும்பு பழுதடையத் தொடங்குகிறது. இந்நிலையில் அவர்க ளுக்கு எத்தகைய தருணத்தில் இடுப்பு எலும்பிற்கான மாற்று தேவைப்படுகிறது?

ஒவ்வொரு பெண்ணிற்கும் அவர்களின் மாதவிடாய் நின்ற காலத்திலிருந்து, ஈஸ்ட் ரோஜன் என்னும் ஹார்மேன் சுரப்பிகளில் ஏற்படும் சமச்சீரற்றத்தன்மையினால், எலும் பில் உள்ள கால்சியம் சத்தின் அளவு வேக மாக குறையத் தொடங்குகிறது. இதனால் இடுப்பு எலும்பு பலவீனமடைகிறது. அத னால் தான் பெண்கள், மெனோபாஸ் நின்றவு டன், மருத்துவரை ஆலோசித்து, உடற் பயிற்சி செய்வதுடன், கால்சியம் சத்துள்ள மாத்திரைகளையும் சாப்பிட தொடங்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லி வருகிறோம்.

நீரிழிவு நோயாளியாக இருப்பவர்கள், மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ளலாமா?

நீரிழிவு நோயாளிகளுக்கு அவ்வித சத்திர சிகிச்சையால் பின்விளைவு ஏற்படுவ தற்கு சாத்திய கூறு அதிகமிருந்தாலும், இதனை செய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கி றோம். ஏனெனில் நீரிழிவு என்பதை ஒரு குறைபாடே தவிர நோயல்ல. அதிலும் தற் போது அதிகளவிலான தெற்காசியர்கள் நீரி ழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக மூட்டு மாற்று சத்திர சிகிச்சையையே செய் யக்கூடாது என்பதை மருத்துவ துறை ஏற்க வில்லை. இத்தகையோர்களுக்கு, முதலில் நாங்கள் நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவந்த பின்னே சத்திர சிகிச்சையை மேற்கொள்கி றோம். மேலும் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள அதிக நேரம் தேவையில்லை என்பதால் சர்க்கரையை கட்டுக்குள் கொண் டுவருவதும் எளிது. எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் கவனம் என்ற ஒரேயொரு நிபந்தனையு டன் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொள் ளலாம். அத்துடன் மருத்து வர் எந்த தருணத்தில் சத் திர சிகிச்சையை செய்து கொள்ளுங்கள் என்று பரிந் துரைக்கிறாரோ அந்த தரு ணத்தில் செய்து கொள்ள வேண்டும். அதனை புறக ணிக்கவோ அல்லது அலட் சியப்படுத் தவோ கூடாது.

இளம் வயதில் ரூமாட்டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முப்பத்தைந்து வயதிலேயே மூட்டு வலியும், மூட்டு தேய்மானமும் வந்து விடும் என்கிறார்களே. உண்மையா?

மருத்துவத்துறையில் ஜுவைனைன் ரூமாட்டிக் ஆர்த்தரைட்டீஸ் என்று இதனைக் குறிப்பிடுகிறோம். இத்தகைய வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலில் எலும்புகள் இணையும் அனைத்து இடங்களிலும் வலி இருக்கும். தசைகள் முற்றிலும் வலு விழப்பதால் தான் இவை ஏற்படுகிறது. இவர் களுக்கு `ரூமாட்டிக் ஹார்ட் ஃபீவர்' என்ற இதயத்தை தாக்கும் காய்ச்சலும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இத்தகைய ஆர்த்தரைட் டீஸால் பாதிக்கப்பட்ட வர்களை மிக கவனமாக கையாண்டு சிகிச்சையளிக்கிறோம். இதனை முதலில் மருந் துகளாலேயே குணப்படுத்த முயற்சிக்கி றோம். எலும்புகள் முழுமையான தேய்மானம் அடைந்த பிறகு தான் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

உடற்பயிற்சி, அள வான மற்றும் சத்தான உணவு, விருப்பமான பணி என வாழ்க்கையை ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டு வந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி தான்.

 

தொடர்புக்கு: 0091 98410 38813