இப்போதைய டிஜிட்டல் உலகில் எல்லா துறைகளிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளது.
அதைப்போல, மருத்துவத்துறையிலும் அப்படியான வியத்தகு மிகப்புதியதான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஒரு பல் நோயாளருக்கு தேவைப்படுகின்ற முதல் அவசர ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொண்ட பின்பு, பதிய பற்கள் பொருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அது பல் மருத்துவரால் உடனடியாகச் செய்துமுடிக்கப்பட்டு விடுகின்றது. அதிகபட்சமாக நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் புதிய நிரந்தரபற்கள் பொருத்தப்பட்டு விடுகின்றன.
“ஹைப்ரிட் டெண்டல் சிகிச்சையில் இது சாத்தியமாகின்றது. இந்த குறையின் மூலமாக பற்கள் பொருத்துவது எல்லா வயதினருக்கும் எளிமையாகப்பட்டுள்ளது. ஹைப்ரிட் சிகிச்சை பல் மருத்துவத்தில் ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில், இந்த சிகிச்சை முறையானது செலவுகளைப் பொருமளவில் குறைத்து, சிகிச்சைக்கான நேரத்தையும் கணிசமாக் குறைக்கின்றது. மேலும் இந்த சிகிச்சை குறையின் மூலமாக நோயாளர்களுக்கும் புதிதாகப் பொருத்தப்படும் பல்லானது நிரந்தரமானதாகவும், இயற்கையான பற்களைப் போன்றதாகவும் இருக்கும். மேலும், சர்க்கரை நோய், இதய நோய். இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கும் இந்த புதிய அதிநவீன பல் சிகிச்சைமுறை எவ்விதப்பிரச்சினையுமின்றி மேற்கொள்ளப்படலாம்.