கூட்டு சிகிச்சையின் ரகசியம்!

  • Dr.Kandan Thirumalai
  • Apr 20, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
கூட்டு சிகிச்சையின் ரகசியம்!

பிசியோதெரபி, நியூட்ரிசன் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமுறை மூன்றும் சேர்ந்த கலவையே கூட்டுசிகிச்சை ஆகும். மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் கடவுள்களான படைத்தல், காத்தல், அழித்தல் போல கூட்டுச் சிகிச்சையின் முறைகளாக A, B, C, D இருக்கின்றன.

C - Cleansing (சுத்தப்படுத்துதல்) - நம் உடலிலுள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுதல் முறை.
 
B - Balancing (சமநிலைப் படுத்துதல்) - நம் உடலிலுள்ள அமில காரத் தன்மையை சமநிலைப்படுத்துதல்.
 
A - Activating (உயிர்ப்பித்தல்) - நம் உடலிலுள்ள செல்களை புதுப்பித்தல்.
 
D - Defending - சுத்தப்படுத்துதல், சமநிலைப் படுத்துதல், உயிர்ப்பித்தல். இம் மூன்றும் சேர்ந்தால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் சூத்திரம்:
D = C + B + A
 
பிசியோதெரபி மருத்துவமுறை என்பது நம் உடலிலுள்ள உறுப்பு கள் சீராக இயங்குவதற்கு தினமும் நாம் உடற்பயிற்சியும், நடைப் பயிற்சியும் செய்து வர வேண்டும். அதுபோல ஊட்டச்சத்து மருத்துவ முறை என்பது தினமும் சமச்சீரான உணவுகளை சாப்பிடும் போது, நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியோடு நீண்ட ஆயுளோடும் வாழலாம்.
 
அக்குபஞ்சர் மருத்துவமுறை என்பது நம் உடலிலுள்ள உயிரூட்ட சக்தியை மேம்படுத்த பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையிலும், நாடிப் பரிசோதனை மூலமும், அக் குபஞ்சர் புள்ளிகளை தூண்டுவதன் மூலமும் தடைப்பட்ட உயிரூட்ட சக்தியைச் சரி செய்தால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இம்மூன்று மருத்துவ முறைகளிலும் பக்க விளைவுகள் இல்லை.
 
கூட்டு சிகிச்சையின் நன்மைகள்:
 
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
* குறைந்த செலவில் அனைத்து நோய்களையும் குணமாக்குதல்
* 100%  பக்கவிளைவுகள் இல்லை.
* குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சிகிச்சை முறை
* நீண்ட ஆயுட்காலத்தை தரக் கூடிய மருத்துவ முறைகள்
* வரும் முன் காக்கும் முறை
* நோய்களை விரைவில் குணப்படுத்த முடியும்.
* மருந்தில்லா மருத்துவ முறை (பிசியோதெரபி - அக்குபஞ்சர்)
* சிறப்பான வாழ்க்கை தரம்
* உற்சாகமான மனநிலை...