மருத்துவச் சேவையுடன் முதியோர்க்கான நவீன இல்லம்

  • Dr.A.K.Ganapathy
  • Jan 24, 2018
Appointment                Doctor Opinion          
 
மருத்துவச் சேவையுடன் முதியோர்க்கான நவீன இல்லம்

"பிறப்பு என்ற ஒன்று உறுதியெனில், இறுதியில் மரணமும் உறுதி" என்பதனை மறுக்காத மனிதர்கள் யாருமில்லை. பிறப்பிற்கும், மரணத்திற்கும் இடையே பருவங்கள் மாறலாம். அதற்கேற்ப நம்முடைய உரு வங்கள் மாறலாம். ஆனால் ஆரோக்கியம்?

மருத்துவத்துறையின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் உற்று நோக்கும்போது ஒரு உண்மை புரிய வரும். மனிதனின் மரணத்தை மருத்துவத்துறை தடுக்க முடியா விட்டாலும், அவன் வாழும் காலங்களில் எந்தவொரு துயரத்தையும் சுமந்துக் கொண்டு வாழ்வதை விரும்பவில்லை என்பது புரிய வரும். அதனால் தான் நோயுற்ற மனிதனுக்கு, அதிலிருந்து மீளும் சக்தியையும், அதற்கான யுக்தியை கண்டறிவதில் மருத்துவத்துறை தொடர்ந்து பயணிக்கிறது. இந்நிலையில் தமிழக நகரான கோயம்புத்தூரில் ஷீலா சீனியர் சிட்டிசன் ஹோமுடன் இணைந்த ஷீலா மருத்துவ மனையின் மகத்தான் சேவையை கேள்விப் பட்டு, அதன் நிர்வாகிகளான டொக்டர். கிறிஸ்டி கணபதியையும், டொக்டர். சித்ரா கணபதி மற்றும் டொக்டர். ஆ.க.கணபதி அவர்களையும் சந்தித்தோம். அவர்களிடம் முதுமை குறித்தும், அதற்காக வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் பல வினாக்களை தொடுத்தோம்.

முதுமைக்கான மருத்துவ சிகிச்சைகள் எப்படி வளர்ச்சி கண்டு வருகின்றன?

மருத்துவத்துறைக்கு அந்த காலத்திலிருந்து இந்த காலகட்டம் வரை பெரும் சவாலாக இருப்பது முதுமை பருவத்திற் கான மருத்துவத்தை கண்டறிவதுதான். பிறந்த நான்கு மணி நேர குழந்தைக்கு கூட அறுவை சிகிச்சை செய்ய முடிகிற ஆங்கில மருத்துவத்தால், அறுபது அல்லது அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென் றால் பல முறை சிந்திக்கிறது. காரணம் முடிவைப் பற்றியல்ல. அதற்குரிய சரியான மருத்துவ முறையை இனம் கண்டறியப் படாதது தான்.

1990 களுக்கு பிறகே தெற்காசிய பிராந் தியத்தில் முதுமையடைந்தவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முறை பிரபலமாகத் தொடங்கியது என்று ஆய்வுகள் தெரிவிக் கின்றன. முதுமை என்பது ஒரு நோயல்ல, பருவ மாற்றமே என்ற அடிப்படை விழிப் புணர்வு, மெத்த படித்தவர்களிடத்திலும் இல்லை. மேலைத் தேய நாட்டில் முதுமையடைந்தவர்கள் பெரும் பிரச்சினை களில் சிக்காமல் இருப்பதற்கு மற்றொரு விசேட காரணம் அங்கு அங்கிகரீக்கப் பட்டுள்ள தனி நபருக்கான தனித் தியங்கும் சமுதாய அமைப்பு. ஆனால் தெற்காசிய பிராந்தியங்களில் முதுமை என்பது இளந்தலைமுறையினரும் இணைந்து சுமக்க வேண்டிய கூட்டு குடும்ப சமுதாய அமைப்பு. இதனால் முதுமை என்பதற்கான பொருளும், கருத்துருவும் இங்கு மாற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமையும், மன நலமும் ஒன்றையொன்று சார்ந்தவை.

