அனைவருக்கும் பொதுவான காஸ்மெட்டிக் சிகிச்சைகள்!

  • Dr.Sathish Lal
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
அனைவருக்கும் பொதுவான காஸ்மெட்டிக் சிகிச்சைகள்!

பிரபலங்கள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்த ப்ளாஸ்டிக் சிகிச்சைகள் இப்போது சாமானியரும் செய்துகொள்ளும் அளவுக்கு மாறிவிட்டன.

அழகைக் கூட்டுவதற்கான சிகிச்சையாக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையைக் குலைக்கும் உடற்குறைபாடுகளையும் ப்ளாஸ்டிக் சிகிச்சைகள் சரிசெய்கின்றன. இத்துறையில் வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் மதுரை அப்பலோ சிறப்பு மருத்துவமனையின் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராகவும், காஸ்மெட்டிக் சிகிச்சைகள் எனப்படும் சரும சிகிச்சை நிபுணராகவும் இயங்கும் டாக்டர். சதீஷ் லால்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே செய்யக்கூடியதாக இருந்த பிளாஸ்டிக் சிகிச்சைகள் தற்போது சாமானியரும் செய்துகொள்ளும் அளவிற்கு சந்தர்ப்பங்கள் மாறிவிட்டன.

பெண்கள் தற்போதெல்லாம் அதிகமாக செய்துக் கொள்ளும் ‘அப்டோமினல் பிளாஸ்டி’ என்ற சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்:

‘பிரசவத்துக்குப் பின் வயிறு தொங்கிவிடுவதைச் சரிசெய்யும் சிகிச்சையே இது. இதற்கு அடுத்த படியாக பெண்கள் அதிகளவில் செய்துகொள்ளும் சிகிச்சைகளாக மார்பக சிகிச்சைகள் ஆகும். மார்பகங்களைப் பெரிதாக்குவது, மார்பகத்தின் அளவைக் குறைப்பது, தொங்கிப் போயிருக்கும் மார்பகங்களைத் தூக்கி நிறுத்துவது போன்ற சிகிச்சைகள் இதில் அடங்கும். முக்கியமாக குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களே அதிகளவில் இதுபோன்ற சிகிச்சைகளைச் செய்து கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் பிரசவத்துக்குப் பின் பெண்கள் தமது தோற்றத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இன்று வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் அவர்கள் தமது உடல் வாகு சீராக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

காஸ்மெட்டிக் சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

‘இதுபோன்ற சிகிச்சைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற ஒரு பயம் மக்களிடையே இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. இதுவரை எங்களிடம் காஸ்மெட்டிக் சிகிச்சைகள் செய்துகொண்ட எவருமே பக்கவிளைவால் பாதிக்கப்படவில்லை என்பதால் இதை உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆனால், வயிறு தொங்கிவிடுதல் மற்றும் கொழுப்பு நீக்குதல் போன்ற சிகிச்சையைச் செய்து கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நாம் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றாமல் இருந்தால் மீண்டும் அந்தப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் சிகிச்சை துறை மிகவும் வளர்ந்து விட்ட அதிநவீன துறையாக தற்போது மாறிவிட்டது.

இந்தத் துறையின் கீழ் செய்யப்படும் பல்வேறு சிகிச்சைகளை பற்றி சொல்லுங்கள்:

‘ப்ளாஸ்டிக் சிகிச்சை என்பது ஒரு பரந்த துறை. உடல் குறைபாடுகளைச் சரி செய்வதே ப்ளாஸ்டிக் சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

ஏதேனும் விபத்தினால் தோல், சதை, நரம்பு ஏன், எலும்பிலும் கூட பாதிப்புகள் ஏற்பட்டால் அதை ப்ளாஸ்டிக் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். தீக்காயங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கும் ப்ளாஸ்டிக் சிகிச்சையே சிறந்தது. பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு அன்னப் பிளவு இருக்கும். இதுபோன்ற இயற்கையான குறை பாடுகளையும் ப்ளாஸ்டிக் சிகிச்சை சரிசெய்கிறது.

கைனோகொமாஸ்டியா எவ்வகையிலான சிகிச்சை?

‘சில ஆண்களின் மார்பகங்கள் பெண்களைப் போலவே பெரிதாகக் காணப்படும். இதனால், கோயில்களுக்கு மேலாடை இன்றிச் செல்லவும் அவர்களுக்கு மிகுந்த அவஸ்தையைத் தரும். இதைச் சரி செய்வதற்கான ‘கைனகொமாஸ்டியா’ எனப்படும் சிகிச்சையையும் இப்போது ஆண்கள் செய்து கொள்கிறார்கள்.

