குழந்தையின்மைப் போக்கும் செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை

  • Dr.Mini Gopal
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
குழந்தையின்மைப் போக்கும் செயற்கை முறை கருவூட்டல் சிகிச்சை

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்செல் கேளாதோர்\' என்று தமிழ் மறையின் மூலமாகவும், `பேர் செல்லப் பிள்ளை வேண்டும்\' என்று பழமொழி மூல மாகவும் குழந்தைச் செல்வத்தின் முக்கியத்துவத்தை நமது முன்னோர்கள் வலியுறுத்திச் செல்லியிருக்கிறார்கள்.

அறிவியல் முன்னேற்றம், தொழிற் புரட்சி, விஞ்ஞானத்தின் வளர்ச்சி, பகுத் தறிவு, சுற்றுச்சூழல் மாசு, புவி வெப்பமடை தல், உணவுப் பழக்க வழக்கங்களில் வேறு பாடு போன்ற பல காரணிகளால் இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் பாரிய பிரச் சினை குழந்தையின்மையே.

தமிழ்ச் சூழலில் குழந்தையின்மை என் பது சமூக மதிப்பீடுகளுடன் ஒப்பிடப்படுகி றது என்றபோதிலும், இது குறித்த மருத்து வத் துறையின் பங்களிப்பை அதிகமானோர் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை  குறித்து தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் தமிழக நகரான நாகர் கோவிலில் இயங்கி வரும் கோபால பிள்ளை மருத்துவமனையின் இயக்குநரும், செய ற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சை யளிப்ப தில் நிபுணருமான டொக்டர். மினி கோபால்.

குழந்தையின்மை என்பது ஒரு நோயா?

குழந்தையின்மை என்பது மருத்துவ சிகிச்சை  மூலம் நிவர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு குறைபாடே. இந்தக் குறைபாட்டால் தெற்காசியாவில் மட்டும் 30 சதவீதத்தின ருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடு, முப்பது சதவீதம் பெண் தொடர் பான காரணங்களுக்காகவும், முப்பது சத வீதம் ஆண் சம்பந்தமான காரணங்களுக்கா வும், முப்பது சதவீதம் இருபாலாருக்கும் ஏற் படும் பொதுவான காரணங்களுக்காகவும், பத்து சதவீதம் ஆணிலும், பெண்ணிலும் தென்படாத, ஆனால் பரிசேதனைகளின் மூலம் கண்டறியக்கூடிய காரணங்களுக்கா கவும் உருவாகின்றன என்று கண்டறியப் பட்டிருக்கிறது.

ஆண், பெண் குறைபாடுகள் பற்றி விளக்குங்களேன்?

ஆண்களைப் பொறுத்தவரை, விந்து தொடர்பான சிக்கல்கள், புகை யிலைப் பொருட்களைப் பயன் படுத்துதல், மதுப் பழக்கம், அதிக வெப்பமான சூழலில் பணியாற்றுதல், நீ ரிழிவு நோய், அம்மன் கட்டு நோய் மற்றும் மரபு ரீதியான குறைபாடுகள் போன்றவற்றால் தான் குழந்தை யின்மைக் குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.

பெண்களைப் பொறுத்த வரை, கர்ப்பப்பை, சினைப்பை, பலோப்பியன் குழாய் உள் ளிட்ட சில இனப்பெருக்க மண் டல உறுப்புகளில் ஏற்படும் அடைப்பு, பாலிஸிஸ்டிக் ஓவரி, பைப்ராய்ட் கட்டிகள், கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மரபு ரீதியான குறைபாடுகள், உடற்பருமன் போன்ற காரணங்களால் தான் பாதிக்கப்படு கின்றனர்.

அத்துடன் கரு முட்டை உற்பத்தி தொடர் பான பிரச்சனைகளால்தான் 45 சதவீதத்திற் கும் மேலான பெண்கள் பாதிக்கப்படுகின் றனர். இவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை ய ளிப்பதன் மூலம் இந்தக் குறைபாட்டை நீ க்கிவிட இயலும்.

