ஆரோக்கியமாக வாழ ரகசியங்கள்!

  • Dr.Kandan Thirumalai
  • Apr 20, 2018
Appointment                Doctor Opinion           Online Consultation
 
ஆரோக்கியமாக வாழ ரகசியங்கள்!

பிசியோதெரபி என்பது இயன்முறை மருத்துவ முறையாகும். இதில் சிறப்புப் பயிற்சி சிகிச்சை முறைகள் மற்றும் நவீன மின் உபகரணங்கள் முறைகள் மூலமாக பல்வேறு நோய்களை இயற்கை முறையில் குணப்படுத்துவதே ஆகும்.

எலும்பியல், நரம்பியல், குழந்தைகள் இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான, மகளிர் நலம், முதியோர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சம்பந்தமான பல்வேறு பிரிவுகள் உள்ளன.

உடற்பயிற்சித் துறை, Short Wave Diathermy (SWD), Ultra Sound Therapy, Wax Therapy. Interferential Therapy (IFT) Traction, TENS, Electrical Stimulation மற்றும் பல்வேறு வகையான பிசியோதெரபி உபகரணங்களை பயன்படுத்தி வலி, வீக்கம், தசைப்பிடிப்பு, தசைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்து மருத்துவம் என்பது நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவமுறை ஆகும். உயிரணுக்கள் எல்லா வகை ஊட்டச்சத்துக்களையும் தேவையான அளவுகளில் கொடுப்பதாகும். கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தண்ணீர், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மருத்துவம் நோய் வருமுன் காப்பதே ஆகும். ஆரோக்கியத்தின் நண்பன் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமுள்ள பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர் மருத்துவம் என்பது மயிரிழையைக் காட்டிலும் ஊசி அல்லது கைவிரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ முறையாகும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் (Life changes) ஏற்படும் நோய்கள் சர்க்கரை நோய், உயர்இரத்த அழுத்தம், பக்க வாதம், கழுத்து வலி, முதுகுவலி, மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு (Obesity), இரத்த சோகை, மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கு என்ன வழி?

இன்றைய வாழ்க்கை நடைமுறையில் சேர்க்க வேண்டியது முதன்மையான ஒன்றுதான் உடற்பயிற்சி ஆகும். தினந்தோறும் 20 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியும், தினந்தோறும் 20 நிமிடங்கள் நடைபயிற்சியும் செய்ய வேண்டும். சரிவிகித உணவாக (Balanced diet) இருக்க வேண்டும். 80% காரத்தன்மையுள்ள (Alkaline Diet) உணவாகவும், 20% அமிலத்தன்மையுள்ள (Acidic Diet) உணவாகவும் இருத்தல் வேண்டும்.

பிசியோதெரபி, நியூட்ரிசன் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமுறை மூன்றும் சேர்ந்த கலவை மூக்கூட்டு சிகிச்சை முறை ஆகும். ஆரோக்கியமாக வாழ மூன்று ரகசியங்களை பற்றிய புத்தகத்தை Dr.ஜோ.கந்தன் திருமலை அவர்கள் எழுதியுள்ளார்.

உங்கள் ஆரோக்கியத்தை மாற்றக்கூடிய விழிப்புணர்வு பொக்கிஷம் ஆகும். ஒவ் வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி மற்றும் நண்பன் ஆகும்.