இவை தவிர, ‘லைபோசக்ஷன்’ எனப்படும் சிறு சிறு தழும்புகளுடன் செய்து கொள்ளக் கூடிய கொழுப்பு அகற்றும் சிகிச்சை, முகத்திலோ அல்லது உடலிலோ உள்ள விரும்பத்தகாத தழும்புகள், மருக்கள் என்பவற்றை அகற்றும் சிகிச்சையையும் செய்து கொள்கிறார்கள்.

பெண்களும் லைப்போசக்ஷன் சிகிச்சை செய்து கொள்கிறார்களா? இதைத் தவிர உடல் உறுப்புக்களை சரி செய்வதற்காக என்னென்ன சிகிச்சைகள் பெண்களுக்கு மேற்கொள்ளப்படுகின்றன:

பெண்களும் லைபோசக்ஷன் சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள். இவை தவிர முகம் சார்ந்த சிகிச்சைகள் அதாவது, உதடுகளின் அளவைச் சரிசெய்வது, சற்று வித்தியாசமாக, விகாரமாக இருக்கும் காது மடல்களைச் சரி செய்வது, புருவக் குறைபாடுகள், இளமைக் குறைபாடுகள், வயதான தோற்றத்தை அகற்றும் சிகிச்சைகள் என்பனவற்றையும் பெண்கள் அதிகளவில் செய்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் சிகிச்சை மற்றும் காஸ்மெட்டிக் சிகிச்சை ஆகியவற்றிற்கான வேறு பாட்டை பற்றிச் சொல்லுங்கள்:

‘ப்ளாஸ்டிக் சிகிச்சையின் ஒரு உப பிரிவே காஸ்மெட்டிக் சிகிச்சைகள். முன் போல இல்லாமல் அதிகளவிலான மக்கள் காஸ்மெட்டிக் சிகிச்சைகளைச் செய்துகொள்கிறார்கள். வசதி படைத்தவர்கள் தான் செய்து கொள்ள முடியும் என்ற நிலை இப்போது மாறிவிட்ட தால் மத்திய தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், வேலை வாய்ப்புகளுக்காகவும், திருமணம் போன்ற தனிப்பட்ட தேவைகளுக்காகவும் காஸ்மெட்டிக் சிகிச்சைகளைச் செய்துகொள்கிறார்கள்.

காஸ்மெட்டிக் சிகிச்சை மற்றும் எடை குறைப்பு சிகிச்சையான ’பேரியாட்ரிக்’ சிகிச்சை ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசங்கள் என்னென்ன?

’காஸ்மெட்டிக் சிகிச்சைகளுக்கும் உடல் எடை குறைப்பு சிகிச்சைக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் எடை குறைப்புக்கு \'பேரியாட்ரிக்’ என்ற சிகிச்சையே பொருத்தமானது. ஆனால், உடலின் குறிப்பிட்ட ஒரு பாகம் மட்டும் பெரிதாக இருக்கிறது என்றால் அதற்கு லைபோசக்ஷன் சிகிச்சையே சிறந்தது. எங்களிடம் வருபவர்கள் இதில் எந்த சிகிச்சைக் குப் பொருத்தமானவர்கள் என்பதை உறுதியாக அறிந்துகொண்ட பின்னரே அவர்களுக்கு சிகிச்சைகளைப் பரிந்துரைக்கிறோம். காஸ்மெட்டிக் சிகிச்சைகளில் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லுங்கள்.

‘இப்போது கொழுப்பை உறையவைப்பது போன்ற சில சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதன்போது அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதில்லை. ஆனால் இந்த சிகிச்சைகளால் பத்து முதல் பதினைந்து சதவீத விளைவுகளையே ஏற்படுத்த முடியும்.

இதனால், உங்கள் தோற்றத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை முழுமையாக இந்த சிகிச்சை தந்து விடாது. எனவே, காஸ்மெட்டிக் சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வதே சிறந்தது.

பிளாஸ்டிக் சிகிச்சையில் அதிகளவில் மேற்கொள்ளப்படும் ஒன்று என்ற எதை குறிப்பிடுகிறீர்கள்:

’ஆண்களைப் பொறுத்தவரையில் ’ஹெயார் ட்ரான்ஸ்ப்ளான் டேஷன்’ எனப்படும் தலைமுடிக் குறைபாட்டை நீக்கும் சிகிச்சையை அதிகளவில் செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் மரபு வழியான காரணிகளே தலைமுடியை உதிரச் செய்கின்றன. நாற்பது வயது தாண்டிய பின் முடி உதிர்வை ஆண்கள் அலட்சியம் செய்தாலும், இருபது களிலேயே இந்நிலை ஏற்பட்டால் மிகுந்த வருத்தப்படுகிறார்கள். வேலை, திருமணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு அவர்களது தோற்றம் முக்கியமாகிறது. இதனால் ஹெயார்ட்ரான் ஸ்ப்ளான் டேஷன் சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள்.