மேற்கூறிய காரணங்களை விட, ஒவ்வா மையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்க ளைத் தொடர்ந்து பயன்படுத்துதல், அணுக் கதிர்வீச்சுகளின் தாக்கம், அதிக நேரம் மடிக் கணிணியைப் பயன்படுத்துவது போன்ற கார ணங்களாலும் இருபாலாரும் குழந்தையின் மைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்றம், காலம் கடந்த திரு மணம், கருத்தரிப்பதில் காலம் கடத்துதல், முதல் குழந்தையை கருவிலேயே அழித்தல் போன்ற சில செயல்களில் ஈடுபடுவோரை யும் குழந்தையின்மை குறைபாடு பாதிக்கி றது. ஆனால் கருத்தடை மாத்திரைகள் மற் றும் கருத்தடை சதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் குழந்தை யின்மைக் குறைபாடு நிரந்தரமானதல்ல என் பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இத்தகைய குழந்தையின்மை நோய்க்கு, செயற்கை முறை கருத்தரிப்பு (டெஸ்ட் டியூப் பேபி முறை) எனப்படும் சிகிச்சை, வரப்பிரசதமாக இருக்கிறது. முப்பத்தைந்து வயதிற்குக் கீழுள்ள பெண்களுக்கு இந்தச் சிகிச்சை  மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிக மாகிறது. முப்பத்தைந்து வயதிற்கு மேல் நாற்பது வயதிற்குள் இருப்பவர்களுக்கு ஐம் பது சதவீத பலனும், நாற்பது வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு ஐம்பது சதவீதத்தை விடக் குறைவான பலன்களும் கிடைத்து வரு கின்றன. எனவே, உரிய காலத்திற்குள் பெண் கள் இத்தகைய சிகிச்சை  மூலம் குழந்தை யைப் பெற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படு கிறது. ஆண்களைப் பொறுத்தவரை இத்த கைய சிகிச்சை யைப் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது.

இதற்கான சிகிச்சை  பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் செல்வீர்களா?

இத்தகைய சிகிச்சை க்காக வரும் தம்பதி களிடம் முதற்கட்டப் பரிசேதனை நடத்தப் பட்டு, குறைபாடுகள் கண்டறியப்படுகின் றன. அவை கண்டறியப்பட்டவுடன், விந்து, முட்டை அணுக்கள் மருந்துகளின் உதவியு டன் உருவாக்கப்படுகிறது. பின்னர், பெண் ணின் முட்டை வெளியே எடுக்கப்பட்டு, விந் தணுவுடன் இணைய வைத்து, மீண்டும் அத னைப் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத் தப்படுகிறது.

இந்த சிகிச்சை  மேற்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பின், அந்தப் பெண்மணி வீட்டிற்குத் திரும்பிவிடலாம். அதன்பின் இயற்கையான முறையில் பத்து மாதம் தாயின் வயிற்றில் கரு வளர்க்கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சி தொடர்ந்து மருத்து வர்களால் கண்காணிக்கப்படுகிறது. அத்து டன் குழந்தையின் வளர்ச்சிக்காக விட்டமின் மருந்துகளும், மாத்திரைகளும் வழங்கப்படு கிறது. வேறு எந்தச் சிக்கலும் ஏற்படாமலி ருந்தால் இதுவும் ஒரு இயற்கையான கர்ப் பம் போன்றதாகும்.

சிசு முழு வளர்ச்சியடைந்த பின், குழந் தையின் பாதுகாப்பிற்காக சத்திர சிகிச்சை  மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகி றது. 35வயதிற்குள்ளாக மாதவிடாய் நின்று விடும் பெண்களுக்கும் அதாவது, ப்ரீமெச் சூர் மெனோபாஸால்` பாதிக்கப்பட்ட பெண் களுக்கும், இனப்பெருக்கம் செய்ய உதவும் உள்ளுறுப்புகள் வளர்ச்சியடையாமல் இருக் கும் பெண்களுக்கும், அவர்களுடைய நெருங்கிய உறவு முறை(அக்கா-தங்கை)களி டமிருந்து முட்டை தானமாகப் பெறப்பட்டு, இந்த சிசிச்சை  வழங்கப்படுகிறது. ஒரு முறை இச்சிகிச்சை  முறையால் கர்ப்பம் அடைந்த பெண்கள், மீண்டும் இதே சிகிச்சை  மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இயலும். ஐரோ ப்பிய மற்றும் மேற்கத்தேய நாடுகளை விட தெற்காசியாவில்,  குறிப்பாக இந்தியாவில் இத்தகைய சிகிச்சை க்காகச் செலவாகும் கட் டணம் குறைவாக இருக்கும் அதே தருண த்தில் வெற்றிவாய்ப்பு அதிகமாகும்.