மனிதனால் உருவாக்கப்பட்ட இயந் திரமே, ஒரு காலகட்டத்திற்கு பிறகு தேய் மானம் என்பதற்கு உட்பட்டு, செயலற்று போகின்ற நிலையில், அதனை உருவாக்கிய மனிதனுக்கு தேய்மானம் ஏற்படும்போது அதற்கு மாற்று இல்லையா? என்பதைக் குறித்து மருத்துவத்துறை தாமதமாகத்தான் உணரத் தொடங்கியது. முதுமையில் பெரும் பாலானவர்களை தாக்கும் மூட்டு வலி, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை கோளாறுகள், நீரிழிவு  உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிசிக்சை. இதய மாற்று அறுவை சிகிச்சை, நீரிழிவு கட்டு பாடு, முட நீக்கியல் என முதுமை பருவத்தி னருக்கான சிகிச்சை முறைகளை தோற்று வித்து, தீர்வு கண்டு வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாவித்துவார மற்றும் ஊசித்துவார அறுவை சிகிச்சை முறையால் பெரும் பலனை அடைய விருப்பவர்கள் முதுமை பருவத்தினரே.

முதுமைப் பருவத்தினரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண்பதில் மாற்று மருத்துவத்தின் பங்களிப்பு என்ன?

மருத்துவமனையுடன் கூடிய எம் முடைய முதியோர் இல்லத்தில் பராமரிக்கப் பட்டு வரும் சென்ற தலைமுறை இளை ஞர்கள் பெரும்பாலோர் மனதளவில் பாதிக் கப்பட்டவர்கள். தங்களை, தங்களின் இளந் தலைமுறை வாரிசுகள் போற்றி பாதுகாக்க வில்லையே என்ற ஆதங்கம், தங்களின் பிரச்சினைக்கு மருந்துகளோ, மாத்திரை களோ, அறுவை சிகிச்சைகளோ தீர்வு தராது என்கிற திடமான எண்ணம், தங்களை மனமாற்றம் காணும் வாரிசுகளால் தான் காப்பாற்ற இயலும் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டவர்களை மட்டுமே நாங்கள் மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற பரிந்துரை செய்கிறோம். அவர்கள் விரும்பினால் அந்த மாற்று மருத்துவத்தை யும் நாங்களே வழங்குகிறோம். மாற்று மருத்துவம், அனைவருக்கும் ஒரே மாதிரி யான பலனை தருகின்றன என்கிற உத்தரவா தத்தை அதற்கான மருத்துவர்களே நூறு சதம் தருவதில்லை. ஆனால் எந்த மருத்துவ முறைகளாக இருந்தாலும் நோயாளியின் பரிபூரண ஒத்துழைப்பின்றி பலனை தந்ததாக சரித்திரம் இல்லை. இருப்பினும் வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருத்துவத்தின் மூலமே சிறந்த நிவா ரணத்தை வழங்கி வருகிறோம்.

முதியவர்களுக்காக தங்கள் வழங்கி கொண்டிருக்கும் விசேட சிகிச்சை என்ன?

