இந்த நவீன காலத்தில் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பற்றியும் அவர்களின் பற்களின் தூய்மை பற்றியும் சரியாக அறிந்திருப்பதில்லை. அதிலும் சிறுகுழந்தைகள் அதிகமாக இனிப்பு வகைகளை உண்ணும்போது பால் பற்கள் சொத்தை ஆகி விடுகின்றன.
பெற்றோர்களும் நிரந்தரப் பற்கள் அதனைத் தொடர்ந்து வருவதால் இதை அலட்சியமாக எடுத்துக்கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. நிரந்தரப் பற்கள் சரியான பாதையில் வளர்வதற்கு பால் பற்கள்தான் அஸ்திவாரமாக இருக்கிறது. இவை நிரந்தரப்பற்களுக்கு சரியாக ஒரு பாதையை ஏற்படுத்துவதோடு, அவை உறுதியானதாகவும் வளர இதுதான் உதவுகிறது. இந்த பால் பற்கள் சொத்தையாகி விழுவதால், நிரந்தரப்பற்கள் சரியான பாதையில் வளராமல் வேறொரு திசைகளில் இஷ்டம் போல வளரும். இதனை எதிர்காலத்தில் சரி செய்வது கடினமான ஒன்று.
ஒவ்வொரு பால் பற்களும் ஒவ்வொரு காலத்தில் தோன்றி, பின் கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் விழுந்து நிரந்தரப்பற்கள் தோன்றுகிறது. ஒரு வேளை சொத்தை ஏற்படுவதினால் இந்த பால் பற்கள் விழுந்தால், அடுத்து வரவிருக்கும் நிரந்தரப்பற்கள் சரியான பாதையில் வளராது. அந்த குழந்தை வளரும் பொழுது எதிர்காலத்தில் பற்கள் crowded-டாக இருக்கும். இந்த பால் பற்கள் சொத்தை ஏற்படாமல் தடுக்க ரூபா பல் மருத்துவமனையில் பிரத்யேகமாக சிகிச்சையளிக்கிறோம்.
அதில் அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை பால் புரதங்களை கொண்டுள்ள ஒரு சொல்யூஷனைக் கொண்டு கால்சியம், ப்லுரைட் போன்றவற்றை பற்களுக்கு அளிக்கிறோம். அதை அந்த பற்கள் உள்வாங்கிக்கொண்டு பற்களுக்கு வலிமையை அளிக்கிறது. இதன் மூலம் பால் பற்களின் சொத்தைகளை நாங்கள் தடுத்து வருகிறோம். இந்த பிரத்யேக சிகிச்சைகளை பால் பற்கள் மற்றும் நிரந்தரப்பற்கள் உள்ளவர்களும் செய்துக்கொள்ளலாம். அத்தோடு இந்த சம்மர் ஹாலிடே நாட்களில் ரூபா பல் மருத்துவமனையில் குழந்தைகளுக்காக இலவச பல் பரிசோதனை முகாம்களை நடத்துகிறோம். இதில் பற்கள் பாதுகாப்பு பற்றின ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்குகிறோம்.