பெரும்பாலான முதியோர் களுக்கு பார்வை குறைபாடுகள் இருக்கும். முதலில் அதனை நாங்கள் சீரமைக்கிறோம். அதற் கடுத்து நாங்கள் அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு குறித்து பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை, அதற்குரிய உணவு முறை, அதற்குரிய உடற் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத் துகிறோம். மாரடைப்பு, இதயநோய் கோளாறுகளிருப்பவர்களைச் சோதனை செய்து பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் அதற்குரிய நவீன அறுவை சிகிச்சைகளை செய்கிறோம். வாதத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு அதன் தன்மையைப் பொருத்து மருத்துவ முறைகளை  நிபுணர்கள் மூலம் கலந்தா லோசித்து வழங்குகிறோம். முதுமை யடைந் தவர்கள், பெரும் சவாலாக எண்ணுவது மரணத்தைப் பற்றிய பயத்தைத் தான். அதனை முற்றிலுமாக நீக்க இயலாது. ஆனால் அது குறித்து தெளிவான விளக் கத்தை அளித்து, மரணத்தைப் பற்றிய பயத்தை போக்குவதுடன், அதனை எதிர் கொள்ளும் நேர்மறையான மனநிலை யையும் வளர்த்து வருகிறோம். வாழ்க் கையில் இழந்த சில சுவராசியமான நிகழ்வு களை குறித்து நினைவூட்டுகிறோம். அத்து டன் மறக்க எண்ணும் சம்பவங்களை ஒருபோதும் மீண்டும் நினைவூட்டுவ தில்லை.

முதுமையில் இருப்பவர்கள் சந்திக்கும் மற்றொரு மிகப்பெரிய சவால் தனிமை. இதனை முற்றிலும் களைவதற் கான அனைத்து செயல்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்கிறோம்.  புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எயிட்ஸ் நோய் ஏற்பட்டதால் உறவுகளால் புறகணிக்கப் பட்டவர்களுக்கும், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிபுணர்களின் பரிந்துரை யின் படி கனிவான முறை யில் மருத்துவசேவையும் செய்து வருகிறோம்.

முதியோர்களுக்காக நீங்கள் அமைத்துள்ள `ஷீலா சிட்டிசன் சீனியர் ஹோம்\' பற்றி விரிவாகக் கூறுங்கள்?

முதுமை என்பது வாழ்க் கையின் முடிவு அல்ல, அது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமே! இதனடிப் படையிலேயே `ஷீலா சிட்டிசன் சீனியர் ஹோமை\'த் தொடங்கி னோம்.  அனைத்து நவீன வசதிகளுடன், பாதுகாப் பான சூழ்நிலையில் சிறப் பான மருத்துவ சேவை யுடன் கூடிய இவ்வில் லத்தை நிர்மாணித்து வயது வந்தோர் தம்பதியினரா கவும், தனியாகவுத்ம, தங்கு வதற்கான அனைத்து வசதி களையும் செய்துகொடுக் கிறோம்.  அவருடைய சுற்றாத்தார்கள் வந்து பார்த்துச் செல்லவும் முன் அனுமதியோடு அவர்களுடன் தங்கிச் செல்லவும் வசதிகள் செய்து கொடுக்கிறோம்.  இதற்கு ஒரு குறிப்பிட்ட முன்தொகையும், மாதாந் திரத்திரத் தொகைஹயம் கட்டணமாக வசூலிக்கிறோம்.  எங்களது அன்பான ஆதர வான சேவையால் அவர்களை மகிழ்ச்சி யுடனும், நிம்மதியுடனும் இருக்கின்றனர்.

அவர்களின் மனதில் உள்ள காயங்களையும், ஆறாத ரணங் களையும் பக்குவமாக அப்புறப் படுத்தி, அவர்களின் மனதில் வாழ்க்கையைப் பற்றிய நேர் மறையான எண்ணங்களை வளர்க்கிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் தடை கள் ஏற்படும். அதனை நாங்கள் பொருட்படுத்துவதில்லை.

ஒரு சிலர் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஏன்? உண்ணாநிலை கூட இருப்பார் கள். அவர்களை ஒரு குழந் தையை கண்காணிப்பது போல் அக்கறை செலுத்தி மீட்போம். எங்களை பொறுத்தவரை மூத்த குடி மக்களை காப்பது கடமை மட்டுமல்ல சேவையும் கூட.

மேலதிக விபரங்களுக்கு...

கைப்பேசி: 0091 99949 66474

போன்: 009104222498381

Email:
sheelahospital@gmail.com